February 26, 2017

பேனா படுத்திய பாடு - பாகம் 2


புதுப் பேனாவை எடுத்து வீட்டுப் பாடம் எழுத ஆரம்பித்தேன்இரண்டு வரிகள் கூட எழுதி இருக்க மாட்டேன்பேனா எழுதவில்லைஎன்ன செய்வது என்று தெரியவில்லை.
அம்மாபேனா எழுதவில்லைகடையில் எழுதிப் பார்த்தேன் சூப்பராக எழுதியது...”

கொஞ்சம் கையை உதறிப் பார்இங்க் இரண்டு மூன்று சொட்டு வந்து விழும்.  அதற்கப்புறம் எழுதும்நிப்பில் இங்க் உலர்ந்து போயிருக்கும்.” என்றாள் அம்மா.
உதறினேன்உதறினேன்கையில் வலி வந்ததே தவிரபேனாவிலிருந்து இங்க் வரவில்லைபார்த்துக் கொண்டிருந்த அம்மா, “முட்டாள்... பேனாவில் இங்க் தீர்ந்து போயிடுத்து...”  என்றாள்.
“நூர் இங்க் போட்டுக் கொடுத்தார் அம்மா.”
 “கொஞ்சம் எழுதறதுக்கு இரண்டு சொட்டு போட்டிருப்பான்வீட்டில் கட்டைப்பேனா இங்க்  இருக்கிறதுஅதைப் போட்டால் பேனா எழுதாது.  போய் சின்ன புட்டி இங்க் வாங்கிக் கொண்டு வா” என்றாள் அம்மா,.
நூர் கடைக்கு ஓடினேன்அவர் ஒரு சின்ன புட்டி இங்க் கொடுத்ததுடன் இன்னொரு இங்க் வில்லையையும் கொடுத்தார்.
ஐயய்யோ   ... வில்லை வேண்டாம்.  அது வில்லை இல்லை ; அது  தொல்லை.  ” என்றேன்
(அந்த வயதிலேயே வார்த்தைகளுடன் விளையாடும் திறமை வெளிப்பட்டதுவிளையும் பயிர்! :)
    வீட்டுக்கு வந்து அம்மாவிடம் கொடுத்தேன்அம்மா, பேனா கழுத்தைக் கழட்டிகவனமாக குழந்தைக்குப் பாலாடையால் பால்  புகட்டுவதுபோல் மையை நிரப்பிலாகவமாகத் திருகிலேசாக இரண்டு உதறு உதறி பேப்பரில் ஒரு கோடு போட்டாள்.
அம்மா... அம்மா... இப்படிக் கொடுநான் எழுதிப் பார்க்கிறேன்.” என்று பிடுங்கிக் கொண்டு எழுதினேன்அடாடா.... அப்படியே வழுக்கிக் கொண்டு போயிற்று.
மறுநாள் பள்ளிக்கூடத்திற்குப் பேனாவை வைத்துக் கொண்டு புறப்பட்டேன்பேனாவின் கிளிப்பை விட என் முகம் பளபளப்பாக மாறி இருந்ததுகாரணம்பேனா தந்த மகிழ்ச்சி
முன்தினம், தான் வாங்கி வந்த பேனாவைக் காட்டி ஜம்பமடித்துக் கொண்டிருந்த கிட்டுவிடம் என் புதுப்பேனாவைக் காட்டத் துடித்துக் கொண்டிருந்தேன்.
ஏய்கிட்டு... இங்கிட்டுப் பாருடாபாத்தியா.. புதுப் பேனாகோல்ட் நிப்...” என்றேன்.
காட்டுடாஅடேடே... நல்லா இருக்கேஎழுதிப் பார்க்கிறேன்.” என்று சொல்லியபடியே மூடியைக் கழட்டினான்.
டேய்என்னடா பேனா இப்படி லீக் ஆகிறது.. விரலெல்லாம் இங்க்.  கிளாஸ் டஸ்டரை எடுடாதுடைச்சிக்கறேன்.” என்றான்.
பேனா லீக் ஆகிறதைப் பார்த்து எனக்கு அழுகையே வந்து விட்டது.  ’அம்மா இங்க் போட்டு அழுத்தமாகத் தான் திருகி மூடி இருப்பாள். பின் ஏன் லீக் ஆகிறது? .. நூர் கடையில் போய்க் கேட்கணும்... ’ என்று என்னையே நான் தேற்றிக் கொண்டேன்.
கிட்டு சொன்னான். “இப்படி பேனாவைக் கழட்டி இங்க் போட்ட காலமெல்லாம் மலையேறி விட்டதுஇப்போது புதுசா வந்திருக்கறது செல்ஃப் பில்லர் பேனாஎன்கிட்ட அதுதான் இருக்கிறது...” என்று.
