நம் ஊரில்
பலர் ‘கிளி ஜோசியம்‘ சொல்லுகிறார்கள். ‘கரடி
வித்தை’க் காட்டுகிறார்கள். குரங்கு வித்தையைக் காட்டுகிறார்கள். நாய்களும் வித்தை
செய்கின்றன. சிட்டுக் குருவியும் ஜோசியம் சொல்லுகின்றன. எல்லாவற்றிற்கும் நாம் பணம்
கொடுக்கிறோம். அதாவது இந்த மிருகங்கள், பறவைகள் தொழில் செய்து பணம் சம்பாதிக்கின்றன.
தொழில் வரியோ, வருமான வரியோ, அவை செலுத்துவதில்லை; தொழில் ‘செய்ய’ லைசென்ஸ் எடுப்பதுமில்லை.
“எதற்கு
இத்தனை நீள முன்னுரை?’ என்று நீங்கள் கேட்பதற்கு முன்பு விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.
‘பேசும் பூனை’க்கு நகராட்சியின்
தொழில் லைசென்ஸ் வாங்க வேண்டும்’ என்று நோட்டீஸ் தரப்பட்டது…
ஆமாம், இது.உண்மை.
அதிருக்கட்டும், அதென்ன பேசும் பூனை என்பதைச் சொல்லிவிடுகிறேன்.
அதிருக்கட்டும், அதென்ன பேசும் பூனை என்பதைச் சொல்லிவிடுகிறேன்.
அமெரிக்காவில் ஜார்ஜியா என்ற மாநிலத்தில், அகஸ்டா
என்ற நகரத்தில் MILEY என்பவர் ஒரு பூனை கறுப்பு பூனை பூனையை வைத்து, ஊரின் பல இடங்களில்
வித்தை காட்டி பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார். என்ன வித்தை தெரியுமா? அவர் வைத்திருந்த
பூனை பேசும். ”ஹலோ”, “I Love
you”, “I want my Mama’ என்று
பேசும்.
அந்த பூனையின் பெயர் BLACKIE. பணம் கொடுத்தவுடன்
‘ஐ லவ் யூ’ சொல்லுமாம்.
MILEY-க்கும் அவரது மனைவிக்கும் இந்தப்
பூனை மூலம் கிடைக்கும் பணம்தான் வருவாய்.
“ஒரு பூனையை வைத்துக் கொண்டு MILEY கோடீஸ்வரனாக(!) ஆவதைப் பார்த்த வயிற்றெரிச்சல்காரன் ஒருத்தன்,
நகராட்சியில் உள்ள குறிப்பிட்ட இலாகாவில் வத்தி வைத்து விட்டான்.
நகராட்சியின்
லைசென்ஸ் பிரிவு செக்ஷனிலிருந்து MILEY
-க்கு நோட்டீஸ் வந்தது.
“….. பூனையை வைத்துத் தொழில் செய்கிறீர்கள்.
தொழில் வரி நீங்கள் கட்டவில்லை. ஐம்பது டாலர் கட்டி லைசென்ஸ் எடுத்து விடவும். லைசென்ஸ்
இல்லாமல் தொழில் செய்வது சட்ட விரோதம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்கிற
ரீதியில் நோட்டீஸ்
அனுப்பிவிட்டது.
MILEYக்கு 50 டாலர் பெரிய தொகை, என்பது மட்டுமல்ல,
”பூனைக்கு பேச்சுரிமை இல்லையா?. அரசியல்
சாசனத்தில் அனைவருக்கும் பேச்சுரிமை தரப்பட்டிருக்கிறது” என்று சிலர் தந்த அறிவுரையும், அவரை நகராட்சியின் மீது வழக்குத் தொடரச் செய்தது.
“பூனைக்கும் பேச்சுரிமை தரப்பட்டிருக்கிறதா?
மனிதர்களுக்குத் தானே தந்துள்ளார்கள்” என்று நகராட்சி தரப்பில் நீதிமன்றத்தில் விவாதம்
நடந்தது.
