July 15, 2013

நாலு விஷயம்

1.விமானப் பய(ண)ம்
இப்போதெல்லாம் விமானப் பயணம் என்பது டவுன் பஸ்ஸில் போவது போல் ஆகிவிட்டது. பெட்டி எடுத்துப்  போனால் லக்கேஜ். .முன்பெல்லாம்  பயணத்தின் போது   சாப்பிட  ஏதாவது கொடுப்பார்கள். எல்லாம் மலையேறி போய் விட்டது.

நாடு விட்டு நாடு போகும் விமானங்களில் சாப்பாடு கொடுக்கிறர்கள். பதிலுக்கு லக்கேஜில் கை வைத்து விடுகிறார்கள்.இந்தியாவிலிருந்து அமெரிக்கா போகும் விமானங்களில் இரண்டு பெட்டி எடுத்துப் போகலாம்: பெட்டி எடை 25 கிலோ இருக்கலாம். அது அந்தக் காலம். இப்போது ஒரு பெட்டிதான். அதுவும் 23 கிலோதான்.இதற்கு மேல் போனால் கூடுதல் கட்டணம்.
விமான கம்பெனியின்   வழிமுறையை மற்ற கம்பெனிகளும் பின்பற்றினால் என்ன  ஆகும் என்று  சிரிப்புப் படம்  ஒன்றை WALL STREET JOURNAL  தினசரியில்  போட்டிருந்தார்கள். அதை இங்கு தருகிறேன்.2.  ANAGRAMS - SANGARAM -அனக்ராம்
அனக்ராம் என்பது என்ன என்று உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.
ஒரு வார்த்தையின் எழுத்துக்களை மாற்றிப் போட்டு இன்னொரு வார்த்தையை உருவாக்குவதுதான் அனக்ராம்.

அந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரு சுவையான தொடர்பு இருந்தால் மேலும் சிறப்பு.
உதாரணமாக: ASTRONOMER = MOONSTARER

இப்படி ஆயிரக்கணக்கான ஜோடிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரு வார்த்தைக்கு அனக்ராம் கண்டுபிடிப்பது சற்று சுலபம். ஆனால் ஒரு முழு வாக்கியத்திற்கு என்பது கடினம். என்றாலும் அந்த வாக்கியத்தில் ஒன்றிரண்டு வார்த்தைகளைக் கூட்டியோ, குறைத்தோ போட்டு அனக்ராம் வரும்படி உருவாக்கலாம். இதைவிடக் கடினம், ஏற்கெனவே பலரும் அறிந்த வாக்கியங்களுக்கு அல்லது பாடல் வரிகளுக்கு அனக்ராம் கண்டுபிடிப்பது.

ஷேக்ஸ்பியரின் TO BE OR NOT TO BE வரிகளுக்கு அனக்ராம் கண்டுபிடித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு இரண்டு வரிகளைத் தருகிறேன்.
To be or not to be: that is the question; whether 'tis nobler in the mind to suffer the slings and arrows of outrageous fortune, or to take arms against a sea of troubles and by opposing, end them?  
இதற்கு அனக்ராம்:
  Is a befitting quote from one of Shakespeare's greatest tragedies. But why won't Hamlet's inspiring motto toss our stubborn hero's tortuous battle for life, on one hand, and death, on another? 

 இதைவிடப் பிரமாதமான அனக்ராம்: நிலவில் முதல் முதலில் காலடி வைத்ததும் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் சொன்ன வாக்கியத்திற்கு ஒரு அற்புதமான அனக்ராம் வாக்கியம் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
 'That's one small step for a man; one giant leap for mankind.' Neil Armstrong (59)
அனக்ராம் வாக்கியம்:
A thin man ran... makes   large stride... left planet... pins flag on moon... on to Mars! (59) 


      டேவிட் வெல்ஸ் எழுதிய PENGUIN BOOK OF CURIOUS AND INTERSTING MATHEMATICS  என்ற புத்தகத்திலிருந்து  கணிதம் சம்பந்தமான அனக்ராம்கள் சிலவற்றை இங்கு தருகிறேன்.
MINUS  QUANTITY  = QUAINT TINY SUM
HIGHER MATHEMATICS == M.A. TEACHES HIM RIGHT
METRIC SYSTEM == MYSTIC METERS
MEASUREMENTS == MAN USES METER
MEASURED = MADE SURE
INNUMERABLE = A NUMBER LINE
INTEGRAL CALCULUS = CALCULATING RULES
 *                     *                            *
3. புதிர் நேரம்
 விடை: பின்னூட்டத்தில் இருக்கிறது.


