July 31, 2013

ஆ,, அமெரிக்கா!

ஆ, அமெரிக்கா - PREAMBLE

அமெரிக்காவிற்கு நாலைந்து தடவைக்கு மேல் போய் வந்திருக்கிறேன். அங்கு பல புதிய அனுபவங்கள்   ஏற்பட்டுள்ளன. மனித நேய அனுபவங்களையும், நாம் பார்த்துக் கடைபிடிக்க வேண்டிய சில நடைமுறைகளையும், செயல்பாடுகளையும் பார்த்து வியந்திருக்கிறேன். அமெரிக்காவில் பல கசப்பான விஷயங்களைச் செய்தி தாள்கள் மூலமும் டி.வி.மூலமும் அறிந்திருக்கிறேன்.
அமெரிக்காவிலிருந்து ஊர் திரும்பியதும் அமெரிக்க அனுபவங்களை ஒன்றிரண்டு தடவை உறவினர்களிடமும் நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறேன். அதன்  பிறகு   யாரிடமும் விரிவாகச் சொல்வதை நிறுத்திக்கொண்டேன்..  காரணம் அவற்றைக் கேட்கும் ஆர்வம் பலரிடம் இருப்பதில்லை. “ பெரிசா அமெரிக்கா போய்வந்துட்டாராம். வாய் ஓயாமல் துதி பாடறார்” என்று (பொறாமை கலந்த) ரகசியப் பின்னூட்டம்   போடுவார்கள்! “அமெரிக்கா  போய் வர்றவங்களுக்கு  நம்ம ஊரைப் பற்றி மட்டமாகப் பேசறது ஒரு ஃபாஷன்:” என்ற கருத்துக் குத்துகளும் வரும். யாரும் காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள். வேறு சிலர் வேறு மாதிரி மூக்கில் குத்துவார்கள். நம்மைப் பேச விடாமல், “அதெல்லாம் இருக்கட்டும்..,நீ  நயாகரா பார்த்துவிட்டு வந்தாயா?”  என்று கேட்பார்கள். “ பார்க்கவில்லைஎன்று நீங்கள் சொன்னால், “ போ.. என்ன அமெரிக்கா போய்விட்டு வந்தாயோ, நயாகரா  பார்க்காமல்!” என்று அலுத்துக் கொள்வார்கள். “ஆர்லேண்டோ போய் டிஸ்னி லாண்ட் பார்த்து விட்டு வந்தேன்” என்று சொன்னால், “ அப்படியே பக்கத்தில்(?) இருக்கிற  ஹாலிவுட்டைப் போய் பார்த்திருக்கலாமே.  (அமெரிக்கா தேச வரைபடத்தில் ஆர்லேண்டோவிலிருந்து மூன்று  அங்குலம் தள்ளி  ஹாலிவுட் இருப்பதால், பக்கத்தில் இருப்பதாக அவர் ஐடியா! உண்மையில் 2500 மைல் தூரம்!)

அந்த நண்பர் அமெரிக்கா போய் வந்தவராக இருந்தால் இதைவிட தலைவலி அதிகம். ’நியூஜெர்சியில் ப்ரிட்ஜ்வாட்டர் ஊரிலுள்ள வெங்கடேஸ்வரா கோவிலுக்குப் போனேன்” என்று அவரிடம் சொன்னால், “ப்ரிட்ஜ்வாட்டர் டெம்பிளா? ஓ.கே..... வந்து  பமோனா ரங்கநாதர் கோவிலுக்குப் போகலையா? கோவிலில் எந்த நேரமும் பிரசாதம் கொடுப்பாங்க. கிட்டதட்ட கான்டீன் மாதிரி. அரிசி உப்புமா, பொங்கல், சக்கரைப் பொங்கல், தயிர் சாதம் என்று இருக்கும். எல்லாம் இலவசம்!” என்பார். இலவசப் பொங்கலில் இறைவனைக் காண்பவர் அவர் என்று கருதிக்கொண்டு, பேச்சை மாற்றி விடுவேன். சிலர் சான் பிரான்சிஸ்கோவில் இருக்கிற “ THE CROOKEDEST STREET IN THE WORLD"ஐப் பார்த்திருக்கலாமே” என்று ‘உச்சு’க் கொட்டுவார்கள்.
மொத்தத்தில் அவர்களுக்கு  நம் அமெரிக்க அனுபவத்தைக் கேட்க மனமில்லை. இந்த காரணங்களால்  நான் எதையும்  மூச்சு விடுவதில்லை. எதற்கு மூச்சு விடணும்; பேச்சு கேட்கணும்? இருந்தும் நமது பிளாக் நேயர்கள் அந்த ரகம் இல்லை என்பதாலும், நல்ல விஷயங்களைச்  சொல்வதற்குத் தயக்கம் காட்டக்கூடாது என்பதாலும் அமெரிக்க அனுபவக் கட்டுரைகளை  எழுத முடிவெடுத்துள்ளேன். இது முதல் பதிவு.

