எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு ஒரு
டார்ஜான் திரைப் படத்தைப் பார்த்தேன். காட்டுப்பகுதியில் டார்ஜான், அவன் காதலி, அவர்களுடன் ஒரு சிம்பன்ஸி இது மட்டும்தான்
என் நினவில் உள்ளன. ஒரு மரத்தின் விழுதைப் பிடித்துக் கொண்டு, பயங்கரமான குரலில் கத்திக் கொண்டே (ஊளையிட்டுக் கொண்டே என்று சொன்னாலும் சரி!) டார்ஜான்
தாவியதுதான் பெரிய ஸ்டன்ட் வித்தையாக எல்லாரையும் கட்டி போட்ட.து.
கதை, வசனம், இசை, நடிப்பு எதுவும் ஞாபகத்தில் இல்லை. இந்த அம்சங்களைப் பற்றித் தயாரிப்பாளர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. படம் பார்த்த்வர்களுக்கு அவை ஊறுகாய் போன்றுதான் இருந்திருக்க வேண்டும்.
கதை, வசனம், இசை, நடிப்பு எதுவும் ஞாபகத்தில் இல்லை. இந்த அம்சங்களைப் பற்றித் தயாரிப்பாளர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. படம் பார்த்த்வர்களுக்கு அவை ஊறுகாய் போன்றுதான் இருந்திருக்க வேண்டும்.
சமீபத்தில் இந்த படத்தைப் பற்றி
சில குட்டித் தகவல்கள் கண்ணில் பட்டன. அவை டார்ஜான் நினைவை எனக்குக் கொண்டு வந்துவிட்டன. டார்ஜானைப்
பற்றி விவரங்களைத் திரட்டும் ஆவலை உண்டாக்கின. ஒரு சில கட்டுரைகளையும்
புத்தகங்களயும் கண்டு பிடித்தேன்.
அவற்றில் நிறையத் தகவல்கள் கிடைத்தன.
* * *
டார்ஜான் கதைகளை எழுதியவர் EDGAR RICE
BURROUGHS பற்றிய விவரங்களும் மிகவும்
சுவாரசியமானவை.
பர்ரோஸ் (1875-1950). ஒரு பென்சில் மொத்த வியாபார ஷாப்பில் வேலை செய்து கொண்டு இருந்தார். என்ன வேலை? கட்டுக் கட்டாக வரும் பென்சில்கள் எல்லாவற்றையும் சீவி வைப்பதுதான் அவர் தினமும் செய்த வேலை. ஓய்வு கிடைத்த சமயங்களில், சரியான அடாஸ்’ நாவல்களை அவர் படிப்பது உண்டு. (PULP FICTION என்று கூறுவார்கள் இம்மாதிரி நாவல்களை..)
‘இவ்வளவு குப்பையாக எழுத எனக்குக் கூட வருமே’ என்று
அவருக்குத் தோன்றியது.
அவரது 54-வது வயதில், அவர் ஒரு நாவலை எழுதினார். அவருடைய பிள்ளைக்கு
சிறிது ஓவியம் வரையத் தெரியும் அவன் படங்கள் போட்டான்.
1912-ம் ஆண்டு, அவர் எழுதிய TARJAN OF THE APES என்ற நாவல் பிரசுரமாயிற்று.
புத்தகம் அதிகம் விற்காவிட்டாலும், சற்று வித்தியாசமான கதைக்களம் என்று இருந்ததால் திரைப்படம் எடுக்க சில 'உப்புமா’ கம்பெனிகள்’ முன் வந்தனர்.
அதைத் திரைப்படமாக விற்பதற்கு ஒரு ஏஜன் டை நியமித்தார்.
புத்தகம் அதிகம் விற்காவிட்டாலும், சற்று வித்தியாசமான கதைக்களம் என்று இருந்ததால் திரைப்படம் எடுக்க சில 'உப்புமா’ கம்பெனிகள்’ முன் வந்தனர்.
அதைத் திரைப்படமாக விற்பதற்கு ஒரு ஏஜன் டை நியமித்தார்.
ஹிரோ காட்டுவாசி, அரைகுறை ஆடை, இதெல்லாம் மைனஸ் பாயிண்டாக
அமைந்தன. சுமார் 4 வருஷம் கழித்து, ஒரு சிகாகோ இன்ஷூரன்ஸ் ஏஜெண்டிற்கு - சினிமாத்துறை அனுபவமோ, பணவசதியோ சற்றும் இல்லாத BILL PARSONS என்பவருக்கு- விற்றுவிட்டார்.
