அரசியல் நகைச்சுவை மற்றும் நையாண்டி எழுத்தாளர் ஆர்ட் பக்வால்ட் ஒரு ஜீனியஸ். இரண்டு நாளைக்கு ஒரு கட்டுரை வீத்ம் பல வருஷங்கள் எழுதியவர். பல் வேறு நாடுகளில் உள்ள சுமார் 500 தினசரிகளில் அவரது கட்டுரைகள் சிண்டிகேட் செய்யப்பட்டு வெளிவந்து கொண்டிருந்தன.
பல வருஷங்கள் ஹிந்து நாளிதழிலும் வெளிவந்து கொண்டிருந்தன. அவற்றையெல்லாம் வெட்டி எடுத்து பல நோட்டுப்புத்தகங்களில் ஒட்டி வைப்பது என் வழக்கம். கட்டுரைகளில் சிற்சில அமெரிக்க விஷயங்கள் புரியாது. இருந்தாலும் நையாண்டியும், சரளமான ஆங்கில நடையும் அவரது ரசிகனாக என்னை ஆக்கிவிட்டன.
பல வருஷங்கள் ஹிந்து நாளிதழிலும் வெளிவந்து கொண்டிருந்தன. அவற்றையெல்லாம் வெட்டி எடுத்து பல நோட்டுப்புத்தகங்களில் ஒட்டி வைப்பது என் வழக்கம். கட்டுரைகளில் சிற்சில அமெரிக்க விஷயங்கள் புரியாது. இருந்தாலும் நையாண்டியும், சரளமான ஆங்கில நடையும் அவரது ரசிகனாக என்னை ஆக்கிவிட்டன.
நான் டில்லி வந்த பிறகு, தாரியாகஞ்ச் நடைபாதையில் , அவர் எழுதிய Don't forget to write என்ற, 1961-ல் வெளியான புத்தகம் கிடைத்தது. அது ஒரு புதையல். காரணம், அதில் அரசியல் கட்டுரைகளை விட பொதுவான நகைச்சுவை கட்டுரைகள்தான் அதிகம். அந்தப் புத்தகத்திலிருந்து பக்கத்திற்குப் பக்கம் நகைச்சுவை. உதிர்வதுடன், புத்தகம் சற்று பழசு என்பதால் பக்கங்களும் உதிரும்! அதனால் அதை ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து இருப்பேன்.)
பின்னால் அட்லாண்டாவில் உள்ள எமரி சர்வகலாசாலை லைப்ரரியில் மிக மிகப் பழைய புத்தகங்களைப். பாதுகாப்பாக அட்டையில் செய்யப்பட்ட ‘உறைகளில்(SLEEVE) வைத்திருப்பதைப் பார்த்தேன். அது மாதிரி நானும் ஒரு உறையைச் செய்து வைத்தேன், இந்தப் புத்தகத்திலிருந்து சில கட்டுரைகளை மொழிபெயர்த்தேன். அவை தினமணிக் கதிரில் பிரசுரம் ஆயிற்று.
சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா போய் வந்து கொண்டிருக்கிறேன். அந்த விஜயங்களின் போது கிட்டதட்ட 30 ஆர்ட் பக்வால்ட்டின் புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாங்கிவிட்டேன்.
(பல நகைச்சுவை எழுத்தாளர்களை LARRY WILDE என்பவர் பேட்டிகண்டு, அந்தப் பேட்டிகளைத் தொகுத்துப் புத்தகமாகப் போட்டிருக்கிறார். அதில் ஆர்ட் பக்வால்ட்டியின் பேட்டியும் இருக்கிறது. அந்தப் புத்தகத்தை 4,5 வருஷங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். காலையில் வீட்டிலேயே பல செய்திதாள்களைப் படிப்பார். பகல் ஒருமணி வாக்கில் வாஷிங்டனில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வருவார். தன் செகரட்டரியை அழைத்து ஒரு கட்டுரையை அரை மணி நேரத்தில் டிக்டேட் செய்து விட்டுப் போய் விடுவார். செகரட்டரி அதை டைப் செய்து 200, 300 காபி போட்டோ காபி எடுத்து சுமார் 200, 300 பத்திரிகைகளுக்குத் தபாலில் அனுப்பிவிடுவார்.
