சாரணர் இயக்கம்
சாரணர் இயக்கமான ‘ஸ்கவுட்’
1907’ ஆண்டு உருவானது. அதை உருவாக்கியவர் பேடன் பவல் Baden Powell என்பவர். அந்த இயக்கத்தின் கோட்பாடு மிகவும்
பிரபலமானது அது ‘Be Prepared’. இதைப்பற்றி பேடன் பவல் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். "சாரணர்களின் கொள்கையை என்னுடைய பெயரின் முதல் எழுத்துகளை வைத்து உருவாக்கினேன்" என்று 1908-ல் அவர் எழுதிய SCOUTING FOR BOYS என்ற புத்தகத்தில்
எழுதியுள்ளார்
இரண்டு
பேரும் பட்டினி
நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஒரு உணவு விடுதியின் பெயர்: EAT HERE. உணவு விடுதியின் பெயரை பெரிய போர்டில் எழுதிவிட்டு, அதன் கீழே அவர்கள் எழுதி இருப்பது இதுதான்: “இல்லையென்றால் நாம் இருவரும் பட்டினிதான்!”
ஒப்புதல் வாக்குமூலம்
அமெரிக்க வெளி உறவு அமைச்சராக 1972-74’ம்ஆண்டுகளில் இருந்தவர் ஹென்றி கிஸ்ஸிஞ்ஜர். அவர் மிகவும் திறமைசாலியாக
இருந்தால் வெகுவிரைவில் பிரபலமானவராக ஆகிவிட்டார்.
அவர் எழுதிய
சுயசரித்திர புத்தகத்தின் தலைப்பு: YEARS OF UPHEAVAL. அதன் முன்னுரையில் அவர் எழுதியுள்ள ஒரு வரி கவனத்திற்கு உரியது: “ இந்தப்
புத்தகத்தில் என்னைப் பற்றி ஒளிவு மறைவு எதுவும் இல்லாமல், எதையும் மறைக்காமல் எழுதியுள்ளேன்.
நான் செய்த முதல் தவறை 850’ம் பக்கத்தில் எழுதி
இருக்கிறேன்.”
இந்த புத்தகத்தை
நான் தேடிக்கொண்டிருக்கிறேன், அவர் என்ன தப்பு செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க!
சாய்ஸில் விடலாமா?
இங்கிலாந்தின் பிரபல தத்துவ ஞானியாக விளங்கியவர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். ( BERTRAND RUSSELL). 1950’ம் வருஷம் நோபல் பரிசு பெற்றவர்.
இங்கிலாந்தின் பிரபல தத்துவ ஞானியாக விளங்கியவர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். ( BERTRAND RUSSELL). 1950’ம் வருஷம் நோபல் பரிசு பெற்றவர்.
அவர் சொன்ன ஒரு குறும்பு
வாசகம்: “பத்துக் கட்டளைகளை பரீட்சை கேள்வித்தாள் மாதிரி கருத வேண்டும். பத்தில் ஏதாவது
ஆறு கட்டளைகளை முயற்சி செய்தால் போதும்.”
பரீட்சையில் சாய்ஸில் விடுவது போலவா, ரஸ்ஸல் அவர்களே?
அப்பா, டியர் அப்பா
அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சராக 1961 முதல்
69 வரை இருந்த டீன் ரஸ்க், தன் தந்தையின் சரித்திரத்தை புத்ததமாக எழுதியுள்ளார்.
1983-ம் ஆண்டு வெளியான ‘ WIT OF PUBLISHING’ என்ற புத்தகத்தில் உள்ள இது பற்றி வந்துள்ள ஒரு தகவல் வியப்புக்குரியது. அதில் எழுதி இருப்பது: ”இந்த நவம்பர் மாதம், டீன் ரஸ்க் எழுதிய ‘என் தந்தை’ என்ற புத்தகத்தின் தொகுதிகள் 64 முதல் 87 வரை வெளியாகி உள்ளது. வெகு நுணுக்கமாகப் பல விவரங்களை எழுதி உள்ளார். இதில் வியப்புக்குரிய விஷயம், தன்னுடைய தந்தையை அவர் பார்த்ததே இல்லையாம்!.