BILL PARSONS படத்தைத் தயாரிக்க முற்பட்டார்.
ரயில்வேயில் பணியாற்றிக் கொண்டிருந்த என்ஜினியர் ஒருவரை ஹீரோவாகப் போட்டு படம் எடுக்க
ஏற்பாடுகள் செய்தார். அந்த என்ஜினியர் காட்டுவாசிபோல் இருந்து
தான் அவருடைய ஒரே தகுதி!
பர்ரோஸ் இதைக் கேள்விப்பட்டு மிகவும் கோபமடைந்தாராம்.
பர்ரோஸ் இதைக் கேள்விப்பட்டு மிகவும் கோபமடைந்தாராம்.
அவருடைய கற்பனையின்படி, கதாநாயகன்
காட்டில் வசிப்பவனாக இருந்தாலும் கட்டுமஸ்தான, கம்பீரமான, களையான பயில்வான் மாதிரி
இருப்பான். இனிமேல் என் கதையை யாருக்கும் விற்க வேண்டாம்’ என்று பர்ரோஸ் தன் ஏஜன்டிற்குத் தெரிவித்தார்
அவரது படம் ஒரு மாதிரி தயாரிக்கப்பட்டு, 1913’ல் திரையிடப்பட்ட போது, அவர் முதல் காட்சிக்குக் கூடப் போகவில்லையாம்!
ஆனால் என்ன ஆயிற்று? டார்ஜான் படம் பிய்த்துக் கொண்டு ஓடியது. டார்ஜான், பித்து சினிமா ரசிகர்களைப் பிடித்துவிட்டது. பல
தியேட்டர்கள் காலைக் காட்சியாகவும் திரையிட வேண்டி யிருந்ததாம் - கூட்டத்தை சமாளிக்க!
படம், கிட்டத்தட்ட 10 லட்சம் டாலருக்கு மேல் லாபம் ஈட்டியது. இத்தனைக்கும் அது
ஒரு ஊமைப் படம்! (1918-ம் வருஷத்தில் அதிக வசூலை ஈட்டிய
படமாக அது அமைந்துவிட்டது. பத்து லட்சம் டாலர். (நூறு வருஷத்திற்கு முன்பு பத்து
லட்சம் டாலர் என்பது 10 பில்லியனுக்குச் சமமாகவோ, அதைவிட அதிகமாகவோ
மதிப்பு உடையதாக இருந்திருக்கும்.)
அவரது, கதையில் வந்த டார்ஜானுக்கும், திரைப்பட டார்ஜானுக்கும் வேறுபாடுகள் இருந்தன., அவருக்குப் பணம் வந்துக் கொண்டிருந்தால், அவர், சும்மா இருந்து விட்டாராம். பார்சன்ஸ் உடனே அடுத்த டார்ஜான் படத்தை அவசரம் அவசரமாக, (அள்ளித் தெளித்த கோலம் போன்று)
எடுத்தாராம். The Romance of the Tarzan என்ற படம் 1918-ம் ஆண்டு அக்டோபர் ரிலீஸ்
ஆயிற்று. நம்பமாட்டீர்கள், ஏழே எழு நாட்கள் தான்
ஓடியதாம்.
தன் கதையை இனி யாருக்கும் படமாக்க
அனுமதித் தரப் போவதில்லை என்று பர்ரோஸ் சபதம் எடுத்துக்
கொண்டார்!.
ஆனால் பணத்தாசை யாரை விட்டது? அவரது இன்னொரு கதை RETURN OF TARZAN என்ற படமாக வந்தது. தீயணைப்பு வீரர் ஒருவர், பயில்வான் மாதிரி இருக்கிறார். என்ற ஒரே காரணத்திற்காக, அவரை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தார்களாம் படம் நொண்டி நொண்டி ஓடியதாம். சுமாரான வருவாய் வந்தது. (ஹீரோவிற்கு அதுவே முதல் படமாகவும் கடைசிப் படமாகவும் அமைந்துவிட்டதாம்.!)
