June 30, 2013

ஒரு விடியோ செய்த மாயம்



 நான் டில்லியில் இருந்த போது வாரத்திற்கு மூன்று நாட்களாவது,  என் அலுவலகத்திற்கு வெகுஅருகில் இருந்த பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திற்குப் போவேன். அங்கு வரும்  PUNCH, TIME and TIDE, Listener, Private Eye  போன்ற  பத்திரிகைகள், தினசரிகள் எல்லாவற்றையும் படிப்பேன். பல பிரிட்டிஷ் எழுத்தாளர்களின்  ரசிகன் ஆனேன். அவர்களில் ஒருவர் ஜான் க்ளீஸ் (JOHN CLEESE)  என்னும் காமெடி எழுத்தாளர்,
ஜான் க்ளீஸ் எழுதிய பி.பி.சி காமெடி  ஷோ MONTY PYHTHON'S FLYING CIRCUS  மிகவும் பிரபலம். பின்னால் அது  டி வி டியாகவும் வெளியாயிற்று. விற்பனை சுமார்தான். காரணம்,  ஏராளமான பேர் அந்த ஷோவின் பல பகுதிகளை  யூ-ட்யூபில் வெளியிட்டு  விட்டார்கள்.
 

இதற்கு என்ன வழி செய்வது என்று ஜான் க்ளீஸும் மற்றவர்களும் மண்டையை  உடைத்துக் கொண்டார்கள். கடைசியில் ஒரு குயுக்தியான ஐடியா  செய்தார்கள்.  YOU TUBE  தளத்தில் MONTY PYTHON CHANNEL   என்ற பெயரில் புதிய ஒளிபரப்புச் சேனல் துவங்கப்போவதாக -ரீல்தான்!- ஒரு அறிவிப்பு விடியோவைச் சேர்த்தார்கள். அதில் “எங்கள் MONTY PYTHON-ன்  பல பகுதிகளைப் பலர் தாங்களாக ரிகார்ட் செய்து யூ-டியூபில் போட்டு வருகிறர்கள். அவற்றில் பல தெளிவான தரத்தில் இல்லை.  இனி கவலை வேண்டாம். துல்லியமான  தரத்துடன்  இந்த சேனலில் தொடர்ந்து இலவசமாக ஒளிபரப்பப் போகிறோம்.
 

பதிலுக்கு நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும்.  உங்கள் அபத்தமான, போரடிக்கும் கருத்துகளைக் கேட்கவில்லை. இத்தனை ஆண்டுகள் எங்களுக்கு ஏற்பட்ட வலிக்கும் மன உளைச்சலுக்கும் இதம் அளிக்க, இங்குள்ள சுட்டியில் கிளிக் செய்து டிவிடியை வாங்குங்கள். 

விடியோவில் வந்ததை அப்படியே தருகிறேன்:
 (Link: monty channel)
For 3 years, you YouTubers have been ripping us off, taking tens of thousands of our videos and putting them on YouTube. Now the tables are turned. It's time for us to take matters into our own hands. We know who you are, we know where you live and we could come after you in ways too horrible to tell. But being the extraordinarily nice chaps we are, we've figured a better way to get our own back: We've launched our own Monty Python channel on YouTube.
No more of those crap quality videos you've been posting. We're giving you the real thing - HQ videos delivered straight from our vault.
What's more, we're taking our most viewed clips and uploading brand new HQ versions. And what's even more, we're letting you see absolutely everything for free. So there!
But we want something in return.
None of your driveling, mindless comments. Instead, we want you to click on the links, buy our movies & TV shows and soften our pain and disgust at being ripped off all these years.
 

அடுத்த சில நாட்களில் MONTY PYTHON விடியோக்களுக்கு  அமேஸான் தளத்தில் ஏகப்பட்ட ஆர்டர்கள் குவிந்தன.  விற்பனை 23,000 மடங்கு அதிகரித்து அமேஸான் விற்பனையில் இரண்டாவது இடத்தைப்பிடித்து விட்டதாம். ( இந்த ’YOU TUBE   MONTY PYTHON  CHANNEL’  என்று ரீல் வெளியிடுவதற்கு முன்பு எவ்வளவு டிவிடி விற்றன என்று தெரியவில்லை. வெறும் 23000 டிவிடிகள் விற்றாலே கல்லா நிரம்பி விட்டிருக்கும்! ஒரு விடியோ செய்த மாயம்!