இந்த சமயம், ஒரு நாள் வழக்கை விசாரிக்கும் நீதிபதி
காரில் போய்க் கொண்டிருந்தபோது, ஒரு ஆணும்
பெண்ணும் பூனையை அணைத்து எடுத்துச் செல்வதைப் பார்த்தார்.
பூனை கறுப்பு பூனை. அவர்கள் தெருவைக்
கடந்து போனதால் காரை மெதுவாக ஓட்டினார். வழக்கு
சம்பந்தப்பட்ட BLACKIE பூனை அதுதான் என்று யூகித்தார்.
காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு,
பூனையை எடுத்துப் போனவர்களை அழைத்து, ”இதுதான் பேசும் பூனையா?” என்று
கேட்டார். ” பூனை வழக்கில் நாம் நீதிபதி, ஆகவே வழக்காடும் நபரோடு பேசுவது சரியில்லை” என்று அவருக்குத் தயக்கம் ஏற்பட்டது. ஆனால் அந்த பூனை பேசுவதைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக, தயக்கத்தை உதறிவிட்டு, “ஹலோ
இதுதான் பேசும் பூனையா?” என்று கேட்டார்.
“ஆமாம்” என்று
MILEY சொன்னார்.
நீதிபதி வாஞ்சையுடன் பூனையைச் செல்லமாகத் தடவிக் கொடுத்தார். பூனை அவரைப் பார்த்து,
“ஐ லவ் யூ” என்றது. தொடர்ந்து I want my Mama
“ என்றது. பூனை பேசுவதைக் காட்டியதற்கு
அவர்கள் பணத்தை எதிர்பார்க்கிறார்கள்
என்று அறிந்து, அவர் பணமும் கொடுத்தார். “இதை வைத்துதான் நான் பிழைப்பை நடத்துகிறேன்” என்றார் MILEY.
இந்த பூனை, டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல, பல்வேறு ஊர்களிலும் தன் திறமையைக் காட்டியுள்ளது. பணத்தையும்
ஈட்டித் தந்துள்ளது
Blackie அவர்களிடம்
வந்ததே ஒரு குட்டிக் கதை. ஒரு கூடையில் நிறைய பூனைக் குட்டிகளுடன் ஒரு பெண் அவர்களுடைய
வீட்டிற்கு ஒரு நாள் வந்து, “ பூனைக்குட்டி வேண்டுமா?” என்று
கேட்டாள். Miley-யும் அவருடைய
மனைவியும், “வேண்டாம்… நீ போய் வா’
என்று அந்த பெண்ணை அனுப்பினார்கள். Miley-யின்
மனைவிக்கு என்ன தோன்றியதோ, அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு கறுப்புக் குட்டியை வாங்கிக் கொண்டாள்.
பின்னால் Miley-யின்
மனைவி சொன்ன தகவல்: “பூனைக்
குட்டிகளுடன் அந்தப்
பெண் நாலு அடிகூட போயிருக்கமாட்டாள்.
“என்னை எடுத்துக்கோங்க” என்று ஒரு பூனை என் காதில் சொன்னது போல் உணர்ந்தேன்.
அதனால் ஒரு குட்டியை எடுத்துக் கொண்டேன்” என்றாள்.
அந்தக் கறுப்புக்குட்டி தான் பேசியிருக்கும் என்று Miley கருதினாரோ என்னவோ, அதற்குப் பேசக் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் இறங்கினார்.
“ஹலோ”, “ஐ லவ் யூ” “ஐ வாண்ட் மை மம்மா” போன்ற
வாக்கியங்களை ரிகார்ட் செய்து, தினந்தோறும் 3, 4 மணி நேரம், பூனையின் கூண்டருகில் டேப்ரிக்கார்டரை வைத்துப் போடுவாராம். சுமார் ஒரு வருஷத்துக்கு மேல் இப்படிப் போட்டாராம்... அதுமட்டுமல்ல, அவரது மனைவி “ஹலோ”, என்று அதைக் கூப்பிட்டு அடிக்கடி அதனிடம் பேசுவாராம். மெள்ள
மெள்ள பூனை அவர் பேசுவதைத் திருப்பிச் சொல்லத் துவங்கியதாம்
அதன்
பிறகு அதை வைத்து சம்பாதிக்க ஆரம்பித்தார்களாம்.