ஆனால் பணத்தாசை யாரை விட்டது? அவரது இன்னொரு கதை RETURN OF TARZAN என்ற படமாக வந்தது. தீயணைப்பு வீரர் ஒருவர், பயில்வான் மாதிரி இருக்கிறார். என்ற ஒரே காரணத்திற்காக, அவரை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தார்களாம் படம் நொண்டி நொண்டி ஓடியதாம். சுமாரான வருவாய் வந்தது. (ஹீரோவிற்கு அதுவே முதல் படமாகவும் கடைசிப் படமாகவும் அமைந்துவிட்டதாம்.!)
இப்படி ஒவ்வொரு டார்ஜான் படத்திற்கும், ஒரு புது தயாரிப்பாளர், புது ஹீரோ, என்ற ரீதியில் பர்ரோஸ் புத்தகங்கள் திரைப்படமாக
வந்துக் கொண்டிருந்தன.
TARZAN AND THE GOLDEN LION என்ற படம் 1927-ல் வெளியானது. ஹீரோ வழக்கம்போல்
பெயர் தெரியாத ஆசாமி. விமர்சகர்கள் படத்தை கிழிகிழி என்று கிழித்தாலும், படம் சுமாராக ஓடியது.
படம் வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் டார்ஜான் என்ற பெயருக்கு மவுசு குறையவில்லை; ஆனால் படத்தில் நடித்தவர்கள்தான் காணாமல்
போய்க் கொண்டிருந்தார்கள்.
இந்த சமயம் எம்.ஜி.எம் ஒரு திரைப்படத்தை
ஆப்பிரிக்க நாட்டுப் பின்னணியில் எடுக்க திட்டமிட்டது. படத்திற்குத் தேவையான பொருட்களுடனும் (90 டன்!) எராளமான நடிகர்களுடனும் ஒரு
கப்பலில் போய், ஒரு மாதம் ஷூட்டிங் நடத்தி விட்டுத் திரும்பி
வந்தனர். படத்திற்குத் தேவையில்லாத பல காட்சிகளையும், துண்டு சீன்களையும் ஏராளமாக (ஒரு லட்சம் அடிகள் அளவு) எடுத்துக் கொண்டு
வந்தனர் - பின்னால் அதை எப்படியாவது உபயோகித்துக் கொள்ளலாம்
என்று.
TARJAN THE APEMAN கதையை படமாக்கும் உரிமையை எம்.ஜி.எம் வாங்கியது. டார்ஜான்
கேரக்டரை வைத்து, ஆப்பிரிக்க காட்சிகளையும் சேர்த்து
ஒரு கதையைத் தயார் செய்தார்கள். திரைக்கதை, வசனம் எழுத ஒருவரை ஒப்பந்தம் செய்தது.
அவர் ஒரு ஹோட்டலில் அறையை எடுத்து திரைக்கதை, வசனம் எழுத ஆரம்பித்தார். ஒரு நாள் அவர், சற்று ரெஸ்ட் எடுக்கலாம் என்று எண்ணி, வெறுமனே ஹோட்டல் வராந்தாவில் நடந்து கொண்டிருந்தார்.
வராந்தாவிலிருந்து பார்த்தால் கீழே ஹோட்டலின் நீச்சல் குளம் தெரியும். அவர்
பார்த்த சமயம், அந்த குளத்தில் ஒரு கட்டுமஸ்தான, கம்பீரமான ஆள் நீந்திக் கொண்டிருந்தது தெரிந்தது. அசந்து
போய்விட்டார். இந்த ஆளைப் பிடித்து ஹீரோவாகப் போட்டால் சூப்பராக இருக்கும் என்று
தீர்மானித்தார்.
ஆம், அந்த நீச்சல்
குளத்தில் அவருக்கு பெரிய ’திமிங்கலமே’
அகப்பட்டுவிட்டது என்பது பின்னால் நடந்தவை
உறுதிப்படுத்தின..
அந்த இளைஞனை ஹீரோவாகப் போட
விரும்பி அவனை சந்தித்தார்.
அந்த இளைஞன் ஜானி
வெய்ஸ்முல்லர் என்ற பிரபல நீச்சல் வீரர். இருபத்து ஒரு வயதே ஆன வெய்ஸ்முல்லர்
ஏராளமான நீச்சல் பந்தயங்களில் வென்றவர். 1924-ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களையும், 1928-ம் ஆண்டு ஒலிம்பிக்கில், இரண்டு தங்கப் பதக்கங்களையும் வென்றவர்.