பின்குறிப்பு 1:   MONTY PYTHON  நிகழ்ச்சிகள்  தொகுப்பு இரண்டு பாகங்களாக வெளி வந்துள்ளன. என்னிடம் முதல் பாகம் உள்ளது. அதிலிருந்து ஒரு நகைச்சுவைப் பகுதியை மொழிபெயர்த்துப் பின்னால் போடுகிறேன்.
 
பின்குறிப்பு 2 : ஜான் க்ளீஸ் எழுதிய மற்றொரு டி வி நகைச்சுவை ஷோ  FAWLTY TOWERS.  பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட் 2000- ம் ஆண்டு நடத்திய ஒரு வாக்கெடுப்பில், இதுவரை வந்த டி.வி ஷோக்களில்
இதுவே நம்பர்-1   இடத்தைப் பிடித்தது.

பின்குறிப்பு 3 : இந்த எழுதி முடித்த பின், ஜான் க்ளீஸ் பற்றி மேலும் தகவல்கள் அறிய கூகிளினேன். அதில் கிடைத்த சேதி.  ஜான் க்ளீஸ் (வயது 74)  தனது மூன்றாவது  மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார். ஜீவனாம்சமாக 13 மிலியன்  பவுண்டும் அடுத்த மூன்று வருஷத்திற்குக் கூடுதலாக 1 மிலியன்  பவுண்டும் தரவேண்டுமாம். அவ்வளவு பணம் அவரிடம் இல்லை. அதனால் ஷோவில் இடம் பெற்ற சில பொருட்களை ஏலம் விட இருக்கிறார். அதில் ஒரு ஹெல்மெட்டிற்கு மட்டும் 1000 பவுண்ட் விலை நிர்ணயித்திருக்கிறாராம்!


21 comments:

  1. 'squeaking wheel ..' . புரிகிறது, அழுத பிள்ளைக்கு சில சமயம் பால் கிடைக்கும், பல சமயம் உதை கிடைக்கும்! - ஜெ.

    ReplyDelete
  2. எங்கேயிருந்து இவ்வளவு தகவல்கள் சேகரிக்கிறீர்கள்! கேள்விப்படாத பெயர்கள் எல்லாம் உங்கள் கைவண்ணத்தில் இங்கு பிராபல்யம் அடைகிறார்கள்! அத்துடன் எங்களுக்கும் துளியூண்டாவது அவர்களைப் பற்றி தெரியவருகிறது. நன்றி. Monty Python ஒரு வீடியோ ஆவது பார்த்துவிடுகிறேன்.

    ஜான் க்ளீஸ் எழுதிய Fawlty Towers! என்ன ஒரு கரெக்ட் ஸ்பெல்லிங்!

    மூன்றாவது மனைவிக்கே 13 மிலியன் பவுண்ட்! மனிதன் கையில் பணம் இல்லாதபோதே இவ்வளவு ஜீவனம்சமா! பார்த்து, 4-ஆவது கல்யாணம் செய்து கொண்டு விடப்போகிறார்!

    கடைசியில், //பதிலுக்குக்கு நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். உங்கள் அபத்தமான, போரடிக்கும் கருத்துகளைக் கேட்கவில்லை. //
    இதை நீங்கள் எங்களுக்கு சொல்ல வில்லையே?!

    -ஜெ.

    ReplyDelete
  3. எங்கேயிருந்து இவ்வளவு தகவல்கள் சேகரிக்கிறீர்கள்! கேள்விப்படாத பெயர்கள் எல்லாம் உங்கள் கைவண்ணத்தில் இங்கு பிராபல்யம் அடைகிறார்கள்! அத்துடன் எங்களுக்கும் துளியூண்டாவது அவர்களைப் பற்றி தெரியவருகிறது. நன்றி. Monty Python ஒரு வீடியோ ஆவது பார்த்துவிடுகிறேன்.

    ஜான் க்ளீஸ் எழுதிய Fawlty Towers! என்ன ஒரு கரெக்ட் ஸ்பெல்லிங்!

    மூன்றாவது மனைவிக்கே 13 மிலியன் பவுண்ட்! மனிதன் கையில் பணம் இல்லாதபோதே இவ்வளவு ஜீவனம்சமா! பார்த்து, 4-ஆவது கல்யாணம் செய்து கொண்டு விடப்போகிறார்!

    கடைசியில், //பதிலுக்குக்கு நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். உங்கள் அபத்தமான, போரடிக்கும் கருத்துகளைக் கேட்கவில்லை. //
    இதை நீங்கள் எங்களுக்கு சொல்ல வில்லையே?!

    -ஜெ.

    ReplyDelete
  4. Fawlty Towers! சரியான ஸ்பெல்லிங்!

    கிளீஸ் 2012-ல் நான்காவது மனைவியாக Jennifer Wade (41)க் கரம் பிடித்தார்.