சரி, இனி வழக்குக்கு வரலாம்.
பேச்சுரிமை எல்லாருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது
என்று Miley -யின் வக்கீல் விவாதித்த போது, ஜட்ஜ் சொன்னது: “ உண்மைதான், உங்கள் பூனைதான் பேசுகிறதே. அது வழக்குத் தொடரட்டுமே. நீங்கள் யார் அதன் சார்பாக வழக்குத் தொடர்வதற்கு?” என்று
கேட்டு, நகராட்சிக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிட்டார். ( இந்த தீர்ப்புக்கு கேஸ் எண், கோர்ட் விவரம், ஜட்ஜ், மற்றும் வக்கீல்களின் பெயர்கள் அகிய அனைத்து ஆதாரங்களும் உள்ளன!)
ஆனால் Miley விடவில்லை. மேல் கோர்ட்டுக்கு வழக்கைக் கொண்டு போனார். (வருடம் 1983.)
ஆனால் Miley விடவில்லை. மேல் கோர்ட்டுக்கு வழக்கைக் கொண்டு போனார். (வருடம் 1983.)
அங்கும் அவருக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.
வேறு வழியின்றி தொழில் லைசென்ஸ் வாங்கினார்.
Blackie, 1992-ல்
அதன் 18-வது வயதில் காலமாயிற்று.
பின் குறிப்பு; இந்த கட்டுரைக்காக பல தகவல்களைத்
தேடித் திரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு சுவையான, ’பேசும் பறவை’ சம்பந்தமான
தகவல் கிடைத்தது. அந்த பறவை: ஒரு கிளி.
டில்லியில் ஒரு பெண்மணியின் வீட்டில் சுத்தமான, தெளிவான உச்சரிப்பில்
கிளி பேசிக் கேட்டிருக்கிறேன். ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு கிளியை வாங்கி வந்த அந்தப் பெண்மணியைக்
‘குமுதம்’ இதழுக்காக
பேட்டி கண்டு எழுதினேன். பெண்மணி ஏதேதோ சின்னச் சின்ன கேள்விகள் கேட்டார். கிளி தெளிவாகப் பதில் சொல்லியது. (கிளியை அதிக விலைக் கொடுத்து வாங்கினாராம்!)
கொலம்பியா நாட்டில் ஒரு கூட்டம் தஙள் தில்லுமுல்லுய்ஹ் தொழிலுக்கு
உதவ கிளிகளுக்குப் பேசச் சொல்லிக் கொடுத்து வைத்திருந்தார்களம். பல வருஷங்களுக்கு முன்பு, போதைப் பொருட்கள்
கடத்துபவர்கள்
கிளிகளை வளர்த்துப் பழக்கி வைத்திருந்தார்களாம். அவர்கள் இருக்கும் இடத்திற்கு போலீஸ்காரர்கள்
வருவதைப் பார்த்தால் வீட்டுக் கூரைகளில் உட்கார்ந்து இருக்கும் கிளிகள் “ஓடு…ஓடு…மாட்டிக்கப்
போறே” என்று பயங்கரமாகக் கத்துமாம். சுமார் 1700 கிளிகளை இந்த
வியாபாரிகள் வளர்த்து, பழக்கி வைத்து இருந்தார்களாம்! (இது எவ்வளவு தூரம் உண்மையானது
என்று தெரியாது.)
ஆனால் ஒரு கிளி குற்றவாளியை காட்டிக் கொடுத்தது சுவையான உண்மையான் தகவலைத் தருகிறேன் . 2010-ம் வருடத்தில்
நடந்த சம்பவம் இது.
அமெரிக்காவில் உள்ள கரோலினா என்ற மாநிலத்தில்
Gloria என்ற
பெண்மணி, ஒரு நாள் ஆம்புலன்ஸிற்கு போன் செய்தாள். ”என்னுடைய அம்மா மூச்சு விடா முடியாமல் திணறுகிறார்… அம்மாவிற்கு 98 வயதாகிறது” என்று
பரபரப்பாக அழைத்தாள். (ஆம்புலன்சை அழைத்தால் போலீஸிற்கும் அழைப்பு போகும். அவர்களும்
வருவார்கள். போலீஸிற்கு போன் செய்தால் ஆம்புலன்ஸுடன் அவர்களும் வந்து விடுவார்கள்.)
