ஏழாவது பிரச்னை
அமெரிக்க உதவி ஜனாதிபதியாக (1953-61) இருந்த ரிச்சர்ட் நிக்ஸன், 1962ல் ஒரு புத்தகம் எழுதினார். அந்த புத்தகத்தின் தலைப்பு” ஆறு பிரச்னைகள்.
கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு புத்தகக்கடையில் அந்த புத்தகத்தை விற்பனைக்கு வைத்தபோது,, நிக்ஸன் அங்கு வந்து, புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுத்தர ஒத்துக் கொண்டார்..
புத்தகத்தைi வாங்கியவர்கள் அவரிடம் கையெழுத்து வாங்க வரும்போது அவர்களின் பெயரைக் கேட்டு, அதைப் புத்தகத்தில் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக் கொண்டு வந்தார்.
அப்போது ஒரு இளைஞர் ,கையெழுத்துக்காக அவரிடம் புத்தகத்தைக் கொடுத்தார். அவரிடம் நிக்ஸன் “ உங்கள் பெயரைச் சொல்லூங்கள்” என்றார்.
அந்த இளைஞர் குறும்புடன் : ”என் பெயரைச் சொல்கிறேன்., ஆறு பிரச்னைகளைச் சந்தித்த உங்களுக்கு அது ஏழாவது பிரச்னையாகி விடும்?.. என் பெயர் STANISLAUS WOJECHLECHKI:” என்றார்.
(1962-ம் ஆண்டு ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் வந்த துணுக்கு!)
sir ,
ReplyDeleteneengal kettathirkku ezhutha mudiyamal ponathu... murugavai patri ..mikavaum varuththaudan ithaip pakirnthu kondullen
http://kakithaoodam.blogspot.com/2011/10/blog-post.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+Kakithaoodam+%28kakithaoodam%29
மிக்க வருத்தமான செய்தி. முருகாவிற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.-- கடுகு
ReplyDelete//அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்ஸன் ஒரு புத்தகம் எழுதினார். அந்த புத்தகத்தின் தலைப்பு” ஆறு பிரச்னைகள்.//
ReplyDeleteஏதோ பொருட்குற்றம் போலிருக்கிறதே. இப்புத்தகம் வெளியான 1961-ல் நிக்ஸன் முன்னாள் உதவி ஜனாதிபதி மட்டுமே. அவர் ஜனாதிபதியாக இன்னும் எட்டு ஆண்டுகள் இருந்தன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிக்க நன்றி.. இப்போது மாற்றி எழுதிவிட்டேன்..
ReplyDeleteநன்றி கடுகு அவர்களே.
ReplyDeleteநிக்சனுக்கு எதிராக ஒரு கார்ட்டூன் அவர் ஜனாதிபதி பதவிக்காக 1960 தேர்தலில் நின்றபோது வந்தது.
அதில் இவரது புகைபடத்தைப் போட்டு இந்த மூஞ்சியை நம்பி நீங்கள் ஒரு செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவீர்களா என. நம்மூராக இருந்தால் ஆட்டோக்கள் படை எடுத்திருக்கும், ஆனால் இது அமெரிக்காவாயிற்றே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
யப்பா.. எப்படியெல்லாம் நக்கீரர்கள் கண்ணில் விளக்கெண்ணை விட்டுப் படிக்கிறார்கள்! - ஜெ.
ReplyDelete<>
ReplyDeleteதப்பு கண்டுபிடிப்பவர்கள்தான் உண்மையான ரசிகர்கள்.
கூர்ந்து படித்தால்தான் தப்பு கண்ணில் படும். படிக்காமலேயே பாராட்டிவிடலாம்.
உதாரணமாக. தொல்காப்பியத்தைப் படித்தவர்களை விட பாராட்டுபவர்கள் அதிகம்!
உண்மை, உண்மை. டோண்டு அவர்களுக்கு வந்தனம். தொல்காப்பியத்தை பாராட்டுபவர்களோடு பாரதி, வள்ளுவரை பாராட்டுபவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் - நிறைய பேர் மற்றவர்கள் Quote செய்ததை மட்டும் தான் படிக்கிறார்கள். (நானும் ரொம்ப உத்தமன் இல்லை!) - ஜெ.
ReplyDelete