February 19, 2017

பேனா... பேனா... பேனா... (முதல் பாகம்)

        சமீபத்தில் என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு பேனா பரிசாக அளித்தார். அதாவது, வேறு வழியின்றி அளித்து விட்டார். என்ன ஆயிற்று ன்றால்,  என்னுடையகமலாவும் நானும்புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுத் தரும்படி அவர் கேட்டார்ர். புத்தகம் கொடுத்த கையோடு அவர் தன் பேனாவையும் கொடுத்தார். நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தபோது அவரது பேனா அனாயசமாகப் பேப்பரில் வழுக்கிச் செல்வதை உணர்ந்தேன்.
சார், உங்கள் பேனா அட்டகாசமாக எழுதுகிறது. இது என்ன பேனா?” என்று கேட்டேன். ‘என்ன பேனாவாக இருந்தால் என்ன..? என்னுடைய அன்பளிப்பாக வைத்துக் கொள்ளுங்கள்என்று சொன்னார். பாதி உண்மையாகவும், பாதி பாசாங்காகவும் வேண்டாம் சார்,, விலை உயர்ந்த பேனா மாதிரி இருக்கிறது. நான் சும்மா சொன்னேன்.” என்றேன்.  (இப்படிச் சொன்னதுதான் சும்மாஎன்பதை  இப்போது ஒப்புக் கொண்டு விடுகிறேன்.)
      நான் ஒரு பேனாக் காதலன்; பித்தன்; அபிமானி. என் காதல் கதையை நாவலாகச் சொல்கிறேன்.

 என் பள்ளியில் ஐந்தாவது வகுப்பு வரை பலகை, பலப்பம்தான். பென்சிலால் எழுதுவதற்குவாய்ப்பே     கிடையாது.
     பள்ளிக்கூடத்தில் பேப்பர், நோட்டுப் புத்தகம் எதுவும் 5-வது வகுப்பு முடியும் வரை கிடையாது.  முதல் ஃபாரம் வந்தபோது நோட்டுப் புத்தகமும், பென்சிலும் கொடுத்தார்கள். அவ்வப்போது ஊக்கு உடைந்ததால் மட்டுமல்ல, பேனாவின் பளபள நிப்பும் கிளிப்பும்  என்னைக் கவர்ந்து   அதன்   மீது தீராத காதலை ஏற்படுத்தி விட்டன.. பள்ளிக் கூடத்தில் பேனாவுக்குத் தடை.   என்ன   காரணம்  சொன்னார்கள் தெரியுமா..? பேனாவில் எழுதினால் கையெழுத்து நன்றாக இருக்காது என்றுதான். ஏதோ சப்பைக்காரணம் என்று நான் அதை கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால், என் ஆசிரியர்கள் பலரின் கையெழுத்து எழுத்தாணியால் எழுதியது போல் இருந்த துன்,லீக்ஆகும் பேனாவாக இருந்தால், வலதுகை பெருவிரல் அடையாளங்க ளுடன்ள அங்கங்கே இருக்கும்.  அசப்பில் பார்த்தால் வீடு விற்பனை (அல்லது வாங்கிய) பத்திரம் போல் இருக்கும்.
அது மட்டுமல்ல, சற்றுச் சிவப்பாக இருந்த என் கணக்கு வாத்தியாரின் கட்டை விரலும், ஆள்காட்டி விரலும்,  பேனாவில் எழுதி எழுதி, நீலம் பாய்ந்த விரல்களாக எப்போதும் காட்சி அளிக்கும். ஒரு டம்ளர் தண்ணிரில் அவர்கள் விரலைப் பத்து நிமிஷம் வைத்திருந்தால் அரை புட்டி பேனா மை ரெடியாகிவிடும் என்று சொல்லலாம். அதனாலோ, வேறு என்ன காரணத்தாலோ அவர் எப்போதும் ஒரு மாதிரியான நீலநிறச் சட்டைதான் அணிந்திருப்பார்.
எப்போது ஆறாம் வகுப்பு (முதல் ஃபாரம்) போவோம் என்று இருந்தோம். போனதும் அப்பாவிடம் நாலணாவோ, எட்டணாவோ (மறந்து விட்டது) வாங்கி, நேரே கடைத்தெரு நூர்தாஜ் கடைக்குச் சென்றேன்.
நல்ல பேனா கொடுங்க’ என்று மிதப்பாகக் கேட்டேன்.
என்ன விலையில் வேணும்..? கழட்டி எடுத்து இங்க் போடற பேனா எட்டணா ஆகும். பணம் வெச்சிருக்கியா..? என்ன கலர்ல வேணும்.?’ என்று கேட்டார்.
எந்தக் கலராக இருந்தாலும் பரவாயில்லை. சரி, நீலக்கலர் பேனா கொடுங்க.’ என்றேன்.
கொடுத்தார். அதன் கிளிப் பளபளாவாக இருந்தது. தங்கப் பேனா என்று  சொல்லிக் கொள்ளலாம் என்று மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டேன்.
அடாடா... எழுதிப் பாக்கணுமே... பேனாவுக்கு இங்க் போட்டுத்தர முடியுமா?’ என்று கேட்டேன்.
தரேன். உனக்கு இனாமா ஒரு இங்க் மாத்திரை தரேன். வீட்டுக்குப் போய் ஒரு சின்ன புட்டியில் போட்டு, கொஞ்சம் தண்ணி விடு. கொஞ்ச நேரத்தில் மாத்திரை கரைந்து இங்க் ஆயிடும்’ என்றார். பேனா வாங்கிய சந்தோஷத்தைவிட இலவச (அதாவது புதுத் தமிழில் விலையில்லா) மாத்திரை கிடைத்தது அதிக சந்தோஷத்தைக் கொடுத்தது.
மாத்திரையைச் சின்னக் காகிதத்தில் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தார். பேனாவை ஜேபியில் குத்திக் கொண்டேன். தங்க மெடலைக் குத்திக்  கொண்டது போல் உற்சாகம் பொங்கியது.
வீட்டுக்குப்போகுமுன் மழை பெய்தது. ‘அச்சமில்லை, அச்சமில்லை... உச்சி மீது மழை பொழியும் போதிலும்...’ என்று பாடிக் கொண்டு வீட்டுக்குப்  போனேன்.பேனா மன்னராகி விட்டதால் ராஜநடை போட்டுக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.
அம்மா, புதுப் பேனா வாங்கி விட்டேன்’ என்று தலையைத் தூக்கி, புருவத்தை உயர்த்தி ஒரு கெத்துடன் ஜேபியிலிருந்து பேனாவை ஸ்டைலாக எடுத்து அம்மாவிடம் நீட்டினேன்.
அம்மா பேனாவை வாங்காமல், ‘என்னடா இது அநியாயம்? இப்படி நீல வண்ணக் கண்ணனாக வந்திருக்கே?’ என்றாள்.

