ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் (STEVE JOBS) அக்டோபர் 5’ம் தேதி இரவு காலமானார். மனித சமுதாயத்தின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்த பல மின்னணு சாதனங்களை தோற்றுவித்தவர். ‘அமெரிக்கன் ஜீனியஸ்’ என்று டைம் பத்திரிகை இவரை வர்ணித்துள்ளது.
ஸ்டீவ் அக்டோபர் 5.ம் தேதி இரவு காலாமானார். 7’ம் தேதி அன்று கடைகளுக்கும் தபால் மூலம் சந்தாதாரர்களின் வீடுகளுக்கும் வந்த டைம் பத்திரிகை இதழ் கிட்டதட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் சிறப்பிதழ் என்று சொல்லும் அளவிற்கு அவரைப் பற்றி கட்டுரைகளையும் படங்களையும் போட்டு அசத்தியுள்ளது .அட்டையில் ஸ்டீவ் ஜாப்ஸின் படம் ( அடடா, என்ன சுறுசுறுப்பு!)
.
.
டைம் இதழில் கிடைத்த சில சுவையான தகவல்கள்:
டைம் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வால்டர் ஐஸக்சன், சுமார் இரண்டு வருஷமாக ஸ்டீவ் ஜாப்ஸைப் பேட்டி கண்டு ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறை இப்போது எழுதி முடித்திருக்கிறார், புத்தகமும் தயார். முன்னமேயே நிச்சயித்து இருந்தபடி அக்டோபர் 24’ம் தேதி புத்தகம் வெளியிடப்படுகிறது.
ஸ்டீவ் காலமான செய்தி கிடைத்ததும், வால்டர் ஐசக்சன்னை டைம் இதழின் ஆசிரியர் தொடர்பு கொண்டு, உடனடியாக ஒரு கட்டுரை எழுதி அனுப்பும்படிக் கேட்டுக் கொண்டார். இரண்டு மணி நேரத்தில் வால்டர் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பி விட்டாராம். கட்டுரை 7’ம் தேதி வெளியான இதழில் பிரசுரமாகியுள்ளது.
வால்டர் ஐஸக்சன், தனது கட்டுரையின் கடைசி பாராவில் எழுதி இருப்பது: ” சென்ற வாரம் ஸ்டீவ் ஜாப்ஸைப் பார்க்கச் சென்றேன். நோயின் வலியினால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார், அவரை கிட்டத்தட்ட 50 தடவைப் பேட்டி கண்டிருக்கிறேன். அவர் தனிமை விரும்பி. அப்படி இருந்தும் இத்தனை தடவை பேட்டி அளித்து,, ஒரு புத்தகம் எழுதக்கூடிய அளவுக்குத் தன்னைப் பற்றி இத்தனை விவரங்களைத்தர ஆவலாக இருந்ததன் காரணம் என்ன?” என்று கேட்டேன்.
” என் குழந்தைகள் என்னைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே காரணம். அவர்களுடன் நான் அதிக நேரம் செலவழித்ததில்லை. எதனால் செலவழிக்கவில்லை என்பதையும், நான் செய்து வந்த காரியங்கள் என்ன என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான்.” என்றார்.
· 1982’ம் ஆண்டு டைம் இதழின் அட்டையில் ஸ்டீவ் ஜாப்ஸின் படம் வெளியாயிற்று. அப்போது அவருக்கு வயது 26!
· 2005’ம் ஆண்டு வீடியோவுடன் கூடிய ஐ-பாட் (iPOD) சாதனத்தை அறிமுகப்படுத்தினார். அந்த சமயத்திலும் டைம் அவரை அட்டையில் போட்டு கௌரவித்தது.
· ஐ-ஃபோன் (iPHONE) 2007-ல் கொண்டு வரப்பட்டது. 74 நாட்களில் பத்து லட்சம் ஐ-ஃபோன்கள் விற்று விட்டன.
· ஐ-பேட் (iPAD) சாதனத்தை 2010-ல் கொண்டு வந்தார். முதல் நாளில் மட்டும் எத்தனை ஐ-பேட்கள் விற்றன தெரியுமா?. மூன்று லட்சம் ஐ-பேட்கள். ஒரு ஐ-பேடின் விலை 500 டாலர்கள். (சுமார் இருபத்தைந்தாயிரம் ரூபாய்!)
ஐசக் நியூட்டனின் முன்னே விழுந்த ஆப்பிள் புவி ஈர்ப்பைக் கண்டு பிடிக்கக் காரணமாக இருந்தது.. ஸ்டீவ் ஜாப்ஸனின் ஆப்பிள் புவியையே ஈர்த்து விட்டது!
டைம் பத்திரிகைக்காக ஸ்டீவ் ஜாப்ஸனைப 1982-ல் புகைப்படம்
எடுத்த டயனா வாக்கர் (Diana Walker) தன் கட்டுரையில் எழுதியுள்ள ஒரு வரியை இங்கு தருகிறேன். “I am sure Steve wasn’t the easiest person to work for, but what a fascinating person to work for.”
ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றின தகவல்களைத் தந்தமைக்கு நன்றிங்க :)
ReplyDeleteகடுகு சார்!,
ReplyDeleteஇதோ, நான் ஆப்பிள் நிறுவனத்திற்கு நான் அனுப்பிய இரங்கற்செய்தி:
Thank you Sir, for gifting human race with a product which is as vital ,as useful
& as simple as their breathing!
மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ReplyDeleteபுகைப்பட நிபுணர் டயானா ஒரே வரியில் அழகாக சொல்லியிருக்கிறார். அதே போல வால்டரிடம், தன் குழந்தைகள் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது, நெகிழ வைக்கிறது. உலகமே தம்மைப் பாராட்டினாலும், தன் குழந்தைகள் தன்னைப் பற்றி பெருமைப்பட வேண்டும் என்று அவர் நினைத்தது - யோசிக்க வைக்கிறது.
அன்புடன்
திருமதி சுப்ரமணியம்