    ReplyDelete
  5. சரிதான்... ஜெ.க்கே தெரியாத விஷயங்கள் என்றால் என்னை என்ன சொல்ல...? வீடியோவும் சரி... அந்த விளம்பரமும் சரி... மிக மிக ரசித்தேன்!

    ReplyDelete
  6. உங்கள் தளம் மூலம் பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். தொடர்ந்து பகிர வேண்டுகோளுடன்....

    வெங்கட்
    புது தில்லி.

    ReplyDelete
  7. Fawlty Towers ஒரு சிறந்த நகைச்சுவை டிவி தொடர். அத்தொடரில் Polly என்ற Connie Booth தான் John Cleeseன் முதல் மனைவி

    பரத்குமார்

    ReplyDelete
  8. //சரிதான்... ஜெ.க்கே தெரியாத விஷயங்கள் என்றால்...// கணேஷ் sir, என்ன இப்படி கிண்டல் பண்ணலாமா! ஏதோ கடுகு சாரின் புண்ணியத்தில் கொஞ்சம் புதுப்புது விஷயங்கள், பெயர்கள் தெரிந்துகொள்கிறேன். உங்கள் தயவில் நகைச்சுவையை அனுபவிக்கிறேன். நீங்கள் எல்லாம் என் ஓய்வு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறீர்கள். அதற்கு நன்றி. -ஜெ.

    ReplyDelete
  9. Some of the best TV serials I enjoyed (when my hearing was in order!): Yes Prime Minister, Mind your language, Bill Cosby & Different Strokes. Kadugu Sir can elaborate on these serials / producers/ directors / actors and also on any copied Tamil / Hindi versions. - R. J.

    ReplyDelete
  10. I just googled to find that 'Fawlty' is the family name of the person and does not refer to any 'fault' in the hotel building!!That's why I wrote my earlier comment appreciating 'Fawlty' - 'faulty' spelt with fault! - R. J.

    ReplyDelete

  11. அட, பரவாயில்லையே! ஒருத்தர், தன் LIFE ல மூன்றாவது WIFE ஐ

    DIVORCE பண்ண வேண்டுமென்றால் எத்தனை புண்ணியம்

    செய்திருக்க வேண்டும் ?

    ஹும் ...அவர் போட்டோவை மட்டும் கொஞ்சம் பெரிதாகப் போட்டிருந்தால், பூஜை ரூமில் வைத்து பூஜை

    செய்திருப்பேனே !!

    ReplyDelete
  12. ஜீவனாம்சம் கொடுப்பதற்காக மொனாக்கோவில் உள்ள தன் வீட்டை விற்கப் போகிறாராம்.
    நீதி: மொனாக்கோவில் வீடு உள்ளவர்களுக்குத்தான் மூன்றாவது திருமணம் செய்து கொள்வது சுலபமாம்.- கடுகு

    ReplyDelete
  13. ARR sir, John Cleese may be having more houses elsewhere too, not just one in Monaco only! So, before thinking of 2nd, 3rd, 4th wives, get houses all over the World!

    ReplyDelete
  14. 3 தடவை பட்டுமா புத்தி வரல..?!

    ReplyDelete
  15. The World lives in two 'tents' that are very distant from each other! - R. J.

    ReplyDelete
  16. சார்..சார் ....உங்களைத் தானே ... அந்த மொனாக்கா எங்கே இருக்கிறது என்று யாராவது சொல்லுங்களேன் ...ப்ளீஸ் ......

    ReplyDelete
  17. alimony means you have no money, It is all her money

    ReplyDelete
  18. Alimony leaves you no m0ney. It is all her money now

    ReplyDelete
  19. இன்று தற்செயலாக தங்களது ப்ளாக் படித்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது .கல்கி,சாவி,குமுதம் ஆசிரியர் ,சுஜாதா போன்ற வர்கள் பற்றிய விஷயங்கள் படிக்கும் பொது ,அமைதியான இரவு நேரத்தில் பழைய தமிழ் பாடல்களை கேட்டு ரசிக்கும் நினைவுகள் போல் உள்ளது (வயது கூட ,, கூட ..இதுபோன்ற நினைவுகள் வருமோ ?) தொடரட்டும் தங்கள் எழுத்து ..

    ReplyDelete
  20. தங்களது பதிவுகளை படிக்கும் போது .அமைதியான இரவு நேரத்தில் பழைய தமிழ் பாடல்களை கேட்கும் சுகம் தெரிகிறது ..

    ReplyDelete
  21. தாளிப்பு நன்றாக உள்ளது !

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!