4. புத்தக உலகம்-இரண்டு நன்கொடைகள்


1,  ரா. கி. ரங்கராஜன்  புத்தகப் பிரியர். நிறைய புத்தகங்களைச் சேர்த்து வைத்திருந்தார்.
திருமதி கமலா ரங்கராஜனிடம் ” புத்தகங்களை என்ன செய்தீர்கள்?” என்று  கேட்டேன். (ரா, கி, ர அவர்கள் அண்ணநகரை விட்டு அயனாவரம் போனார். அவர் காலமானதும் திருமதி கமலா ரங்கராஜன் அந்த வீட்டைக் காலி பண்ணிவிட்டு மேற்கு அண்ணாநகர் போய்விட்டார்.)
“புத்தகங்களை எல்லாம் மூட்டைகட்டி எடுத்துக் கொண்டு போய் திருவல்லிக்கேணி அகாடமியின் புத்தகசாலைக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டோம்” என்றார். பெரிய பொக்கிஷம்!

2. மற்றொருவர் கொடுத்த நன்கொடை

 இரண்டு வருடங்களுக்கு முன்பு சான் பிரான்சிஸ்கோ (சுருக்கமாக SFO) போயிருந்தேன். போய்ப் பார்க்க வேண்டிய பட்டியலில்:  SFO புத்தகசாலை பெயரை  எழுதி வைத்திருந்தேன். காரணம் நகைச்சுவைப் புததகங்களுக்கு என்று  அங்கு ஒரு கூடமே இருக்கிறது என்ற தகவல்தான்.

 சுமார் 20,000 புத்தகங்கள்இருக்கிறதாம்! நம்ப முடிகிறதா? இருங்கள். அடுத்து வருகிறது, இதைவிடப் பெரிய நம்பமுடியாத தகவல். அத்தனை புத்தகங்களையும் ஒருத்தரே நன்கொடையாகக் கொடுத்து இருக்கிறராம்! அவர் ஒரு வக்கீல். பெயர்: Nat Schmulowitz ( உச்சரிப்பது சுலபமல்ல!)
முதன் முதலில் 1947’ம் ஆண்டு அந்த புத்தகசாலைக்கு 93 நகைச்சுவை புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். அதன் பிறகு மாதாமாதம் 100 புத்தகங்களைக் கொடுத்துக் கொண்டே வந்தார். அவர் 1966-ல் காலமாகி விட்டார். அதன் பின்னும், அவரது சகோதரி தொடர்ந்து அவர் சார்பாகப் புத்தகங்களைக் கொடுக்க ஆரம்பித்தாராம். ஆங்கிலம் மட்டுமல்ல, பல் வேறு உலகமொழி புத்தகங்களும் அவரது நன்கொடையில் இடம் பெற்றிருந்தன. 1841லிருந்து 2002 வரை வெளியான பிரபல ’பஞ்ச்’ பத்திரிகையின் இதழ்கள் இந்த பகுதியில் உள்ளன..
இப்படிப்பட்ட அரிய புத்தகக் களஞ்சியத்தைப்  பார்க்க ஆவலுடன்  S F O போனேன். ஆனால் நேரமே கிடைக்கவில்லை. பிரபல  SFO   பிளாக்கர் ’பால்ஹனுமான்’ ஸ்ரீனிவாசன் அவர்கள், தான் அழைத்துப் போவதாகவும் சொன்னார். ஆனால் என்னால்தான் நேரம் ஒதுக்க முடியவில்லை!
Nat Schmulowitz, a nationally known attorney, civic leader and bibliophile, was born in New York City on March 29, 1889, and moved to San Francisco with his parents when he was nine years old. He graduated from the University of California, Berkeley, in 1910; two years later he received his law degree from Hastings College of the Law.
Although he specialized in probate and corporate law, Mr. Schmulowitz earned a national reputation in 1921 with his successful defense of Roscoe "Fatty" Arbuckle, in one of the most sensational murder trials of the 1920s. He became the senior partner in the firm of Gavin McNab, Schmulowitz, Sommer and Wyman when Mr. McNab died in 1927.
Mr. Schmulowitz was a member of the Library Commission of San Francisco for seven years and served as president of that body in 1944. On April Fool’s Day, 1947, as a measure of his interest in the Library, he donated ninety-three volumes, including an edition of the Hundred Merry Tales, towards the establishment of the Schmulowitz Collection of Wit & Humor (SCOWAH).
Through the years he continued to add to the collection with donations of books, sometimes at the rate of one hundred items per month. In his diligent and far-reaching search, Mr. Schmulowitz combed bookshops all over the world for suitable works. As a result, SCOWAH is one of the most extensive collections of its kind in the world, numbering at present over 20,000 volumes and 160 periodical titles, as well as a variety of other materials, in more than 35 languages and dialects, and spanning more than four centuries. In addition to such rarities as the Facetiae of Poggio, the works of Nasreddin Hoca, and Joe Miller joke books, the reader will also find the latest issues of periodicals such as Nebelspalter (Switzerland), Eulen-spiegel (Germany), Le Canard enchaîné (France), Lao Fu Tzu (Hong Kong) and, of course, Mad Magazine.
Following Mr. Schmulowitz’s death in 1966, Kay Schmulowitz, his sister, continued to support the collection with generous donations of funds, books and periodicals until her death in June 1984. Income from the combined bequests of both Nat and Kay Schmulowitz assists substantially in maintaining this outstanding collection.
SCOWAH comprises a wide range of wit and humor: readers will find international fairy tales and folklore, proverbs, national and ethnic humor, anecdotes, joke books, cartoons and comic books, political satire, biography, humorous essays, monologues, plays and novels, popular entertainments, movable books, and literary, historical and popular culture studies. The works of the The New Yorker and Punch writers and artists are well represented, with a full run of Punch (1841-2002) here as well. The collection also includes humorous ephemera and the correspondence and scrapbooks of Nat Schmulowitz.
SCOWAH serves all levels of interests, from the curious reader to serious scholar. Local speakers and humorists consult the collection for material, and it draws inquiries, researchers and visitors from all corners of the world. Housed in the Book Arts & Special Collections Center, SCOWAH is one of the Library’s truly unique research collections.
Access to this non-circulating collection is through the online catalog as well as the department’s card catalog. A book catalog, which is also available to readers, was published in 1962; Supplement One was published in 1972. The library is working to make the entire collection available to the public through the online catalog.

