நான் கால்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஆங்கில பாட புத்தகத்தில் ஜோசப் அடிஸன் என்பவர் ’ஸ்பெக்டேடர்’ பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரை இடம் பெற்றிருந்தது. அடிஸன் ஒரு சிறந்த எழுத்தாளர் என்று புரொபசர் கூறியது தான் இன்று நினைவில் இருக்கிறது, பரீட்சைக்காகப் படித்தனாலோ என்னவோ அடிஸனின் கட்டுரையை அவ்வளவாக ரசிக்கவில்லை. அவரது ஆங்கில நடையைக்கூட நான் ரசித்ததாக நினைவில்லை. அந்த கட்டுரையில் வந்த ஒரே ஒரு வார்த்தைதான் நான் புதிதாகக் கற்றுக் கொண்ட வார்த்தை என்பதால் அவர் பெயரை மறக்கவில்லை. அந்த வார்த்தை: INSTINCT!
அதன் பிறகு பல வருஷங்களுக்குப் பிறகு அவரது ஒரு சில கட்டுரைகளைப் படித்தேன். ஒரு சமயம், பல கட்டுரைகளிலிருந்து அழகான வாசகங்களை தொகுத்துப் போடப்பட்டப் புத்தகத்தில் ஒரு பாரா கண்ணில் பட்டது. அது அடிஸன் எழுதியது. லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அப்பேயில் உள்ள கல்லறைகளைப் பற்றி அவர் எழுதியிருந்தார். கருத்தழகும் நடையழகும் என்னைக் கவர்ந்து விட்டது. என் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன். சமீபத்தில் அந்த பாரா கண்ணில் பட்டது. அதைத் தமிழ் படுத்தி ‘பிளாக்’கில் போட விரும்பினேன். 1711 வாக்கில் வெளியான ஸ்பெக்டேட்டர் பத்திரிகையின் இதழ்களை கூகுளில் பார்க்க முடிந்தது.
அடிஸனின், குறிப்பிட்ட பாராவைக் கீழே தமிழில் தந்திருக்கிறேன். அடிஸன் அளவு நான் திறமைசாலி இல்லை என்பதால் மொழிபெயர்ப்பு சுமார்தான்.
====================
சீரிய மனிதர்களின் கல்லறைகளைப் பார்க்கும்போது, எல்லா வித பொறாமை உணர்வுகளும் மடிந்து போகின்றன. உன்னதமானவர்களின் கல்லறை வாசகங்களைப் படிக்கும்போது அனைத்து வித அற்ப ஆசைகளும் விலகிப் போகின்றன. கல்லறைகளின் மீது படிந்துள்ள, பெற்றோர்களின் துயரங்களை உணரும்போது என் இருதயம் இரக்கத்தினால் நெகிழ்ந்து உருகுகிறது. அதே சமயம் அந்த பெற்றோர்களின் கல்லறைகளைப் பார்க்கும்போது, இறந்துபோனவர்களுக்காக சோகமடைவது வீண் என்று தோன்றுகிறது.
மன்னர்களின் உடல்கள், யாரால் வீழ்த்தப்பட்டார்களோ அவர்களின் உடல்களுக்கு அருகிலேயே படுத்துக் கிடப்பதைப் பார்க்கும்போதும், எதிர் எதிராக இருந்த அறிஞர்கள் ஒருவர் பக்கத்தில் ஒருவராக அடக்கம் செய்து கிடப்பதைப் நோக்கும்போதும், வெவ்வேறு கருத்துகளையும் போட்டி மனப்பான்மைளையும் உண்டாக்கி பல கருத்து வேறுபாடுகளையும் சச்சரவுகளையும் உண்டாக்கிய புனிதர்கள் அங்கு புதையுண்டிருப்பதைக் காணும்போதும், இந்த சின்ன சின்ன போட்டிகள், பிளவுகள், சமூக விவாதங்கள் ஆகியவை பற்றி என் மனம் வருத்தமும் வியப்பும் அடைகிறது. இந்த கல்லறைகளின் மீது பொறிக்கப்பட்டுள்ள வெவ்வேறு தேதிகளைப் பார்க்கிறேன். சிலர் முன் தினம் தான் இறந்து போயிருக்கிறார்கள்; வேறு சிலர் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தவர்கள். நாம் அனைவரும் ஒரே சமயத்தில் பிறந்து, ஒரே சமயத்தில் சக மனிதர்களாய் வாழும் அந்த உன்னத நாளை மனதில் எண்ணிப் பார்க்கிறேன்.
====================
மன்னர்களின் உடல்கள், யாரால் வீழ்த்தப்பட்டார்களோ அவர்களின் உடல்களுக்கு அருகிலேயே படுத்துக் கிடப்பதைப் பார்க்கும்போதும், எதிர் எதிராக இருந்த அறிஞர்கள் ஒருவர் பக்கத்தில் ஒருவராக அடக்கம் செய்து கிடப்பதைப் நோக்கும்போதும், வெவ்வேறு கருத்துகளையும் போட்டி மனப்பான்மைளையும் உண்டாக்கி பல கருத்து வேறுபாடுகளையும் சச்சரவுகளையும் உண்டாக்கிய புனிதர்கள் அங்கு புதையுண்டிருப்பதைக் காணும்போதும், இந்த சின்ன சின்ன போட்டிகள், பிளவுகள், சமூக விவாதங்கள் ஆகியவை பற்றி என் மனம் வருத்தமும் வியப்பும் அடைகிறது. இந்த கல்லறைகளின் மீது பொறிக்கப்பட்டுள்ள வெவ்வேறு தேதிகளைப் பார்க்கிறேன். சிலர் முன் தினம் தான் இறந்து போயிருக்கிறார்கள்; வேறு சிலர் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தவர்கள். நாம் அனைவரும் ஒரே சமயத்தில் பிறந்து, ஒரே சமயத்தில் சக மனிதர்களாய் வாழும் அந்த உன்னத நாளை மனதில் எண்ணிப் பார்க்கிறேன்.
