July 21, 2012

அன்புடையீர்

ஒரு ஜோக்:
  ஒருத்தர் டாக்டரிடம் போனார்.” டாக்டர், எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. எப்பவும் அசதியாக இருக்கிறது” என்றார். டாக்டர் அவரை நன்கு பரிசோதித்துப் பார்த்தார். எல்லா டெஸ்ட்டும் பண்ணினார். கடைசியில் அவர் சொன்னார்: “ உங்களுக்கு ஒரு உடம்பும் இல்லை.. உங்களிடம் இருப்பது  மித மிஞ்சிய சோம்பேறித்தனம்தான்” என்றார்.
”அப்பபடியா சொல்றீங்க டாக்டர்?.. அப்ப ஒண்ணு செய்யுங்க.. இந்த வியாதிக்கு மெடிக்கல் பாஷையில் ஏதாவது பெரிய வார்த்தையாகச் சொல்லுங்கள். என் மனைவியிடம் சொல்லி விடுவேன்...அது போதும்: என்றார்.
“சரி.. உமக்கு  வந்திருப்பது  ”எக்ஸ்மிலோனோட்ரோஃபி” என்றார்.
“தாங்க் யூ, டக்டர்..தாங்க் யூ, டக்டர்..: என்று சந்தோஷமாக் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனார்
ஜோக் இத்துடன் முடிந்து விட்டது!


ஒரு அறிவிப்பு:
இந்த ப்ளாக்கின் வாசகர்களுக்கு  அடுத்த பதிவு போட சற்று தாமதமாகிறது. எனக்கு ”எக்ஸ்மிலோனோட்ரோஃபி” இருப்பதே காரணம். விரைவில் ஒன்றிரண்டு நாளில் குணமடைந்து விடுவேன். அப்போது புதிய பதிவு வரும்
அது வரை இந்த புதிருக்கு விடை கண்டு பிடியுங்கள்.


15 comments:

  1. எனக்கும் எக்ஸ்மிலோனோட்ரோஃபி.. நீங்க வந்து ஆன்ஸர் போட்டதும் தெரிஞ்சுக்கிறேன்.. :)

    ReplyDelete
  2. I have been visiting this blog for the past few days to see if there were any updates and find this joke. Is the joke on us?
    எனக்கும் எக்ஸ்மிலோனோட்ரோஃபி, நீங்களே புதிருக்கான பதிலையும் சொல்லிடுங்க.

    பரத் குமார்

    ReplyDelete
  3. எனக்கு ஆன்சர்கண்டுபிடிச்சோஃபோபியா நோய் இருப்பதால் கவுதமன் விடை சொன்னதும் தெரிந்து கொள்கிறேன்!

    ReplyDelete
  4. எக்ஸ்மிலோனோட்ரோபியோ... புதுவித வியாதியின் கண்டுபிடிப்பு அருமை. அடுத்து வரும் எண் 4 ஆக இருக்கலாம் என்பது என் யூகம். உங்கள விடையுடன் சரிபார்க்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. மேலே இருக்கும் 2 நாய்க்குடைகளும், கீழே இருக்கும் 4 ம் தனித்தனி என்றால், தொடர்பு படுத்த மொத்தப் புள்ளிகளை எடுத்துக் கொண்டால், 3 புள்ளிகள் வர வேண்டும்!

    டாக்டரிடம் கேட்டு சீக்கிரம் மருந்து வாங்கி சாப்பிட்டு, உடனே பதில் போடவும் - இதற்கும் எக்ஸ்மிலோனோட்ரோஃபி என்று 4 நாள் ஆக்க வேண்டாம்! (பெண், பேத்தியுடன் நேரம் செலவு செய்யத் தானே இந்த எக்ஸ்...ஃபி!) நானெல்லாம் 10 மணி வரை தூங்கினாலும் எழுந்தவுடன் சுறுசுறுப்பாக உங்கள் வலைப் பக்கம் வரவில்லியா!

    -ஜெ.

    ReplyDelete
  6. மேலே இருக்கும் 2 நாய்க்குடைகளும், கீழே இருக்கும் 4 ம் தனித்தனி என்றால், தொடர்பு படுத்த மொத்தப் புள்ளிகளை எடுத்துக் கொண்டால், 3 புள்ளிகள் வர வேண்டும்!

    டாக்டரிடம் கேட்டு சீக்கிரம் மருந்து வாங்கி சாப்பிட்டு, உடனே பதில் போடவும் - இதற்கும் எக்ஸ்மிலோனோட்ரோஃபி என்று 4 நாள் ஆக்க வேண்டாம்! (பெண், பேத்தியுடன் நேரம் செலவு செய்யத் தானே இந்த எக்ஸ்...ஃபி!) நானெல்லாம் 10 மணி வரை தூங்கினாலும் எழுந்தவுடன் சுறுசுறுப்பாக உங்கள் வலைப் பக்கம் வரவில்லியா!

    -ஜெ.

    ReplyDelete
  7. எனக்கும் எக்ஸ்மிலோனோட்ரோஃபி!

    ReplyDelete
  8. 4 என்பதுதான் சரியான விடை...

    ReplyDelete
  9. ஹப்பாடா. 4ம் தெரிஞ்சவர் நீங்கதான்னு எனக்கு அப்பவே தெரியும்..

    ReplyDelete
  10. டாக்டரிடம் இதற்கு வேறு ஏதாவது சின்னதாக பெயர் இருக்கிறதா என கேட்டு சொல்லுங்க ஸார்!
    முழுப்பெயரையும் சொல்ல சோம்பலாக உள்ளது.

    ReplyDelete
  11. புதுசு புதுசா வியாதி வருதே.... புலம்பலோஃபோபியா வந்துடப்போகுதே எனக்கு! :)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!