October 30, 2017

கதம்ப மாலை

 அற்புத  படம்
     அந்த காலத்தில், 1940,50 வாக்கில் டைம்ஸ் ஆஃப் இந்தியா ‘ஹோம் லைப்ரரி கிளப் என்ற பெயரில் பல புத்தகங்களை, கனமான பவுண்ட் புத்தகங்கலாக – வெளியிட்டு வந்தார்கள். என் அப்பா அதில் உறுப்பினர் ஆனார். அதனால் அவ்வப்போது தபாலில் அட்டைப்பெட்டியில் புத்தகங்கள் வரும். உலகச் சிறுகதைகள், வாழ்க்கை வரலாறு தொகுப்பு PALGRAVES GOLDEN  TREASURY  என்று தரமான புத்தகங்கள் பல வரும். அப்படி வந்த புத்தகங்களில் ஒன்று; 'உலகின் மிகச் சிறந்த புகைப்படங்கள்'.
     அதில் ஒரு புகைப்படம் மறக்க முடியாது. ஒரு அகன்ற தட்டில் பாலை ஊற்றிவிட்டு, சற்று  உயரத்திலிருந்து ஒரு சொட்டு பாலை அதன் மேல் போட்டு,  தட்டில் பட்டு பால் எழும்பி சிதற அடித்த கணத்தில்  படம் எடுத்துப் பார்த்தார், ஒரு புகைப்படக்காரர். அவர் நிறைய படங்கள் எடுத்து இருக்க வேண்டும். அவர் எடுத்த ஒரு படம் அற்புதமான  புகைப்படமாக உலகளாவிய பாராட்டைப் பெற்றது. அந்த புகைப்படத்தை (பார்க்க; படம்) நான் அவ்வப்போது பார்த்து ரசித்து இருக்கிறேன்  மேலே அடுத்த பால் சொட்டு இருப்பதைக் கவனியுங்கள்..இப்படி வித்தியாசமான புகைப்படம் எடுக்க வேண்டும் என்று எண்ணிய அவரது கற்பனைத் திறத்தைக் கண்டு வியந்திருக்கிறேன்.
     சமீபத்திய ‘டைம்’ வார இதழில் உலகின் மிகச் சிறந்த புகைப்படங்கள் 100-ஐத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்திருந்தார்கள். அதில் ஒன்று இந்த MILK DROP. படம் எடுத்தவர்; Herald Edgerton; ஆண்டு;1957

 ஒரு ரிகார்ட்!  
எட்கார் ஆலன் போ, மர்மக் கதைகள் எழுதிப் புகழ் பெற்றவர். அவரது பல நாவல்கள் ஹாலிவுட்டில் நாவல்களாக எடுக்கப்பட்டுள்ளன. எத்தனை நாவல்கள் என்று சுலபமாக ஊகிக்க முடியாது. ஆம், 114 நாவல்கள்.!
                                   
  முதன் முதலில்!
TIME இதழின் அட்டைப்படத்தில் இடம் பெறுவது மிகப் பெரிய கெளரவம் என்று கருதப்படுகிறது. அதிலும் திரைப்பட நடிகர், நடிகைகள் நம் படம் வராதா என்று ஏங்குவது உண்டு. 

சரி, முதன் முதலில் அட்டைப் படத்தில் இடம் பெற்ற நட்சத்திரம் யார்?  சார்லி சாப்ளின். 1925-ம் ஆண்டு!
   சினிமா பைத்தியம்!
ஒரு திரைப்படத்தை பல தடவை பார்ப்பவர்கள் உண்டு. உலகம் எங்கும்  இப்படிப்பட்ட பைத்தியங்கள் உண்டு. இதில் ரிகார்ட்  பட்டம்  பெற்றிருப்பவர்  அயர்லாந்தில் உள்ள ஒருவர். அவர் SOUND OF MUSIC  திரைப்படத்தை  940 தடவைப் பார்த்திருக்கிறார்!
  
சுருக்கக்கூடாது
 மோஸார்ட்டின் ‘TWELFTH MASS’ என்பது பிரபலமான  இசை வடிவம். (MASS= The Mass  is a form of sacred musical composition.)  

ஒரு சமயம் ஒரு நிகழ்ச்சியில் இதை ஒரு BAND MASTER அட்டகாசமாக வாசித்தார்.. ஒரு பத்திரிகை நிருபர் தன் பத்திரிகைக்குச் செய்தி அனுப்பும் போது ஒரு காரியம் செய்தார், 
(அமெரிக்காவில் மாகாணங்களின் பெயரைச் சுருக்கி எழுதுவார்கள்.  உதாரணமாக   CALIFORNIA-CA, WASHINGTON-WA. TEXAS -TX.)

அப்படிச் சுருக்கி எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்த அந்த நிருபர் 'TWELFTH MASS’ பற்றி எழுதியது:  

The Band rendered with great effect  'MOZART’S  Massachusetts!'....  !
( இசை வடிவ MASS-ஐ அமெரிக்க மாநிலமாக மாற்றிவிட்டார்!

COMPOSING- DECOMPOSING
     ஒரு திடீர்ப் பணக்காரப் பெண்மணி, உலகப் பிரபல பியானோ கலைஞர் PADEREWSKI-யின் இசை நிகழ்ச்சியை ஒரு சேம்பர் நிகழ்ச்சியாகத் தன் மாளிகையில் நடத்தினார். அந்தப் பெண்மனிக்கு இசையைப் பற்றி ஒன்றும் தெரியாது.
PADEREWSKI  வழக்கம் போல் அபாரமாக வாசித்தார். 

       அவரது நிகழ்ச்சி முடிந்ததும், அவர் இசைத்த ஒரு பாடலைப் பற்றிக் கேட்டார் அந்த சீமாட்டி . ”அந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை Compose பண்ணியவர் யார்?’ என்று கேட்டார் 
      PADEREWSKI “அது மோஸர்ட் செய்தது “ என்றார். 
       மோஸர்ட் காலமாகி பல வருஷங்கள் ஆகிவிட்டது  என்பது கூடத் தெரியாத  அந்தப் பெண்மணி  “ஓ, அப்படியா? அவர் இப்போது  Compose பண்ணுகிறரா?" என்று கேட்டார்.
“இல்லை மேடம். இப்போது அவர் DECOMPOSING” என்று குறும்பாகச் சொன்னார் பியானோ மேதை.!
                           
ஒரு வரி தேடித் தந்த புகழ்!
     எத்தனையோ எழுத்தாளர்கள், கவிஞர்கள் அற்புதமாக கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பெயரையும் புகழையும் அவர்கள் எழுதிய கட்டுரை கவிiதைகளில் வந்த ஒரு வரியோ,கருத்தோ, தத்துவமோதான் எவ்வளவு புகழை ஈட்டித் தந்தாலும், அவர்கள் எழுதிய கட்டுரைகளை யாரும் படிக்கமாட்டார்கள். அந்த ஒற்றை வரியோடு அவர்கள் படிப்பது  நின்று விடும்.,
     அப்படிப் புகழ் பெற்றுத் தரும் அந்த வரிகள் தான் அவர்களுக்கு எதிரியாக அமைந்து விடும்..
     உதாரணமாக , 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற வரியை எழுதியவர் பெயர் சமீப காலமாகத்தான் பலருக்கும் தெரிந்திருக்கிறது. போகட்டும்,  அந்த வரி வந்த பாடலை முழுமையாக அறிந்திருப்பவர்கள் குறைவு.
     தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ (பாரதியார்) ‘அண்ணலும் நோக்கினான் , அவளும் நோக்கினாள், (கம்பர்), ‘தோள் கண்டார்,தோளே கண்டார். இந்த கவிதை வரிகள் மாதிரி புகழ் பெற்று விட்ட   ஒரு வரியை பற்றிய  குட்டிக் கட்டுரை இது.. பல
வருடங்களுக்கு முன் எழுதப்பட்டிருந்தாலும், இன்றும் வரிகளின் புகழ் குறையவில்லை.
 இந்த கவிதை வரிகள் மாதிரி புகழ் பெற்று விட்ட   ஒரு வரியை பற்றியக்  குட்டிக் கட்டுரை இது.
     புகழ் பெற்ற அந்த ஆங்கில கவிதை வரி; A ROSE IS a ROSE IS A ROSE. இது எந்த கவிதையில் வந்த வரிகள், எழுதியது யார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த வார்த்தைத் தொடர் மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த வார்த்தைகளைப் பின்பற்றி சில நையாண்டி வரிகளும் வந்துள்ளன. சில கருத்தாழமுள்ள வரிகளும் வந்துள்ளன.     நம்புவீர்களா, இந்த வரி இடம் பெற்றுள்ள கவிதை எழுதப்பட்டது; 1912; நூறு ஆண்டுகள் ஆயினும் இன்னும் ஜீவனுடன் உள்ளது.
     GERTRUDE STEIN  என்ற அமெரிக்க கவிஞர் ‘SACRED EMILY’  என்ற 376 வரிகள் கொண்ட கவிதையில் இன்ம்ந்த வரி  பெற்றுள்ளது. ஸ்டைன் ஒரு பெண் கவிஞர். 1903 –ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். அங்கே காலமாகும் வரை-1946 வரை- இருந்தார்.
    * ஒரு சமயம் மார்க்கரட் தாட்சர் (இங்கிலாந்து பிரதம மந்திரி) கூறியது. A CRIME IS A CRIME IS A CRIME
    *எழுத்தாளர் ஹெமிங்வே எழுதியது. “A STONE IS A STEIN IS A ROCK IS A BOULDER IS A PEBBLE!.”
    *ஒரு சமயம் ஸ்டைன் பாரீசிலிருந்து, தனது நியுயார்க் புத்தகம் பிரசுரத்திற்கு, தனது கவிதைத் தொகுப்பினை மலிவுப் பதிவாக வெளியிடலாம் என்று யோசனை தெரிவித்தார். பதிப்பகத்தின் உரிமையாளர் அனுப்பிய பதில் தந்தி; “SORRY..SORRY…..SORRY… NO SALE IS A NO SALE IS A NO SALE IS A NO SALE!”
    [ இந்தப் பகுதியை எழுதிக் கொண்டிருக்கும்போது வந்த நண்பர் சொன்ன தகவல்: 2016-ம் வருட TONY  விருது நிகழ்ச்சியில், விருது  பெற்ற  LIN MIRANDA தனது உரையில், விருது அளிக்கப்பட்ட தினத்தில் அர்லேண்டோ நகர நைட் கிளப்பில்  ஒரு வெறியன்  50 பேரைச் சுட்டுக்க கொன்றதைக் குறிப்பிட்டு  எழுதிய பாடலில் “  IS LOVE IS LOVE IS LOVE’  என்று நெகிழ்ச்சியுடன் கூறி அனைவரையும் கண் கலங்க வைத்து விட்டார்.]
     
 4000 பணியிடங்கள்:  நெஜம்மா தான்                  

 அமெரிக்க அரசு அமைப்பில் புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 4000-த்திற்கும் மேற்பட்டvarkaLai  (அரசியல்வாதிகளை) - அதாவது தன் கட்சியைச் சேர்ந்த வர்களை!) பல்வேறு குழுக்களிலும், வாரியங்களிலும்   அமைப்புகளிலும் பணியமர்த்த உரிமை உண்டு.

 தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து அதிபராகப் பதவி ஏற்கும் காலத்திற்குள் அமர்த்த வேண்டும். எனக்கு, உனக்கு என்று படையெடுப்பவர்களைச் சமாளிக்கவே அவருக்கு நேரம் போதாது.,
   ,   
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி  சுமதி  ராஜா.  அவருக்கு என் நன்றி    

                                                                                                                              

                              

4 comments:

  1. முழுவதும் அறியாத புதிய தகவல்கள். தொகுத்து அளித்தமைக்கு நன்றி. பரந்து விரிந்து காணப்படும் உங்கள் அறிவின் ஆழமும் வியக்க வைக்கிறது.

    ReplyDelete
  2. மிக்க நன்றி. மிக்க நன்றி -கடுகு

    ReplyDelete
  3. நிறைய அர்ப்புதமான ரசிக்கக்கூடிய தகவல்கள். உங்க அப்பாவின் படிக்கும் ஆர்வம் உங்களிடத்தில் அமைந்திருக்கிறது போலும். எத்தனை வித்தியாசமான தகவல்கள்.

    "Decomposing"- இரண்டு சம்பவங்களை ஞாபகப்படுத்தியது. சோவின் அப்பா, சிவாஜி அவர் வீட்டுக்கு வந்தபோது, "நீங்ககூட என் பையன் நடித்த படத்தில் நடிச்சிருக்கீங்களே" என்று சொன்னது. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள், சிவாஜி தன் வீட்டிற்கு வந்தபோது, நீங்கள் யார் எனக் கேட்டது. சிவாஜி விவரித்தபின்பும், சினிமாவே பார்த்திராத்தால் தெரியாமலேயே இருந்தது.

    ஒருதடவைக்கு மேல் ஒரே படத்தைப் பார்ப்பவர்கள் பைத்தியங்கள் என்று சொல்லிவிட்டீர்களே.

    அமெரிக்க அதிபர், பதவி ஏற்கும்போதோ அல்லது பதவியை விட்டு விலகும்போதோ, எந்தக் குற்றவாளியின் தண்டனையைக் குறைக்கவோ நீக்கவோ அதிகாரம் இருக்கா?

    ReplyDelete
  4. பல்சுவைத் தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!