August 13, 2013

WORD PLAY -வார்த்தை விளையாட்டு

 அன்புடையீர், 
சிலர் அனுப்பிய பின்னூட்டங்கள் எப்படியோ மாயமாய்ப்   போய்விட்டன. அவர்கள் அன்புடன் மறுபடியும் அனுப்பினால். பிரசுரிக்கிறேன்.
==================================
எலிஸபெத் ராணி
சமீபத்தில் எலிஸபெத் அரசிக்குக் கொள்ளு பேரன் பிறந்த சமயம், அது தொடர்பான ஒரு துணுக்கைப் பதிவில் போடலாம் என்று எண்ணினேன். ஆனால் வேறு பதிவுகள் கியூவில்  முந்திக் கொண்டதால் போடவில்லை.
உடனே போடாததும் ஒரு விதத்தில்  நல்லதாகப் போயிற்று.

FLASHBACK:  1964-ல் ராணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ( அந்தக் குழந்தை தான்  எட்வர்ட்.) அந்தக் குழந்தை பிறந்தபோது லண்டன் டெய்லி மெயில் தினசரி குழந்தையின் படத்தை வெளியிட்டது.  குழந்தை அழுது கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம். படத்திற்கு மெயில் போட்ட தலைப்பு”  HIS CRYNESS!  (HIS ROYAL CRYNESS? - எது  சரி என்று  ஞாபகம் இல்லை.)
இந்த வித்தியாசமான WORDPLAY - யை நான் தினமணி கதிரில் துணுக்காக எழுதினேன்.
*               *                *
சமீபத்தில் அமுல் விளம்பரங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன், ஏர்- இந்தியா விளம்பரங்களைப் போல் நகைச்சுவையுடன் அவை இருக்கும்.(யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் விளம்பரங்களும் இதே ரகம். ("At United India,it's always U before I.)  என்றாலும், இன்ஷூரன்ஸ் என்ற  வார்த்தையை வைத்துக் கொண்டு அதிகம் விளையாட முடியாது.

ராணிக்குக் கொள்ளு பேரன் பிறந்த சமயம் அமுல் விளம்பரத்தில்
HIS  ROYAL CRYNESS! என்ற வார்த்தையை போட்டு இருந்தார்கள். படத்தைப் பார்க்கவும்.
போனசாக மேலும் சில அமுல் விளம்பரங்களைத் தருகிறேன். இப்போதெல்லாம் அமுல்  விளம்பரங்களில் ‘ஹிங்கிலீஷ்’ அதிகம் இருப்பதால் ஹிந்தி தெரியாதவர்கள் அதிகம் ரசிக்க முடியாது.



ஆமாம், கடைசி படத்தில் கமலஹாஸனுடன் இருப்பது யார்? நமது வெண்பா வேந்தர் கிரேஸியா?

பிரின்ஸ் பிலிப்.
ராணியின் கணவர்  பிரின்ஸ் பிலிப் ஒரு நகைச்சுவைப்பிரியர். அவ்வப்போது தமாஷாக ஏதாவது சொல்வார்.
1954-ஆஸ்திரேலியா நாட்டிற்கு பிரின்ஸ் பிலிப் விஜயம் செய்தார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் ஒரு தம்பதியரை அவருக்கு அறிமுகம் செய்தார்கள். இவர் ”மிஸ்டர் ராபின்ஸன். இவர் திருமதி டாக்டர் ராபின்ஸன்” என்று அறிமுகம் செய்தவுடன்,  பிரின்ஸ் பிலிப்பிடம் ராபின்ஸன் சொன்னார்:  “என் மனைவி தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். என்னை விட அவர் ரொம்ப ரொம்ப முக்கியமானவர்.”
உடனே  பிரின்ஸ் பிலிப்.தலையை ஆட்டியபடியே, “ஆமாம்... ஆமாம்.. அந்தப் பிரச்னை எங்கள் குடும்பத்திலும்  இருக்கிறது!” என்றார் குறும்பாக!

