( இது கதையல்ல, நிஜம்)
கணிதம் சம்பந்தமாக பல
புத்தகங்கள் எழுதியுள்ள HOWARD W. EVES என்பவர் IN
MATHEMATICAL CIRCLES என்ற தலைப்பில் ஐந்து புத்தகங்கள்
எழுதியுள்ளார். இது கணிதத் துணுக்குகள் புத்தகம். கணிதம் சம்பந்தமான சுவையான
சம்பவங்கள், வியக்கத்தகு உண்மைகள், மனதைத்
தொடும் வரலாற்றுக் குறிப்புகள் என்று! எல்லாம் கால் பக்கம், அரைப்
பக்கம்தான்.
மொத்தம் சுமார் 1500
குட்டிக் கட்டுரைகள். அவற்றிலிருந்து ஒரு கட்டுரையைத் தருகிறேன். ஹோவார்ட்
எழுதியதை அப்படியே மொழி பெயர்த்துத் தருகிறேன். * *
எண்களைப் பற்றி அறிந்திருந்த ஒரு காகத்தின் உண்மையான, மனதைத் தொடும் தகவல் ஒன்று உள்ளது. ஸ்காட்லாந்தில் ஒரு செல்வந்தர் பெரிய
மாளிகையில் வசித்து வந்தார். அவருடைய எஸ்டேட்டில் ஒரு டவர் கட்டியிருந்தார்.
பங்களாவைக் கண்காணிக்க காவலாளிகள் பயன்படுத்து வதற்கான ‘வாட்ச் டவர்’ அது.
அந்த டவரின் உச்சியில் ஒரு காகம் கூடு கட்டிவிட்டது. அத்துடன் விடவில்லை.
சதா சர்வ காலமும் காது கிழிய கத்திக் கொண்டிருந்தது. கூட்டில் முட்டை இட்டிருக்கக்
கூடும். அந்த டவருக்குள் சென்று மேலே ஏறி அதை விரட்டப் பல தடவை அந்த செல்வந்தர்
முயற்சி செய்தும் தோல்வியுற்றிருக்கிறார். எப்படி?