1983-ம் ஆண்டு வெளியான ‘ WIT OF PUBLISHING’ என்ற புத்தகத்தில் உள்ள இது பற்றி வந்துள்ள ஒரு தகவல் வியப்புக்குரியது. அதில் எழுதி இருப்பது: ”இந்த நவம்பர் மாதம், டீன் ரஸ்க் எழுதிய ‘என் தந்தை’ என்ற புத்தகத்தின் தொகுதிகள் 64 முதல் 87 வரை வெளியாகி உள்ளது. வெகு நுணுக்கமாகப் பல விவரங்களை எழுதி உள்ளார். இதில் வியப்புக்குரிய விஷயம், தன்னுடைய தந்தையை அவர் பார்த்ததே இல்லையாம்!.
( இதன் உண்மைத்
தன்மையை கண்டுபிடிக்க தலையைப் பிய்த்துக் கொண்டேன். எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.)
டூ லேட்
ராபர்ட் பென்ச்லி (ROBERT BENCHLEY (1849- 1945) அமெரிக்க நகைச்சுவை
எழுத்தாளர். அவர் ஒரு சமயம் சொன்னது: “எனக்கு எழுதும் திறமை இல்லை என்பதை நான் கண்டுபிடிக்க
பதினைந்து வருடங்கள் ஆயிற்று. ஆனால்எழுதுவதை என்னால் விட முடியவில்லை. காரணம், அதற்குள்
நான் பிரபலமான எழுத்தாளனாக ஆகிவிட்டேன்!
மேலும் பென்ச்லி
மூன்று தலைமுறை அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்களைக் கொண்டது பென்ச்லி குடும்பம் .. ராபர்ட், அவரது மகன் மற்றும் பேரன் மூன்று பேரும் எழுத்தாளர்கள்.
ராபர்ட் பென்ச்லி
20,000 LEAGUES UNDER THE SEA, MY TEN YEARS IN A
QUANDARY, THE EARLY WORM என்று பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
அவரது மகன்
நதேனியல் பென்ச்லியும் (1915- 86) ஒரு காமெடி எழுத்தாளர்தான்..
நதேனியல்
பென்ச்லியுடைய மகன் பீட்டர் பென்ச்லி (1904- 2006), JAAZ போன்ற நாவல்களை எழுதியவர்.
ஹார்பர் லீ எழுதிய பிரபல நாவல் To kill a mockingbird. இந்த நாவல் அவரை எங்கோ உயரத்திற்குக் கொண்டு போய் வைத்து விட்டது. சரி, அவர் எழுதிய வேறு நாவல்கள் எப்படிப்பட்டவை? வேறு நாவலா? ஒன்றுமில்லை . ஆம், அவர் எழுதியது ஒரே ஒரு நாவல்தான்! to kill a mockingbird நாவலுக்குப் பிறகு அவர் ஒரு நாவல் கூட எழுதவில்லை!
நானும் ஒரு
நாவல் கேஸ்தான்!
மார்க்ரெட்
மிட்சல் எழுதிய GONE WITH THE WIND நாவல் இன்றைக்கும் வாசகர்களைக்
கவர்ந்த நாவலாகத் திகழ்கிறது. திரைப்படமாகவும் வந்து சக்கை போடு போட்டது. இவர் ஒரே
ஒரு நாவலுடன் எழுதுவதை நிறுத்திக் கொண்டார்!
பார்பாரா கார்ட்லாண்ட் எழுதியுள்ள நாவல்களின் எண்ணிக்கை மூக்கின்மேல் விரலை வைக்கச் செய்யும். 2000-ம் ஆண்டு காலமான இவர் எழுதிய நாவல்கள் யாவும்
காதல் கதைகள்தான். 723 நூல்களை இவர் எழுதியுள்ளார்.
ஒரே எழுத்தாளரைப் பற்றி இவ்வளவா?
வாஷிங்டனில் ஃபோல்ஜர் ஷேக்ஸ்பியர் லைப்ரரி என்ற புத்தகசாலை
இருக்கிறது. அங்கு ஷேக்ஸ்பியரைப் பற்றிய புத்தகங்களும், ஷேக்ஸ்பியர் எழுதிய புத்தகங்களும்,கையெழுத்துப்
பிரதிகளும் உள்ளன.