(பல நகைச்சுவை எழுத்தாளர்களை LARRY WILDE என்பவர் பேட்டிகண்டு, அந்தப் பேட்டிகளைத் தொகுத்துப் புத்தகமாகப் போட்டிருக்கிறார். அதில் ஆர்ட் பக்வால்ட்டியின் பேட்டியும் இருக்கிறது. அந்தப் புத்தகத்தை 4,5 வருஷங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். காலையில் வீட்டிலேயே பல செய்திதாள்களைப் படிப்பார். பகல் ஒருமணி வாக்கில் வாஷிங்டனில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வருவார். தன் செகரட்டரியை அழைத்து ஒரு கட்டுரையை அரை மணி நேரத்தில் டிக்டேட் செய்து விட்டுப் போய் விடுவார். செகரட்டரி அதை டைப் செய்து 200, 300 காபி போட்டோ காபி எடுத்து சுமார் 200, 300 பத்திரிகைகளுக்குத் தபாலில் அனுப்பிவிடுவார்.
செய்தித்தாள்களில் அவரது கட்டுரைகளை உங்களில் பலர் படித்து ரசித்திருப்பீர்கள். ஆனால் ஒவ்வொரு புத்தகத்திலும் அவர் எழுதியுள்ள முன்னுரைகளை படித்திருக்க முடியாது. புத்தகம்வாங்குபவர்களுக்கு அது போனஸ் மாதிரி! அத்துடன் குறும்புத்தனமான சமர்ப்பணம் / நன்றி குறிப்புகளும் இருக்கும். அவ்வப்போது அந்த முன்னுரைகளை மட்டும் மொழிபெயர்த்து பதிவாகப் போட எண்ணியுள்ளேன்.
WASHINGTON IS LEAKING என்ற புத்தகத்தின் முன்னுரையையும் WE'LL LAUGH AGAIN என்ற புத்தகத்தின் நன்றிக் குறிப்பையும் காமா சோமா மொழிபெயர்ப்பில் இங்கு தருகிறேன்.
* * *
WASHINGTON IS LEAKING புத்தகத்தின் முன்னுரை
சற்று மெலிந்த, கண்ணாடி அணிந்த களையான அந்த உயரமான இளைஞன் ஓட்டலுக்குள் நுழைந்தார், வாயில் சுருட்டு ஒட்டிக் கொண்டிருந்தது.
தன் ஓவர்க் கோட்டைக் கழட்டி, அங்கிருந்தப் பணிப் பெண்ணிடம் கொடுத்தார். அவளைக் குறும்புடன் பார்த்து லேசாகக் கண் சிமிட்டியபடியே!
தலைமை வெயிட்டர் பால் ஓடிவந்து, “ சார்.. பக்வால்ட்.. சார்.. இப்போதுதான் ஹென்ரி கிஸ்ஸிஞ்சர் போனில் கூப்பிட்டார்... உங்களோடு பேச வேண்டுமாம்..” என்றார்.
“லஞ்சுக்கு முன்னே முடியாது, பால்!... லஞ்சுக்கு முன்னே முடியாது.” என்றார்.
அந்த அறையில் சட்டென்று அமைதி ஏற்பட்டது. இளஞனை அவரது வழக்கமான 12’ம் நம்பர் மேஜைக்கு பால் அழைத்துச் சென்றார், எப்போதும்
அந்த மேஜயில்தான் அவர் சாப்பிடுவார்,
வெயிட்டர் கில்பர்ட் ஒரு கிளாஸ் ஐஸ் டீ கொண்டு வந்து கொடுத்தார். அந்த அறையில் இருந்த எல்லாரும் அவரை உற்றுப் பார்க்காத மாதிரி பாசாங்கு செய்து கொண்டே பார்த்தார்கள். அறையில் லேசாக மின்சாரம் பாய்ந்தது போன்ற சூழ்நிலையை அவர்களால் உணர முடிந்தது. அந்த இளைஞன் தனக்கு வேண்டிய உணவு வகைகளுக்கு ஆர்டர் கொடுத்தார்,
உணவு வந்தததும், கத்தி, ஃபோர்க்கை எடுத்து உணவைச் சாப்பிடத் துவங்கினார். அப்போது விவசாயத் துறை செயலர் மேஜை அருகில் வந்தார்.
“ சார்.. சோவியத் நாட்டிற்கு நூறு மில்லியன் டன் கோதுமை வேண்டுமாம்.. என்ன பதில் சொல்லட்டும்?” என்று கேட்டார்.
“சாப்பிடும்போது ஒண்ணும் கேட்காதீங்க” என்றார் இளைஞர், அந்த அதிகாரி பெட்டிப் பாம்பாக அடங்கி விட்டார்.
