April 05, 2011

அம்புஜத்தின் அர்ச்சனைகள் - ஒரு பின்னூட்டம்!

இந்த தொடரை சென்ற பதிவில் எழுதிய அத்தியாயத்துடன்  முடித்துக் கொள்கிறேன். தொடர்ந்து அர்ச்சனைகள் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் All good things must come to an end எனறு 1374’ல் Chaucer சொல்லியிருக்கிறாரே!

இந்த அர்ச்சனைகள் என் சொந்த ஐடியா அல்ல. 1902’ம் வருஷம் வெளியான MRS. CAUDLE'S CURTAIN LECTURES என்ற புத்தகத்தைப் படித்ததின் விளைவு. இதை எழுதியவர் DOUGLAS JERROLD.  அவருடைய புத்தகத்தில் இன்னும் நிறைய அர்ச்சனைகள் உள்ளன.

டகள்ஸ் ஜெரால்ட்  ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளர். ஏராளமாக எழுதியிருக்கிறார். PUNCH  பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்.
Mr.PUNCH  என்று குறிப்பிடும் அளவுக்குப் பிரபலமானவர். இவர் எழுதிய புத்தகங்கள் இண்டர்னெட்டில் வெளியாகியுள்ளன.

ஆயிரக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்களை PROJECT GUTENBURG  என்றஅமைப்பு  தங்கள் இணைய தளத்தில் (http://www.gutenberg.org/wiki/Main_Page)  வெளியிட்டு வருகிறார்கள். அதில் நான்  கண்டெடுத்த பல நல்ல புத்தகங்களில் இதுவும் ஒன்று.

சுமார் 100 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் இருந்தவர்களின் சராசரி வாழ்க்கை நமது வாழ்க்கை மாதிரியே  இருந்திருக்கிறது. ஆகவே தான் இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே என் மனதில் அர்ச்சனைகள் அப்படியே தமிழில் வீடியோவாக ஓடிக் கொண்டிருந்தன. இதன் காரணமாக, ஓரே மூச்சில் ’அம்புஜத்தின் அர்ச்சனைகள்’ தொடரை எழுதினேன்.
இன்னும் வேறு பல புத்தகங்களையும் தமிழில் தர உத்தேசம்.

5 comments:

  1. How well-read you are! You have read widely, enjoyed them and are gracious enough to share them with the 'illiterates' like me and that too in our language by your classic translation. Thank you and we eagerly look forward to your future articles. Regards, - R. J.

    ReplyDelete
  2. How well-reading you are! 'Illiterates' like me and in our language by your classic localized dialogs in your translation. A classic writing of you association in publishing the book for Delhi Vishnu Sahasranama Satsang at the earliest. r.suresh

    ReplyDelete
  3. <<<< Jagannathan said... How well-read you are! You have read widely, enjoyed them and are gracious enough to .....>
    Thanks a ton.

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    Mr.Punch தான் மிஸ்டர் பஞ்சு ஆகி விட்டாரா?

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  5. சீதாலஷ்மி சுப்ரமணியம் ” Mr.Punch தான் மிஸ்டர் பஞ்சு ஆகி விட்டாரா?”
    என் பதில்: பஞ்சு உருவானது 1967-ல். எங்கள் மதிப்பிற்கும் கலாய்ப்பிற்கும் பாத்திரமான ஒரு உன்னதமான மனிதரை மனதில் வைத்து எழுப்பப்பட்ட கேரக்டர்.
    Mrs Caudels-ஐ நான் படித்தது 2012.-கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!