June 09, 2011

பேசினால் பிழைத்தீர்கள் - கடுகு

* எந்தத் தொழிலிலும் வெற்றி பெறுவது எளிது உங்களுக்குப் பேசத் தெரிந்திருந்தால்!  உங்கள் வாடிக்கையாளரை உங்கள் பேச்சினால் பிரமிக்க வைக்க வேண்டும்.   அல்லது குறைந்தபட்சம் குழப்பி வைக்க வேண்டும்.  எவ்வளவுக்கெவ்வளவு புரியாத வார்த்தைகளைப் போட்டுப் பேசுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு லாபம்.  இதைச்  சமீபத்தில் இரண்டு மூன்று பேரிடம் சென்ற போது நான் அறிந்து கொண்டேன்.

     * ஜோசியர் சோணாசலத்திடம் போயிருந்தேன், ஜாதகத்தைக் கொடுத்தேன்.
      ''....உம்... ஏழில் குரு.  குரு தன் வீட்டில் இருக்கிறான்.  சனியைப் பார்க்கிறான்.  ஆனால் சுக்கிரன் நீசமாகி விட்டான்.  ரிஷப ராசியில் மிதுன அந்தரத்தில் சூரியன் உச்சமாகிறான்.''
      ""சூரியன் உச்சமானால் நல்லதா கெட்டதா?''
      ""புதன் எப்படி இருக்கிறான் என்பதைப் பொறுத்திருக்கு.  எட்டாம் வீட்டில் இருக்கிறான். அது சந்திரனின் வீடு.''
      ""ஏதோ ஒரு வீட்டில் இருந்துவிட்டுப் போகட்டும்.  எனக்கு என்ன ஆகும்?''
      ""முதலில் அறுபது ரூபாயை வையும்.... குரு பார்வை சரியில்லை.  ... சந்திரன் தன் சொந்த வீட்டுக்குப் போனால் உங்களுக்கு நல்ல காலம். இன்னும் 2 வாரத்தில் போய் விடுவான். கவலைப் படாதீர்கள்.''
      ""வெரி குட்'' என்று சொல்லிவிட்டு வந்தேன்.  60 ரூபாய் அழுதுவிட்டோமே என்று தோன்றினாலும், .சந்திரன் வீடு காலி பண்ணுவதற்கு லாரி, கூலி ஆட்கள் எல்லாம் என்னை ஏற்பாடு பண்ணச் சொல்லவில்லையே என்ற நிம்மதியுடன் வீடு திரும்பினேன். அவரது ஞானம் என்னை வியப்படையச் செய்தது


    *  டீ.வி. மெக்கானிக் பத்ரிநாத்திடம் என் டிரான்சிஸ்டரைக் காட்டினேன். சரசரவென்று பிரித்தார்.
      "ஐ.எஃப் போயிருக்கும்னு நினைக்கிறேன்.  டயோட் ''' மல்டி மீட்டரை வச்சுப் பார்த்துத்தான் சொல்ல முடியும்.  ஐயாயிரம் ஓம்ஸ் நடுவிலே சோல்டர் பண்ணிடணும்....''
      "எதையாவது பண்ணுங்க, பாடணும்,''
      ""டிரான்ஸ்ஃபார்மர் ஓபனாயிட்டதுபோல இருக்கு. ஃபெர்ரைட் ராட் புதுசா போட்டு காயிலைச் செக் பண்ணிப் பார்க்கலாம். நூறு ரூபாய் ஆகும்'' என்றார். 
      நூறு ரூபாய்க்கு இவ்வளவு செய்யப் போகிறார் என்ற திருப்தியுடன் ரூபாயைக் கொடுத்துவிட்டு வந்தேன்.


     * சின்ன வழக்கு விஷயமாக வக்கீல் சட்டநாதனைப் பார்க்கப் போனேன்.
      ''...ஒண்ணும் கவலைப்படாதீங்க.  கேஸ் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கு.  சுப்ரீம் கோர்ட் வரை போகலாம்.  முதலில் ஒரு ரிட் போடலாம்.  சி.ஆர்பி.சி.யில் இடம் இருக்கான்னும் பார்க்கிறேன்.  ரங்கசாமி வர்ஸஸ் ஸ்டேட் ஆஃப் காட்டாங்குளத்தூர் கேஸ்லே எவிடன்ஸ் ஆக்ட்டுக்குக் கொடுத்திருக்கிற இன்டர்பிரடேஷன் நமக்குச் சாதகமாக இருக்கும்.  ஹேபியஸ் கார்பஸ் அப்ளை ஆகாது. ஆனால் ஜூரிஸ்புரடன்ஸயும் புரட்டிப் பார்க்கணும்.  முதலில் ஐந்நூறு ரூபாய் ஃபீஸ வையுங்க.  எஃப்.ஐ.ஆர். காபி கேட்கலாம்.  ஆனால் விட்னஸ் ஹாஸ்டைல் ஆகிவிட்டால் ஆபத்து.... சரி.... முதலில் டைம் பார் ஆகிறதுக்குள்ளே ஃபைல் பண்ணிடலாம்....''
      ""இவ்வளவு வேலை இருக்கிறது.   ஐந்நூறு ரூபாய் தான் கேட்கிறார்.  நல்ல மனிதர்''  என்று நினைத்துக் கொண்டு வீடு திரும்பினேன்.
     * இந்த உத்தியைப் பின்பற்றி ஒரு எடிட்டரிடம் என் கதையைக் கொடுத்துவிட்டுப் பேசினேன்.
      ஒரு அழுத்தமான கேரக்டரைப் பரவலாக உலவ விட்டு, டீப் ஸ்டெடி பண்ணி சிச்சுவேஷன்லே பஞ்ச் கொடுத்திருக்கேன்.  கதையின் அட்மாஸ்ஃபியருக்காக நிறைய ஃபீல்ட் ஒர்க் பண்ணி, ஒரு இன்-டெப்த் அனாலஸிஸ் செஞ்சு ஒரு கான்ùஸப்டை லாஜிக்கலா அப்ரோச் பண்ணி எழுதியிருக்கிறேன்'' என்றேன்.
      ஆசிரியர் கதையை மளமளவென்று படித்து விட்டு "ரிஜக்டட்' என்றார்!

9 comments:

 1. Sir, Neengana Neengathan.. so lovely..Thanks for all your postinngs.
  - SP

  ReplyDelete
 2. ரொம்ப நாளைக்குப் பிறகு ரசித்துப் படித்தேன். சார், எப்படி இருக்கீங்க...?

  ReplyDelete
 3. அன்புள்ள அமுதவன்.
  உங்கள் பின்னூட்டம். நான் நலமே.ஈ-மெயில் ID தெரிவியுங்கள்

  ReplyDelete
 4. Time and again proved you humour is in comparable to rest with rich knowledge in your writing unwittingly.
  R.SURESH

  ReplyDelete
 5. சார், தங்களின் தொடர்பு என்றதும் ஏதோ ஒரு பரவசம்..என்னுடைய ஈமெயில் முகவரி இது;amudhavan6@gmail.com

  ReplyDelete
 6. enjoyed reading.. so many talents in india....

  suryanarayanan, paris

  ReplyDelete
 7. you read so many books; why dont u read my book too? pl see http://sites.google.com/site/parissury/
  available in india too sorry it is bit expensive; but all the earnings go to eyye hospital in chennai

  ReplyDelete
 8. அருமையான அனுபவங்கள்.
  ரசித்துப் படித்தேன்.
  நன்றி ஐயா.

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!