- See more at: http://sfpl.org/index.php?pg=2000008801#sthash.nVwePXlc.dpuf

7 comments:

 1. Answer to Quiz 3:

  77,49,36,18,8.

  ReplyDelete
 2. புதிர் நேரத்துக்கான விடை 8

  ReplyDelete
 3. அனக்ராம் - மிக மிக ரசித்தேன். தமிழில் இதுமாதிரி ஏதாவது இருக்கிறதா? இருந்தால் சொல்லுங்களேன்...! அந்த கார்ட்டூன் படம் ரசனை! நகைச்சுவைப் புத்தகங்கள் மட்டுமே 20 ஆயிரமா? இதுக்காகவே பாலஹனுமான் அண்ணாவைப் பாக்க (பணம் சேத்து)ஒரு ட்ரிப் அடிக்கணும்னு மனஸ் சொல்லிச்சு. நாலு விஷயத்துல இப்படி மூணு விஷயங்களை ரசிச்சேன்.. அந்த நம்பர் புதிர்...! மாத்தி மாத்தி (இருககற கொஞ்ச) முடியப் பிச்சுக்கிட்டு யோசிச்சுட்டிருக்கேன்...! விடைதான் வரலை. அவ்வ்வ்வ்வ!

  ReplyDelete
 4. To Be or Not to be; that's the question. இதற்கு அப்புறம் என்ன என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன்! (ஹி.ஹி..) ஒரு வார்த்தைக்கு அனொக்ராம் என்ரால் செக் செய்து பார்க்கலாம், ஒரு நீ..ண்ட வாக்கியத்திற்கு என்றால் எப்படி செக் செய்வது!

  விமானப் பயணம் - லக்கேஜ் கட்டணம் ஏறினது கஷ்டம் தான், ஆனால், சாப்பிட என்று அவர்கள் கொள்ளை அடித்தது டூ மச்!

  புதிர் விடை: 8

  Trouble: நாம் எல்லோரும் ட்ரபிளுக்கு சீட் கொடுத்தே ஆக்வேண்டும் என்கிறான் ஒரு நண்பன் ( ட்ரபிள்ட் கணவன்!)

  அடுத்த தடவை SFO போகும்போது 6 மாசம் தங்கி 20000 புஸ்தக டைட்டிலையும் படித்துவிட்டு வாருங்கள்! நண்பர் உப்பிலிக்கு என் அன்பார்ந்த விசாரிப்புகளையும் தயைகூர்ந்து தெரிவிக்கவும். (என் பையன் ‘எமெரிவில்லி’ பக்கத்தில் இருக்கிறான்.)

  -ஜெ.

  ReplyDelete
 5. <>வாக்கியத்

  ரொம்ப சுலபம். இரண்டு வாக்கியத்தையும் காபி பண்ணி நோட்பேடில் போட்டுக் கொள்ளுங்கள்.
  இரண்டாவது வாக்கியத்தில், முதல் வாக்கியத்தில் உள்ள எழுத்துகளை ஒன்றன்பின் ஒன்றாக அடித்துக் கொண்டே வந்தால், கடைசியில் ஒரு எழுத்தும் மீறாது

  ReplyDelete
 6. Kalyani KrishnamurthyJuly 17, 2013 at 9:36 PM

  As others have said, puzzle answer is 8. This is why:

  7x7 = 49
  4x9 = 36
  3x6 = 18
  1x8 = 8

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!