October 07, 2016

நேருஜிக்குப் பிடித்த கவிஞர்

 ராபர்ட் ஃப்ராஸ்ட்
அமெரிக்காவின் சிறந்த கவிஞர்களில் ஒருவர் ராபர்ட் ஃப்ராஸ்ட். அவரை இந்தியாவில் பிரபலமாக்கிய பெருமை ஜவஹர்லால் நேருவுக்கு உரியது.
         மே, 21 1964 அன்று நேருஜி காலமானார். பகல் இரண்டு மணிக்கு அவர் காலமான தகவல் வந்ததுடன் அலுவலகங்களை இரண்டு மணிக்கு மூடப்போவதாக அறிவிப்பும் வந்தது. அஞ்சலி செலுத்துவதற்காக அவரது தீன்மூர்த்தி இல்லத்துக்குப் போனேன். கூட்டம் சொல்லி மாளாது. கதவுகளை மூடி யிருந்தார்கள். பொதுமக்கள் அஞ்சலி செலுத்த நுழைவாயில் அருகிலுள்ள கூடத்தில் உடல் வைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.
      என் வீடு மிக அருகில் இருந்ததால் வீட்டிற்குப் போய்விடலாம்; இரவு 1 மணி 2 மணிக்குத் திரும்பி வந்தால் கூட்டம் குறைந்திருக்கும், அப்போது அஞ்சலி செலுத்தலாம் என்று எண்ணி வீட்டுக்குப் போய்விட்டேன்.
     இரவு 2 மணிக்குச் சென்றோம்.. கூட்டம் அதிகம் இல்லை. பத்து நிமிஷத்தில் உள்ளே போய்விட்டோம். நேருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தோம். அவருடைய அலுவலக அறையைப் பார்க்கவேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. யாரையும் வேறு எங்கும் போக விடவில்லை.
            நேரு இறந்த சில நாட்களுக்குள்ளாகவே ஒரு தகவல் பத்திரிகைகளில் வந்தது. அவர் தனது மேஜை மேலிருந்த டயரியில் ஒரு ஆங்கிலக் கவிதையின் நான்கு வரிகளை எழுதி வைத்திருந்ததைப் பத்திரிகைகள் வெளியிட்டன.
  அந்த வரிகள், ராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற அமெரிக்கக் கவிஞர் எழுதிய கவிதையிலிருந்து எடுக்கப்பட்டவை.
அவை:
  The woods are lovely, dark and deep,      But I have promises to keep,   

  And miles to go before I sleep,   

  And miles to go before I sleep.

காலமாவதற்கு முன் தான்  செய்ய வேண்டிய பணிகளை   நினைத்து, நேருவும் இந்த வரிகளை எழுதியிருக்கக்கூடும். அதன் பிறகு ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் பெயர் மேலும் பிரபலமாகிவிட்டது.
    
   தீன்மூர்த்தி இல்லத்தை சில நாள் கழித்துப் போய்ப் பார்த்தேன். நேருவின் மேஜையின் மேலிருந்த டயரியில், அந்த கவிதையிலிருந்து நான்கு வரிகளை எடுத்து, நேரு கைப்பட  எழுதிய வரிகள் இருந்தன.
                                            *
எல்லாக் கவிஞர்களையும் போல பூ, மரம், வானம், மேகம் என்று கவிதைகளை இவரும் எழுதி இருக்கிறார் என்றுதான் சமீப காலம் வரை நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