போலீஸ் அங்கு போய் சேர்வதற்குள்
குளோரியாவின் அம்மா இறந்து விட்டாள். வீட்டிற்குள் போலீஸ் சென்றதும், குளோரியாவின் வளர்ப்புக்
கிளி ”கீச். கீ”ச்சென்று வெறி வந்தது போல் அலறியதுடன், HELP ME, HELP ME என்று
விடாமல் கத்தியது. (ஆம், அது பேசும் திறமையுள்ள வளர்ப்புக் கிளி) போலீஸிற்கு ’அது ஏன்
அப்படி கத்துகிறது’ என்று புரியவில்லை. அது வெறுமனே கத்துவதுடன் நிற்கவில்லை. HELP ME, HELP ME என்று நாலைந்து தடவை கத்திவிட்டு,, பைத்தியம்
பிடித்துச் சிரிப்பது போல் ‘கீக்கீ’
என்று குரல் கொடுத்ததாம். இப்படி மாறி மாறி அது கத்தியதைக் கேட்டு
போலீசுக்கு சந்தேகம் வந்தது.. அந்த
வீட்டில் சமீபத்தில் கேட்ட கத்தலையும் சிரிப்பையும் அது அப்படியே கத்துகிறது என்று
சந்தேகம் ஏற்பட்டது. இறப்பதற்கு முன்பு அந்த மூதாட்டிதான் அப்படி அலறி இருக்க வேண்டும்.
‘அவர் சிரித்திருக்க மாட்டார். வீட்டில் இருந்த மற்றொரு நபர் குளோரியா அவர் தான் இப்படிசிரித்திருக்க வேண்டும்” என்று கருதினார்கள்.
குளோரியாதான், தன் தாயை கொன்றிருக்க வேண்டும். தாய், திணறி அலறுவதைக் கண்டு,
அவர் வில்லத் தனமாகச் சிரித்திருக்க வேண்டும். தாயின் HELP ME’ அலறலையும் குளோரியாவின் வெறிச் சிரிப்பையும்
கிளி, விடாமல் கத்திக் காண்பித்திருக்கிறது. என்ற முடிவுக்கு வந்தார்கள்.
கிளி, விடாமல் கத்திக் காண்பித்திருக்கிறது. என்ற முடிவுக்கு வந்தார்கள்.
குளோரியாவைக் கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்ததில், அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். அவள் கைது செய்யப்பட்டாள்.
இது ஒரு வித்தியாசமான, விசித்திரமான கேஸ்!
கொலையுடன் முடிக்க மனம் வரவில்லை ஒரு கெட்டிக்கார
நாயைப் பற்றி எழுதி முடிக்கிறேன்.
சில வருஷங்களுக்கு முன்பு நான் சான்ஃப்ரான்சிஸ்கோ
நகருக்கு என் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என் உறவினர் (பெண்மணி) ஒரு பெரிய
நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருந்தார். தனியாக இருந்தார். துணைக்கு ஒரு அழகான, செல்லமான
நாய்!
அணில்பிள்ளை, கிளிப்பிள்ளை என்கிற மாதிரி நாயை, நாய்ப் பிள்ளை என்று நாம் கூறுவதில்லை. ஆனால் அந்த நாயை நாய்ப்பிள்ளை என்று கூப்பிட்டால் நூறு சதவிகிதம் சரியாக இருக்கும்.
அணில்பிள்ளை, கிளிப்பிள்ளை என்கிற மாதிரி நாயை, நாய்ப் பிள்ளை என்று நாம் கூறுவதில்லை. ஆனால் அந்த நாயை நாய்ப்பிள்ளை என்று கூப்பிட்டால் நூறு சதவிகிதம் சரியாக இருக்கும்.
அந்த பெண்மணியின் பெயர் உமா என்றும் நாயின் பெயர்
டாமி என்றும் வைத்துக் கொள்வோம்.