அந்த சமயத்தில் நிதித் துறை செயலர் வந்தார். பால் அவரிடம் ”சார்.. வெயிட் பண்ணுங்க.. அவர் காபி சாப்பிட்டு முடிக்கட்டும்: என்றார்.
செயலர் அமைதியாக உட்கார்ந்தார்.
சுமார் 40 நிமிஷம் ஆயிற்று, இளைஞர் ஒரு புதிய சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தார். தலைமை வெயிட்டரைப் பார்த்துத் தலையை ஆட்டினார். நிதிச் செயலரை, பால் அழைத்துச் சென்றார்.
” ஒரு உதவி கேட்க வந்திருக்கிறேன், நிதிப் பற்றக்குறை 50 பில்லியன் டாலர்.. என்னிடம் இருப்பதோ 40 பில்லின்தான். 10 பில்லியன் துண்டு விழுகிறது. அதை ஈடு கட்ட’பாண்ட்’ வெளியிட அனுமதி வேண்டும்..” என்று கேட்டார்,
இளைஞன் லேசான புன்முறுவலுடன் “பத்து பில்லியன் டாலர் தேவை என்றால், நண்பர்களுக்கு நான் உதவ மாட்டேனா?” என்றார். நிதித் துறை செயலர். அவருடைய கையை எடுத்து முத்தமிட்டார்
இதுதான் சமயம் என்று சற்று வேகமாக வந்து இஸ்ரேல் நாட்டுத்தூதர், “ சார்.. நீங்கள் எனக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள். எனக்கு F-15 போர் விமானங்கள் 100 தருவதாகச் சொன்னதை நினைவுபடுத்துகிறேன். இன்னும் இதுவரை வந்து சேரவில்லை.”
அந்த இளைஞனின் முகம் சிவந்தது. “என்னது.. ’டாமிட்’. போன மாசமே உங்களுக்கு வந்திருக்க வேண்டுமே,,பால்,, டெலிபோனை எடுத்துக் கொண்டு வாங்க” என்றார்.
ரேடியோ ஏரியல் வைத்த டெலிபோனை பால் எடுத்து வந்தார். இளைஞன் ஒரு நம்பரைச் சுழற்றினார். “ பாதுகாப்புத்துறை செயலருடன் நான் பேசவேண்டும்... ஆமாம். இஸ்ரேலுக்கு கொடுக்கச் சொன்ன எஃப்-15 விமானங்களை இன்னுமா அனுப்பவில்லை? சாக்கு போக்கு எதுவும் எனக்குத் தேவை இல்லை.. இன்னொரு தரம் இது மாதிரி நடந்தால் .நம் எல்லாருடைய சீட்டும் கிழிந்து விடும்” என்றார்
போனை வைத்துவிட்டு, இஸ்ரேல் தூதரிடம் அந்த இளைஞர், “நாளைக் காலை விமானங்கள் உங்களுக்குக் கிடைத்து விடும்” என்று சொன்னார்.
போனை வைத்துவிட்டு, இஸ்ரேல் தூதரிடம் அந்த இளைஞர், “நாளைக் காலை விமானங்கள் உங்களுக்குக் கிடைத்து விடும்” என்று சொன்னார்.
அந்த சமயம் அப்ஸரஸ் மாதிரி இருந்த அழகிய பெண் அங்கு வந்து அவருடைய காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னாள். ”இன்று மத்தியானம் முடியாது,, எனக்கு ஐ,நா. சபையில் பிரச்னைகளை கவனிக்கிற வேலை இருக்கிறது.” என்று கண்டிப்பான குரலில் சொன்னார்.
அப்போது பழுப்பு கலர் சூட் அணிந்த ஒருவர் அவரிடம் வந்து “ சார்.. ஈக்குவடார் நம்மிடம் வாலாட்டுகிறது. ராணுவத்தை அனுப்புவதற்கு நீங்கள் ஓ.கே தானே?” என்று கேட்டார்.
“இத பாருங்க.. வேறு வழி இல்லாதவரை, வன்முறையைக் கையாள்வதற்கு எனக்குப் பிடிக்காது, என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.
"இல்லை சார்.. இதைத் தவிர வேறு வழியில்லை.”
“அப்ப ஒண்ணு சொல்றேன்.. இந்த விஷயத்தில் எனக்குத் தொடர்பு இருக்குன்னு ஒருத்தருக்கும் தெரியக்கூடாது.. ஆமாம்.”
அந்த குள்ள ஆசாமி திரும்பிப் பார்க்காமல் இடத்தைக் காலி பண்ணினார்.
அந்த குள்ள ஆசாமி திரும்பிப் பார்க்காமல் இடத்தைக் காலி பண்ணினார்.