   சமீபத்தில் அமெரிக்க கல்லூரி ஒன்றின் தலைவர்  Charles W Cole எழுதிய ‘ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் ரகசியம்’  என்ற கட்டுரையைப் படித்த பிறகு, மரங்கள் மீது ராபர்ட் ஃப்ராஸ்ட் வைத்திருந்த ஆழ்ந்த காதலை உணர்ந்தேன்.
அந்தக் கட்டுரையைத் தமிழ்ப்படுத்தித் தருகிறேன்.
                                   *                             *
ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் ரகசியம். 
ராபர்ட் ஃப்ராஸ்ட் கல்லூரி மாணவனாக இருந்தபோது, அவருடைய சக மாணாக்கர்கள் அவரின் ஒரு நடவடிக்கையைக் கண்டு கவலைப்பட ஆரம்பித்தார்கள். காரணம், அவர் அடிக்கடி கல்லூரிக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் நீண்ட தூரம் தனியாக உலாவிவிட்டு வருவார்,
            ஒரு நாள் சில சீனியர் மாணவர்கள் இது பற்றி அவரிடம் பேச முடிவெடுத்தார்கள். அவர் உலாவிவிட்டு வந்ததும் அவரைச் சந்தித்தார்கள். சிறிது நேரம் பொதுவாகப் பேசிவிட்டு, விஷயத்திற்கு வந்தார்கள். “ஃப்ராஸ்ட், நீ தனியாக இந்தக் காட்டுப்பகுதியில் சென்று என்ன செய்கிறாய்?” என்று கேட்டார்கள்.
            மிகவும் ஜூனியரான ஃப்ராஸ்ட் அவர்களைப் பார்த்து சொன்னாராம்: Gnaw Bark.அவ்வளவுதான்.
 சீனியர்கள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
(Gnaw Bark. என்றால்  ’மரப்பட்டைகளைக் கொரித்தல்’  என்று பொருள். எரிச்சலுடன் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர்  சொன்ன இரண்டு வார்த்தைகளில்  ஏதோ அர்த்தம் பொதிந்திருக்கிறது. அது என்ன என்று  பலரைக் கேட்டேன். யாருக்கும் தெரியவில்லை!)
            உண்மையில் ஃப்ராஸ்ட் அந்த வனப்பகுதியில் செய்தது தியானம். இப்போதும் நீண்ட நேரம் உலாவச் செல்கிறார்.; அப்படிச் செல்லும்போது தியானத்தில் ஈடுபடுகிறார். இப்படிச் செய்யும் திறமையே ஓரளவு அவரை அமெரிக்காவின் மிகப் பெரிய கவிஞராக ஆக்கியுள்ளது.
            தியானத்தில் ஒருவகை உண்டு. அலட்டல் இல்லாமல் அமைதியாக எவ்வித சலனமுமின்றி தனக்குள்ளேயே தான் ஆழ்ந்துவிடுவது. இது ஒரு சிந்தனை முறை. நம்மில் பெரும்பாலோருக்கு சிந்தனை என்பது எவ்வித நோக்குமில்லாத அலைபாயும் மனதாகத்தான் உள்ளது. ஒரு திரைப்படம் தயாரிக்கப்படும்போது எடுத்த காட்சிகளை செப்பனிடாமல் அப்படியே நம் பல்வேறு உள்மனதில் தோன்றும் வசனங்களுடன் பார்ப்பது போன்றது.
            ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் தியானம் அமைதியானது அல்ல; அர்த்தமற்றதும் அல்ல. அது நோக்கமும் காரியவாதமும் கொண்டது. ஒரு வார்த்தையை அல்லது ஒரு கருத்தை எடுத்துத் தன் சிந்தனையில் நிறுத்தி, அதைப் பல்வேறு கோணங்களில் பார்த்து, உள்ளும் புறமுமாகப் புரட்டுவதுடன் அதை உள்ளே நுழைந்து பார்க்கிறார். அப்படிச் செய்வதால், அதில் புதிய அம்சங்கள், புதிய அர்த்தங்கள், புதிய அழகுகள் இருப்பதைக் காண்கிறார். சில சமயம் ஓய்ந்து , நைந்துபோன வாசகங்களிலும் அழகைக் காண்கிறார்.
            இப்படி தியானம் செய்வதால் மனிதர்களை ஆழ்ந்து பார்க்க முடிகிறது. அத்துடன் நாம் வாழும் உலகின் நியதியையும் கூட.
            இதை நாம் ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது? ஏதாவது ஒரு வார்த்தையையோ கருத்தையோ மனதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளச் செய்யுங்கள். ஒரு நாளில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் இப்படிப் பயனளிக்கக்கூடிய தியானத்தில் ஈடுபடக் கற்றுக்கொண்டால் நாம், நம்முடன் வாழ பிறர் விரும்பும் மனிதராக ஆவோம். மேலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் உதவிபுரிய விழையும் மனமும் பெறுவோம். பலரைப் புரிந்து கொள்ளும் வித்தையை நாம் கற்றுணர்வோம். இந்த உணர்வுதான் மற்றவர் மீது பரிவுகொள்ளும் தன்மையை ஏற்படுத்தும்.. 
      *   * பதவி  ஏற்பு விழாவில், ஃப்ராஸ்ட்  தான் இயற்றிய கவிதையை படிக்க ஆரம்பித்தார். விழா திறந்த வெளியில் நடந்தது.   பளீரென்ற சூரிய ஒளியின் காரணத்தால்  அவருக்குக் கண் மிகவும் கூசியது. ( அவருக்கு அப்போது வயது 86 ஆகி இருந்தது.) 
துணை அதிபராக தேர்வாகி இருந்த  L.B. ஜான்ஸன் எழுந்து வந்து, தன்னுடய தொப்பியால் வெய்யிலை சற்று  மறைத்தார். 
 ஃப்ராஸ்ட், ”வேண்டாம்:” என்று  அவரிடம்  சொல்லி  விட்டு தன்னுடைய நினவில் முழுமையாக  இருந்த வேறொரு கவிதையை (THE GIFT OUTRIGHT) ஒரு வார்த்தைகூட விடாமல் சொன்னார்.  

