October 26, 2016

THREE Ks

 துணுக்குத் தோரணம்
K -1: குருஷ்சேவ் வந்தபோது
அமெரிக்காவில் நியூஜெர்சியில் உள்ள 150 வருட பழைய கல்லூரியின் நூல் நிலையத்திற்கு இரண்டு வருஷத்திரற்கு முன்பு முதல் முறையாகப் போனேன்.  நூல்நிலையத்தில் புத்தகங்களை இங்கேயே படிக்கலாம்; ஆனால் வீட்டிற்கு எடுத்துப் போக முடியாது” என்றார்கள்.  

 அது பிரம்மாண்டமான புத்தகசாலை. முதல் நாள் ஒவ்வொரு மாடியாகப் போய், ஷெல்ஃப்களை எல்லாம் ஆசையுடன் தழுவியபடியே, என்னென்ன புத்தகங்கள் உள்ளன என்று உத்தேசமாகப் பார்க்க ஆரம்பித்தேன். சில புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்த்துவிட்டு திரும்ப வைத்துவிட்டேன். சில புத்தகங்கள் இருக்கும் ஷெல்ஃப் எண், call number போன்ற விவரங்களைக் குறித்துக் கொண்டேன்.
   சுமார் மூன்று மணி நேரம் பார்த்துவிட்டு (கால் ஓய்ந்துவிட்டதால்) வீட்டிற்குத் திரும்ப லிஃப்டை நோக்கி வந்தேன். அப்போது ஒரு ஷெல்ஃபில் ஒரு புத்தகம் என் கவனத்தை ஈர்த்தது. அதை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். புரட்டிய பக்கத்தில் “குருஷ்சேவ் வந்தபோது” என்கிற மாதிரி தலைப்பில் குட்டிக் கட்டுரை இருந்தது. அதை விரைவாகப் படித்தேன்.
            குருஷ்சேவ் முதன்முதலாக அமெரிக்காவிற்கு விஜயம் செய்தபோது நடந்த நிகழ்ச்சி. அவர் முதலில் வந்தது சான்ஃபிரான்சிஸ்கோவிற்கு.  அங்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹால் கொள்ளாத அளவுக்குப் பத்திரிகையாளர்கள் திரண்டு விட்டார்கள். பலருக்கு  உட்கார இடம் கிடைக்கவில்லை.  ஒரே சள சள சப்தம். குருஷ்சேவ் வருகைக்குக் காத்திருந்தனர். ஆனால் அதுவரை பேசாமல், வம்பளக்காமல் இருக்க முடியுமா?
      
      திடீரென்று குருஷ்சேவ் மேடைக்கு வந்தார்-சில அமெரிக்க அதிகாரிகளுடன். சட்டென்று நிசப்தம். அப்படியே   சுவிட்சால் அணைத்ததுபோல் கப் சிப் ஆகிவிட்டதுசப்தம் அடங்கிய கணம், ஒருத்தர், பக்கத்தில் இருந்த நிருபரைக் கடிந்துகொண்டது சபை முழுவதும் கேட்டது. அவர் சற்றுக் கடுமையான குரலில் “ஏய்.. IDIOT, DONT TALK. KEEP YOUR MOUTH SHUT” என்று சொன்னது எல்லாருக்கும் கேட்டது. எல்லாருக்கும் இது பெரிய ஷாக் ஆகி விட்ட து!

            இந்த சம்பவத்தை, ஒரு நிருபர் தன் பத்திரிகை அனுபவங்களைத் திரட்டி எழுதிய புத்தகத்தில் படித்தேன் (என்பது நினைவு!). பின்னால் அந்தப் புத்தகத்தைப் படித்துக்கொள்ளலாம் என்று எண்ணி,  அது இருந்த ஷெல்ஃபை தோராயமாக ஞாபகம் வைத்துக்கொண்டு வீடு திரும்பினேன்.
            அதற்குப் பிறகு சுமார் இருபது தடவையாவது அந்த நூல்நிலையத் திற்குப்  போயிருப்பேன். அந்தப் புத்தகத்தை எவ்வளவு தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இன்னும் பல சுவாரஸ்யமான துணுக்குகள் கிடைத்திருக்கும்.

