1959-69-ல் பிரஞ்சு அதிபராக இருந்த சார்லஸ் டி கால் பற்றிய இரண்டு சுவையான தகவல்.
* * * *
பிரான்சின் அதிபர் தேர்தலுக்கு அவர் 1958’ல் நின்ற போது அவருடைய சொந்த கிராமான Colombey-Les-Deux-Eglises-ல் உள்ள 500 வாக்குகளில் 499 பேர் அவருக்கு வாக்களித்திருந்தார்கள். ஒருத்தர் மட்டும் அவருக்கு வாக்களிக்கவில்லை. அவர்? டி காலின் சமையல்கார அம்மா!.
டிகால், இந்த தள்ளாத வயதில் (70) பாரீஸ் போய் உழைப்பது அவருடை உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று அந்த அம்மாள் கருதியதால் அவருக்கு எதிராக வாக்களித்தாராம்!
அக்கறை எப்படியெல்லாம் வெளிப்படுகிறது!
* * * *
டிகால் அதிபரானதும், அதிபர் மாளிகை இரவு நேர அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் இட்ட ஒரு உத்தரவு:
அதிபரை எதற்கும் எழுப்பக்கூடாது -- உலகப் போர் மூண்டுவிட்டால் தவிர!
: "Do Not Disturb the President of the Republic Except in Case of World War."
Nice!
ReplyDelete