பிரதமர்
சமீபத்தில் பிரிட்டிஷ் பிரதமர்   டேவிட் கேமரான் அமெரிக்காவிற்கு விஜயம் செய்தார். நியூயார்க்கில் பிரிட்டிஷ் சுற்றுலா துறை  தொடர்பான  ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொள்வதற்கு அவரும்
 ராணியின் பேரன் ( சார்லஸ்- டயானாவின் பிள்ளை) பிரின்ஸ் ஹாரியும் ஒரு மாடி பஸ்ஸில் வந்து அசத்தி விட்டர்கள்.. அது லண்டன் சுற்றுலா துறையின் RED BUS என்னும் சொகுசு பஸ். (லண்டனிலிருந்து கொண்டு வரப்பட்டதாம்!)

ஒரு ஆங்கிலப் புதிர்.
 
சுலபமான  புதிர்தான். 
இங்கு 9 ஆங்கில எழுத்துகள் தரப்பட்டுள்ளன. இந்த  எழுத்துகளைக் கொண்டு எத்தனை தனித்தனி வார்த்தைகள் உருவாக்க முடியும். ஒரு எழுத்தை ஒரு வார்த்தையில் ஒருதரம் தான் உபயோகிக்கலாம், 
அதிக பட்ச வார்த்தைகளைக்  கண்டு பிடிப்பவர்களுக்கு டாக்டர் பட்டம் தரப்படும். (CONDITIONS APPLY!)

குறிப்பு: சிலர் வார்த்தைகளைக்  கண்டுபிடித்து எழுதி இருக்கிறார்கள். நாலைந்து  நாள் கழித்து எல்லாவற்றையும் பிரசுரிக்கிறேன்.

13 comments:

  1. அய்யா. என்னால் நம்ப முடியவில்லை.
    எனது பள்ளி கல்லூரி நாட்களில் உங்களது எழுத்துக்களை தேடி தேடி படித்தேன். பின்பு வேலை குடும்பம் என தேடுதல் குறைந்து இப்பொழுது அறுபதில் மீண்டும் ஆரம்பித்தேன். தற்செயலாக உங்கள் பதிவு கண்ணில் பட்டது.ஒரே மூச்சில் அனைத்தையும் படிக்க தூண்டும் நடை. நீங்கள் நீண்ட ஆயிலுடன் உங்கள் பணியை தொடர நல்ல தேக சுகத்தை தர ஆண்டவனை வேண்டுகிறேன்.
    ரா.சந்திரமோகன்

    ReplyDelete
  2. //நீங்கள் நீண்ட ஆயிலுடன் உங்கள் ..// மாஞ்சு மாஞ்சு எழுதறதால உங்களை எந்திரம் ஆக்கிவிட்டாரே சந்திர mohan!

    Prince Philips anecdote பிரமாதம்! ஆமாம், அவர் ஒவ்வொரு விம்பிள்டன் போட்டியின் பரிசளிப்பின் போது ball boys இடம் 2 வார்த்தை பேசுவார், அது என்னவாயிருக்கும்? !

    அமுல் விளம்பரங்கள் எப்பவும் சுவாரசியம்!

    -ஜெ.

    ReplyDelete
  3. <>
    உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.’ஆயிலுடன்” என்று இருப்பது சரியே. உடலில் எண்ணைப் பற்று குறைவாக இருக்கிறது என்று சரும டாக்டர் சொன்னார். அதனால் அவர் குறிப்பிட்ட சோப்பை மட்டும் உபயோகிக்கிறேன்!
    தொடர்ந்து படியுங்கள்.-கடுகு



    ReplyDelete
  4. <>>
    என் நடை, ’ஸ்மூத்தாக’ வழுக்கிக் கொண்டு போவதால்(!!??) அப்படி எழுதினார் என்று கருதி, நானே என் முதுகில் தட்டிக் கொண்டேன்! (கை சுளுக்கிக் கொண்டது பற்றிக் கேட்காதீர்கள்!)-கடுகு

    ReplyDelete
  5. கை சுளுக்கலுக்கும் ஆயில் போடலாம்!