எத்தனை புத்தகங்கள்?
அசந்து போய்
விடாதீர்கள்; மூன்று லட்சத்து பத்தாயிரம்!
ஷேக்ஸ்பியர்
பிரபல எழுத்தாளர். ஆனால் வேறு சிலபிரபல எழுத்தாளர்களுக்கு அவர் வேப்பங்காயாகத் தான் இருந்தார் !
பிரபல எழுத்தாளர் டால்ஸ்டாய்க்கு ஷேக்ஸ்பியரைக் கொஞ்சமும் பிடிக்காது. ”ஷேக்ஸ்பியரின் கதைகள், நாகரீகமற்றவை,
ஒழுக்கக்கேடானவை, கீழ்த்தரமானவை, மற்றும் அபத்தமானவை” என்று கூறியுள்ளார்.
பெர்னாட்ஷா
சொல்லியிருப்பது இதைவிட மிகவும் கடுமையான கல்லடி. “ஷேக்ஸ்பியரை நான் வெறுக்கும் அளவு வேறு எந்த
எழுத்தாளரையும் வெறுத்ததில்லை. அவர் மேல் உள்ள எரிச்சல் மிகவும் தீவிரமாகும்போது, ஷேக்ஸ்பியரின் உடலைத் தோண்டி, வெளியே எடுத்து, அவர் மீது கல்லெறிந்தால்தான் மன அமைதி அடைவேன்
என்று சொல்லும் அளவுக்கு போய்விடும்.”
ஓ ஹென்றி, ஓஹோ ஹென்றி!
பிரபல எழுத்தாளர் ஓ ஹென்றியின் கதைகளில் கடைசி சில வரிகளில் ஒரு சொடக்கு இருக்கும். அதுவே அவரை பிரபலாமாக்கி விட்ட்து. அவருடைய இயற்பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர்.
பிரபல எழுத்தாளர் ஓ ஹென்றியின் கதைகளில் கடைசி சில வரிகளில் ஒரு சொடக்கு இருக்கும். அதுவே அவரை பிரபலாமாக்கி விட்ட்து. அவருடைய இயற்பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர்.
சரி, அந்தப் பெயரை எங்கு கண்டுபிடித்தார்? சிறையில் அவரைக் காவல் காத்தவரின் பெயர்: ORRIN HENRY (ஓரின் ஹென்றி).
ஏழ்மை ஒரு தடையல்ல!
முதல் முதல் ஒரு தரமான ஆங்கில அகராதியை உருவாக்கியவர் என்ற பெருமையையும் புகழையும் பெற்றவர் சாமுவேல் ஜான்சன்.
இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார்.
முதல் வருஷம் படிப்பு முடிந்து விட்டது. அடுத்த வருஷம் அவரால் படிப்பை தொடர முடியவில்லை.
காரணம் கல்லூரி கட்டணம் கட்ட வசதி இல்லை. ஆகவே கல்லூரியை விட்டு நீக்கப்பட்டு விட்டார்.
பிறகு பல வருடங்கள் கழித்து, எப்படியோ கஷ்டப்பட்டு படித்துப் பட்டம் பெற்றார். அப்போது
அவருக்கு வயது 46.
இவர்தான் முதன்முதலில் மிகுந்த பிரயாசையுடன் ஆங்கில
அகராதியை தயாரித்து வெளியிட்டார். இதுவே அவருக்கு அழியாப் புகழை ஈட்டித் தந்து விட்டது.
ஜான்சனின் அகராதி வெளிவந்து 150 வருடங்களுக்குப் பிறகு தான் வேறு ஒரு அகராதி வெளி வந்ததாம்.
ஒரு சின்ன
குறிப்பு "ஜான்சனைப் பற்றி ஒரு பதிவு முன்னமேயே தாளிப்பில் போட்டுள்ளேன். அதையும் பார்க்கவும்.