“ஆபீஸில் கொஞ்சம் முக்கிய வேலை இருக்கிறது. போய் விட்டு சீக்கிரமாக
வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
டாமி அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. சுத்தமான தமிழில், “ஏண்டா, ‘டாமி’ பையா.. போய் என்னுடைய ஷூவை எடுத்துண்டு வா” என்றாள்.
நாய், உடனே வீட்டின் பின்னறைக்குப் போய், அங்கிருந்த ஒரு ஷூவை வாயில் கடித்து
எடுத்து வந்தது. அவள் காலருகில் வைத்தது.
“ரொம்ப தாங்க்ஸ்…
இன்னொரு ஷூவை யார் கொண்டு வருவாங்க? சீக்கிரமாகப் போய்க் கொண்டு வாடா’ என்று
கொஞ்சலாகச் சொன்னார். இன்னொரு
ஷூவைக் கொண்டு வந்தது. ‘குட் பாய்’ என்று
அதைத் தட்டிக் கொடுத்தார். அப்போது வீட்டிற்கு வெளியே யாரோ போவதைப் பார்த்த
டாமி குரைக்க ஆரம்பித்தது,. உமா கொஞ்சலாக,
“ஏய், முட்டாள் பையா? அது நம்ப மாமாடா… போய்க் கதவைத் திற’ என்றாள்.
நம்பமாட்டீர்கள். டாமி, கிரில் கதவு பக்கம் ஓடிச் சென்று ,மெதுவாக மாமாவை அழைப்பது போல்,
குரைத்துக் கொண்டே, முன்னங்கால்களை எக்கிப்பிடித்து கதவின் தாழ்ப்பாளைத் தள்ளிவிட்டது.
அப்படியே கதவு திறந்து கொண்டது. டாமியின் கெட்டிக்காரத்தனத்தைப் பார்த்து அசந்து போனேன்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, டாமிக்கு ‘டாட்டா’ சொல்லி
விட்டு, காரில் ஏறி அலுவலகத்துக்கு சென்று விட்டார் உமா..
சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அவர் வந்தார். கதவருகில் அவர் வந்ததும்
அது தாவித் தாவி, வாலை ஆட்டிக் கொண்டு வரவேற்றது.
உமா வீட்டிற்குள் வந்ததும், சோபாவில் உட்கார்ந்து
ஷூவைக் கழட்டினார். “ஏய்,
டாமிப் பையா, ஷூவை எடுத்துக் கொண்டு போய் ஷூ ஸ்டாண்டில் வெச்சுடு” என்றாள்.
டாமி, ஒரு ஷூவை வாயால் கவ்வி எடுத்துக் கொண்டு,
ஷூ வைக்கும் இடத்திற்குப் போய் வைத்து விட்டு வந்தது.
“இந்த ஷூவை எடுத்துண்டு போக வேண்டாமா?” என்கிற
மாதிரி உமா கேட்டார். அந்த
ஷூவையும் எடுத்துக் கொண்டு போய் வைத்து விட்டு வந்தது.
அந்த நாயின் கெட்டிக்காரத்தனம் என்னை அசரச் செய்தது.
டாமி, ஒரு பச்சைத் தமிழன். தமிழில் பேசினால்தான்
புரிந்துக் கொள்ளும். டாமி வளர்ப்புப் பிராணி இல்லை; வளர்ப்புப் பிள்ளை!
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி. சுமதி ராஜா. அவருக்கு என் நன்றி
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி. சுமதி ராஜா. அவருக்கு என் நன்றி
……………………………………..*……………………………………………..
மிக அரிதான தகவல்கள். எல்லாம் செல்லங்கள் பற்றியே! பூனை பேசுவது என்பதைத் தொலைக்காட்சியிலும் காட்டிப் பார்த்திருக்கேன். எனக்கென்னமோ அது பேச்சாத் தெரிஞ்சதில்லை. நாய்கள் உண்மையாகவே நம் குழந்தைகள் தான். சொந்தம் தான். பல செல்லங்களை வளர்த்தாலும் ஒரு செல்லம் மனதிலேயே நிற்கிறது. அதுக்கப்புறம் செல்லவே வேண்டாம்னு வைச்சுட்டோம்.
