ஓவியர் கோபுலு ஒரு மேதை எனபதில் சந்தேகமில்லை.சமீபத்தில் ஒரு புத்தகத்தைப் பார்த்தபோது அது மீண்டும் உறுதிப் பட்டது.
முதலாவது சுமார் 60 வருஷத்திற்கு முன்பு கல்லாடம் என்ற புத்தகத்திற்கு முன் பக்க, பின்பக்க அட்டைகளில் அவர் வரைந்திருந்த ஓவியத்தைப் பார்த்து வியந்து போனேன். முதலில் அந்த இரண்டு ஓவியங்களை இங்கு போடுகிறேன்.
சிலையின் முன்பக்கம், பின்பக்கப் படங்களை அப்படி இவ்வளவு துல்லியமாக வரைந்தார் என்று தெரியவில்ல. அவரைச்
சந்தித்துக் கேட்க எண்ணியிருக்கிறேன்,
இந்தப் படங்களைப் போட்டோஷாப்பில் OPEN பண்ணி, ஒரு படத்தை FLIP பண்ணி மற்றொரு படத்தின் மீது வைத்துப் பார்த்தேன். அப்படியே பொருந்தியது,
போட்டோஷாப், போட்டோகாபி, கணினி எல்லாம் இல்லாத காலத்தில் எப்படி வரைந்தார்? கோபுலு நிச்சயமாக் மேதைதான்!

படத்தின் அளவு, வளைவுகள் எல்லாமே ஒன்றோடொன்று இக்காலத்திலும் பொருந்துகிறது என்றால்... அவர் எத்தகைய மேதை! வாஷிங்டனில் திருமணம் புத்தகத்தை இன்று காலை புரட்டி அவர் ஓவியங்களை வியந்து மனதில் ச்ல்யூட் அடித்த வேளையில் இங்கும் அவரைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். என்ன பொருத்தம்..! வாழ்க அந்த ஓவிய மேதையின் புகழ்!
ReplyDeleteபாராட்டு விழா இனிதே நடந்திருக்கும் என்று நம்புகிறேன். அரசியல் கட்சி தொண்டன் போல், வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்!
ReplyDeleteப்ளாக் போஸ்ட் - 28 இப்போது தெரியவில்லை. கொஞ்ஜம் பார்க்கவும்.
கோபுலு அவர்களின் திறமை உலகமறிந்தது! நீங்கள் ‘முன் பின்’ மேட்சிங் பார்ததால், யோசித்தேன். முன் பக்க படத்டை வரைந்தபின் அதை திருப்பி வைத்து இன்னொரு பேப்பரில் அவுட்லைனை ட்ரேஸ் செய்து பிறகு மற்ற டீட்டைல்களை பூர்த்தி செய்திருக்கலாம். (காப்பி - பேஸ்ட் செய்யும் என் புத்தி!)
-ஜெ.
ஆச்சரியம்; திறமை!
ReplyDeleteவாழ்த்த வயதில்லை; இருப்பினும் வாழ்த்துகிறேன்!!!
அவர் ஒரு மேதை தான் சந்தேகமில்லை.... :) நல்ல ஓவியங்களை எங்களுக்கும் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார்.
ReplyDelete“கோபுலு, சில்பி இருவருக்கும் மறுபிறவியே கிடையாது“ என்று காஞ்சி பரமாச்சாரியார் ஆசீர்வதித்திருக்கிறார்.
ReplyDelete(ஆதாரம்:–எஸ். சந்திரமௌலி தொகுத்துள்ள ஓவியர் கோபுலுவின் கோடுகளால் ஒரு வாழ்க்கை!
உண்மை....உண்மை..
ReplyDeleteGopulu's cartoons are a class on their right. What a genius ? I still wonder he uses brushes for lines instead of pen.
ReplyDeleteசிக்கனக் கோடுகளால்
ReplyDeleteசீர்மிகு காரெக்டர்களை
சிந்தையில் நிறுத்திய கோபுலு
சிறந்த கலைஞர்தான்.
என்றும் என் நினைவில் இருப்பவர் துப்பறியும் சாம்பு.