January 04, 2014

அன்புடையீர்!

அனைவருக்கும் வணக்கங்களும் புத்தாண்டு வாழ்த்துகளும்.‘கடுகு தாளிப்பு’ துவங்கி  4 வருஷங்கள் ஓடிவிட்டன. 500 பதிவுகள் என்று கூகுள் கணக்குப் பண்ணிச் சொல்கிறது. அந்த கணக்குகளையோ எத்தனை ’ஹிட்கள்’ என்பதையோ நான் அதிக அக்கறை கொண்டு பார்ப்பதில்லை.

படிப்பதும் எழுதுவதும் என் வலது  மூச்சும் இடது மூச்சுமாகக் கருதுகிறேன்.  எவ்வளவு படித்தாலும் திருப்தி ஏற்படுவதில்லை;  தாகம் தீர்வதில்லை,(ஆம், எதற்குத்  தீரவேண்டும்?) எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்றுதான் மனம் குதூகலிக்கிறது! புதுப்புது  புத்தகங்கள் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கின்றன.
நான் எழுதுவது யாருக்குப் பயனுள்ளதாக இருக்கிறதோ இல்லையோ எனக்கு இருக்கிறது. என்னைச் சுறுசுறுப்பாக இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

பதிவுகள் போடுவது நானே எனக்கு வைத்துக் கொண்ட வேலை. அந்த வேலையைத் தினமும் செய்து கொண்டிருக்க வேண்டும். லீவு எடுக்க முடியாது. காரணம் நான்தான்  CEO ; நான்தான் ஊழியன்!
பாரபட்சமின்றி வேலைவாங்கும்  CEO நான்;  உண்மையுடன் பணி புரியும் ஊழியனும் நான். இப்படி டபுள் ரோலில் என்னை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு ஆயிரம் கோடி  நன்றிகள்.

பாரதியாரின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.  ‘தெள்ளு தமிழ்க் கலைவாணி நினக்கொரு விண்ணப்பம் செய்திடுவேன்... விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்.”   இதை எனக்கு அருளுவதில் உனக்கு ஒரு தடையும் இல்லை என்பதை நிதர்சனமாகக் காட்டி  வருகிறாய். உனக்கோர் ஆயிரம் கோடி  நன்றிகள்.
-கடுகு

அடுத்த பதிவு இரண்டொரு நாட்களில்.

11 comments:

 1. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. Jayanthi SridharanJanuary 4, 2014 at 12:18 PM

  Sir, Please do continue the Great work of sharing your experiences and anecdotes in a humorous way. Although I do not give my comments to each post of yours, I read them with lot of interest. Thank you very much =,

  ReplyDelete
 3. 500-வது பதிவு

  வாழ்த்துகள்.....

  ReplyDelete

 4. /பாரதியாரின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. ‘தெள்ளு தமிழ்க் கலைவாணி நினக்கொரு விண்ணப்பம் செய்திடுவேன்... விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்.” இதை எனக்கு அருளுவதில் உனக்கு ஒரு தடையும் இல்லை என்பதை நிதர்சனமாகக் காட்டி வருகிறாய். உனக்கோர் ஆயிரம் கோடி நன்றிகள்./ இது எனக்கும் பொருந்துகிறது. அன்புடையீர் வழிமொழிகிறேன். நன்றி.
  -

  ReplyDelete
 5. My hearty congrats for the 4th anniversary of this site and the tireless, energetic, enthusiastic young man at the helm of affairs and at the base holding it strongly. We, the readers, are ever indebted to you when you share your creations and experiences with us. This site is about quality and not about quantity. While some sites boast of 500 posts in a year and lakhs of followers, this stands out as a beacon. Thanks again and keep posting and seek your blessings. - R. J.

  ReplyDelete
 6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.தங்கள் சேவை எங்களுக்குத்தேவை. தொடர்ந்து எழுதவும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு. அனைத்தையும் நாங்கள் படிப்போம்
  புதுப்புது செய்திகள் ஸ்னிப்பெட்ஸ் எல்லாம் உங்கள் மூலமாக்த்தெரிந்துகொள்கிறோம். Thanks for everything pl. keep on writing.
  A BIG THANK U

  ReplyDelete
 7. please keep posting and update the blog. We are always awaiting for your snippets, experiences etc.
  A BIG THANK U and a warm happy new year

  ReplyDelete
 8. Thank you for your comments.
  After applying Christmas,End of the year, New Year and Pongal discounts on your comments, they came to me finally as "Thanks again"!
  -Kadugu

  ReplyDelete
 9. I like to read the stories of Thotchu and Angachchi. They are hilarious. Could you please post some more of them Sir.
  Thank You
  Jeya, Canada

  ReplyDelete
 10. போடுகிறேன்.
  -கடுகு

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!