ReplyDeleteஇத்தனை வயசுக்கு மேல் தன் தாயைக்கொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்திருக்கும் குளோரியாவுக்கு? அதான் புரியலை!!!!!!
ReplyDeleteவாவ் !! செல்லங்கள் பற்றிய பகிர்வு சூப்பரா இருக்கே :)
ReplyDeleteஎங்கள் வீட்டில் ஒரு கிளி இருந்தது அது எனது பேரை என் அப்பா அம்மா அக்கா அனைவரும் கூப்பிடுவது போலே different டோனில் அழைக்கும் .
நான் குழந்தைன்னு சொல்லுவேன் எங்க வீட்டுல ரெண்டு நாலு கால் மியாவ் குழந்தைங்க இருக்காங்க .இங்கிலாந்தில் வளர்ந்தாலும் அவங்களுக்கும் மதர் டங் தமிழ் தான் :)
பூனைப்பிள்ளை நாய்பிள்ளைன்னு அழைக்கும் ஒரு பதிவர் அதிரா மியாவ் இருக்கார் .
இரண்டாவது சம்பவம் என்னை அசத்திவிட்டது.
ReplyDeleteதெய்வம் அந்தப் பெண்ணுக்கு உடனே தண்டனை தரவேண்டும் என்று நினைத்திருக்கிறது. கிளியின் புத்திசாலித்தனம், போலீசின் சாதுர்யம்... நம்பவே முடியாத சம்பவம்.
முதல் சம்பவம் ரொம்ப இண்டெரெஸ்டிங். 50 டாலர் என்பது குறைவான தொகைதானே. வருடத்துக்கு 50 டாலரா இல்லை தொழில் லைசன்ஸ் எடுப்பதால் வரி கட்டவேண்டியிருக்குமா?
எனக்கு நாய் வளர்ப்பவர்களையும், அவர்கள் நாயுடன் கொண்டுள்ள உணர்வு ரீதியான உறவையும் பார்க்கும்போது ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். அவங்க, நாயை, தன் பிள்ளை போன்று நடத்துவாங்க, பிறரிடம் சொல்வாங்க. எனக்கு, எப்படி அந்த அளவு நேசிக்க முடியும் என்று தோன்றும். (க. தெரியுமா க. வாசனை என்று கடந்துவிடாதீர்கள்.ஹாஹா)
மூன்று தகவல்கள்.. மூணும் ரொம்ப இண்டெரெஸ்டிங். நிச்சயம் குமுதத்துல (அந்தக் கால) போட்டிருப்பாங்க, அனுப்பியிருந்தால். நல்லா தேர்ந்தெடுக்கிறீங்க... ஆனால் இடுகைதான் அடிக்கடி போடுவதற்கு சந்தர்ப்பமில்லாமல் போய்விடுகிறது.
பூனை பேசுவதை வைத்து சம்பாதிப்பதை நினைத்தவுடன் எனக்கு ஒன்று தோன்றியது. அமெரிக்கர்கள் பொதுவா வியாபார நோக்குடன் எதையும் அணுகுவாங்க. அங்க யாராவது பேசினால் (அது அருளுரையாகட்டும் எதுவாக வேணும்னாலும்), அந்தக் கூட்டத்துக்கு காசு கொடுத்துப் போவாங்க. துபாய்ல நான் ஒரு ஐரோப்பியனையோ அல்லது ருஷ்யனையோ மிகப் பெரிய மீசையுடன் பார்த்தேன். கூட நின்னு போட்டோ எடுக்க 10 திர்ஹாம்னு சொல்லி நிறைய பேரோட புகைப்படம் எடுத்துக்கிட்டார். எனக்குத்தான் கொடுக்க மனதில்லை. தூரத்திலிருந்து Zoom செய்து எடுத்தேன்.ஹாஹா.
ReplyDeleteநம்ம ஊர்லதான் பட்டிமன்றம் என்றாலும், காசு கொடுத்து போவதற்கு தயங்குவாங்க (இது பொதுவா நம்ம சிக்கன மெண்டாலிட்டின்னு நினைக்கிறேன்).