முன்குறிப்பு: பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் என்று மகாகவி பாரதி பாடினார். அதில் வெற்றியும் பெற்றார். பேச்சு திறத்தாலே வையத்தைப் வென்றுள்ளார்கள், ஆட்சிகளைப் பிடித்துள்ளார்கள்:
தக்க வைத்துள்ளார்கள்.
இரண்டாவது உலகப் போரில் சர்ச்சில் தனது வீரமிக்க
உரைகளாலேயே போரில் வென்றார் என்பார்கள்.
மறக்க முடியுமா, 1947 ஆகஸ்ட் 15 அன்று இரவு செங்கோட்டையில் நேருஜி நிகழ்த்திய TRYST WITH
DESTINY உரையை?
மார்ட்டின் லூதர் கிங்கின் I HAVE A DRAEM, உரை, ஆப்ரகாம் லிங்கன் கெட்டிஸ்பர்க் போர்க்களத்தில் நிகழ்த்திய அற்புதமான
உரை ஆகியவை சரித்திரத்தில் செதுக்கப்பட்டுள்ளன.
நெப்போலியன் மாவீரன் மட்டுமல்ல; வீரம் செறிந்த பேச்சும் அவருக்கு கைவந்த கலை. நெப்போலியனைப் பற்றிய சிறு குறிப்பை முதலில் தருகிறேன்.
இத்தாலியில் 1769 ஆம் ஆண்டு ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி நெப்போலியன்
பிறந்தார். 16 வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி 1804-ம் ஆண்டு
மன்னரானார். அவருடைய ஆட்சிக் காலத்தில் ஐரோப்பாவில் ஒரு வல்லரசாகப் பிரான்சு ஆனது.







