ஒரு விளம்பரக் கம்பெனியில் நான் பணியாற்றினேன் என்று அடிக்கடி பெருமை அடித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.. இந்தப் பதிவு ஒரு விளம்பரம் பற்றிய சுவையான விவரம்.
சுமார் 20 வருஷங்களுக்கு முன்பு நடந்தது.
ஒரு குளிர் பானத்திற்கு வித்தியாசமாகவும், பிரம்மாண்டமாகவும், சற்று நகைச்சுவையுடனும் விளம்பரம் எடுக்க வேண்டி இருந்தது. ஒரு மாதிரி யோசித்து எங்கள் ஐடியாவை குளிர்பான நிறுவனத்திற்குக் கொடுத்தோம். அவர்களுக்கும் பிடித்திருந்தது. அதில் சில செகண்டுகளுக்கு அனிமேஷனும் செய்ய வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பம்பாய்க்குப் போனால்தான் படம் எடுக்க முடியும். சவுண்ட் ரிகார்டிங், அனிமேஷன் என்று எல்லாம் அங்கு நடத்துவதுதான் வசதி.
அந்தப் படத்திற்கு ஒரு பெண் மாடல் தேவைப்பட்டார். புதுமுகமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, பல மாடல் ஏஜன்சிகளைத் தொடர்பு கொண்டு, பல போட்டோ ஆல்பங்களைப் பார்த்து ஒரு அழகான மாடலைத் தேர்ந்தெடுத்தோம்.
படமும் எடுத்தோம். எல்லாரும் ஆஹா, ஓஹோ என்று கூறினார்கள். குளிர்பான கம்பெனிக்காரர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.
விளம்பரப் படம் வெளியாயிற்று.
வெளியான சில நாட்களுக்குப் பிறகு அந்தப் படம் எவ்வளவு தூரம் மக்கள் மனதில் பதிந்திருக்கிறது; அந்த குளிர்பானத்தின் பெயரை எவ்ளவவு பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று அறிய பல ஊர்களில் கண்டறியும் பணியை ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்தோம்.
அவர்கள் கொடுத்த ரிப்போர்ட்:” படத்தில் வந்த மாடல் மிகவும் அழகாக இருக்கிறார் என்று ஒருத்தர் விடாமல் சொன்னார்கள். ஆனால் நூற்றுக்கு இருபத்து ஐந்து பேர்களால்தான் அந்தக் குளிர்பானத்தின் பெயரைக் கூற முடிந்தது. திரும்பத் திரும்ப அந்த பெண் மாடலைப் பற்றித்தான் சொன்னார்கள்.”
இந்த அறிக்கையைப் பார்த்து எங்கள் நிறுவனம் மிகவும் நொந்து போய் விட்டது.
இதில் மற்றொரு சோகம் என்னவென்றால், பல விளம்பர ஏஜன்சிகள் அந்த
மாடல் பெண் பற்றிய விவரங்களை எங்களிடமே கேட்டார்கள். அவர் ஒரு ஸ்டார் ஆகிவிட்டார்!

Dear Sir,
ReplyDeleteIt is nice.. I know the model. She is Aishwarya Rai... Is not she? Famous dialogue is "I am Sanchu".
Please share your experience. It will help people like us.
Regards
Ranga
Dear Mr Ranga, Thanks for your comments.It was not Aishawarya. I did not remember the name of the model.
ReplyDeleteIncidentally why don't you try to write in Tamil. NHM writer is a wonderful free Tamil software.
Dear Sir,
ReplyDeleteI tried once. But, it did not work so smooth. So, I gave it up. I will try once again.
I still use your "Shruthi" font. Thanks a lot.
Regards
Ranga
அந்த குளிர் பான நிறுவனத்தின் பெயர் என்னவோ?
ReplyDeleteகுளிர் பானத்தின் பெயரைக் கூறுவது சரியாக இருக்காது எனபதால்தான் அதைக் குறிப்பிடவில்லை. பெயர் முக்கியமில்லை என்பதும் என் கருத்து
ReplyDeleteJWT..lemme guess fido dido is the charecter know?
ReplyDeleteகடுகு ஸார்,
ReplyDeleteவணக்கம்,
சுஜாதா அவர்கள் இந்திரா பட விமரிசனத்தில் கதாநாயகி பற்றி சொல்லும்போது "அதிக அழகில்லாததால் (நமது) கவனம் சிதறவில்லை (நடிப்பை பார்க்க முடிகிறது!)" என்றிருப்பார்!
Essex சிவா
அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி ஐயா.