 பின்குறிப்பு: இந்தக் கட்டுரையை சுமார் ஆறு மாதத்திற்கு முன்பு எழுதினேன்அந்தப் புத்கத்தைத்  தேடி எடுத்து, 'ஆதாரம்: இன்ன புத்தகம்' என்ற குறிப்பு இல்லாமல் போடத் தயக்கமாக இருந்து. சமீபத்தில் மீண்டும் நூல் நிலயத்திற்குப் படையெடுத்தேன்.  THE  CATHOLIC DIGEST OF WIT AND HUMOR  என்ற புத்தகம் கண்ணில் பட்டது. 1956-ல் பிரசுரமானது.  THE  CATHOLIC DIGEST பத்திரிகையில் வந்த  பல கட்டுரைகளைப் போட்டிருந்தார்கள். புரட்டிப் பார்த்தேன். அங்கிங்கு என்று நகைச்சுவைத் துணுக்குகள் தென்பட்டனஅதை நூல் நிலயத்திலிருந்து எடுத்து வந்தேன்.  வீட்டுக்கு வந்து நிதானமாகப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்ஒரு இடத்தில் இந்தத் துணுக்கு இருந்தது. எனக்கு மகிழ்ச்சியான அதிர்ச்சி!
அதை ஸ்கேன் பண்ணி இங்கு போட்டிருக்கிறேன்.

K-2: கென்னடி: போடமாட்டேன் கையெழுத்து
அமெரிக்க அதிபராக இருந்த கென்னடி, ஒரு பத்திரிகை நிருபருக்குக் கடிதம் எழுதினார்வேண்டு மென்றே அந்தக் அந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போடாமல் அனுப்பினார்ஏன்அதை அந்தக் கடித்திலேயே எழுதிவிட்டார்







சொஞ்சம் ஃப்ளாஷ்பேக்: ‘நியூ யார்க் போஸ்ட்தினசரியின் நிருபராக இருந்த லியோனார்ட் லயான்ஸ், அமெரிக்க அதிபர்களிடம் நேரடித் தொடர்பு வைத்துக் கொள்ளும் அளவு பிரபலம் ஆனவர்.
 அவர் ஒரு நாள் நியூயார்க் கடைவீதியில் சென்று கொண்டிருக்கும்போதுஒரு கடையில் சில அமெரிக்க அதிபர்களின் கையெழுத்தை (ஆட்டோகிராஃப்விலைக்கு வைத்திருந்ததைப் பார்த்தார்அதில் கென்னடியின்
கையுழுத்தும் இருந்தது
 இதை அதிபர் கென்னடிக்கு ஒரு கடிதம் எழுதித் தெரிவித்தார்.  ஜார்ஜ் வாஷிங்டனின் கையெழுத்தின் விலை 175 டாலர்யுலிஸிஸ் க்ராண்ட் 55 டாலர்தியோடர் ரூஸ்வெல்ட் 67.50 டாலர்கென்னடி-75 டாலர்என்று விலை விவரங்களையும் எழுதி இருந்தார்.
இந்தக் கடிதத்திற்குக் கென்னடி பதில் எழுதினார்.
அன்புள்ள லியோனார்ட்
கென்னடி கையெழுத்தின் மார்க்கெட் மதிப்பு பற்றி நீங்கள்  
கடிதம் எழுதியதைப் பாராட்டுகிறேன்இன்றைய சமயம்என் கையெழுத்தின் மதிப்பு இவ்வளவு அதிகமாக இருப்பதை என்னால் நம்பவே முடியவில்லைமார்க்கெட்டில் என் கையெழுத்தின் விலை  குறையாமல் இருப்பதற்காக  இந்தக் கடிதத்தில் நான்  கையெழுத்திடப் போவதில்லை.”
அதன்படியே  கையெழுத்துப் போடாமல் அனுப்பிவிட்டார்!
கடிதத்தைப் பெற்றுக் கொன்ட லியோனார்ட்அதிபருக்குக் கடிதம் எழுதினார்:  
உங்கள் கடிதத்தைப் பிரசுரிக்க விரும்புகிறேன்அதற்கு உங்கள் அனுமதி தேவை.”
லியோனார்டின்  கடிதத்திற்கு  கென்னடியின் செயலர் பதில் எழுதினார்.
“ அன்புள்ள லியோனார்ட்அதிபரின் கடிதத்தைப் பிரசுரிக்க  அனுமதி கேட்ட தங்கள்  அக்டோபர் 16ம் தேதி கடிதம் கிடைத்ததுஅதிபரின் அனுமதி இதன் மூலம் தரப்படுகிறது.
உங்களுக்குப் பதில் எழுதிதான் கையெழுத்திடுவதைத் தவிர்க்க என்னை எழுதச் சொன்னார்!” – அன்புடன் Pierre Salinger, Press Secretary to the President.

 K-3:  ’கடுகு’க்குக் கிடைத்தது
          அமெரிக்காவில் எனக்குப் பிடித்தது ஒன்றே ஒன்று. இங்கு வருஷம் பூராவும் பெரிதும் சிறிதுமாக பழைய புத்தக பஜார்கள் இருந்துகொண்டே இருக்கிறது. (பார்க்க: www.booksalefinder.com)          
ஒரு சமயம் என் வீட்டருகே இருந்த (அருகே என்றால் 35 மைல் தூரத்தில்) உள்ள WAYNE என்ற லைப்ரரியின் ‘புக் சேலு’க்குப் போனேன். ஒரு புத்தக சாலை மாதிரி இருந்தது. சாதாரண புத்தகம் 50 சென்ட்பைண்ட் புத்தகம் ஒரு டாலர் என்ற விலையில் ஏராளமான புத்தகங்கள் துறைவாரியாக ஷெல்ஃப்களில் வைத்திருந்தார்கள். அதில் “The Great American Bathroom Book”  என்று இரண்டு வால்யூம்கள் இருந்தன.    கிட்டதட்ட  600 பக்கம்.  PAPERBACK. 
600பக்கம். PAPERBACK. ஏராளமான புத்தகங்களின் சுருக்கங்களும் பொன்மொழிகளும் இருந்தன. 50 சென்ட் வீதம் இரண்டையும் வாங்கி வந்தேன். சில நாவல்களின் சுருக்கங்களை (எல்லாம் இரண்டு பக்கங்கள்தான்) படித்தேன். அப்போது “இது 3 வால்யூம் புத்தகம்” என்று அச்சிடப்பட்டிருந்தது தற்செயலாகக் கண்ணில் பட்டது. நான் வாங்கி வந்தவை வால்யூம்-1 மற்றும் வால்யூம்-2. எனக்கு மூன்றாவது வால்யூமையும் எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென்ற வெறி உண்டாயிற்று. தனியாக மூன்றாவது வால்யூம் யாரும் விற்க மாட்டார்கள் என்று தோன்றியதால் அதிகம் முயற்சி செய்யவில்லை. இருந்தாலும் அதற்குப்பின் எந்த ‘புக் சேல் போனாலும் இந்தப் புத்தகத்தைத் தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். எங்கும் கிடைக்கவில்லை. ஆனால் நான் நம்பிக்கை இழக்கவில்லை.
     சுமார் ஆறு மாதம் ஓடியிருக்கும். Morristown என்ற ஊரில் புக் சேல் இருந்தது. (என் வீட்டிலிருந்து தெற்கே 15 மைல் தூரத்தில் இந்த ஊர்.) அங்கு முதல் முறையாகச் சென்றேன். அங்கு வாரத்தில் இரண்டு நாட்கள் book sale. பெரிய அறையில் ஒழுங்காகப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. நேரே HUMOUR என்று போர்டு போட்டிருந்த ஷெல்ஃபை நோக்கிப் போனேன். 
அந்த ஷெல்ஃபை ஒட்டி ESSAYS என்று போர்டு இருந்தது. சும்மா அதனருகே கண்ணோட்டம் விட்டபடியே போனேன். ஆ..என்ன இது...என் கண்களையே நம்பமுடியவில்லை. “The Great American Bathroom Book  VOL III” என்ற தலையணைப் புத்தகம் “வணக்கம். வா. உனக்காகக் காத்திருக்கிறேன்.” என்று வரவேற்பதுபோல் எனக்குத் தோன்றியது. ஆஹா...என்ன அதிர்ஷ்டம்!  மூன்றாவது வால்யூமை அப்படியே அள்ளி அணைத்துக்            கொண்டேன்.
      (முதல் இரண்டு பாகங்கள் அங்கு இல்லை  இந்த மூன்றாவது பாகம்  மட்டும் எனக்காக யார் கொண்டுவந்து வைத்தார்கள்?)
 ஆறு மாத தவத்தின் பலன் !!!