என் கண்ணான செல்ல நாயே!
எப்போதோ பல வருஷங்களுக்கு முன்பு ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையில் படித்த ஒர் கட்டுரையை என்னால் மறக்க முடியாது. கண் பார்வை இழந்தவர்களை, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட நாய் பத்திரமாக அழைத்து செல்லும்; வீதிகளைக் கடக்கும்போது, போக்குவரத்து விளக்கு சிவப்பாக இருந்தால் நின்றுவிடும்; பச்சையாக மாறியதும், கடந்து போகும் என்று  இருந்தது. இந்த நாய்களுக்கு  SEEING EYE DOG  என்று பெயர்.  இதையெல்லாம் படித்த எனக்கு சில சந்தேகங்கள் தோன்றின. இந்த நாய்களுக்கு வர்ணங்களை அறியும் சக்தி உண்டா? அவற்றிற்கு எப்படிப் பயிற்சி  அளிக்கிறர்கள்? என்பதுபோல் பல கேள்விகள் எனக்குத் தோன்றின..
ஆகவே, சிலவருஷங்களுக்குமுன்னால் நியூ ஜெர்ஸியில் உள்ள ரோஸ்லாண்ட் என்ற ஊரில் நான் தங்கி இருந்தபோது, ஒரு நாள் முனிசிபல் அலுவகத்தில்  SEEING EYE DOGS  நிகழ்ச்சி  இரவு 7 மணிக்கு நடக்க இருப்பதாகவும் அனைவரும் வரலாம் என்ற அறிவிப்பும் வந்தது.
ஆர்வத்துடன் பார்க்கப் போனேன். ஆண்களும் பெண்களுமாகப் பலர் நாய்களுடன் வந்தார்கள். செல்லக் குழந்தையை எடுத்து வருவது போல் அணைத்து எடுத்துக் கொண்டு வந்தார்கள். SEEING EYE DOG  அமைப்பைச்   சேர்ந்த ஒருவர், நாய் வளர்ப்பவர்களை ஒவ்வொருவராக அழைத்தார், நாய்கள் உத்தரவுகளுக்கு எப்படி கீழ்ப்படிகிறது, சொல்வதை எவ்வளவு சீக்கிரமாகப் புரிந்துகொள்கிறது என்றெல்லாம் சோதித்துப் பார்த்தார்கள். நில், உட்கார், எழுந்திரு வலது பக்கம் திரும்பு, இடது பக்கம் திரும்பு,  என்று பல உத்தரவுகள். அடாடா, என்னமாய் அவை உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்தன! இந்த டெஸ்ட் முடிந்ததும் அவரவர் தங்கள் நாய்களைக் கட்டிப் பிடித்து, உச்சி முகர்ந்து, முத்தம் கொடுத்து, தலைமேல் தூக்கிவைத்துக் கூத்தாடியதை மறக்க முடியாது! 
 அந்த நாய்கள் அவர்களுடையது அல்ல. நாய்களுக்குப் பயிற்சி அளிக்க அந்த தொண்டு நிறுவனம் கொடுத்தவை.   நாய்கள்  முழுதுமாகப் பயிற்சி பெற்றதும் அவற்றைத் திருப்பி கொடுத்துவிடவேண்டும், தொண்டு நிறுவனம் அந்த நாய்களைப்  பார்வை இழந்தவர்களுக்குக் கொடுக்கும்.
அன்றைய நிகழ்ச்சியில் தேறிய நாய்களை வளர்த்தவர்கள் உற்சாகமாகக் குதித்தார்கள். சிலர் லேசாகக் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள். ஆம், அவர்களுடைய செல்லம் அவர்களை விட்டு விரைவில் பிரிந்து விடப்போகிறது!
பொது இடங்களில் இந்த நாய்கள் எப்படி பணிபுரிறது, எப்படி பத்திரமாக அழைத்துச் செல்கிறது  என்று பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.


