June 24, 2013

ஒரு உரை செய்த மாயம்!. -கடுகு


 No man's abilities are so remarkably shining as not  to stand in need of a proper opportunity, a patron, and even the praises of a friend to recommend them to the notice of the world! - Pliny 
   (Dictionary of Thoughts - 1908)
 

உங்களில் பலர்  KING'S SPEECH  திரைப்படத்தை பார்த்து ரசித்து இருப்பீர்கள். அது ஆறாம் ஜார்ஜ் மன்னரைப் பற்றிய திரைப்படம். மன்னருக்கு வாய் திக்கும் என்பதால் அவருக்கு உரை நிகழ்த்தவே தயக்கம். ஆண்டுதோறும் கிருஸ்துமஸின் போது  மன்னரின் வாழ்த்துரை ரேடியோவில் ஒலிபரப்பப்படும். அதன்படி, யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டமான 1939-ம் ஆண்டு கிருஸ்துமஸ் வாழ்த்துரை நிகழ்த்தவேண்டி வந்தபோது, மன்னர் உரையைத் தயாரித்து, வாய் திக்காமல் இருக்க  திரும்பப் திரும்பப் படித்துப் பார்த்தார். 
மன்னரின் உரை ஒலிபரப்பப் பட்டது.  உரையின் முடிவில் ஒரு புத்தாண்டுக் கவிதை வரிகளைச் சொன்னார். (இயற்றியவரின் பெயரைக் குறிப்பிடவில்லை.)

Gate of the Year என்னும் அந்தக் கவிதை:
I said to the man who stood at the Gate of the Year,
'Give me a light that I may tread safely into the unknown.'
And he replied,
'Go out into the darkness, and put your hand into the Hand of God.
That shall be better than light, and safer than a known way.'

“அந்த சர்வ வல்லமை பொருந்திய கை  நமக்கு வழிகாட்டித் துணை புரியட்டும்"  (May That  Almighty Hand guide and uphold us all" ) என்ற வரிகளுடன் 
உரையைமுடித்தார்.


அவர் மிகவும் சிரமப்பட்டு தீவிர முயற்சியுடன் பேசியதைக் கேட்ட மக்கள்  மிகவும் நெகிழ்ந்து போனார்கள். அத்துடன் அந்தக் கவிதையை எழுதியவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ளவும் முனைந்தார்கள்! சில நாட்களில் அந்த கவிதையை எழுதியவர். லண்டன் எகனாமிக்ஸ் ஸ்கூலில் பணியாற்றி, ஓய்வு பெற்ற   பேராசிரியையும், (அவ்வளவாகப் பிரபலமாகாத) எழுத்தாளருமான  MINNIE LOUSIE HASKINS என்பது தெரிய வந்தது, உடனே அவர் எழுதிய ’டெஸர்ட்’ புத்தகத்திற்கு ஆர்டர்கள் குவிந்தன. மறுபதிப்பு வெளிவந்தது. ஒரே மூச்சில் 43,000 காபிகள் விற்றன. அவரது கவிதைகளைப் பத்திரிகைகள் போட்டி போட்டுக்கொண்டு பிரசுரித்தன. அவர் 1957-ல் காலமான போது  டைம்ஸ் பத்திரிகை இரங்கல் கட்டுரை வெளியிட்டது. (இது மகா பெரிய கௌரவமாம்!) 
சரியான நபர் (மன்னர்) சரியான சமயத்தில் (கிருஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில்) இவரது கவிதையைப் படித்ததினால் இவ்வளவு பிரபலம் ஆனார்!
(இப்போது ஆரம்பத்தில் உள்ள பொன்மொழியைப் படியுங்கள்!)


பி.கு.1: மன்னரின் உரையில் இது முதலில் இடம் பெறவில்லை. ஒலிபரப்பிற்குச் சில மணி நேரத்திற்கு முன்பு இந்தக் கவிதை  மன்னரின் பார்வைக்கு அனுப்பட்டதாம்.

பி.கு-2: பதிவைப் பார்த்த ஒருவர் தெரிவித்த தகவல்: ( அவருக்கு நன்ற.ி)
In 1952 King George VI died and was buried at Windsor Castle and at the foot of a stained glass window in his memory are Minnie's words the King had quoted in 1939!

5 comments:

  1. //“அந்த சர்வ வல்லமை பொருந்திய கை நமக்கு வழிகாட்டித் துணை புரியட்டும்" (May That Almighty Hand guide and uphold us all" )//. Amen! - R. J.

    ReplyDelete
  2. பொன்மொழிக்கேற்ற மிக அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. சிறப்பான பகிர்வு.

    பொன்மொழியும் மிக மிக அருமை.

    ReplyDelete
  4. எனக்குத் தெரிந்திராத விஷயங்கள்! பொன்மொழியையும், கவிதை வரிகளையும் மிக ரசிக்க முடிந்தது! மன்னர் உரை நிகழ்த்துவதற்கு சில மணி நேரத்துக்கு முன்புதான் மன்னரின் பார்வைக்கு இக்கவிதை அனுப்பப்பட்டது எனில், மன்னர் ரசித்துப் படிக்கும் வாசகர் அல்லர், எவரோ படித்துப் பரிந்துரைத்ததை அவர் பேசினார் என்றல்லவா ஆகிறது? எவராயினும் அந்த வாசகருக்கு வந்தனம்!

    ReplyDelete

  5. /May the Almighty hand guide and uphold us all/
    என்றைக்கும், எங்கும் சொல்லத் தகுந்த வாக்கியம்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!