முக்கிய குறிப்புஇந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியதுசகோதரி திருமதி எஸ்ஷோபனா.  அவருக்கு என் நன்றி!

11 comments:

  1. Wherever you go and whatever you want, luck always favours you!! Luck favours the seeker!

    ReplyDelete
  2. உங்கள் இடுகைகள் ரொம்ப சுவாரசியம். புத்தகங்களும் தன்னை அள்ளி அணைத்துக்கொள்ளும் வாசகர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும், குரு நல்ல சீடனை எதிர்பார்த்துத் தவம் இருப்பதுபோல. ஒரே கட்டுரை, அதிசய நிகழ்வு, அனுபவம், நகைச்சுவை ஆகிய தலைப்புகளில் அடங்கக்கூடியதாக இந்த இடுகை உள்ளது.

    ReplyDelete
  3. Vagaries experience in selecting books in all 3Ks is thrilling .Superb,sir

    ReplyDelete
  4. நன்றி. உங்கள் பாராட்டுகள், பின்னால் நான் நல்ல எழுத்தாளனாக உருவாக வழிவகுக்கும். - கடுகு

    ReplyDelete
    Replies
    1. Ithilum nagaichuvaiyaa!! Ungalai onrum solla mudiyaathu, athu kuudap piranthathu!

      Delete
  5. Godavari Sri:
    Thanks. There is tpyo. 'Various' has been typed as 'Vagaries' --K

    ReplyDelete
  6. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  7. Dear Sir, I remember reading a post where you had mentioned about US based online sellers who sells books for as low as few cents and some of them who deliver books even to India. I have been trying to locate that post, but unable to. Can you please point me to that post? The good thing is that I ended up reading most of your posts a second time 😄 . Thanks...

    ReplyDelete
  8. Dear Sir,
    Books: You may google betterwordbooks.com
    You may also look for Thrift books. Half Price books. Alibiris books.

    PS:You have not given your email ID nor name. As a rule, I do not publish nor reply Anonymous letters.

    ReplyDelete
  9. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    புத்தகங்களை தேடித் தேடி படித்து, அதில் உள்ள சுவையான விஷயங்களை, சுவாரசியமாக பதிவிட்டு, மலைக்க வைக்கிறீர்கள்.

    NHM WRITER சில நாட்களாக வேலை செய்யவில்லை. சரி செய்த பின் தாமதமாக பதி(லி)விடுகிறேன்.


    நன்றி.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  10. மிக்க நன்றி. கென்னெடி, குருஷேவ் சார்பாகவும்! :) - கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!