இப்படி இங்க் போடற பேனா யாரும் வாங்கறதில்லைஅதுதான் உனக்கு எட்டணாவுக்குத் தள்ளி விட்டுட்டார் நூர்என்கிட்ட இருக்கிற ஃபில்லர் பேனா முக்கால் ரூபாய்...” என்று ஜம்பமடித்துக் கொண்டான் கிட்டு.   அவனைக் கடித்துக் குதறி விடலாமா என்று ஆத்திரம் வந்தது.
பேனாவை அப்படியே ஒரு பேப்பரில் நன்றாகச் சுருட்டிபையில் வைத்தேன்பள்ளிக்கூடம் விட்டதும் நேரே நூர்கடைக்குப் போய் பேனாவைக் காண்பித்தேன்பேனாவில் மிச்சமிருந்த இங்க் லீக் ஆகி காகிதத்தில் மாடர்ன் ஓவியம் வரைந்திருந்தது.
என்னங்க நூர்... நேத்துதான் வாங்கிட்டுப் போனேன்லீக் ஆகிறதே பேனா...”
ஆவாதேஇது லீக்-புரூஃப் பேனாஅதனால்தான் எட்டணா விலை.  கொடு,  பாக்கறேன்.” என்றார்பேனாவைக் கொடுத்தேன்.  தினப்பொழுதும் பேனாஇங்க்பேனா ரிப்பேர் என்று செய்து கொண்டிருக்கும் நூர்பாயின் விரல்கள் பளிச்சென்று சுத்தமாக இருந்ததைக் கவனித்தேன்என் விரல்கள் நீலநிற மருதாணி பூசியது போல் இருந்தது.
பேனாவை ஒரு துணியால் துடைத்துவிட்டுபேனாவக் கண்ணுக்கு கிட்டே எடுத்துப் போய் மைக்ராஸ்கோப்பில் பார்ப்பது போல் கூர்ந்து பார்த்தார்.
தம்பிஉங்கம்மா நல்லா ‘டைட்’டாக மூடினாங்கன்னு தானே சொன்னஅதுல வந்ததுதான் தீம்பு.” என்றார்.
தீம்பு என்றால் என்ன என்று எனக்குத் தெரியாதுவாத்தியார் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, “என்னடாபுரிஞ்சுதா?” என்று கேட்கும்போது சுத்தமாகப் புரியா விட்டாலும் புரிந்தது மாதிரித் தலையை ஆட்டுவோம்அதே பாணியில் நூர்பாய் கேட்ட கேள்விக்குத் தலையை ஆட்டினேன்.
இதபாருஇந்த இடத்துக்குக் கீழே என்ன தெரியுதுநல்லாப் பாரு.. அது  கோடு இல்லவிரிசல்பேனாவின் ‘பேரல்’ல விரிசல் வந்துட்டுதுரொம்ப டைட்டாகத் திருகினது தப்புவிரிசல் விட்டுடுத்துஒண்ணும் செய்ய முடியாது...  ஒண்ணும் கவலைப்படாதேஉனக்கு வேற பேனா தர்றேன்.” என்றார்.
நூர்பாய்என்கிட்டே பைசா இல்லையே” என்றேன்.
உன்கிட்ட யார் பைசா கேட்டது..? வாங்கி ஒரு நாள் ஆச்சுவிரிசல் விட்டுட்டுதுநான் பேனா கம்பெனிக்குத்  திருப்பிக் கொடுத்து டுவேன் அவங்க பதிலுக்கு வேற பேனா  கொடுப்பாங்க.  கவலையை  விடு.” என்றார்.
நூர்பாயின் கடை எங்கள் ஊரிலேயே பேர்போன கடையாக இருப்பதன் காரணம் புரிந்தது.
நூர்பாய்...  ஒண்ணு செய்ய முடியுமாஇப்படி பேனாவின் ‘நெக்’கைக் கழட்டி மசியைப் போடறதுக்குப் பதிலா செஃல்ப் ஃபில்லிங்  பேனா கொடுத்துடுங்களேன்அது லீக்கும் ஆகாது.” என்றேன்.
ஒரு நிமிஷம் யோசித்துட்டு, “சரி... அது இன்னும் இரண்டணா விலை கூடுதல்பரவாயில்லைஉனக்காகக் கொடுக்கறேன்யார் கேட்டாலும் பத்தணா என்று சொல்” என்றார்.
அவர் ஒரு பேனாவை எடுத்துக் கொடுத்தார்.
இந்தப் பேனாவினால் ஏற்பட்ட  பல  அனுபவங்களைப் பின்னால்
பார்க்கலாம்.
( எனக்குச் சற்று ஓய்வுத்  தேவைப்படுகிறது.) 

