நம் ஊரில்
பலர் ‘கிளி ஜோசியம்‘ சொல்லுகிறார்கள். ‘கரடி
வித்தை’க் காட்டுகிறார்கள். குரங்கு வித்தையைக் காட்டுகிறார்கள். நாய்களும் வித்தை
செய்கின்றன. சிட்டுக் குருவியும் ஜோசியம் சொல்லுகின்றன. எல்லாவற்றிற்கும் நாம் பணம்
கொடுக்கிறோம். அதாவது இந்த மிருகங்கள், பறவைகள் தொழில் செய்து பணம் சம்பாதிக்கின்றன.
தொழில் வரியோ, வருமான வரியோ, அவை செலுத்துவதில்லை; தொழில் ‘செய்ய’ லைசென்ஸ் எடுப்பதுமில்லை.
“எதற்கு
இத்தனை நீள முன்னுரை?’ என்று நீங்கள் கேட்பதற்கு முன்பு விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.
‘பேசும் பூனை’க்கு நகராட்சியின்
தொழில் லைசென்ஸ் வாங்க வேண்டும்’ என்று நோட்டீஸ் தரப்பட்டது…
ஆமாம், இது.உண்மை.
அதிருக்கட்டும், அதென்ன பேசும் பூனை என்பதைச் சொல்லிவிடுகிறேன்.
அதிருக்கட்டும், அதென்ன பேசும் பூனை என்பதைச் சொல்லிவிடுகிறேன்.
அமெரிக்காவில் ஜார்ஜியா என்ற மாநிலத்தில், அகஸ்டா
என்ற நகரத்தில் MILEY என்பவர் ஒரு பூனை கறுப்பு பூனை பூனையை வைத்து, ஊரின் பல இடங்களில்
வித்தை காட்டி பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார். என்ன வித்தை தெரியுமா? அவர் வைத்திருந்த
பூனை பேசும். ”ஹலோ”, “I Love
you”, “I want my Mama’ என்று
பேசும்.
அந்த பூனையின் பெயர் BLACKIE. பணம் கொடுத்தவுடன்
‘ஐ லவ் யூ’ சொல்லுமாம்.
MILEY-க்கும் அவரது மனைவிக்கும் இந்தப்
பூனை மூலம் கிடைக்கும் பணம்தான் வருவாய்.
“ஒரு பூனையை வைத்துக் கொண்டு MILEY கோடீஸ்வரனாக(!) ஆவதைப் பார்த்த வயிற்றெரிச்சல்காரன் ஒருத்தன்,
நகராட்சியில் உள்ள குறிப்பிட்ட இலாகாவில் வத்தி வைத்து விட்டான்.