( GOOGLE-DOC-ல் நான் பேசியதை அது தட்டச்சு செய்து கொடுத்தது.. ஆச்சரியம் என்னவென்றால் எழுத்து எழுத்தாக தட்டச்சு செய்யவில்ல. வார்த்தை வார்த்தையாகத் தந்து விடுகிறது. வேகம் சொல்லி முடியாது!).
( GOOGLE-DOC-ல் நான் பேசியதை அது தட்டச்சு செய்து கொடுத்தது.. ஆச்சரியம் என்னவென்றால் எழுத்து எழுத்தாக தட்டச்சு செய்யவில்ல. வார்த்தை வார்த்தையாகத் தந்து விடுகிறது. வேகம் சொல்லி முடியாது!).
//இந்த புத்தகத்தை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்// - எனக்கென்னவோ அந்தப் புத்தகத்துக்கு 848 பக்கங்கள்தான் இருக்கும்னு தோணுது. மீதியும் படித்துவிட்டு கருத்து எழுதறேன்.
ReplyDelete//வங்கிப் பணத்தை கைவிட்டார். // - தவறவிட்டார் என்று எழுத நினைத்தீர்களா? அல்லது தொலைத்துவிட்டாரா?
ReplyDeleteஅனேகமா எல்லாமே இதுவரை படித்திராத ரசனையான தகவல்கள்.
ReplyDelete/ஆனால்எழுதுவதை என்னால் விட முடியவில்லை. காரணம்,// - இந்தப் புகழ்பெற்ற வரிகளை மற்றவர்களும் உபயோகப்படுத்திப் பார்த்திருக்கிறேன்.
நெ,த. வுக்கு: “வங்கிப் பணத்தை கையாடிவிட்டார்”என்று இருக்க வேண்டும். மிக்க நன்றி- கடுகு
ReplyDeleteஅட... இது கூகுளில் பேசி தட்டச்சு செய்ததா? நான் இந்த ப்ரொஃபஷனில் இருக்கேன் (இருந்தேன்)னுதான் பேரு. இந்த மாதிரி புதிய முயற்சிகளைச் செய்துபார்ப்பதில்லை. நீங்க இதெல்லாம் ஆர்வமா பண்ணறதே எனக்கு ஆச்சர்யமாவும் பாராட்டத்தக்கதாவும் இருக்கு.
ReplyDeleteஉடனே, 'நெஸெசிட்டி இஸ் த...' என்று சொல்லிடாதீங்க. புதிய விஷயங்களை ஆர்வமா அவதானித்துக் கத்துக்கறீங்க, செயல்படுத்திப் பார்க்கறீங்க... பாராட்டுகள் கடுகு சார்.
ஆமாம். GOOGLE-DOC-ல். நான் படித்ததை அது தட்டச்சு செய்து கொடுத்தது.. ஆச்சரியம் என்னவென்றால் எழுத்து எழுத்தாக தட்டச்சு செய்யவில்ல. இந்தியா தமிழில் படிப்பதை வார்த்தை வார்த்தையாகத் தந்து விடுகிறது. வேகம் சொல்லி முடியாது.-கடுகு
ReplyDelete<>
ReplyDeleteஅப்படிச் சொல்லவில்லை. ”LAZINESS IS THE MOTHER OF INVENTION!” என்கிறேன்!
இதில் எல்லா விஷயங்களுமே புதியது. கூகிள் டாக் மூலம் தட்டச்சு செய்தது உட்பட. இதைப் பற்றி இப்போத் தான் தெரிந்து கொண்டேன். ஒரு வேளை டீன் ரஸ்கின் தந்தை அவர் பிறக்கும் முன்னரே இறந்திருப்பாரோ?
ReplyDeleteGeetha SambasivamDecember <>
ReplyDeleteதெரியவில்லை. ஒரு கட்டுரையில் வந்த தகவல். இந்த புத்தககம் எந்த வலையிலும் அகப்படவில்லை. மேலும் முயற்சி செயகிறேன்--கடுகு
ஹார்பர் லீ, மேலும் ஒரு நாவல் எழுதியுள்ளார். இது, அவருடைய ஒரே நாவலுக்கு (to kill a mocking bird) முன்பே எழுதி, 2015ல் வெளியானது. https://en.m.wikipedia.org/wiki/Go_Set_a_Watchman
ReplyDelete