எனக்குப் புரியவில்லை. ‘அம்மா... முதலில் பேனாவைப் பார். சீக்கிரம் கொடுத்து விடு. நான் ஹோம்வொர்க் பண்ணனும்...’ என்றேன்.

அதுசரி. இது என்னடா உன் ஜேபி, சட்டையின் முன் பக்கம் எல்லாம் ஒரே நீல நிறம். இங்க் மாதிரி இருக்கிறது.’
அப்போதுதான் ஜேபியைக் கவனித்தேன். அப்படியே ஒரு கையளவு இங்க் சட்டையில் ஊறி இருந்தது. எப்படி ஆயிற்று இப்படி என்று புரியவில்லை. தீபாவளிக்குப் புதிதாகத் தைத்துக் கொண்ட சட்டை நாசமமாகி விட்டது. பேனா வந்தது, சட்டை போச்சு.
சட்டென்று விடை கிடைத்தது. நூர்தாஜ் பொட்டலம் கட்டிக் கொடுத்தாரே, இங்க் மாத்திரை, மழையில் நனைந்து கரைந்து பேப்பரில் ஊறி, சட்டைப் பையில் ஒரு மாடர்ன் ஆர்ட்டையை வரைந்து விட்டது.

ராஜவம்சத்தினர் ரத்தம் நீலநிறமாக இருக்கும் என்று சொல்வதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. எனக்குத் தெரிந்திருந்தால், “அம்மா, என் ஹார்ட்டில் நீல ரத்தம் ஓடுகிறது. ராஜ வம்சத்தினர் ரத்தம்தான் நீலமாக இருக்கும். நானும் ராஜாதான். மன்னன்தான்... நான் புதுப்பேனா மன்னன்” என்று ஜோக் அடித்திருப்பேன். அதைக் கேட்டு என் அம்மாவும் பதிலுக்கு அடித்திருப்பார் - என் முதுகில்!!
                                                                          
          பாகம் 2 - விரைவில்!

11 comments:

  1. ஆரம்ப கால, பேனா நினைவுகளில் என்னையும் திளைக்க வைத்துவிட்டீர்கள். பேனா மாத்திரை பார்த்ததாக நினைவில்லை. இங்க் தொட்டு எழுதும் காலம் உங்களுக்கு முந்தையதா? பிரில் இங்க்தான் என் நினைவில் இருக்கிறது.

