சுமார் 25 வருடங்களுக்கு முன்பு டில்லியில் ஒரு தொண்டு நிறுவனத்தில்
தொண்டாற்றிக் கொண்டு இருந்தேன். புற்றுநோய் தகவல் மையம், இலவச பிரசுரங்கள், போஸ்டர்கள், வீடியோ படங்கள் என்று தீவீரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது அந்த நிறுவனம்.
டெல்லி பல்கலை கழக மாணவ, மாணவர்கள், ‘எய்ம்ஸ்’ மருத்துவர்கள், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், ஒய்வு பெற்ற உயர் அதிகாரிகள் (பின்னால் கவர்னராக நியமிக்கப்பட்ட ஒருவர் உட்பட!) பலர் ஆர்வத்துடன் இணைந்து நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். பிரபல விளம்பர நிறுவனம் விளம்பரங்களை தயாரிக்கும் வேலையை ஏற்றுக் கொண்டது.
அதிசய அமைச்சர்
அதிசய அமைச்சர்
இந்த சமயம் டெல்லியில் ஆண்டுதோறும் நடக்கும் TRADE FAIRல் ஒரு ஸ்டால் வைத்து அதில் பிரசுரங்கள், போஸ்டர்கள் எல்லாம் வைத்து ஒரு வீடியோவை தயாரித்து அதை அங்கு திரையிட்டு, புற்றுநோய் பற்றிய
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம் என்று தீர்மானித்தது.
மிகவும் கஷ்டப்பட்டு பணம் திரட்டி, ஸ்டாலை புக் பண்ண பிறகு, அந்த ஸ்டால் வைக்க ஆகும் செலவுக்குப் பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை . பிரசுரங்கள், போஸ்டர்கள் தயார் செய்து அச்சடிப்பது போன்றவற்றிற்கு ஆகும் செலவுகளை எப்படி சமாளிப்பது என்றும் புரியவில்லை. ஸ்டாலை நிர்மாணித்துத் தர அரசு செய்தித்துறையான. D.A.V.P-யை அணுகலாம் என்று ஓர் யோசனை தோன்றியது. நாம் ஒரு தொண்டு நிறுவனம். நமக்கு எப்படி அரசுத் துறை ஸ்டால் அமைத்துத் தரும். நாம் I&B அமைச்சரைப் பார்த்துக் கேட்டுப் பார்க்கலாம்;. அவர் உத்தரவிட்டால், எந்த ஆட்சேபனையும் செய்யாமல் D.A.V.P ஸ்டாலை அமைத்துக் கொடுக்கும் என்ரு ஒரு ஐடியாவை ஒருவர் சொன்னார்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. I&B அமைச்சர் திரு. உபேந்திரா வீட்டிற்குப் போன் செய்தோம். அவரது பி. ஏ .இருந்தார். அமைச்சரை பார்க்க வேண்டும். நாங்கள் இத்தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள் என்றோம். பி. ஏ உடனே அமைச்சரிடம் சொன்னார். ”அமைச்சர் இன்னும் அரைமணி நேரம் கழித்து உஙளை வரச் சொன்னார்” என்றார். அடித்து பிடித்துச் சென்றோம். இனிய முகத்துடன் அமைச்சர் பேசினார். ‘அப்புறம்’ ‘அப்படியா’ ’ஓ.கே' சரி செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டே வந்தார். பி. ஏ விடம், யாரோ ஒருவர் பெயரைச் சொல்லி அவரை டெலிபோனில் கூப்பிடச் சொன்னார். அதற்கு முன் எங்கள் டெலிபோன் நம்பரை அமைச்சர் வாங்கிக் கொண்டார்.
பி.ஏ, அமைச்சர் சொன்ன நபருக்குப் போன் செய்து அமைச்சரிடம் கொடுத்தார். அமைச்சர், அவரிடம் எங்கள் நம்பரை கொடுத்துவிட்ட்ட “இது ஒரு தொண்டு நிறுவனம் Trade Fair-ல் ஸ்டால் அமைத்து தர நான் ஒப்புக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு என்னென்ன தேவையோ அதை செய்து கொடுங்கள்” என்றார். அவர் பேசியது D.A..V.P டைரக்டருடன்!.










