August 06, 2013

ஒரு மன்னரின் சவால்


சமீபத்தில் ஒரு பொன்மொழிப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் இருந்த ஒரு பொன்மொழி:  BE PREPARED TO SHOT THE KING – FOR I WILL BE THE SOLDIER.” 
 இது என்ன பெரிய பொன்மொழி, யாரோ ஒரு அரசர் சொன்னதால், அது பொன்மொழி ஆகிவிடுமா? என்று தோன்றியது. பொன்மொழிப் புத்தகத்தில் ஓரளவு விவரங்கள் இருந்தது. விவரமாகத் தகவல்களை அறிய வலை வீசினேன்
KING CHRISTAIN- பற்றிய   விவரங்கள் அடங்கிய THE YELLOW STAR என்ற புத்தகம் அகப்பட்டது.  அதை படித்தேன். அதில் இந்த பொன்மொழி தொடர்பான சம்பவம் விவரிக்கப் பட்டு இருந்தது. அதை இங்கு தருகிறேன்.

1940’ம் ஆண்டு. அந்த கால கட்டத்தில் டென்மார்க் நாட்டில், அந்த நாட்டுப் பிரஜைகள் மட்டுமே இருந்தனர். (அதாவது வெளிநாட்டினர் எவரும்  இல்லையாம்.) மன்னர் கிங் க்ரிஸ்டியன் ஒவ்வொரு நாளும் குதிரை மீதமர்ந்து கோபன்ஹேகன் நகரை வலம் வருவாராம். எந்த விதமான பாதுகாப்பும் வைத்துக் கொள்ளமாட்டார். மக்களால் அதிகம் நேசிக்கப்படும் மன்னனுக்கு மக்களே பாதுகாப்பு என்பதில் அவருக்குச் சந்தேகமே இல்லை.. 

இரண்டாம் உலகப் போர் வேகமாகப் பரவிக்கொண்டிருந்த சமயம். நாஜிப் படைகள் டென்மார்க் எல்லையைச் சூழ்ந்து இருந்தன.
 ஒரு நாள் நாஜிகள் தங்கள் கொடியை அரண்மனை கொடிக் கம்பத்தில் ஏற்றிவிட்டனர். இதற்கு மன்னர் என்ன செய்யப்போகிறார் என்று மக்கள் (பயத்துடன்) கவனித்துக் கொண்டிருந்தார்கள். நகர்வலம் வரும்போது நாஜி கொடியைப் பார்த்த மன்னர், ஒரு சிப்பாயை அனுப்பி அதை இறக்கச் சொன்னார்.
தங்கள் கொடி அகற்றப்பட்டதை மறுநாள் பார்த்த நாஜி ராணுவ அதிகாரி, மன்னரைப் பார்க்கக் கோபத்துடன் வந்தார். “ எங்கள் கொடியை அகற்றியது யார்?” என்று கேட்டார்.”
 “ஏன், நான் தான் ஒரு சிப்பாயை அனுப்பிக் கொடியை அகற்றினேன்.” என்றார் மன்னர்.
அப்படியா? நாளைக்கு இன்னொரு கொடி அங்கு ஏற்றி விடுகிறேன்என்றார் நாஜி அதிகாரி.
செய்நாளைக்கு இன்னொரு சிப்பாய் அதை அகற்றி விடுவார்,”
அப்படி அகற்றும்போது அவன் சுடப்படுவான்.”
அப்படியானால் டென்மார்க் மன்னரைச் சுடத் தயார் படுத்திக்கொள். ஏனென்றால் அந்த சிப்பாய் நானாகத்தான் இருப்பேன்என்றார்,

அந்த அதிகாரி அசந்து போவிட்டான், இந்த பதிலைக் கேட்டு! அதற்குப் பிறகு அந்தக் கொடி அங்கு பறக்கவே இல்லை!

உண்மையிலேயே அந்த பொன்மொழி 24 காரட் பொன்மொழிதான்!

பின் குறிப்பு -1: இந்த மன்னர் செய்த மற்றொரு துணிச்சலான நடவடிக்கை டென்மார்க் மக்களை மட்டுமல்ல, டென்மார்க் நாட்டிலிருந்த யூதர்கள்.  அனைவரையும் காப்பாற்றியது! விவரம் வேறொரு பதிவில், பின்னால்!

பின் குறிப்பு -2: இந்த பொன்மொழிக்கு  ஆதாரமில்லை என்று ஒரு கருத்து உள்ளதுஇருந்துவிட்டுப் போகட்டுமே!. இதில் உள்ள உண்மை நம்மை மேம்படுத்தும் என்றால் பொய்யில்லை!

3 comments:

  1. பழமொழிக்குப் பின்னால் இருக்கும் கதையை தெரிந்து கொண்டேன். அரசர் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்......

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. 'Ofttimes ' புது வார்த்தை - தெரிந்துகொண்டேன். சுதந்திர தினம் வருவதால் தலைப்பில் சரியான படம்!

    Be prepared to shot the king - To shoot ? ராஜாவே சொன்னால் என்ன, ராஜா சொன்னதாக யாராவது கூஜா சொன்னால் என்ன, விளக்கம் படித்ததும் ராஜாவைப் பிடித்தது. எதிர்த்து சண்டை போடாவிட்டாலும் தன் அரண்மனையை ஆவது விடாமல் சாத்வீகமாக தைரியமாக நடந்துகொண்டான். எதிரியுடன் சண்டை போட்டு துரத்தாததால் 24 காரட் கொடுக்காமல் 22 காரட் கொடுத்திருக்கிறீர்கள்!

    இன்று நம் அரசு 5 பேரை இழந்தும் வெறும் கண்டனம் தெரிவித்து பேச்சு வார்த்தையை எதிர்பார்க்கிறது. பாக், சீனா, இலங்கை என்று நாம் மட்டும் நட்பு வேண்டுகிறோம், அவர்கள் நம்மை சுண்டைக்காயாகக் கூட மதிப்பதில்லை. அவமானப் படுத்துகிறார்கள். நம் ராணுவம் உடனே எதிரிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பது என் விருப்பம். சண்டையில் 5 பேர் இறந்தாலும் கௌரவம். நாம் கையாலாகாதவர்கள் என்று அவர்கள் நினைக்க இடம் தரக்கூடாது.

    -ஜெ.

    ReplyDelete
  3. ஒரு மனம் கவர்ந்த பதிவு.An interesting anecdote. நன்றி.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!