April 11, 2011

கிண்டல்கார மகாராஜா --கடுகு

 நகைச்சுவைக்குப் புகழ்பெற்ற ஏர் இந்தியா மகாராஜா சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு FOOLISHLY YOURS  என்ற துண்டுப் பிரசுரத்தை (36 பக்கங்கள்.) வெளியிட்டிருக்கிறார். இதை எழுதியவர் ஏர் இந்தியாவின் சேர்மனாக இருந்த  திரு கூக்கா.  S K KOOKAஏர் இந்தியா மகாராஜா லோகோவை உருவாக்கியவர். நல்ல நகைச்சுவையாளர். பின்னால்  HINDUSTAN THOMPSON ASSOCIATES என்னும்  பிரபல விளம்பரக் கம்பெனியின் சேர்மனாகப் பணிபுரிந்தார்.
 
(அந்த கால கட்டத்தில்தான் நான் அதில் ஒரு காபிரைட்டராகப் பணிபுரிந்தேன்.இந்த தகவலையும் மற்ற ஜம்பத் தகவலையும் முன்பேயே எழுதிவிட்டேன்,)
இந்த  FOOLISHLY YOURS  என்ற புத்தகம் ( 36  பக்கங்கள்.) வெளியானதும் பாராளுமன்றத்தில் அமளி எற்பட்டது: ”நம் நாட்டைப் பற்றி நாமே மட்டமாக எழுதலாமா?.. புத்தகங்களை விநியோகிக்க்கூடாது; வாபஸ் பெறவேண்டும்.” என்று எம்.பிக்கள்  குதித்தார்கள். அப்படியே வாபஸ் பெற்ப்பட்டது  ஆனால் சில மாதங்கள் கழித்து திரு கூக்கா மற்றொரு கிண்டல் புத்தகம் எழுதினார்..
அதன் பெயர்:  THIS MAKES NO SENSE (48 பக்கங்கள்.)
  அந்த பிரசுரத்திலிருந்து சில    துணுக்குகளை  இங்கு தருகிறேன். முடிந்தால் இரண்டு புத்தகங்களையும்  PDF  புத்தகமாகப் போடப்பார்க்கிறேன்.

* இந்தியாவிற்கு வந்தால் வயிற்றுக் கடுப்பு, சீதபேதி எல்லாம் ஏற்படும் என்பதை நம்பாதீர்கள். தினமும் ஒரு `இன்டெஸ்டொபான்' மாத்திரை சாப்பிட்டால் சரியாகி விடும்.

* உலகில் ஒரே ஒரு இந்தியாதான் இருக்கிறது. வருஷத்தில் 15 மிலியன் ஜனத்தொகை ஏறுவதால் இந்தியா மாறிக் கொண்டே இருககிறது. ஆகவே விரைவில் வாருங்கள்.

* கிராப் செய்து கொள்ள வேண்டுமெனில் நடைபாதையிலேயே முடி அலங்காரக் கலைஞர் செய்து விடுவார். ஹேர் கட்டிங்கிற்கு 12 சென்ட். ஆனால் அவரால் ஏற்படும் கத்திக் காயத்திற்கு டிராவலர் செக் கொடுத்தால் போதும்.

* பம்பாயில் உங்கள் உறவினர் இருந்தால் அவர்களைச் சந்திக்க வாருங்கள். உங்களுடன் எங்கள் கார்ப்பரேஷன்காரர்கள் கண்ணாமூச்சி விளையாடுவார்கள். ஆமாம், நகரில் வீதிகளின் பெயர்களை எல்லாம் மாற்றி விட்டார்கள். பம்பாய் தபால்காரர் உங்களிடம் வழி கேட்டால் தயவு செய்து உதவுங்கள்.
* டெலிபோனுக்கு அருகில் வெண்தாடிக் கிழவர் ஒருவர் உட்கார்ந்திருந்தால் அவரிடம் அன்பாக இருங்கள். ஒரு டெலிபோன் நம்பரைப் பிடிக்க அவர் கறுத்த முடி இளைஞனாக இருந்த காலத்திலிருந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்!

* உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாவிட்டால் பரவாயில்லை. ஆக்ஸ்போர்டில் படித்தவர்கள் கூட போஸ்டாபீஸ் வாசலில் உட்கார்ந்து எழுதித் தரும் வேலை செய்வதைப் பார்க்கலாம். காதல் கடிதங்களுக்கு குறைந்த சார்ஜ் வாங்குவார்கள்.

* எங்கள் ஓட்டலில் `டிப்ஸ் தராதீர்கள்' என்று நிறைய போர்டுகள் இருக்கும். விடிவதற்கு இரண்டு மூன்று மணி நேரத்திற்கு முன்பு ஓட்டலை விட்டுக் கிளம்பினால் ஓட்டல் வராந்தாக்கள் தூங்கிக் கொண்டு இருக்கும் போது புறப்பட்டால் பிழைத்தீர்கள்!

இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து இந்தியன் ஏர்லைன்ஸின் தனி உரிமையாக இருக்கிறது. அதிர்ஷ்டக்காரர்கள்! ஒரு நாளைக்கு இரண்டு தரம் விமான டிக்கட்டுகளின் விலையை ஏற்றி விடுகிறார்கள்!

 ===========
  இந்த பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம்:
dagalti said... சிறப்பான நூல் ஏர் இந்தியா பம்பாய் அலுவலகத்தில் சுழல் நாற்காலிகள் சொகுசாக இருப்பதால் வந்தமரும் வாடிக்கையாளர் சுவாதீனமாக முடிவெட்டச் சொல்லிக் கேட்க, customer service என்று Air India-காரரும் வெட்டிவிடும் துணுக்கு ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. கதர்/காந்தித்குல்லாய் அணிந்த குண்டுமந்திரியை அணைத்து விடைதரும் சிப்பந்தினி அவர் ஜோபியிலிருந்து முட்கரண்டிகளை மீட்பதாக இருந்த கார்ட்டூன் சர்ச்சையைக் கிளப்பியதாகப் படித்த ஞாபகம்.

அவருக்காக அவர் குறிப்பிட்டுள்ள இரண்டு கார்ட்டூன்களை இங்கே போட்டுள்ளேன்,

3 comments:

 1. சிறப்பான நூல்

  ஏர் இந்தியா பம்பாய் அலுவலகத்தில் சுழல் நாற்காலிகள் சொகுசாக இருப்பதால் வந்தமரும் வாடிக்கையாளர் சுவாதீனமாக முடிவெட்டச் சொல்லிக் கேட்க, customer service என்று Air India-காரரும் வெட்டிவிடும் துணுக்கு ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.

  கதர்/காந்தித்குல்லாய் அணிந்த குண்டுமந்திரியை அணைத்து விடைதரும் சிப்பந்தினி அவர் ஜோபியிலிருந்து முட்கரண்டிகளை மீட்பதாக இருந்த கார்ட்டூன் சர்ச்சையைக் கிளப்பியதாகப் படித்த ஞாபகம்.

  அதே நூலின் ஒரு ஏர்ஹோஸ்டஸ் தான் நடத்தப்படும் விதம் பற்றி கொஞ்சம் lightஆகவும் கொஞ்சம் நெகிழ்ச்சியாகவும் சொல்லும் ஒரு குறுங்கவிதையும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 2. தங்களின் கட்டுரைகள் காலத்தை பின்னோக்கி அழைத்து செல்பவை யாக உள்ளன. மிகவும் நகைச்சுவையாக உம் தாங்கள் நினைவுகளில் பங்கேற்பது போலவும் உள்ளது.

  ReplyDelete
 3. கதர்/காந்தித்குல்லாய் both are missing in the cartoon.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :