February 12, 2011

ஈயது விலக்கேல் --கடுகு


சில வாரங்களுக்கு முன்பு `காபியில் ஈ' என்ற பதிவைப் போட்டேன். அப்போது வெகு நாட்களுக்கு முன்பு ஈ ஜோக் புத்தகம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் புத்தகத்திலிருந்து சிலவற்றை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்ததை இப்போது கண்டுபிடித்தேன். அவற்றிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன். (ஒரு உத்தரவாதம்: இத்துடன் ஈ ஜோக் பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்ற சந்தோஷச் செய்தியை உங்களுக்கு அளிக்கிறேன்.)
* என்ன... ஒரு ஈயா..? பரவாயில்லை சார், அதுவே பாதி ஈயாக இல்லையே என்று சந்தோஷப்படுங்கள்.
* ஔவையார் என்ன சொல்லி இருக்கிறார்? ஈயது விலக்கேல் என்றுதானே..? இருந்துட்டுப் போகட்டுமே சார்!
* காபி ஒன்றும் கொதிக்கிற சூட்டில இல்லை. ஈக்கு ஒண்ணும் ஆகாது, கவலைப்படாதீங்க.உங்களுக்கு ரொம்ப இளகின மனசு..”
* நல்ல காலம் பாத்தீங்க... பாத்துக் குடியுங்க.
* அப்படியா? இருங்க சார், முள்கரண்டி, கெச்சப் கொண்டு வரேன்.
* என்னது... சர்வர்னா கூப்பிட்டீங்க... நான் மானேஜர். ஈயைப் பத்தி சர்வரைக் கேளுங்க.
* அடப்பாவமே... மறுபடியும் தப்பு பண்ணிட்டேன். அந்த டேபிளுக்குக் கொடுக்க வேண்டிய காபியை உங்களுக்குக் கொடுத்து விட்டேன்!
* சும்மா சொல்லாதீங்க... இன்னிக்கு வெள்ளிக் கிழமை. எங்க ஹோட்டல்லே வெள்ளிக்கிழமையிலே நான்-வெஜ்ஜே கிடையாது.
* அது ஈ இல்லை, சிலந்தி வலை விழுந்திருக்கு. அது ஈ மாதிரி உங்களுக்குத் தெரியுது.
* ஈயா... வெரிகுட்! ஒரு சிலந்தியைக் கொண்டு வரேன். பாவம் சார்,, அது ரொம்பப் பசியாக இருக்கிறது.

* என்ன சார், ஒரு டாலர் காபியில் என்ன எதிர்பார்க்கறீங்க? திமிங்கலமா போட முடியும்?
* அடடா, மெனு கார்டில் அதைப் போட விட்டுப் போயிடுச்சு.
* என்னது? செத்துப் போயிருக்கா? நான் கொண்டு வர்ற போது உயிரோடுதான் இருந்தது.
* வெயிட்டர்... என் தட்டிலே பட்டன் இருக்குதே...
”சார்... ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிட்டுது. மட்டன் என்பதுதான் சரி.”

====

`என்னப்பா சர்வர், காபியில் ஈ இருக்கிறதே? என்ற கேள்விக்கு ஒரு நகைச்சுவையான பதிலை எழுதி அனுப்பும்படி  ஜுனியர் ஸ்டேட்ஸ்மென் வார இதழ் கேட்டிருந்தது. வருஷம்`1970
போட்டியில் பரிசு பெற்ற சில பதில்களுடன் சிறிது சொந்தச் சரக்கையும் சேர்த்து இங்கு தருகிறேன்.

* ``மிளகுப் பொடி தூவிக்கிட்டு சாப்பிடுங்க சார். நல்லா இருக்கும்.'' 
* ``இது சாதாரண காபி இல்லை சார், ஈயடிச்சான் காபி'' 
* ``ஈ தானே சார்? அடுத்த டேபிள்காரருக்கு எட்டுக் கால் பூச்சி கிடைச்சுதாம்!'' * ``என்னது, காபியில் ஈயா! சாம்பாரில்தான் போடச் சொல்லியிருந்தார் மானேஜர்...'' 
* ``குளிர் காலமாயிற்றே சார்! பச்சைத் தண்ணீரில் குளித்தால் ஜலதோஷம் பிடித்துக் கொள்கிறது என்று சூடான காபியில் குளிக்கிறது!'' 
* ``என்ன சார், அபாண்டமாகச் செல்கிறீர்கள்? ஈ எங்கே சார் இருக்கிறது? இது குளவிதானே?'' 
* ``நீங்க சும்மா இருங்க சார். கொதிக்கிற காபியில் உடம்பைச்சுட்டுக் கொண்டாதான் அந்த ஈக்கு புத்தி வரும்!'' 
* ``ஏன் சார் இப்படிச் சொல்றீங்க? அது காபியில்லை சார், குடி தண்ணீர்!'' * ``மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு சொட்டுக்கு மேல் அதனால் குடிக்க முடியாது. இதற்குப் போய் ஏன் சார்...'' 
* ``ஒரே ஒரு ஈ தானே சார்? எங்க ஓட்டல் முன்னைக்கு இப்போது இம்ப்ரூவ் ஆகி விட்டது என்று இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா?''

* ``உரக்கச் சொல்லாதீர்கள். அப்புறம் எல்லாரும் கேட்பார்கள். இதுதான் எங்க் ஸ்டாக்கிலிருந்த கடைசி ஈ.'' 
* ``கவலைப்படாதீங்க. சும்மா நீச்சல் பழகிட்டு பறந்து போய்விடும் சார்!'' * ``ஈயா? அது நான் வளர்க்கிற ஈ சார்... எங்கேடா காணோமேன்னு தேடிக்கிட்டு இருக்கேன்.'' 
* ``சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். நேற்று கொசு இருந்த போதும் கோபித்துக் கொண்டீர்கள். அதற்காக இன்று ஈயைப் போட்டுக் கொண்டு வுந்தேன். இப்போதும்...'' 
* ``இருக்காதே சார்... காபியில் ஃப்ளீட் மருந்தைப் போட்டுக் கலக்கினேனே...''

* " பரவாயில்லை...பில்லிலே அதுக்கு எக்ஸ்ட்ரா  சார்ஜ போடமாட்டோம்.”

“ வழககமா எறும்பு போடுவோம்.. இன்னிக்கு ஸ்டாக் இல்லை.. அதனால் தான் ஈ...ஹி..ஹி..கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கோ!”

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :