தலைப்புக்குத் தவிப்பு
எந்த தலைப்புகுத் நன்றாக இருக்கிறது என்பதை தீர்மானிக்கத் தத்தளிப்பது, புடவை வாங்கும் பெண்கள் மட்டுமல்ல,, திர்ப்டைத்திற்கு ஏற்ப பெயர் வைக்கத் திணறும் கதாசிரியர்கள், மற்றும் தாங்கள் எழுதிய புத்தகத்திற்கு எந்த பெயர் வைப்பது என்பதற்கு, புத்தகம் எழுதும்போது மண்டையைக் குடைந்துக் கொண்டதை விட அதிகமாக மூளையைக் கசக்கிப் பிழியும் எழுத்தாளர்களும் கூட!
1948 -1984 ஆசை
இரண்டாம் உலகப்போர் நடந்துக் கொண்டிருந்த போது எழுத ஆரம்பித்த நாவல். யுத்தம் முடிந்த பிறகும் ஐரோப்பவில் பல நாடுகள் போரினால் ஏற்பட்ட பலத்த பாதிப்புகளிலிருந்து முழுவதுமாக மீண்டு வர முடியவில்லை.THE LAST MAN
EUROPE என்று பெயரிட நினைத்தார். ஆனால் அந்தப் பெயரில் அவருக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை.
நாவலை எழுதி முடித்த வருஷம்1948. அவருடைய புத்தகத்திற்கு 1984 என்று வைத்து விட்டார். புது மாதிரியான தலைப்பாகவும் அது அமைந்துவிட்டதுடன் நல்ல புகழ் பெற்ற புத்தகமாகவும் அமைந்து அவருக்குப் புகழை அள்ளித் தந்தது. 65 உலக மொழிகளில் வெளி வந்துள்ளது. தொடர்ந்து விற்பனையில் சாதனைப் படைத்துக் கொண்டிருக்கிறது. அட்டைப் படம் மட்டும் 42 விதமாக வந்துள்ளதாம்.
நூற்றில் ஒன்று கூட தேறவில்லை
நூற்றில் ஒன்று கூட தேறவில்லை
பிரபல நாவலாசிரியர் எர்னஸ்ட் ஹெமிங்வே சொன்னார்:
" ஒரு கதையையோ, புத்தகத்தையையோ எழுதி முடித்த பின் கிட்டத்தட்ட நூறு தலைப்பை எழுதுவேன். அதன் பிறகு ஒவ்வொன்றாக நிராகரிப்பேன். சில சமயம் எல்லாவற்றையும் கூட நிராகரித்து விடுவேன்.”
மனப்பாடம் செய்ய வேண்டிய தலைப்பு சில மாதங்களுக்கு முன்பு, வலையில் நகைச்சுவை புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு புத்தகத்தைப் பற்றி ஒரு புத்தக குழுவினரின் விவாதத்தில் ஒருத்தர் சிபாரிசு செய்திருந்த புத்தகத்தின் பெயர் சற்று விசித்திரமாக இருந்தது. கவனமாகப் படியுங்கள்: YMA, AVA, YMA, ABBA, YMA DONA, YMA DONA, YMA IDA,YMA AGAA AND OTHERS. எழுதியவர்: தாமஸ் மீஹான். பிரசுரமான ஆண்டு 1967.

இந்த தலைப்பின் பின்னே சின்ன வரலாறே இருக்கிறது. பெரு நாட்டைச் சேர்ந்த பாடகி ஒருவர் மிகவும் பிரபலமாக இருந்தார். குரல் என்றால் அவருடையதுதான் குரல். அவ்வளவு வசீகரம் மிக்கது. அவரை YAM என்று குறிப்பிடுவார்கள். அது பெரு நாட்டு மொழியில் 'அழகிய’ என்பது மாதிரி பொருள்படுமாம். அவருடைய இசை நிகழ்சிக்குப் போயிருந்தார் தாமஸ் மீஹான். (இவர் பின்னால் நியுயார்க்கர் பத்திரிகையில்
Shouts and Murmurs என்ற பத்தியை எழுதியவர்,)
அந்த இசை நிகழ்ச்சிக்கு பிரபல நடிகர் AVA GARDNER வந்திருந்தார். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்த போது YAM AVA, YAM ABA என்று பெயர்களைக் கூறியது மீஹானுக்கு சற்று விசித்திரமாக இருந்தது.

சில நாட்கள் இதைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தார். ஒரு நாள் இவருக்கு ஒரு கனவு வந்தது: . YAM-இன் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. பல பிரபலங்கள் வந்திருக்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் அறிமுகம் நடக்கிறது. அந்த பிரபலங்கள் யாவரும் மூன்றெழுத்து பெயருடையவர்கள். YAM AVA , YAM IDA, YAM AGA. இதை வைத்து ஒரு நகைச்சுவை கட்டுரை எழுதினார், YAM DREAM என்ற தலைப்பில். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அவரை எங்கோ உயரத்திற்குத் தூக்கிக் கொண்டு போய், ஹாலிவுட்டில் இறக்கி விட்டது.
அவர் இந்த கனவை ஒரு முஉநீள நகைச்சுவை புத்தகமாக எழுதி வெளியிட்டபோது, இப்படி வித்தியாசமான தலைப்பைக் கொடுத்தாராம். திரைப்படமாகவும் அது வந்ததாம்.
ஹெமிங்வேயின் சுய சரித்திரம்
ஹெமிங்வே பல வருடங்கள் பாரீஸில் வசித்து வந்தார். அவருக்கு மிகவும் பிடித்த ஊர் பாரீஸ். தனது பாரீஸ் நாடகங்களை விரிவாக தன் சுய சரித்திரத்தை1930-ல் எழுத ஆரம்பித்து மூட் வரும் போதெல்லாம் எழுதி முடிக்க கிட்டதட்ட 30 ஆண்டுகள் பிடித்தது. அதற்கு கண்ணும் காதும்’ உண்மையை எழுதுங்கால், காதல் என்பது பசி, யாருக்கும் தெரியாத தகவல்கள், It is different in the Ring என்றெல்லாம் பட்டியல் போட்டார் ஆனால் எதையும் தேர்ந்தெடுக்காமலேயே காலமாகிவிட்டார்.
புத்தகம் அவர் காலமான பிறகு வெளியாயிற்று, A MOVEABLE FEAST
புத்தகம் அவர் காலமான பிறகு வெளியாயிற்று, A MOVEABLE FEAST
என்ற தலைப்பில்!
இந்த தலைப்பை அவரது மனைவி மேரி தேர்ந்தெடுத்தார். ஒரு சமயம் ஹெமிங்க்வே தனது நண்பர் ஒருவருக்குக் கடிதத்தில் எழுதியது: ‘"If you are ucky enough to have lived in Paris as a young man, then wherever you go for the rest of your life, it stays with you, for Paris is a moveable feast.” 'பாரீஸ் ஒரு நடமாடும் விருந்து’ என்று எழுதியிருந்தார். அது மேரிக்கு நினவு வந்தது. அதனால் அந்தப் பெயரை வைக்கச் சொன்னாராம்.

சாவியின் சாமர்த்தியம்
ஆசிரியர் சாவி, காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை எழுத முனைந்தார். காமராஜரைப் பேட்டிக் கண்டு பல தகவல்களையும் பெற்றார். இதற்காக அவர் டில்லி வந்து காமராஜரைச் சந்தித்தார்,. (அப்போது அவருடன் நானும் சென்றிருந்தேன்.) புத்தகத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்பதைக் கண நேரத்தில் தீர்மானித்து விட்டார். காமராஜரின் தாயாரின் பெயர் சிவகாமி என்பதும் நினைவுக்கு வந்ததும், கல்கியின் சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும் அவர் நினைவுக்கு வந்தன. அவ்வளவு தான். தலைப்பு மின்னலைப் போல வந்து விட்டது: சிவகாமியின் செல்வன்!
ஆசை எங்கு போய்விடும்
டென்னஸி வில்லியம்ஸ் 1947'ல் எழுதிய A Street Car Named Desire (பின்னால்1951'ல் இது திரைப்படமாகவும் வந்தது.) இந்த தலைப்பு சற்று விசித்திரமாகவும் இருந்தது. ஆகவே சிறிது வலைப் போட்டுத் தேடினேன். வில்லியம்ஸ் தனது நாடகத்திற்கு 4,5 பெயர்கள் வைத்தும் திருப்தியடையவில்லை.
வில்லியம்ஸ் இதைப் பற்றி ஒரு கட்டுரையில் எழுதியுள்ளது. “என் வீட்டின் வீதி வழியாக ட்ராம்கள் போய் வரும். அவற்றிற்குப் பெயர்கள் உண்டு.ஒரு ட்ராமின் பெயர் ’டிஸைர்'. இன்னொரு ட்ராமின் பெயர் சிமெட்டரி (Cemetery ’‘கல்லறை’ ). “இப்படி பெயர்கள் இருந்தது, சில சிந்தனைகளை என்னுள் தூண்டிவிட்டது.
நம் வாழ்க்கை பற்றி ஏதோ ஒரு உண்மையைக் கூறுவது போல் உணர்ந்தேன். நாடகத்தில் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் “டிசைர் ட்ராமில் ஏறிச் சென்று ‘சிமெட்டரி'யில் மாறிப் போகச் சொன்னார்கள். அதிக ஆசை அழிவையேத் தரும் என்பதை இந்த ஜோடி டிராம்கள் கூறாமல் கூறுவது போல உணர்ந்தேன்."
இது அவருடைய நாடகத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்து இருந்ததால் அந்தப் பெயரையே வைத்து விட்டார்.

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி சுமதி ராஜா. அவருக்கு என் நன்றி
கதை, நாவல்களின் தலைப்பு வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? ரசிக்கும்படியான தொகுப்பு.
ReplyDeleteஅந்த YAM லேர்ந்துதான் YUMMY வந்திருக்கிறதா?
சிவகாமியின் செல்வன் புத்தகம் இரண்டுமுறை படித்திருக்கிறேன். அந்த தில்லி விஜயம் பற்றி நினைக்கும்போது, காமராஜ் கடுமையாக்க் கோப்ப்பட்டு (நேருவோடு மீட்டிங் செல்லும் வழியில்) நடு ரோட்டில் சாவி அவர்களை இறக்கிவிட்டதுதான் ஞாபகத்துக்கு வந்தது. ஏட்டுக்கல்வி படித்திராத காமராஜ் அவர்களுக்கு எவ்வளவு நுண்ணறிவு என்பதை அந்த நிகழ்ச்சி சொல்லும்.
தங்களுக்கு எங்கள் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நான் அத்தனை பெரிய எழுத்தாளி இல்லை. இருந்தாலும், என் கட்டுரைகளுக்கும், கதைகளுக்கும் தலைப்பு வைக்க கொஞ்சம் கஷ்டப் படுவேன். கேட்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதால் பெரும்பாலும் திரைப்பட பாடல் வரிகளைப் பயன் படுத்துகிறேன்.
ReplyDeleteசோ தன் கதைகளுக்கும், நாடகங்களுக்கும், வித்தியாசமான பெயர்களை வைத்திருக்கிறார். ஒரு முறை அவர் நாடகத்திற்கு தலைமை தாங்கிய டி.கே.சண்முகம்,"சோ தன் நாடகங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார், ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது, தமிழில் வைக்க வேண்டும்" என்றாராம். உடனே சோ, "ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்கிறார், என்னுடைய அடுத்த நாடகத்திற்கு ஆங்கிலப் பெயர் கிடையாது. பிரெஞ்சு பெயர்" என்று கூறி, பெயரையும் அறிவித்தாராம்.
ReplyDeletethat'snot french that's Latin "QUO VADIS" means where are you going and the vip is is Late K.KAMARAJ AND not TTK as mentioned by you
DeleteI didn't mention about TTK.It was T.K.S(T.K.Shanmugam)veteran dramatist. Iam damn sure it was not Kamaraj, either(90%)TKS or MA.PO.SI. I red about this incident in அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் book by Cho.
Deleteவாசிப்பதற்குச் சுவாரஸ்யமாக உள்ளது. சில புத்தகங்களின் தலைப்புகளே உள்ளடக்கத்தை விவரித்துவிடும். "சத்திய சோதனை"' "அக்னி சிறகுகள்" அனைத்து தரப்பு வாசகர்களையும் கவர்ந்த வசீகரமான தலைப்புகள்.
ReplyDeleteபுடைவைத் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதை விட சிரமம், கதை, கட்டுரைகள், பதிவுகளின் தலைப்பைத் தேர்ந்தெடுப்பது. தலைப்பைப் பார்த்த உடனே படிக்க எல்லோரும் வரணும்னு நினைச்சுப்பேன். எங்கே! :) போகட்டும் உங்கள் தலைப்புக்கள் அனைத்தும் அருமை! ஹெமிங்வே பற்றி அறியாத அரிய செய்திகள்.
ReplyDeleteஇது சுவாரஸ்யமான தவிப்பாக இருக்கிறது பாராட்டுக்கள் சார்..
ReplyDeleteநானும் எனது பதிவுகளுக்கு தலைப்பு வைக்கும் போது பல முறை யோசிப்பதுண்டு. பலபேர் சொல்லி கேள்விபட்டு இருக்கிறேன் நான் வைக்கும் தலைப்பு படிப்பவர்களை கவர்ந்து இழுக்கிறது என்று
உங்களின் இந்த பதிவை தட்டச்சு செய்த சகோதரிக்கு என் பாராட்டுக்கள்