April 25, 2011

நலங்கு பாட்டி -கடுகு

``சௌம்யா! மெஹந்தி போடறதுக்கு நீ இன்னும் ஏற்பாடு பண்ணலை. முகூர்த்த நாளுக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்லை...''
``சொல்லிட்டேன்மா. அப்புறம் ஒரு விஷயம். நலங்கு அது இதுன்னு பண்ணறதுக்கு எனக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் பாட்டி முதல்ல வந்து, .சாரட்டு வண்டிலே சனக மகாராசன் பிள்ளை போல வர்றான், நம்ப சரோஜாவுக்கு வங்கி, ஒட்டியாணம், புல்லாக்கு, நத்து, ஜிமிக்கி போட வர்றான், மீசைக்கார வீரன்' என்கிற மாதிரி எல்லா கலியாணத்திலேயும் நம்ப பாட்டி பாடுவாள். என் கலியாணத்தில் பாட வேண்டாம்னு சொல்லு. எங்க கம்ப்யூட்டர் கம்பெனியிலே இருந்து வர்றவங்க `சரியான நாட்டுப்புறம்’னு சொல்லிச் சிரிப்பாங்க'' என்றாள்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பாட்டி, ``ஆயிரம் கல்யாணத்தில நலங்குப் பாட்டு பாடியிருக்கேன். என் பேத்திக்கு இஷ்டமில்லைன்னா பாடலை'' என்றாள்.

சௌம்யா-சுரேஷ் கலியாணம் தடபுடலாக நடந்தது. கலியாணம் ஆனவுடன் அமெரிக்காவில் நியுஜெர்ஸியில் வேலை கிடைத்து போய் விட்டார்கள்
இரண்டு வருஷம் கழித்து கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள பாட்டியை நியூஜெர்ஸிக்கு வரவழைத்துக் கொண்டாள் சௌம்யா.

பிரிட்ஜ்வாட்டர் வெங்கடேஸ்வரா கோயிலில் ஒரு கலியாணத்திற்குப் பாட்டியை  சௌம்யா. அழைத்துக் கொண்டு போனாள்
கலியாணத்தின் போது, ``யாராவது நலங்கு பாட்டுப் பாடுங்கோளேன்'' என்றார் புரோகிதர்.
சட்டென்று  “.சாரட்டு வண்டிலே சனக மகாராசன்....”என்று  பாட்டி பாட ஆரம்பிக்க, ஒரே கை தட்டல்! கேலியும் கிண்டலுமாக பல பாடல்கள். பாட்டிக்கு பலர் கை குலுக்கினார்கள். கரடிப் பிடியாக கட்டிப் பிடித்துப் பாராட்டினார்கள். ``சௌம்யா! யுவர் பாட்டி ஈஸ் கிரேட்! யூ ஆர் லக்கி!'' என்றார்கள்.
*
இரண்டு மாதம் கழித்து நலங்கு பாட்டியின் கலியாணப் பாடல்கள் சிடியை நியூஜெர்சி தமிழ் பண்பாட்டு மையம் வெளியிட்டது.
சௌம்யாவிற்கு பெருமை தலைகால் புரியவில்லை.

7 comments:

  1. சமீபத்திய உங்கள் இரட்டைப் பேத்திகளின் கல்யாணங்களிலிருந்து திரட்டிய விஷயங்களை ஸ்வாரஸ்யமாக - கொஞ்ஜம் உங்கள் சிறப்பு நகைச்சுவையுடன் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்!

    அடியேன் முதல் நாள் முகூர்த்தத்திற்கு வந்து, உங்களையும் அருகில் பார்த்தேன். அந்த சத்தமான பிசியான பின்னணியில் அறிமுகம் செய்துகொள்ள இயலவில்லை. (நான் காது கருவி போட்டிருப்பதால் அதிக சத்தமான சூழ்நிலை சங்கடம்!) உங்களைப் பார்த்ததில் நான், என் மனைவி, தம்பி எல்லோருக்கும் சந்தோஷம். வாய்ப்புக்குக் காத்திருக்கிறேன்.

    - ஜெ.

    ReplyDelete
  2. Dear Kaduhu:
    My name is Babu. Thank you for recommending William Hazlett Upton for reading pleasure. At the risk of being presumptuous, may I submit a list for your kind consideration for future endeavors. 1. Pepper & Salt (P&S) jokes in Op Ed page of Wall Street Journal (WSJ). P&S section in WSJ were more “peppery” in pre-internet era; there was a subsection with amusing verses, playing pun on words. 2. Writer Ved Mehta 3. “The Reader” by Bernhard Schlink -an unusual poignant story of a dyslexic Nazi war Criminal and her passion for books; the movie starring Oscar-winning Kate Winslet, though explicit is faithful to the book. Permitting indulgence, this list will grow. Thank you.

    ReplyDelete
  3. To Mr bapu: Thank you for your comments.

