June 16, 2013

இரண்டு கடிதங்கள்


இரண்டு கடிதங்கள்

1. புத்தகம்  எழுதிய கடிதம்

அமெரிக்காவில் பழைய புத்தகங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் நிறைய உள்ளன. எல்லாம் ஆன்-லைன் விற்பனைதான். சில  நிறுவனங்கள் 10 லட்சம், 15 லட்சம் என்ற அளவில் புத்தகங்களை வைத்துள்ளன.  ஆன்-லைனில் பார்த்துத் தேடி, புத்தகங்களுக்கு ஆர்டர் செய்யலாம்.  ABE books,Amazon, Alibiris, Half.com, Powell Books, Strand Books, Better World Books என்று பல நிறுவனங்கள் உள்ளன!.
 20, 30 வருஷ பழைய புத்தகங்களாக இருந்தாலும் புதுக்கருக்கு அழியாத புத்தகங்கள் கூட 1 டாலர், 2 டாலருக்குக் கிடைக்கும்.  சில புத்தகங்கள்  ஒரு சென் ட் விலயில் கூட கிடைக்கும்! தபால் கட்டணம் தான் 3, 4 டாலர் இருக்கும்.

 Better World Books என்ற கம்பெனியில் 3, 4 டாலர் விலையில்  புத்தகங்கள் வாங்கலாம். அவர்கள் தபால் கட்டணம் வசூலிப்பதில்லை.  உலகின் எந்த முகவரிக்கும்   தங்கள் செலவில் அனுப்பி வைக்கிறார்கள்.
 
ஒரு சமயம் நான் மூன்று  புத்தகம் - எல்லாம் அகராதி மாதிரி தலையணை  சைஸ் கனமான புத்தகங்கள் - ஆர்டர் பண்ணினேன்.. ஏதோ பண்டிகை கால தள்ளுபடி  கொடுத்தார்கள். மொத்த  விலை 7 டாலர். என் சென்னை முகவரியைக் கொடுத்தேன், சுமார் ஒரு மாதத்தில் சென்னையில் ‘ஸ்பீட் போஸ்ட்’ மூலம் புத்தகங்கள் வந்து சேர்ந்தன!
நிற்க, ஆர்டரைப் பெற்றுக் கொண்டதும்  அந்த நிறுவனத்திலிருந்து, அந்த புத்தகங்களே  எழுதுவது போல்  எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த  சுவையான கடிதத்தை அப்படியே தருகிறேன்.

Hello .......
(Your book(s) asked to write you a personal note - it seemed unusual, but who are we to say no?)
Holy canasta! It's me... it's me! I can't believe it is actually me! You could have picked any of over 2 million books but you picked me! I've got to get packed! How is the weather where you live? Will I need a dust jacket? I can't believe I'm leaving Mishawaka, Indiana already - the friendly people, the Hummer plant, the Linebacker Lounge - so many memories. I don't have much time to say goodbye to everyone, but it's time to see the world!
I can't wait to meet you! You sound like such a well read person. Although, I have to say, it sure has taken you a while! I don't mean to sound ungrateful, but how would you like to spend five months sandwiched between Jane Eyre (drama queen) and Fundamentals of Thermodynamics (pyromaniac)? At least Jane was an upgrade from that stupid book on brewing beer. How many times did the ol' brewmaster have one too many and topple off our shelf at 2am?
I know the trip to meet you will be long and fraught with peril, but after the close calls I've had, I'm ready for anything (besides, some of my best friends are suspense novels). Just five months ago, I thought I was a goner. My owner was moving and couldn't take me with her. I was sure I was landfill bait until I ended up in a Better World Books book drive bin. Thanks to your socially conscious book shopping, I've found a new home. Even better, your book buying dollars are helping kids read from Brazil to Botswana.
But hey, enough about me, I've been asked to brief you on a few things:
We sent your order to the following address:
xxxxxxx
xxxxx
Chennai, Tamilnadu 600115
---
Eagerly awaiting our meeting,

1, --------- ( Name of the  book)
2. --------- ( Name of the   book)
3,  --------- ( Name of the  book)

2.  ஒரு நெகிழ்வான ஹோட்டல் பில் - கடிதம்1

 ‘’என்னது?... என்னது?... மறுபடியும் சொல்லுங்கள். ஹோட்டல் பில் சாதாரணமாக ஷாக்தான் அடிக்கும். நெகிழ்ச்சியை ஏற்படுத்துமா’’ என்று கேட்காதீர்கள். 
உண்மையிலேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்திய  அந்தக் கடிதத்தில் எழுதி  இருந்ததைக் கூறுமுன் ஒரு  சின்ன முன்னுரை.

சென்ற மாதம் சிகாகோவில்  புற்றுநோய் மருத்துவர் மகாநாடு நடந்தது. . முப்பதாயிரம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான 4 நாள் மகாநாடு.    (இந்த மகாநாட்டைப்  பற்றியும். ஒரு குழப்பமுமில்லாமல் அற்புதமாக விவரங்களயும் தகவல்களையும்  அறிவிப்புகளையும் ஐ-பேட் மூலம் கொடுத்ததைப் பற்றியும்ஒரு தனிப் பதிவே எழுதலாம்!)   

இந்த மகாநாட்டில் என் மகள் பங்கெடுத்துக் கொண்டாள். உரையும் நிகழ்த்தினாள். ( அவள்  ஒரு கேன்சர் டாக்டர்.) 

