December 04, 2018

அன்புடையீர்!


அன்புடையீர்!
 வணக்கம். 
பத்து ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 5-ஆம் தேதி ’கடுகு தாளிப்பு’ என்ற பெயரில் என் வலைப்பூவை தொடங்கினேன். தொடர்ந்து எத்தனை பதிவுகள் போட முடியும் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் அல்லது கவலைப்படாமல் துவக்கி விட்டேன். 

    அமரர் கல்கியின் நினைவு தினத்தில் துவக்கிய நான், அவரது ஆசியையும் வழிகாட்டுதலையும் நம்பிதான் ஆரம்பித்தேன். அவர் என் ஊனிலும் ,உயிரிலும் கலந்து, பதிவுகள் எழுத எனக்கு அளித்த ஊக்கத்தினால், கிட்டத்தட்ட 700 பதிவுகளை எழுதி உள்ளேன். அவர் கொடுத்த ஊக்கத்திற்குச் சற்றும் குறையாத அளவு ஊக்கத்தை நீங்கள்  தந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த மைல்கல்லை நான் தொடுவதற்குத் தோள் கொடுத்த உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ளவே இந்த குறிப்பை எழுதி உள்ளேன். 
உங்களில் பலர் பின்னூட்டத்தில் தெரிவித்து வரும் பாராட்டுகள் மட்டும் அன்றி,   தனிப்பட்ட முறை யிலும்   எனக்கு ஈ-மெயிலில் பலர் எழுதி வரும் பாராட்டுகளும், எனக்குப் புத்துணர்ச்சியை ஊட்டி, கிரியா ஊக்கியாக விளங்கி வருகின்றன.  (இந்தக் கடிதங்களைப் பதிவில் போட என் மனம் ஒப்பவில்லை.)
 இதை எல்லாம்  என்னுடைய  சாதனையாகக் கூறிவிட்டு, வணக்கம் போட்டுவிடலாமா என்று மனதில் சில சமயம் தோன்றுவது உண்டு. அந்த சமயங்களில் எல்லாம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு "தம்பி! நீ எழுது" என்று பணித்த குரல், மீண்டும் சன்னமாக என் காதுகளில் கேட்கும். அந்த குரலுக்கு வந்தனை கூறி, மனதில் இருத்தி, வாயுற வாழ்த்தி, வணங்குகிறேன்; பதிவுகளைத் தொடர்கிறேன்!

- பணிவுடன் 
கடுகு
-----------------------------------------------------------------------------

\*** அடுத்த பதிவை இரண்டு மூன்று  நாளில் போடுகிறேன்.

10 comments:

 1. பத்து ஆண்டுகள்... வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete
 2. நன்றி. பத்தாவது ஆண்டு என்பதுதான் சரி.
  -கடுகு

  ReplyDelete
 3. கடுகு சார்... உங்க ஒவ்வொரு இடுகையிலும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்கிறேன். உங்க அனுபவமாகட்டும், நகைச்சுவைக் கதைகளாகட்டும், பலவித ரசனையான துணுக்குகளாகட்டும். எல்லாமே படிக்க மிகுந்த பயனுள்ளதாக இருந்துவந்துள்ளது, மீண்டும் மீண்டும் படிக்கும்போது அதே அனுபவத்தைப் பெறமுடிகிறது.

  (சிலவற்றை எழுதினால் மொத்த பின்னூட்டத்தையும் வெளியிடாமல் தவிர்த்துவிடுவீர்கள் என்பதால் பல பின்னூட்டங்களாக எழுதுகிறேன்)

  ReplyDelete
 4. தொடர்ந்து படிப்பதில் ஆர்வமும், அவற்றைப் பகிர்ந்துகொள்வதில் உங்களுக்கிருக்கும் ஆர்வமும் சோம்பலின்மையும் என்னை வியக்க வைக்கிறது. இது determination இல்லாமல் சாத்தியமாகாது.

  நீங்கள், லைப்ரரிக்குப் போனேன் அங்கு புத்தகங்களைத் தேடினேன் என்றெல்லாம் எழுதும்போது, உங்களின் கடுமையான உழைப்பும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு மிக்க ஆச்சர்யமாக இருக்கிறது. எல்லோராலும் இப்படி சோம்பலின்றித் திரியமுடியாது. அவ்வப்போது கொஞ்சம் உடல் நிலையில் சிறிது பிரச்சனை வந்தாலும் (கண் சம்பந்தமாக போன்று), அதையும் மீறி இங்கு தொடர்ந்து எழுதுகிறீர்கள். பாராட்டுகள் சார்.

  ReplyDelete
 5. கொஞ்சம் சிறிய வயதில் நீங்கள் எழுதுவதில் பெரும்பாலானவைகளைக் காசாக்கியிருப்பீர்கள். அதைவிட நிறைய பெரிய ஆட்களின் தொடர்பும் தொடர்ந்திருக்கும்.

  எங்க பாக்கியம். எல்லாம் ஓசிக்குப் படித்துவிட முடிகிறது. சில பல மாணிக்கத்துக்காக, பல குப்பைகளை இப்போவெல்லாம் தாங்கிவரும் பத்திரிகைகளை வாங்கி பணத்தை வீணாக்க வேண்டியதில்லை. ஹா ஹா ஹா

  ReplyDelete
 6. பத்தாவது ஆண்டில் நுழையும் எங்கள் அன்புக்குரிய கடுகு சாருக்கு பாராட்டுகள். மேலும் மேலும் அந்த எழுதும் ஆர்வம் உங்களில் வளர்ந்துகொண்டே செல்லவேண்டும். 1001 பதிவுகள் வெளியிட்டுவிட்டு அதனைக் கொண்டாடவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.

  கிட்டத்தட்ட ரீடர்ஸ் டைஜஸ்ட் என்பதுபோல ரசனையான கலவை உங்கள் தளம்.

  ReplyDelete
 7. வாழ்த்துகள் ஸார்.

  ReplyDelete
 8. பத்தாம் ஆண்டுத் தொடக்கத்திற்கு வாழ்த்துகள் ஐயா. உங்களைப் போல் விஷயங்களுடன் எழுதுபவர்கள் தொடர்ந்து எழுதி வர வேண்டும். ஆகவே தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் உள்மனதில் திரு கல்கி அவர்களின் குரல் எப்போதும் உங்களை எழுதும்படி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

  ReplyDelete
 9. இளங்கோDecember 5, 2018 at 3:27 PM

  வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் பணி

  ReplyDelete
 10. எழுத்துப் பிரியர்கள் அனைவருக்கும் என் நன்றியை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்.
  உங்கள் அனைவருக்கும்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நான் எழுதுவதைப் படிக்க நீங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பதாக எண்ணிக் கொண்டு, புத்தகங்களை மேய்ந்து, ஜீரணம் செய்து கொண்டிருக்கிறேன். உண்மையில் “தாளிப்பு” என்ற சாக்கில், புத்தகங்களைப் படித்து ‘ஸ்வாஹா” பண்ணிக் கொண்டிருக்கும் முதல் பந்தி சுயநல திலகம் நான்! மீண்டும் நன்றியைத் தெரிவிக்கிறேன். - கடுகு

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!