டாக்டர் பிழைக்க வேண்டுமே!
ருடால்ஃப் விர்ச்சோ (1821-1902) என்ற புகழ் பெற்ற ஜெர்மன் டாக்டரிடம் ஒருத்தர் மிகவும் சீரியஸாகக் கேட்டார்:” டாக்டர்.. எனக்கு ஒரு சந்தேகம். இந்த அப்பெண்டிக்ஸ் இல்லாமல் எல்லா மனிதர்களாலும் உயிர் வாழ முடியும், இல்லையா?“அதில் சந்தேகமில்லை. அப்பெண்டிக்ஸ் இல்லாமல் எல்லா மனிதர்களாலும் உயிர் வாழ முடியும், ஒரு சிலரைத் தவிர!” என்று ருடால்ஃப் சொன்னார்.
“ஒரு சிலரைத் தவிர என்றால், யார் அவர்கள்?” என்று நண்பர் கேட்டார்.
“அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் செய்து சம்பாதிக்கும் டாக்டர்களால் மட்டும் உயிர் வாழ முடியாது!”
No comments:
Post a Comment
............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!