    I have the 256 page book 'The Wall Street Journal Book of Wit - a ten year treasury of thousands if highly quotable Rhymes, Daffynitions, and Quips'

    2. I have met and interviewed Ved Mehta long back.

    3. Let me get hold of the book "The Reader"

    ReplyDelete
  4. என்றைக்குமே தோட்டத்து பச்சிலைக்கு மதிப்பிருக்காது. எனக்கும் அதே போன்ற அனுபவம் அமெரிக்காவில் ஏற்பட்டது. எனக்கு பேரன் பிரம்தான். ஒரு நாள் முழுக்க சிறுநீர் கழிக்க வில்லை. அது பரவாயில்லை முப்பத்தாறு மணி நேரம் கூட போருத்துப்பார்க்கலம். என்று சொன்னார்கள். நானோ நம் ஊரில் என்றால் பிரப்புரிப்பின்மேல் சில் என்று தண்ணீர் அடிப்போம் உடனே சிறுநீர் கழிக்கும் என்றேன் என் மருமகளோ இங்கு உங்கள் பாடி வைத்யமெல்லாம் சொல்லாதீர்கள் என்றாள். நான் அவலக்கு தெரியாமல் எதோ எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் நர்சிடம் கூறினேன். ஒய் நாட் என கூறிவிட்டு தானே சில் என்ற தண்ணீரை தெளித்தார். அடுத்த இரண்டநிமிடங்களில் சர் என சிறுநீர் இரண்டு நாள் போகாததை சேர்த்துவைத்து போனான். நற்சோ என்னை த்துகட்டிபிடித்து பாராட்டினார். மருமகச்ல் முகத்தில் அசடு வழிந்த.

    ReplyDelete
  5. மணி வரை அழும். தோளில் படுக்கவைத்துகொண்டால் கொஞ்சம் ஓயும். வயிற்ருவளிதான் அழுகிறது என்றேன். நான்கு நாட்கள் கழித்து டாக்டரும் அதையே கூறி மருந்து எழுதி தந்தார்கள்.இருந்தும் ஓய்ந்த பாடில்லை. நம்நாடு என்றாள் வுட் வார்ட்ஸ் கரைப் வாடர் கொடுப்போம் சரியாகிவிடும். கொஞ்சம் தூக்கம் வந்து தூங்கிவிடும் அதனால் நன்மை உண்டோ இல்லையோ கெடுதல் கிடையாது என்று சொன்னேன்.ஒரு தொடர்ந்து மூன்று மணிநேரம் சிசு அழவும் பயந்து போயு அவசர சிகிச்சைக்கு அழைத்து போனான். வயதான டாக்டர் நீங்கள் ஆசியர்கள் தானே உங்கள் ஊரில் க்ரிப்வாடுர் என்று கொடுப்பீர்களே அதை வணங்கி நான் கொடுத்த மருந்து கொடுத்து சிறிது நேரம் சென்று கொடுங்கள். ஆனால் நான் எழுதி கொடுக்க கூடாது என்றாராம். ஓடு இந்தியன் ஸ்டோரை நோக்கி பதி மூணு டாலர் கொடுத்து வாங்கிவந்து போட்டதும் சிறிது நேரத்தில் தூங்கி விட்டது. ஒரு வாரத்தில் நன்கு தூங்க பழகிவிடவே அழுவது நின்றது. மூதோர் சொல் வார்த்தசி அமிர்தம் ம் என்பதை உணர்ந்தார்கள்.

    ReplyDelete
  6. எனக்கு ஒரு பிரச்னை. பெரியவர்கள் நீங்கள் உதவி செய்தால் நலம். என் பெண் இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்து , இந்தியாவில் படித்து (from 1-3rd standard), வளர்ந்து மறுபடியும் இங்கிலாந்தில் படிக்கிறாள், வளர்கிறாள். அவள் வயதோ ஒன்பது. அவளுக்கோ பொட்டு இட்டு கொள்ள விருப்பம் இல்லை. ஆயிரம், ஆயிரம் காரணம் சொல்கிறாள். எனக்கோ, அவள் அவளுடைய கலாச்சாரத்தை புரிந்து, பொட்டை இட்டு கொள்ள ஆசை. எப்படி அவளுக்கு புரிய வைப்பது!

    ReplyDelete
  7. திரு கண்ணன்: பொட்டு ஒரு பிரச்னைதான். தமிழ்நாட்டிற்கு அழைத்து வரும்போது உங்கள் பெண்ணைத் ஏதாவது ஒரு கலியாணத்திற்கு அழைத்துப் போங்கள். அவள் வயதொத்த பெண்கள் பட்டுப் பாவாடையும், ஜிமிக்கியும், பொட்டுமாக் ஜொலிப்பதைப் பார்த்து அவளுக்கு அவற்றின் மேல் ஈடுபாடு வரும்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!