February 09, 2017

டிக்கெட்டில்லாப் பயணம்

சுமார் நூறு புத்தகங்களை எழுதியுள்ள ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளரைப் பற்றி சில தகவல்கள்.
     அவர் பெயர் : C.E.M.JOAD. (1891 - 1953). ஒரு தத்துவ அறிஞர் அவர். நாற்பதுகளில் BBCயில் Brains Trust என்ற தலைப்பில் ரேடியோ கருத்தரங்குகளை நடத்தி பிராபல்யம் பெற்றவர்.
அவர் நடத்தும் கருத்தரங்குக்கு மிக நல்ல வரவேற்பு இருந்தது.கருத்தரங்கில் அவர் துவக்க உரை, முடிவுரை என்று மட்டுமல்ல, மற்றவர்களைக் கேள்வி கேட்பது, ஊக்கம் அளிப்பது என்று இவரே அதிக நேரம் பேசிக்கொண்டிருப்பார். அவர்  அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வாக்கியம்: “அது, நீங்கள் என்ன  அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது.” என்று கூறுவாராம்.

 (நம்மூர் ஆன்மீகப் பேச்சாளர்களும் அரசியல் பேச்சாளர்களும் எப்படித் தேவையில்லாமல் கூடிய அளவு வார்த்தைகளைச் சகட்டுமேனிக்குச் சேர்த்துச் சேர்த்து, ’இருக்கும்’ என்பதை, ’இருக்கக் கூடிய’, ‘சொல்லும்’ என்பதை ‘சொல்லக் கூடிய’ என்று பேசுவதைக் கவனித்திருப்பீர்கள்அதுபோல JOAD அவ்வப்போது It all depends upon what you mean by...என்று வாக்கியங்களைத் துவக்குவாராம்.

இருந்தாலும் அவருடைய நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் போன்றவர்கள் அளவு அவர் பிரபலமாக இருந்தார். அவருக்குபுரொபசர்என்ற அடைமொழியும் காலப்போக்கில் சேர்க்கப்பட்டு விட்டது.
அவருடைய ரேடியோ நிகழ்ச்சியை திடீரென்று BBC நிறுத்திவிட்டு அவருக்குடாட்டாசொல்லி விட்டது. ஏன்?
ஜோட் ஒரு சமயம் ஒரு கட்டுரையில் எழுதி இருந்தது : நான் ரயிலில் போகும் போது டிக்கெட் வாங்காமல் போய் ரயில்வேயை ஏமாற்றி விடுவேன்.

ஏப்ரல் 12, 1948 அன்று பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுக் கொண்டார். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த அவரை டி.டி.ஆர். பிடித்து விட்டார். டிக்கெட் கட்டணமும் அபராதமாக இரண்டு பவுண்டும் கட்ட வேண்டியிருந்தது. மறுநாள் லண்டன் பத்திரிகைகளில் முதல் பக்கச் செய்தியாக வந்தது. அதன் பலன் : பிபிஸி அவரது நிகழ்ச்சியை நிறுத்தி விட்டது.
      இந்த அவமானம் அவரைப் பித்துப் பிடித்தவராகச் செய்து விட்டது; அவரது உடல் நலத்தையும் பாதித்தது. படுத்த படுக்கையாகி விட்டாராம்!
       ஒரு டிக்கெட்டில்லாப் பயணம் நிகழ்த்திய வீழ்ச்சி!
         குட்டி பின்குறிப்பு : லண்டனில் பல வருஷங்களுக்கு முன்பு ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் ஒரு பிரபல இந்திய நடிகை ஏதோ ஒரு பொருளை (தவறுதலாக?) எடுத்துத் தன் பையில் போட்டு, அகப்பட்டுக் கொண்டார். இப்படிரைட்கொடுப்பதைக்ளெப்டோ மேனியாஎன்கிறார்கள்.

3 comments:

  1. நல்ல பகிர்வு. அந்த நடிகை குறித்து நானும் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் யாருனு தான் மறந்துடுத்து. சாமான்களை எடுத்துப் போட்டுக்கறது க்ளெப்டோமேனியான்னா ரயிலில் டிக்கெட் வாங்காமல் போறது என்ன மேனியா? :) அதுக்கும் ஒரு பெயர் இருக்கணுமே!

    ReplyDelete
  2. ரசித்தேன். அறியாத செய்தி. ஒரு டிக்கெட்டினால் வீழ்ந்த இலக்கியவாதி.. அவமானம் டி.டி.ஆருக்கும், பி.பி.சிக்கும்தான். இவருக்கு இல்லை.

    க்ளெப்டோ மேனியா இல்லாமல், இந்த ஊரில் நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்துவிட்டது. ஒரு சூப்பர் மார்க்கெட்டில், மற்ற பொருட்களை வாங்கும்போது, ஒரு பெர்ஃப்யூமை பேன்ட் பாக்கெட்டில் லவட்டிவிட்டார் ஐ.டியில் வேலை பார்க்கும் ஒருவர். உடனே போலீஸ் வந்து லாக்கப்பில் வைத்துவிட்டது. ஆள் என்ன இன்னும் ஆபீஸ் வரலை என்று, போலீஸ் ஸ்டேஷன்ல செக் பண்ணினா, அங்க இருந்தாரு அந்த ஆளு (இங்கு ஆபீஸ் வரலைனா, மொபைல்ல கான்டாக்ட் பண்ணமுடியலைனா, ஒண்ணு அமெரிக்கன் எம்பஸிக்கு விசா ஸ்டாம்பிங்குக்குப் போயிருப்பார் இல்லைனா போலீஸ் ஸ்டேஷந்தான். இது அந்த ஐ.டி. கன்சல்டன்சி கம்பெனியின் அனுபவம்)

    ReplyDelete
  3. "irukkakoodiya"; "sollakoodiya" - these are new phrases found by politicians. I agree with you!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!