    ReplyDelete
  2. ம்ம்ம்ம், நான் படிக்கும்போதும் சிலேட்டும் குச்சியும் தான். பல்பம், அல்லது பலப்பம் சென்னைத் தமிழ்னு நினைக்கிறேன். நாங்கல்லாம் குச்சினு சொல்வோம். கலர் கலராகக் குச்சிகள் கிடைக்கும் அதில் செங்கல் குச்சி ஒண்ணு உண்டு. நல்லா எழுதும். பரிட்சைனால் கூட கேள்வியைச் சொல்வாங்க, விடையை ஸ்லேட்டில் எழுதணும். வாத்தியார் வந்து ஸ்லேட்டின் ஒரு ஓரத்தில் மதிப்பெண்கள் கொடுப்பார். ஆறாவதில் இருந்து தான் எனக்கும் பேனா. நான் படிச்சதும் ஃப்ர்ஸ்ட் ஃபார்ம் தான். நாங்க தான் ஃபார்முக்குக் கடைசி செட்டும் கூட! எனக்கப்புறமாப் படிச்சவங்க ஸ்டான்டர்ட் ஆயிட்டாங்க! அதே போல் சென்னைப் பல்கலைக் கழகம் மூலமா எஸ் எஸ் எல்சி தேர்வு எழுதினதும் நான் படிச்சப்போத் தான். அதுக்கப்புறமா மதுரைப்பல்கலைக் கழகம் வந்து விட்டது.

    ReplyDelete
  3. இரண்டாம் பாகத்துக்குக் காத்திருக்கேன்.

    ReplyDelete
  4. கல் யானையும் அற்புதம். நம்ம ஊரில் யானைச் சிற்பம் நிஜ யானைபோல் தோற்றம் தருவது வெகு அபூர்வம். ஆனால், நீங்கள் சொல்லவில்லையென்றால் யானையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் போன்றே இருக்கும். அதுவும் காதுகளின் மடிப்பு, முகத்தின், கண்ணருகே உள்ள வரிகள் என்று... எனக்கு யானையின் தலையில் உள்ள முடிகள்கூடத் தெரிகிறது ('நிஜமாகவே இது சிற்பமா? எப்படி முடி எல்லாம் சாத்தியமாயிற்று?)

    ReplyDelete
    Replies
    1. @நெல்லைத் தமிழன், கல்யானை? எங்கே? ஒண்ணும் புரியலை! :)

      Delete
  5. கல் யானையும் அற்புதம். நம்ம ஊரில் யானைச் சிற்பம் நிஜ யானைபோல் தோற்றம் தருவது வெகு அபூர்வம். ஆனால், நீங்கள் சொல்லவில்லையென்றால் யானையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் போன்றே இருக்கும். அதுவும் காதுகளின் மடிப்பு, முகத்தின், கண்ணருகே உள்ள வரிகள் என்று... எனக்கு யானையின் தலையில் உள்ள முடிகள்கூடத் தெரிகிறது ('நிஜமாகவே இது சிற்பமா? எப்படி முடி எல்லாம் சாத்தியமாயிற்று?)

    ReplyDelete
  6. கல் யானையும் அற்புதம். நம்ம ஊரில் யானைச் சிற்பம் நிஜ யானைபோல் தோற்றம் தருவது வெகு அபூர்வம். ஆனால், நீங்கள் சொல்லவில்லையென்றால் யானையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் போன்றே இருக்கும். அதுவும் காதுகளின் மடிப்பு, முகத்தின், கண்ணருகே உள்ள வரிகள் என்று... எனக்கு யானையின் தலையில் உள்ள முடிகள்கூடத் தெரிகிறது ('நிஜமாகவே இது சிற்பமா? எப்படி முடி எல்லாம் சாத்தியமாயிற்று?)

    ReplyDelete
  7. ய்ங்கான்ளை, பின்னூட்டதை ஒட்டியே இருக்கிறது. வலது பக்கம்ப் பாருங்கள்>

    ReplyDelete
    Replies
    1. அட!!!!!!!!!!!!!!!! இதைக் கவனிக்கவே இல்லை! கல்யானை அற்புதம். கல்யானைக்குக் கரும்பு கொடுத்த படலம் நினைவில் வருது.

      Delete
  8. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    நீண்ட நாட்களாக பின்னூட்டம் இட முடியவில்லை. மன்னிக்கவும்.

    இங்க் பேனா இன்றைய தலைமுறையினர் அறிய மாட்டார்கள். இப்போதெல்லாம் யூஸ் அன் த்ரோ ஆகி விட்டது. பால் பாயிண்ட் பேனாவிற்கே ரீபில் போடுவதில்லை.

    ஆனாலும் இங்க் பேனாவை மறக்க முடியவில்லை.

    பார்க்கர் பேனா, பைலட் பேனா என்று சொல்லும்போதே ஒரு
    பெருமிதம் வரும்.

    ொபைலில் பார்ப்பதால் என்னாலும் யானையைப் பார்க்க முடியவில்லை.

    அன்புடன்

    தி

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  9. அந்தக் காலத்து WRITER பேனாவின் மகிமையே மகிமை!
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!