    Puzzle - some 34 words (ooph!):

    I, Abhor, Ahoy, Air, Bag, Bar, Bay, Big, Boar, Boy, Brag, Bray, Biography, Go, Gay, Gory, Gray, Grab, Graph, Hay, Hair, Hairy, Harp, Hip. Hob, Hypo, Oar, Pi, Pro, Pry, Pray, Ray, Rip, Yogi.

    Waiting to learn more words from others.

    -R. J.

    ReplyDelete
  6. அமுல் விளம்பரங்கள் என்றென்றும் இனியவை.... அந்தந்த நேரத்திற்கேற்ப விளம்பரங்கள் தருவதற்கு உழைக்கும் நபர்களுக்கு பாராட்டுகள் உரித்தானவை.....

    போலவே ஏர் இந்தியா விளம்பரங்களும். இப்போது அவ்வளவாக வருவதில்லை....

    ReplyDelete
  7. A
    I
    GO
    BY
    AIR
    BAG
    BAY
    BOY
    PAY
    GAP
    GIB
    BIG
    BRA
    BAR
    HAG
    HAY
    HOG
    PAR
    PIG
    PRO
    PRY
    RAY
    RIG
    RIP
    ROB
    GRAY
    GORY
    GRIP
    HARP
    AIRY
    BOAR
    HARP
    HAIR
    PAIR
    PRAY
    YOGI
    AROGI
    HAIRY
    GRAPH
    GRAPHY

    இது எல்லாம் என்னுடைய பட்டியல்!

    ReplyDelete
  8. Kalyani KrishnamurthyAugust 14, 2013 at 2:19 AM

    The word game was interesting. I could find 34 words (listed below):


    1) pair
    2) air
    3) hair
    4) gray
    5) boar
    6) gap
    7) rap
    8) hip
    9) bag
    10) ray
    11) bay
    12) pay
    13) hay
    14) gay
    15) boy
    16) hop
    17) rob
    18) rib
    19) rag
    20) grip
    21) rip
    22) bay
    23) big
    24) pig
    25) pray
    26) yap
    27) hap
    28) pry
    29) grab
    30) brag
    31) harp
    32) par
    33) bar
    34) hog

    ReplyDelete
  9. அந்த்க்காலத்தில் அண்ணா சாலயில் ஸ்பென்சர் வளாகதி மற்றும் அதன் எதிரில் கலைக்கல்லூரி வளாகதிலும் எதி எதிரே ஏர் இந்தியா மற்றும் அமுல் விளம்பரங்களும் நிரந்தரமாக இருக்கும்.விளம்பரத்தை ஒவ்வொருமுறை மாற்றும்போதும். அதற்காகவே சென்று பார்ப்போம்.
    எம்.ஜி.ஆர் அவர்கள் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு, உடல் நலமானபின்பு “உன்னை விடமாட்டேன்” என்று ஒரு பட விளம்பரம் செய்தார். ஆனால் அது வெள்வரவில்லை. அப்போது அமுல் விளம்பரம் ஒன்று.வெண்ணெய்யை விடமாட்டேன்’
    அடுத்து சர்வதேச கடத்த்ல் மன்னன் சார்லஸ் சோப்ராஜ் கோவாவில் கைது செய்யப்பட்டபோது, ”ARRESTING FLAVOUR" என்று. அந்த படங்கள் கிடைக்கவில்லை
    மதி

    ReplyDelete
  10. மேலும்,
    OR
    PI
    இரண்டையும் குறிப்பிட மறந்துவிட்டேன். சேர்த்துக் கொள்ளவும்!

    ReplyDelete
  11. Please add the following to my earlier list. - R. J.

    Pay, Pyro, Gip, Gap, Gyro, Bip, Pib, Oh!, Rob, Hap.

    ReplyDelete
  12. Talking about 'Amul' hoardings, I can never forget the one when JRD Tata had to leave Air India which said -
    "Tata does not al
    ways mean good-bye!"
    Thanks for this post.
    Jayanthi Sridharan.

    ReplyDelete
  13. //"Tata does not al
    ways mean good-bye!"//

    Though JRD is no more, Tatas will be back to Air lines business soon! Sad, Air India had been nationalised and allowed to rot.

    -R. J.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!