டார்ஜானாக நடிக்க ஜானி வெய்ஸ்முல்லர் ஒப்புக் கொண்டார். ஒரு சின்ன துண்டு
துணியுடன்,
காட்டுவாசியாக நடிக்கவும் சம்மதித்தார். அவருக்கு நடித்துப் பழக்கமில்லை. அவருக்கு எந்த அளவுக்கு நடிப்பு வருமோ, அந்த அளவுக்கு டார்ஜான் கதாபாத்திரத்தை மாற்றி
அமைத்தார்களாம்.
வெய்ஸ்முல்லரின் டார்ஜான் படம்தான் முதன் முதலில ’பேசிய’ படம். அதற்கு முன்பு எல்லாம் ஊமைப் படங்கள்தான்!
இத்தனை வருஷங்கள் ஆகியும் டார்ஜான் படங்கள்
என்றதும் மூன்று சின்ன விஷயங்கள் தான் நினைவுக்கு வரும். 1) கதாநாயகன் ஒரு
சின்ன துண்டு மட்டும் உடுத்திக் கொண்டு,, காட்டில் மரத்திற்கு மரம் தாவிச் செல்வது. 2) படத்தில் வந்த சிம்பன்ஸி 3) இந்த மூன்றாவது மிகவும்
முக்கியமானது. டார்ஜான் அவ்வப்போது பயங்கரமாக ஒலி எழுப்புவான். கிட்டத்தட்ட ஊளை
என்றும் சொல்லலாம். (YELL)
இந்த காட்டுக் கத்தலின் வரலாறும் சுவையானது. மாணவப் பருவத்தில் பள்ளிக்கூட பிக்னிக்கில்
கும்மாளம் போடும்போது, விசித்திரமாகக் கத்திய கத்தலை வெய்ஸ்முல்லர் டைரக்டருக்கு கத்திக் காண்பித்தார்.
டைரக்டருக்குப் பிடித்துவிட்டது. ஓ.கே என்று சொல்லிவிட்டார்.
(இந்த கத்தல், பின்னால் மிகவும் பிரபலமடைந்த போது எம்.ஜி.எம். ஒரு
சரடு திரித்தார்களாம் “இது மிகுந்த ஆராய்ச்சிக்குப் பிறகு எங்கள் சவுண்ட்
இன்ஜினியர் உருவாக்கியது சிரிக்கும் கழுதையின் கத்தலை ரிகார்ட் பண்ணி, அதைப் பின்பக்கமாக ரிகார்டரில் ஓடவிட்டு, அத்துடன் ஒரு ஒட்டகத்தின் கத்தலை மிக்ஸ் செய்து, வயலினில் ஒரு மாதிரி ஓசைப்படுத்தி, ஒரு பாடகியை மேல் ஸ்தாயில் ‘அலற’ச் செய்து, இப்படி பலவற்றைக் கலந்து கட்டி உருவாக்கினோம்” என்று
பரப்பிவிட்டார்கள்) (சினிமாக்கார்களுக்கு ’ரீல்’ விடக் கற்றுத்தரவேண்டுமா என்ன!)
Tarzan The Apeman’ படத்தை எட்டே வாரங்களில் எடுத்து
முடித்து விட்டார்களாம். ஆப்பிரிக்காவில் கூடுதலாக எடுத்து வந்த காட்சிகளை எல்லாம், நடுநடுவே சொருகிப் படமாக்கிவிட்டார்கள். 1932-ம் வருஷத்தில் அதிக வசூல் அள்ளிய பத்து படங்களில் ஒன்று
என்ற சாதனையை அது செய்தது.!
வசூலை அள்ளுவதால், எம்.ஜி.எம். தொடர்ந்து
டார்ஜான் படங்களைத் தயாரிக்கத் துவங்கியது. எட்கார் ரைஸ் பர்ரோஸ் தனது
‘டார்ஜான் கதாபாத்திரத்தை எம்.ஜி.எம்மிற்கு கிட்டதட்ட தத்து கொடுத்துவிட்டார்.
’தொடர்ந்து செக் வரும்வரை எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை’ என்று சொல்லாமல்
சொல்லிவிட்டார்.
சில வருடங்கள் கழித்து, டார்ஜான் படத்தில் கதாநாயகியாக
நடித்த மாரீன்-ஓ-சல்லிவன், இனி டார்ஜான் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று சொல்லி
விலகி விட்டார்.
அதுமட்டுமல்ல, வெய்ஸ்முல்லரின் கட்டுமஸ்தான உடல் அமைப்பும் தளரத்
துவங்கியதால், டார்ஜான் படங்களைத் தொடர்ந்து எடுக்கும் ஆர்வம்
எம்.ஜி.எம்மிற்குக் குன்றிவிட்டது.
வெய்ஸ்முல்லர் 1948.ம் ஆண்டு TARJAN AND THE
MERMAIDS படத்தில் நடித்து முடித்தார். அது அவருடைய 12-வது டார்ஜான் படம். லாபத்தில் பங்கு கேட்டார். தயாரிப்பாளர்
மறுத்து விட்டார். அத்துடன் டார்ஜான் பட வரிசைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்
பட்டுவிட்டது!.
ஆனால், வெயிஸ்முல்லர் வேறு பல ’காட்டு’
படங்களில் நடித்தார். கிட்டத்தட்ட 29 படங்கள் “JUNGL JIM” படவரிசையில் நடித்தார். அதன்பிறகு
அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் முழுவதுமாக நின்று போயின.
வெயிஸ்முல்லர் 1984-ம் ஆண்டு தனது 79-வது வயதில் காலமானார். அவருடைய
உடலை புதைக்கும் சமயம், டேப்-ரிகார்டில் அவருடைய
‘டார்ஜான்’ கத்தலை’ஒலிபரப்பினார்கள்.- அவரது விருப்பப்படி!
* *
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பர்ரோஸின் பிரம்மாண்டமான பண்ணை இருந்த இடத்தின் பெயர், டார்ஜானா!
இன்றும் இருக்கிறது!
இன்றும் இருக்கிறது!
பார்க்க விக்கிபீடியா தகவல்: Tarzana is an affluent neighborhood in the San Fernando Valley region of the city of Los Angeles, California. Tarzana is on the site of a former ranch owned by author Edgar Rice Burroughs.
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி . சுமதி ராஜா. அவருக்கு என் நன்றி
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி . சுமதி ராஜா. அவருக்கு என் நன்றி
டார்ஜான் காமிக்ஸ் தான் பார்த்திருக்கேன். படங்கள் பார்த்ததில்லை. அனைத்தும் புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteInteresting facts about Tarzan! Thanks.
ReplyDeletePlease edit towards the end.. something repeated....
மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
எத்தனை சுவாரசியம், எவ்வளவு விஷயங்கள்!
முக நூலில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி சுப்ரமணிய்ம்
middleclassmadhav அவர்களுக்கு, நன்றி திருத்தி விட்டேன் (உங்கள் புனைபெயர் மிகவும் நன்றாக இருக்கிறது.) - --( MUDDLE CLASS கடுகு!
ReplyDeleteநீங்க, 'middle' என்பதற்கான ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடலை. நிஜமாகவே ஸ்பெல்லிங் மிஸ்டேக்னா, நானெல்லாம் 'very lower middle' என்றுதான் போட்டுக்கணும்.
Delete'muddle' என்பதுதான் சரின்னா, நிறைய நிறைய படித்து நிறைய தகவல்கள் வைத்திருக்கும்போது கன்ஃப்யூஷன் சகஜம்தான். எனக்கு ஞாபக மறதினாலதான் 'muddle' என்று சொல்லணும்.
உங்களுடைய டார்ஜான் இடுகை, எப்போதும்போல் பல சுவாரசியத் தகவல்களுடன் நன்றாக இருந்தது. காடு, விலங்குகள் போன்றவை மித் ஆக இருக்கும்போதுதான் இந்தமாதிரி டார்ஜான் கதைகள் எடுபடும்னு நினைக்கறேன். இல்லைனா, குழந்தைகளுக்கான படமாக மாறிவிடும். ஜானி வெய்ஸ்முல்லரைப் பற்றிப் படித்ததும், பாடி பில்டர் என்ற தகுதில நிறைய அட்டஹாசமான படங்களில் நடித்த அர்னால்ட், பிறகு அதன்மூலம் கவர்னரானது என்பதெல்லாம் ஞாபகம் வந்தது. ஆனால் ராம்போ பட ஸ்டோலனும் அவரது பாடிபில்டிங் மூலம் புகழ்பெற்றாரா என்பது தெரியவில்லை
ReplyDeleteசுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி!
ReplyDelete