அவள் தங்கி இருந்தது ஒரு பிரபல ஹோட்டல். மகாநாடு முடிந்ததும், ஹோட்டல் நிர்வாகம் அவளிடம் பில் கொடுத்தது. அதில் பில் தொகைக்கான விவரங்கள் எல்லாம் இருந்தன. பில்லைத் திருப்பிப்  பார்த்தால். அது ஒரு  THANK YOU  கடிதம். புற்று நோய்வாய்ப்பட்டவர்கள், அந்த நோயிலிருந்து மீள்வதற்கு உதவும் பணிகளைச் செய்யும் மருத்துவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அழகான, உருக்கமான வாசகங்களில் ஹோட்டல் நிர்வாகம்  நன்றி தெரிவித்து இருந்தது.

அந்த கடிதத்தின் மார்ஜின்களில்  சிலர் , சின்ன சின்னக் குறிப்புகள் எழுதிக் கையெழுத்திட்டிருந்தார்கள். அவர்கள் யாவரும் ஹோட்டலில் பணியாற்றுபவர்கள். ஒவ்வொருவரும் கேன்சர் நோய்வாய்ப்பட்ட     தங்களுக்கோ,  தங்கள் உறவினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ
மருத்துவர்கள் அளித்த சிறப்பான சேவைக்கு மனதார நன்றி கூறி இருந்தார்கள். 
அது சாதாரண ஹோட்டல் பில்தான்.  இருப்பினும் அவர்கள் எழுதிய சிறிய குறிப்புகள் அனைவரையும் நெகிழச் செய்துவிட்டது. 

அந்த கடிதத்தின்   படத்தையும். கடிதத்தில் எழுதியுள்ள  குறிப்புகளை  இங்கு தருகிறேன் ( படத்தை கிளிக் செய்து, பெரிதாக்கிப் பார்க்கவும்,)
குறிப்புகள்:
 1.Thank you for helping my dad beat skin cancer
  - xxxxxx  Front Office

2. Thank you for helping my Aunt.   --xxxxxx (PBX)

3.  Thank you,  Dr. Pfeiffer for your cancer research programs. -xxxxx House Keeping

4. Thank you so much for helping our family get through the tough time of our relative's breast cancer. -xxxx Front Desk

5. Thank you for helping my sister feeling good. -xxxxx

6.Thank you for helping my best friend beat cancer twice. Would not have been possible without your dedicated research. -xxxx Food and Beverage

7. Thanks for all you do! A true blessing. -xxxx Front Desk

8. My husband is being treated  for prostate cancer. Thank you for all that you have done. -xxxx PBX

9. My mother went into remission just last week. Thank you so much.-- xxxxx  Asst.  Frontoffice Manager  

10.Thanks for your hard work. -- xxxxx Guest services

6 comments:


 1. இரண்டு கடிதங்களுமே பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கின்றன. அமெரிக்கர்களின் வியாபார உத்திகள் சில நேரங்களில் ஆச்சரியம் அளிக்கிறது. சேவைக்கு முன் இடம் அளிக்கிறார்கள். வாங்கிய பொருளில் குறை இருந்தால் இலவசமாக மாற்றுப் பொருள் கொடுப்பார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 2. ஹோட்டல் பில் குறிப்புகள் நெகிழவைக்கின்றன.

  ReplyDelete
 3. இரண்டு பதிவுகளும் நெகிழ்ச்சியாக இருந்தன. இணையம் மூலமாக புத்தகம் விற்றாலும், பிசினெஸ் ரீதியாக மருத்தவர்கூட்டம் நடத்த இடம் கொடுத்தாலும் இவர்கள் அதை personal touch உடன் செய்தது மார்க்கெட்டிங் உத்தியையும் மீறிய பண்பாகவே எனக்குப் படுகிறது. நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை ஏராளம்.

  வாங்கிய "தலையணைகள்" யாவை?! எப்படி இவ்வளவு படிக்கிறீர்கள்!

  -ஜெ.

  ReplyDelete
 4. இங்கே புக் வாங்க படற பாடு.. ம்ஹ்ம்.. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விலை வச்சு அதுக்கு முன்பணம் அனுப்பி.. மூணு மாசம் போராடினா கிடைக்கும்..

  ReplyDelete
 5. ரிஷபன் அண்ணா சொல்றது 100க்கு 200 சதவீதம் சரி. ஒரு பிரபல பதிப்பகத்துல நான் புத்தகம் வாங்க முன்பணம் கட்டிட்டு காத்திருந்தேன். அந்தப் புத்தகம் கண்காட்சிக்கும், கடைகளுக்கும் மார்க்கட்டிங் ஆகி, ஒரு மாசம் கழிச்சு வீட்டுக்கு வந்து சேர்ந்துச்சு. ‘இந்த எழவுக்கு நாம கடைலயே வாங்கிப் படிச்சிருக்கலாமே’ன்னு தோணினதால இப்பல்லாம் நான் ஆர்டர் எதுவும் பண்றதில்ல. அங்க புத்தகங்களை ஒரு பெர்சனல் டச்சோட அனுப்பின விதம் ஆச்சரியமோ ஆச்சரியம்! ஹோட்டல் பில்லின் பின்னிருந்த குறிப்புகள் ஒவ்வொன்றும் நெகிழ வைத்தன!

  ReplyDelete
 6. நாம வெளி நாட்டுகாரவுங்க கிட்ட கத்துக்க வேண்டிய நல்ல பண்பாடு.

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!