6 comments:

  1. வணக்கம்
    பேனா பற்றி அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் தொடருங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. பழையகாலத்தில் நடந்ததை அசை போடுவது இனிமை. அது காலத்தைக் காட்டும் கண்ணாடியாகவும் அமையும்.

    உங்கள் அனுபவமே படிக்க நல்ல அனுபவமா இருக்கு.

    பொதுவா பழசை அசைபோடும்போடு (போட்டு எழுதும்போது), திரும்ப அந்தக் காலத்திலேயே அமிழ்ந்துவிடுவதால், அந்த லயத்திலிருந்து மீண்டும் இப்போதுள்ள காலத்துக்கு வருவதற்கோ, அல்லது கதை சொல்வதைத் தொடர்வதற்கோ கொஞ்சம் இடைவெளி வரும். அதற்காகத்தான் இந்த ஓய்வோ?

    ReplyDelete
  3. கண் மருத்துவரிடம் போக வேண்டும். கண்ணுக்குள் ஊசி போடணுமாம். அதற்காக இடைவெளி. (ஹூம், ஏதோ ஒரு சாக்கு!)

    ReplyDelete
  4. சிறப்பாக அலசி உள்ளீர்கள்
    பாராட்டுகள்

    ReplyDelete
  5. எனக்குச் சிலசமயம் தோணும். இந்த மருத்துவர்கள், இந்தா, இத்தனை ரூபாய் கொடுத்துவிடு, ஒரு ஊசியும், மாத்திரையும் மருந்தும் தேவையில்லை. உனக்கு சரியாப் போயிடும் என்று சொன்னால் அது பெட்டர்னு. இல்லாட்டா மருத்துவமனை போய் (அது ஒரு வேலை), காத்திருந்து, செக் பண்ணி, அப்புறம் மருந்து மாத்திரைக்கு அல்லாடி, அதை ரெகுலரா எடுத்துண்டு.... இதுவே ரெண்டு சிறுகதை எழுதலாம்போல் கஷ்டம்.

    ReplyDelete
  6. இதை எப்படிப் படிக்காமல் விட்டேன்னு தெரியலை! :) இந்த மாதிரி ஃபில்லருடன் கூடிய பேனாவைத் தான் ஃபவுன்டன் பேனா என்பார்களோ?

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!