கென்னடியின் பதவி ஏற்பு விழாவிற்காக என்றே   விசேஷமாக அவை இயற்றிய   (ஆனால் படிக்காத!)  DEDICATION கவிதை பற்றி செய்திதான்  பத்திரிகைகளில் வந்தது.

          சுமார் நாற்பது வருஷம் கழித்து 2006-ம் ஆண்டு பாஸ்டன் நகரில் உள்ள கென்னடி நினைவு புத்தகசாலைக்கு ஒரு கவர் தபாலில் வந்து. அதில் ஃப்ராஸ்ட் தன் சொந்தக் கையெழுத்தில் எழுதிய இந்த  DEDICATION கவிதை இருந்தது. அதில் ஒரு சிறு குறிப்பும் இருந்தது.  To John F Kennedy, At his inauguration to be President of this country. January 20th, 1961. With the Heart of the World.
அது மட்டுமல்ல, அந்தக் கவிதையின் அருகிலேயே பென்சிலால், பெண் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு குறிப்பையும் லைப்ரரியன் பார்த்தார். 
அதை எழுதியவர்: ஜேக்வலின் கென்னடி. “இந்தக் கவிதைதான் அதிபர் கென்னடியின் அலுவலக அறையில், அவர் பதவி ஏற்ற மூன்று தினங்களுக்குள் மாட்டப்பட்டது.  முதன்முதலில் அதிபரின் அறையில் மாட்டப்பட்ட பொருள் இது தான்” என்று எழுதியிருந்தது. 
அத்துடன் கென்னடிக்கும் ஒரு குறிப்பும் ஜேக்வலின் எழுதியிருந்தார், அது: “For Jack, January 21, 1961. First thing I had framed to put in your office – first thing to be hung there”
          *
    பி.கு: 1998ல்- அமெரிக்காவின் மிகச் சிறந்த கவிதை எது என்பதை அறிய ஒரு கருத்துக் கணிப்பு நடந்தது,    அமெரிக்காவின் ஆஸ்தான கவிஞராக இருந்த ராபர்ட் பின்ஸ்கியின் விருப்பத்தின் பேரில் நடந்த கருத்துக் கணிப்பில், ஃப்ராஸ்ட் எழுதிய STOPPING BY THE WOODS   முதல் இடத்தைப் பிடித்தது. (இந்தக் கவிதையில் உள்ள சில வரிகளைத்தான் தனது மேஜை டைரியில் நேரு எழுதி வைத்திருந்தார்,)  மூன்றாவது இடத்தையும்  அவரது மற்றொரு கவிதை பிடித்து விட்டது.

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியதுசகோதரி திருமதி எஸ்ஷோபனா.  அவருக்கு என் நன்றி!
==========================
கென்னடி பதவி ஏற்பு நிகழ்ச்சியில்.
 படிப்பதற்காக ஃப்ராஸ்ட் எழுதிய கவிதை
Dedication
Summoning artists to participate
In the august occasions of the state
Seems something artists ought to celebrate.
Today is for my cause a day of days.
And his be poetry's old-fashioned praise
Who was the first to think of such a thing.
This verse that in acknowledgement I bring
Goes back to the beginning of the end
Of what had been for centuries the trend;
A turning point in modern history.
Colonial had been the thing to be
As long as the great issue was to see
What country'd be the one to dominate
By character, by tongue, by native trait,
The new world Christopher Columbus found.
The French, the Spanish, and the Dutch were downed
And counted out. Heroic deeds were done.
Elizabeth the First and England won.
Now came on a new order of the ages
That in the Latin of our founding sages
(Is it not written on the dollar bill
We carry in our purse and pocket still?)
God nodded his approval of as good.
So much those heroes knew and understood,
I mean the great four, Washington,
John Adams, Jefferson, and Madison
So much they saw as consecrated seers
They must have seen ahead what not appears,
They would bring empires down about our ears
And by the example of our Declaration
Make everybody want to be a nation.
And this is no aristocratic joke
At the expense of negligible folk.
We see how seriously the races swarm
In their attempts at sovereignty and form.
They are our wards we think to some extent
For the time being and with their consent,
To teach them how Democracy is meant.
"New order of the ages" did they say?
If it looks none too orderly today,
'Tis a confusion it was ours to start
So in it have to take courageous part.
No one of honest feeling would approve
A ruler who pretended not to love
A turbulence he had the better of.
Everyone knows the glory of the twain
Who gave America the aeroplane
To ride the whirlwind and the hurricane.
Some poor fool has been saying in his heart
Glory is out of date in life and art.
Our venture in revolution and outlawry
Has justified itself in freedom's story
Right down to now in glory upon glory.
Come fresh from an election like the last,
The greatest vote a people ever cast,
So close yet sure to be abided by,
It is no miracle our mood is high.
Courage is in the air in bracing whiffs
Better than all the stalemate an's and ifs.
There was the book of profile tales declaring
For the emboldened politicians daring
To break with followers when in the wrong,
A healthy independence of the throng,
A democratic form of right devine
To rule first answerable to high design.
There is a call to life a little sterner,
And braver for the earner, learner, yearner.
Less criticism of the field and court
And more preoccupation with the sport.
It makes the prophet in us all presage
The glory of a next Augustan age
Of a power leading from its strength and pride,
Of young amibition eager to be tried,
Firm in our free beliefs without dismay,
In any game the nations want to play.
A golden age of poetry and power
Of which this noonday's the beginning hour.

14 comments:

  1. very interesting to read. thanks for this post

    ReplyDelete
  2. Informative! Are Frost's poetry easily understandable as the quoted lines? Another thing in the article which drew my attention was VP Johnson trying to protect Frost from the glare of the Sun! What a gesture and what a respect to the poet!

    ReplyDelete
  3. அருமையான எண்ணங்கள்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. I will publish both the poems in a day or two. -Kadugu

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா இருந்துச்சு. இது மாதிரிப் படிக்க ரசனையான ஆனால் அறிவதற்கு அரிதான அனுபவம் மற்றும் அறிமுகங்களை இன்னும் அடிக்கடி தர, விரைவில் முழு வலிமையையும் பெறவேண்டும்... பெறுவீர்கள்

    ReplyDelete
  7. மிக்க நன்றி.
    உங்கள் பின்னூட்டம் எனக்கு ஊக்க மருந்து மாதிரி.
    (’தூக்க’ என்றூ தட்டச்சு ஆகிவிட்டது. நல்ல காலம், தப்பு கண்ணில் பட்ட்டது. திருத்தி விட்டேன்!
    - கடுகு

    ReplyDelete
  8. கடுகு சார்... இரண்டுமே எனக்குப் பாராட்டுதான் (ஊக்க, தூக்க). இரண்டுமே நம்ம நல்ல நிம்மியதியான வாழ்க்கைக்கு மிகவும் வேண்டியதுதானே...

    ReplyDelete
  9. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    அடேயப்பா, ஒரு பதிவில் எவ்வளவு விஷயங்கள்!!!

    நேரு அவர்களின் அறைக்கே சென்று, அவரது கையெழுத்தில் எழுதப்பட்ட வரிகளைப் பார்த்திருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, பிரமிப்பாக இருக்கிறது.

    அந்த கவிதை வரிகளை நிறைய பேர் சொல்லி, கேட்டதுண்டு. ஆனால், அதை எழுதிய கவிஞரைப் பற்றி, இவ்வளவு விவரங்கள் தெரிந்து கொண்டது இப்போதுதான்.

    தியானத்தை பற்றிய விளக்கமும் அருமை.

    திரு கென்னடியும் திருமதி கென்னடியும் தங்கள் குழந்தையுடன் இருக்கும், ஃப்ரேம் செய்யப்பட்ட புகைப்படம் - அந்நாட்களில் நிறைய வீடுகளில் மாட்டப் பட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

    புத்தக சாலைக்கு தபாலில் வந்த கவர் - அனுப்பியது யாராக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.

    நன்றி,

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. வெள்ளை மாளிகயில் அல்மாரிகளை யாரோ சுத்தம் செய்யும்போது அகப்பட்டிருக்கும். பாஸ்டனில் கென்னடி நினவு நூலகம் மற்று ம்யூசியம் இருக்கிறதே அதற்கு அனுப்பிவிடலாம் என்று அதிபர் மாளிகை அதிகாரிகள் நினைத்திருப்பார்கள்

    ReplyDelete
  12. 1963 ஜனவரி- பிப்ரவரி வாக்கில் பிரதமர் அறைக்கு, அலுவலகம் நேரம் முடிந்த பிறகு சென்று பார்த்திருக்கிறேன். அங்கு பணிபுரியும் ஒரு உதவியாளர் தயவால்! - கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!