மறுபபடியும் டெலிபோனை எடுத்துக் கொண்டு பால் வந்தார், “ சார்.. ஒயிட் ஹவுஸிலிருந்து போன்" என்றார்.
“ நான் இப்ப இங்க இல்லைன்னு சொல்லிடு, பால்” என்றார் சற்று அலுப்புடன்.
ஈரான் நாட்டுத் துதர் ஒரு ஸ்வீட் பாக்கெட்டைப் பவ்வியமாக் கொடுத்து விட்டுச் சென்றார்’
பாடகர் ஃப்ராங்க் சினாட்ரா வந்து “ சார்.. வந்து.. வந்து.. ஒரு ஹெல்ப் தேவை..” என்று தயங்கி தயங்கிக் கேட்டார்.
“ உனக்கு இல்லாத ஹெல்ப்பா?..செய்றேன்.. என்ன வேணும்னு சொல்லு.”
“லாஸ் வேகாஸில் ஏதாவது பெரிய கிளப்பில் பாட சான்ஸ் வாங்கித் தரணும்.”
“ ப்பூ,, இதுதானே. வாங்கித் தந்துடறேன்.”
தூரத்திலிருந்து ஜான் கென்னடியின் சகோதரர் டெட்டி கென்னடி இவரைப் பார்த்து கை ஆட்டினார். இளைஞர் அதைக் கண்டு கொள்ளவில்லை.
ஹோட்டல் 'பில்'லைக் கில்பர்ட் கொண்டு வந்து கொடுத்தார், நூறு டாலர் நோட்டை ’பில்’லின் மேல் போட்டுவிட்டு எழுந்தார். வெளியே போகும்போது எதிரே வந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதியைப் பார்த்துக் கையை ஆட்டினார். ஒவர்க்கோட்டை எடுத்துக் கொடுத்த பணிப்பெண்ணுக்கு நூறு டாலர் ’டிப்’ கொடுத்து விட்டு, ஓட்டலை விட்டு வெளியே வந்தார். அரை பர்லாங்கு தூரத்தில் இருந்த அவரது அலுவல கட்டடத்திற்கு நடந்தே சென்றார். பதிமூன்றாம் மாடிக்கு லிஃப்டில் ஏறி தன்னுடைய அறைக்குச் சென்றார். நேரே டைப்ரைட்டர் இருந்த மேஜைக்கு முன்னே போய் உட்கார்ந்து அடுத்த நாள் பத்திரிகைக்கு அனுப்ப வேண்டிய கட்டுரையை டைப் அடிக்க ஆரம்பித்தார்.
அன்றைய தினத்தை எடுத்துக் கொண்டால் அவர் செய்த ஒரே ஜாலியான வேலை அதுதான் என்று கருதலாம்!
* * *
WE'LL LAUGH AGAIN புத்தகத்தில் உள்ள நன்றிக் குறிப்பு.
நன்றி
இந்த புத்தகத்தில் வெளியிடக் கட்டுரைகளை தேர்ந்தெடுத்துக் கொடுத்த CATHY CLARK-கிற்கும் --
அவற்றைச் சரி பார்த்து, மற்றும் எடிட் செய்து கொடுத்த HILLERY BARTON மற்றும் PHYLLIS GRANN ஆகியவர்களுக்கும்--
கடைசியில் அவற்றை FEDEX கூரியரில் அனுப்பி எனக்கும்!
அவற்றைச் சரி பார்த்து, மற்றும் எடிட் செய்து கொடுத்த HILLERY BARTON மற்றும் PHYLLIS GRANN ஆகியவர்களுக்கும்--
கடைசியில் அவற்றை FEDEX கூரியரில் அனுப்பி எனக்கும்!
I realised I was pronouncing the humorist's name wrongly all these years! It is a gift to have the interest, time, opportunity and health to read this much and share with the World. We don't have to be 'Annam' to separate milk and water; We get to eat the nectar directly. May I live long and healthy to be able to read your contributions to this site! - R. J.
ReplyDeleteமிக்க நன்றி.
ReplyDeleteநான் புஷ்வால்ட் என்றும் பிறகு புக்வால்ட் என்றும் எ ண்ணி வந்தேன். YOU TUBE விடியோவில் பக்வால்ட் என்று உச்சரிப்பதை கேட்டு சரி செய்து கொண்டேன்.--கடுகு
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteI worship the quicksand he walks in எனற அவருடைய கமெண்ட் நம்ம அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு அழகாக பொருந்துகிறது
ReplyDelete