சில வாரங்கள் கழித்து நியூயார்க் நகருக்குச் சென்றேன். 42வது வீதி  வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தேன். ஜனசமுத்திரம் நிறைந்த வீதி. அப்போது ஒருவர்  இந்த ’ஸீயிங்- ஐ’ நாயுடன் போய்க்கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்தேன்- நாய் எப்படி அழைத்துச் செல்கிறது என்பதைப் பார்க்க. அடடா, கூட்டதில்  அபார  லாவகமாக அழைத்துச் சென்றது.
சிக்னலில் சிவப்பு விளக்கு வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினேன். மூன்று தெருக்களைத் தாண்டி நான்காவது தெருவை கடக்கும் சமயத்தில் விளக்கு சிவப்பாயிற்று.. நாய் அதை எப்படிப் பார்த்தது என்று தெரியவில்லை. எல்லாரும் போகாமல் நின்றதாலோ என்னவோ அதுவும் நின்று விட்டது. எனக்கு ஒரே வியப்பு. நான்தான் வியப்புடன் பார்த்தேன்.   மற்ற யாரும் அப்படிப் பார்க்கவில்லை. அவர்களுக்கு அது சர்வ சாதாரணமான நிகழ்ச்சியாக இருக்கலாம்! நம் நாட்டில் நாய்களுக்குப் பஞ்சமில்லை. பார்வை இழந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால்  SEEING-EYE Dog?
 தெரியவில்லை!

17 comments:

  1. நல்ல விஷயங்களை இந்த பதிவுலகத்திற்கும் மற்ற கெட்டவிஷயங்களை ஊரில் நலம் விசாரிக்க வருபவர்களுக்கும் சொல்லுங்கள்

    ReplyDelete
  2. உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்..... படிக்க நாங்க ரெடி....

    seeing eye dog.... ஐந்தறிவு என்று சொன்னாலும் அவற்றிற்கு இருக்கும் அறிவு மனிதர்களுக்கு பல சமயங்களில் இல்லை என்பது உண்மை என நிருப்பீக்கின்றது இந்தக் கட்டுரை.....

    தொடரட்டும் அனுபவங்கள்....

    ReplyDelete
  3. புதிய தகவல் அளித்ததற்கு நன்றி!

    ReplyDelete
  4. //இந்த காரணங்களால் நான் எதையும் மூச்சு விடுவதில்லை. எதற்கு மூச்சு விடணும்; பேச்சு கேட்கணும்? இருந்தும் நமது பிளாக் நேயர்கள் அந்த ரகம் இல்லை..// எப்படி எங்களையெல்லாம் புரிந்து வைத்திருக்கிறீர்கள்! இனி மூச்சு விடாமல் (இடைவெளி இல்லாமல்) அ.அ. வை (அமெரிக்க அனுபவம்) அலசவும்.

    இருந்தாலும், நீங்கள் ஹாலிவுட் பார்க்கவில்லை, நயாகரா பார்க்கவில்லை, பனோமா கோவில் ப்ரசாதம் சாப்பிட்டதில்லை என்னும்போது, அதையும் மற்றவர் சொல்லிக்காட்டும் போது எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. அடுத்தடுத்த விசிட்களில் அவற்றைப் பார்த்து கேள்வி கேட்டவர்களுக்கு சரியான் பதில் கேள்வி கேட்கவேண்டும். அப்போதுதான் எங்களுக்கு மனசு ஆறும்!
    -ஜெ.

    ReplyDelete
  5. Mistaking the distance in travelling half way to meet the other can still be ok; if one makes a mistake and takes a couple of steps less, the other can compensate by making a positive error by taking a couple of steps more! - R. J.

    ReplyDelete
  6. Its not necessary for the dog to see the colour. The image displayed in the Red Light (man standing in attention)is different from the image for the Green light (man with legs wide apart - stand at ease).

    The dog may not see the colour, but they can perceive the different image for Red and Green.

    ReplyDelete
  7. இருந்தாலும், நீங்கள் ஹாலிவுட் பார்க்கவில்லை, நயாகரா பார்க்கவில்லை, பனோமா கோவில் ப்ரசாதம் சாப்பிட்டதில்லை என்னும்போது, அதையும் மற்றவர் சொல்லிக்காட்டும் போது எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. அடுத்தடுத்த விசிட்களில் அவற்றைப் பார்த்து கேள்வி கேட்டவர்களுக்கு சரியான் பதில் கேள்வி கேட்கவேண்டும். அப்போதுதான் எங்களுக்கு மனசு ஆறும்!

    Haa haa haaa :)

    ReplyDelete
  8. அந்த மாதிரி எந்த பயிற்சியும் எடுக்காத நம்மூர் நாய்கள்..அதை வளர்த்தவர் இறந்ததும் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்து.. வளர்த்தவர் படுத்த இடத்திலேயே படுத்துக் கிடந்து உயிரை விட்டதும் உண்டு..