====================
உங்கள் மொழிபெயர்ப்பில் குறை சொல்ல முடியாது. வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பதில் அதே இம்பேக்ட் கிடைப்பது, யார் மொழி பெயர்த்தாலும் கஷ்டம் தான். அதனால், விஷயத்தை மட்டும் உள்வாங்கி, நம் சுந்தரத் தமிழில் சுயமாக எழுதினால் சுகமாக இருக்கும். வைரமுத்து, கண்ணதாசன் பாடல்களை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் எப்படி இருக்கும்? அதே தான் இங்கும்.
ReplyDelete-ஜெ.
கல்லறையில் பேதம் இருப்பதில்லை! வாஸ்தவம்!
ReplyDeleteஒரு துணுக்கு ஒன்று ஞாபகம் வருகிறது, எனக்கு!
கல்லறையிலிருந்து வெளி வந்த இரண்டு கம்யூனிஸ்ட் பிணங்கள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தன.என்னவென்று விசாரித்ததில் “சார், நான்
லெஃப்ட்..சார் ரைட்..புதைக்கறவங்க எங்க இருவரையும் மாத்திப் புதைச்சுட்டாங்க!”
என்றன இரண்டு பிணங்களும் கோரஸாக!
ஆங்கில மூலத்தையும் கொடுத்திருந்தால், ஒப்பிட வசதியாக இருந்திருக்கும் என்று தோன்றிற்று.
ReplyDeleteசமரசம் உலாவும் இடமே..
ReplyDeleteமொழிபெயர்ப்பு சுகம்.
நல்ல பகிர்வு....
ReplyDeleteKGG அவர்களுக்கு:
ReplyDeleteஆங்கில மூலம்(கள்) கொடுக்கப்பட்டிருக்கின்றனவே!
ரிஷபன் - ‘சமரசம் உலாவும் இடமே..’ சரியான தலைப்பு, முழு கட்டுரையின் சாராம்சத்தை உள்ளடக்கியது. (பாட்டு ராகத்தோடு காதில் விழுகிறது - எழுதியது யார்? பாரதிதாசன் / பட்டுக்கோட்டை?) கடுகு வாசகர் என்ற முறையிலும், பிரபல எழுத்தாளர் என்ற முறையிலும் இந்தக் கட்டுரைக்கு ரிஷபனின் மொழிபெயர்ப்பை - ஸ்ரீமான் கடுகு அவர்களின் சம்மதத்துடன் - இங்கு எதிர்பார்க்கலாமா? - ஜெ.
ReplyDeleteஅருமை. எனக்குப் பிடித்தவை ரா.கி.ர.வின் மொழிபெயர்ப்பும் உங்களுடையதும்தான். அப்படியே வரிக்கு வரி காப்பியடிக்காமல் மூலத்தைப் படிக்காதவர்களுக்கும் ரசிப்பனுபவம் தரும் திறமைசாலிகள் இருவரும். இங்கும் மிக ரசித்தேன்.
ReplyDeleteமதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
மிகவும் அருமையான, அழுத்தமான விஷயங்கள்! நிதானமாக, ஒவ்வொரு வரியாக, படித்தேன்.
பகிர்விற்கு நன்றி!
அன்புடன்
திருமதி சுப்ரமணியம்
இந்தக் கட்டுரைக்கு ரிஷபனின் மொழிபெயர்ப்பை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteகடுகு
ஸார்.. என் ஆங்கில மற்றும் எந்த அறிவுமே சிற்றறிவுதான்.. குருவி தலையில் பனங்காய்.. இல்லை.. பனங்காய் மூட்டை ! ரசிகனாய் இருக்கிற ஆனந்தத்தை நான் விடத் தயாராய் இல்லை. பால கணேஷின் கூற்றை அப்படியே ஆமோதிக்கிறேன். இரு திறமைசாலிகளின் ரசிகனாய் நானும் இருப்பதில் எனக்கும் சந்தோஷம்.
ReplyDeleteTo Sri R J:
ReplyDeleteNo embarrasseemnt. Rishaban is also my good friend!
Kadugu
Not at all. RJ.
ReplyDeleteWaw.. Kadugu Sir.. I am just moved. 'My good friend' .. thanks for yr blessings. I am honoured. :)
இப்படித் தான் சமயத்தில அடக்கத்தை அடக்கம் பண்ணிடுவார் ரிஷபன் !
ReplyDeleteஅட ராமா, நானும் ஏதோ தப்பா பேசிட்டேன் போல இருக்கே !!
அட ராமா, நானும் ஏதோ தப்பா பேசிட்டேன் போல இருக்கே !!+++
ReplyDeleteஅதெல்லாம் ஒண் ணுமில்லை. நீங்க FUN-ஆ பேச எண்ணி PUN -ஆபேசியிருக்கீங!!!
அட ஆமாம்! மேலும் படிக்க (ரீட் மோர்) க்ளிக்காமல் விட்டு விட்டேன். மன்னிச்சுக்குங்க! உங்க மொழி பெயர்ப்பு ரொம்ப பிரமாதம்! சூப்பர்! (எனக்கு ஆங்கிலம் தெரியாதுங்கோவ்!)
ReplyDelete