July 07, 2013

ஒரு 'கை' செய்த மாயம்

ஒரு 'கை'  செய்த மாயம்.
இதற்கு முன் வந்த இரண்டு பதிவுகளில் ‘மாயம்’ இடம் பெற்றது. அந்த மாயம் பதிவுகள் எழுதியபோது ஏற்பட்ட மாயத்தைப் பற்றி கூறப்போகிறேன்
ஒரு உரை செய்த மாயம்’ எழுதத் துவங்குமுன் எப்போதோ படித்த ஒரு தகவல் அரைகுறையாக நினைவுக்கு வந்தது. அது ஒரு எழுத்தாளனின் புத்தகம் பற்றியது. ஒரு பிரமுகர் பேச்சுவாக்கில் அந்தப் புத்தகத்தைப் பற்றி பாராட்டாக ஒரு வரி சொன்னார். அது லாட்டிரி பரிசு மாதிரி அமைந்து விட்டது. அந்த புத்தகம் நிறைய விற்க ஆரம்பித்தது. அந்தத் துணுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது நினைவுக்கே வரவில்லை.
ஆறாம் ஜார்ஜ் தனது உரையில் “அந்த சர்வ வல்லமை பொருந்திய கை  நமக்கு வழிகாட்டித் துணை புரியட்டும்"  (May That  Almighty Hand guide and uphold us all" ) என்ற வரிகளுடன் முடித்தார்.


அந்த கரம் எனக்கு உதவி புரிந்தது.   நேரம் கிடைக்கும்போது படிக்கலாம் என்று எண்ணி   A DICTIONARY OF THOUGHTS என்ற புத்தகத்தை நான் எப்போதோ என்  கணினியில் டவுன்லோட் செய்திருந்தேன்,  ஆனால் அதை மேலெழுந்தவாரியாகக்கூடப் பார்க்கவில்லை. ( இதுமாதிரி நிறையப் புத்தகங்கள் நான் படிப்பதற்காகக் கியூவில் காத்துக் கொண்டிருக்கின்றன.)
அந்தப் புத்தகத்தை திறந்தேன். முதல் பக்கத்தில் (ஆம், முதல் பக்கத்தில்!) இருந்த ஒரு பொன்மொழி கண்ணில் பட்டது. உரை செய்த மாயம் பதிவிற்கு, எந்த மாதிரி பொன்மொழி இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நான் எண்ணினேனோ  அந்த மாதிரி, 100 சத விகிதம் பொருத்தமான பொன்மொழி கண்ணில் பட்டது PLINY என்பவர் எழுதியது. A DICTIONARY OF THOUGHTS வெளியான வருஷம்: 1908! கடவுளின் கரம் எனக்கு அந்த வரிகளைக் காட்டிக் கொடுத்தது. பதிவிற்குச் சிகரமாக அது அமைந்து விட்டது, அந்த முதல் பக்கத்தின் படத்தை இங்கு போட்டுள்ளேன்.

அடுத்து இன்னொரு மாயம்!


‘விடியோ செய்த மாயம்’ என்ற பதிவை படித்திருப்பீர்கள். MONTY PYTHON  பற்றி  எழுதிக்கொண்டிருந்தபோது ,  BBC யில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் ஸ்கிரிப்ட் பத்தகத்தை வாங்க விரும்பினேன். பல வருஷங்களுக்கு முன்பே அந்த புத்தகத்தை வாங்க முயற்சி செய்தேன். கிடைக்கவில்லை.இங்கிலாந்தில் பிரசுரமாகும் புத்தகங்கள் அவ்வளவாக அமெரிக்காவில் கிடைப்பதில்லை.
 இந்த சமயத்தில் அமெரிக்காவில் நான் இப்போது வந்து தங்கி இருக்கும் பகுதியில், AAUW  (American Association of University Women) நாலு நாள் நடத்தப் போகும் பெரிய பழைய புத்தக விற்பனை சந்தை   விளம்பரத்தைப் பார்த்தேன். சுமார் 10,000 புத்தகங்கள் புத்தகசாலையில் வைப்பது போல் வகைப்படுத்தப்பட்டு இருக்கும் என்றும், விலை ஒரு டாலர் மற்றும் அரை டாலர் என்றும் தெரிவித்து இருந்தார்கள். முதல் நாளே போனால் நிறைய அறுவடை செய்யலாம் என்று எண்ணி, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போனேன். ஹாலில் நுழைந்ததும் நேரே  HUMOR  புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த மேஜையை நோக்கிப் போனேன். சுமார் 100 புத்தகங்கள் இருந்தன. மள மளவென்று புத்தகங்களைப் புரட்டி இருப்பேன். எதிரே,  என் கண்ணில் பட்டது என்ன தெரியுமா?  MONTY PYTHON – ALL THE WORDS  என்ற புத்தகத்தின் முதல் தொகுதி. விலை? அரை டாலர்! புதையல் மாதிரி கிடைத்த புத்தகம்.! புது மெருகு குறையாமல் இருந்த, 1992’ல் வெளியான இந்தப் புத்தகத்தை எனக்காக அங்கு கொண்டு சேர்த்தவர் யார்? அந்தக் கைதான். சந்தேகமில்லாமல் இறைவனின் கைதான்!

இந்த இரண்டு மாயங்களும் அடுத்தடுத்த நாட்கள் நடந்தவை.

பின்குறிப்பு: இந்த பதிவிற்குச் சற்று தொடர்புடைய ஒரு ஆங்கிலக் கவிதையை இங்கு தருகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே படித்து இருக்கலாம். (பல வருஷங்களுக்கு முன்பு இதை நான் தமிழாக்கம் செய்தேன். அது ‘குங்குமம்’ இதழில் வெளியாயிற்று.)
அந்தக் கவிதையைப் படியுங்கள்.

Footprints

I was walking along the beach with my Lord.
Across the dark sky flashed scenes from my life.
For each scene, I noticed two sets
of footprints in the sand,
one belonging to me
and one to my Lord.

When the last scene of my life shot before me
I looked back at the footprints in the sand.
There was only one set of footprints.
I realized that this was at the lowest
and saddest times of my life.
This always bothered me
and I questioned the Lord
about my dilemma.

“Lord, you told me when I decided to follow You,
You would walk and talk with me all the way.
But I'm aware that during the most troublesome
times of my life there is only one set of footprints.
I just don't understand why, when I needed You most,
You leave me.”

He whispered, “My precious child,
I love you and will never leave you
never, ever, during your trials and testings.
When you saw only one set of footprints
it was then that I carried you.”

Margaret Fishback Powers

2 comments:

  1. அந்த ஆங்கில வா....க்கியம் முடிவே இல்லாதது போல் இருக்கிறது! தமிழில், ‘யாருடைய திறமையும்(பெருமையும்) வெளிப்பட மற்றொருவருடைய உதவியும், சரியான சந்தர்ப்பமும் தேவை’! -கொஞ்ஜம் சுலபமாக இல்லை? (நேரடி மொழிபெயர்ப்பு இல்லை, ஆனால் இது சொல்லவந்ததை நேராகச் சொல்கிறது!)

    Foot Prints கவிதை இணையம் உதவியுடன் ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டது! எப்போதும் படிக்க முடிகிற உண்மை! - ஜெ.

    ReplyDelete
  2. அந்த அருமையான புத்தகம் உங்களுக்குக் கிடைத்த மாயம் வியக்க வைத்தது. காலடித் தடம் கவிதையின் மொழி‌பெயர்ப்பை நானும் படித்து ரசித்திருக்கிறேன்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!