    ReplyDelete

  9. நாய்களுக்குப் பயிற்சி தரும் முறைஒன்றை தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கண்டேன். அந்நியர் தரும் உணவை சாப்பிடக் கூடாது என்பது பயிற்சி.நாயை சங்கிலியால் பிணைத்துக் கட்டிவிடுகிறார்கள். நாய் அதிகம் பழகாத சிலர் அதற்கு உணவு கொடுப்பதாகப் போக்கு காட்டி ஏமாற்றுகிறார்கள். சில ஏமாற்றங்களுக்குப் பின் அதன் உரிமையாளர் ஏமாற்றாமல் உணவு கொடுப்பார்.இது சில நாட்கள் பழகினால் நாய் உரிமையாளர் கொடுக்கும் உணவை மட்டுமே ஏற்கும். சிவப்பு விளக்கு வரும்போது நிற்பது மற்றவர்களும் நிற்பதனால் இருக்கும். எங்கள் ஹாஸ்டலில் உணவு நேரம் ஹூட்டர் ஒலிக்கும். அனைவரும் உணவு விடுதி நோக்கி ஓடுவர். அருகில் வசித்திருந்த நாயும் ஓடும். ஒரு முறை காந்தி இறந்த நாள் 11 மணி சுமார் அவருக்கு அஞ்சலி செய்ய ஹூட்டர் ஒலித்தது. நாய் சிறிது தூரம் ஓடி எவரும் வராதது கண்டு பிறகு நின்று விட்டது. நாய்கள் அருமையான பிராணிகள்.

    ReplyDelete
  10. பின்னால், நயாகரா பார்த்தேன்; பமோனா
    கோவிலுக்கு 3 ,மூன்று தடவைப் போயிருக்கிறேன். சன்னிதானத்திலும், பொங்கலிலும் இறைவனைத் தரிசித்து இருக்கிறேன். ஹாலிவுட் போகவில்லை. எலிசபெத் டெய்லரும் இல்லை; மர்லின் மன்றோவும் இல்லை. என்ன ஹாலிவுட் வேண்டிக் கிடக்கு!!-

    நாய் பற்றி சுவையான விஷயங்கள் இருக்கின்றன. அவை பின்னால் வரும்--கடுகு

    ReplyDelete
  11. I have a doubt for a long time - Why don't the TV channels show any Marylin Manroe films? I remember only one famous still of her (hi..hi..) and have heard of her affairs with John and Robert Kennedy! Do you have any worthy annecdotes of Marylin M to share with us?

    Except Cleopatra, I don't know if Liz Taylor is worth a second look - though some 8 men married her!! - R. J.

    ReplyDelete
  12. I used to commute from Queens to lower Manhattan everyday for work. A visually impaired lady with a guide dog also travels in the same route to the last stop where I get off after changing 3 trains. Often within a minute from one train to other.

    The kind of bonding they have for each other is amazing. Once the lady settled in her seat, she makes sure the dog takes the place underneath the seat and she makes sure the dogs tail and legs are out of harms way. The dog knows where to get off and even finds its way through the floor to ceiling turnstiles.

    I've read somewhere dog spelled backwards if God and I tend to agree with that.

    ReplyDelete
  13. Thank you for your comments. I am in Short Hills, not far off from New York. I wish I could take a video of the Seeing Eye dog guiding a person.
    I have another interesting posting about these dogs. I will be positng it later.
    DOG - is GOD which can also be spelt as Guard!
    -Kadugu

    ReplyDelete
  14. Hope you are lucky enough to witness one such moment.

    I just forget my own problems once i see them in the train station, and I am sure many would've felt the same way because they can't take their eyes of this pair.

    Cheers/

    ReplyDelete
  15. And in one another incident described in detail in the subway cars. The story goes something like this.

    A lady with a similar guide dog traveling to someplace in the city. She usually listens to the announcements about the station the train is entering into. The dog somehow missed the cue and tried to get off few stations before the right one. The lady got irritated at this unusual behavior and said curtly 'Not this one'.

    The dog settled back and lady immediately realized that she was little rude. Then she said 'Sorry, I spoke little too soon'.

    Now comes the best part. On hearing her apology, the dog up and licked her forearm to indicate that he understood.

    ReplyDelete
  16. Very true. Recently I visited Europe and I faced the same experience when we shared some exciting moments during the tour to our friends and relatives. Now I
    shared only with persons we participated in the tour.

    ReplyDelete
  17. I think it was in Discovery channel which showed that Dogs could sense the impending blackouts in their owners and urge them to take medications and seek safety if they are outside A lady who suffers frequent blackouts says that she owes much to her life saving companion aas she lives alone

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!