இந்த வலைப்பூவில் குழைந்தகளுக்காக கதைகள் போடுவதில்லையே என்று ஒருவர் எழுதி இருந்தார். அந்தக் குறை யாருக்கும் இருக்க வேண்டாம் என்று ’பாப்பாவுக்கு சில கதை'களை’ இப்போது தந்துள்ளேன்.
குறிப்பு: : To protect the innocent, I am withholding the name of the reader!
நத்தையின் கர்வ பங்கம்.
ஒரு ஊரில் ஒரு நத்தை இருந்தது.உலகிலேயே மெதுவாக ஊர்ந்து செல்லும் ஜீவன் என்ற பட்டத்தை அது பெற்றிருந்தது.
என்னை விட மெதுவாக எவனாலும் போகமுடியாது" என்று ஜம்பம் அடித்துக்கொண்டிருந்தது.
ஒரு நாள், அது குடியிருந்த மரத்திற்கு அருகில் நிறைய ஆட்கள் வந்து பூமியைத்தோண்ட ஆரம்பித்தார்கள். 'சர்க்கார் அலுவலகக் கட்டடம்' என்ற போர்டைப் போட்டார்கள். அங்கு பெரிய கட்டடம் கட்டப் போகிறர்கள் என்று நத்தைக்குப் புரிந்து விட்டது. அதற்கு ஒரே குஷி. கட்டடம் கட்டும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் தமாஷாகபொழுதுபோகும் என்று எண்ணியது. சில நாள் கழித்து கட்டட வேலையும் ஆரம்பமாயிற்று.
செங்கல், மணல், கலவை ஆகியவற்றை சிற்றாட்கள் எடுத்து போவதை பார்த்தது. அப்போதுதான் அதன் கர்வத்திற்குப் பங்கம் ஏற்பட்டது. 'கட்டட சிற்றாட்கள் என்ற ஜீவராசிகளைப் பற்றி அறியாமலேயே ’நம்மை விட யாரும் மெதுவாகப் போகமுடியாது என்று நினைத்திருந்தோமே!' என்று மனதிற்குள் கூறிக் கொண்டது. அன்று முதல் அது ஜம்பம் அடித்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டது!
எல்லாம் நன்மைக்கே
ஒரு முயல் இருந்தது. அதற்குத் எப்போதும் தூக்கமே வருவதில்லை. இதனால் மிகவும் அவதி பட்டுக்கொண்டிருந்தது. "இது ஏதோ வியாதி. முதலில் டாக்டரிடம் போய்க் காட்டுங்கள்:" என்று திருமதி முயல் சொல்லியது. டாக்டர் கரடியிடம் சென்று, தன் வியாதியைப் பற்றி முயல் சொல்லியது.
" பைத்தியக்காரா! தூக்கம் வராவிட்டால் என்ன? அதற்காகக் கவலைப்படுவார்களா? மருந்து சாப்பிடுவார்களா? தூக்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லையே என்று உலகில் பலர் ஏங்குகிறார்கள். இது வியாதியுமில்லை, ஒண்ணுமில்லை. அப்படியே வியாதி என்று நினைத்தால் 'எல்லாம் நனமைக்கே' என்று சும்மா இருந்துவிடு" என்று கரடியார் கூறினார்.
சில நாட்கள் கழித்து காட்டில் ஒரு விளையாட்டுப் போட்டி நடந்தது..”ஓட்டப் பந்தயத்தில் என்னை ஜெயிக்க முடியாது" என்று முயல் சவால் விட்டது. பழைய பஞ்ச தந்திரக் கதையைப் படித்திருந்த ஆமை, "எங்கிட்டே உன் சவால் எல்லாம் நடக்காது" என்றது. " அப்ப்டியானால் பந்தயம் வைத்துப் பார்த்து விடுவோம்" என்றது முயல்.
பந்தயம் ஆரம்பமானது. முயல் சிட்டாய், 'ஜெட்' போல் பறந்தது. வெகு தூரம் சென்று திரும்பிப் பார்த்தது. ஆமை வருகிற அடையாளமே இல்லை. 'சரி, சற்று நேரம் மரத்தடியில் தூங்கலாம்' என்று படுத்தது. தூக்கம் வந்தால்தானே,