August 15, 2017

ஈரமுள்ள நெஞ்சங்கள் - முதல் பாகம்

 சுமார் 25 வருடங்களுக்கு முன்பு  டில்லியில் ஒரு தொண்டு நிறுவனத்தில் 
தொண்டாற்றிக் கொண்டு இருந்தேன்.   புற்றுநோய்  தகவல் மையம், இலவச பிரசுரங்கள், போஸ்டர்கள், வீடியோ படங்கள் என்று தீவீரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது அந்த நிறுவனம்.                                                                    
டெல்லி  பல்கலை கழக மாணவ, மாணவர்கள், ‘எய்ம்ஸ்’ மருத்துவர்கள்,  ஜவஹர்லால் நேரு  பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், ஒய்வு பெற்ற உயர் அதிகாரிகள் (பின்னால் கவர்னராக நியமிக்கப்பட்ட ஒருவர் உட்பட!) பலர் ஆர்வத்துடன்  இணைந்து நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். பிரபல விளம்பர நிறுவனம் விளம்பரங்களை தயாரிக்கும் வேலையை ஏற்றுக் கொண்டது.   

அதிசய அமைச்சர்
இந்த சமயம் டெல்லியில் ஆண்டுதோறும் நடக்கும் TRADE FAIRல் ஒரு ஸ்டால் வைத்து  அதில் பிரசுரங்கள், போஸ்டர்கள் எல்லாம் வைத்து ஒரு வீடியோவை  தயாரித்து அதை அங்கு திரையிட்டு, புற்றுநோய் பற்றிய
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம் என்று தீர்மானித்தது.
  மிகவும் கஷ்டப்பட்டு பணம் திரட்டி, ஸ்டாலை புக் பண்ண பிறகு, அந்த ஸ்டால் வைக்க ஆகும் செலவுக்குப் பணத்திற்கு  என்ன செய்வது என்று தெரியவில்லை . பிரசுரங்கள், போஸ்டர்கள் தயார் செய்து அச்சடிப்பது போன்றவற்றிற்கு ஆகும் செலவுகளை எப்படி சமாளிப்பது என்றும் புரியவில்லை.  ஸ்டாலை நிர்மாணித்துத் தர அரசு செய்தித்துறையான. D.A.V.P-யை அணுகலாம் என்று ஓர் யோசனை தோன்றியது.  நாம் ஒரு தொண்டு நிறுவனம். நமக்கு எப்படி அரசுத் துறை ஸ்டால் அமைத்துத் தரும். நாம் I&B அமைச்சரைப் பார்த்துக் கேட்டுப் பார்க்கலாம்;. அவர் உத்தரவிட்டால், எந்த ஆட்சேபனையும் செய்யாமல் D.A.V.P  ஸ்டாலை அமைத்துக் கொடுக்கும் என்ரு ஒரு ஐடியாவை ஒருவர் சொன்னார்.  
அன்று ஞாயிற்றுக்கிழமை. I&B அமைச்சர் திரு. உபேந்திரா வீட்டிற்குப் போன் செய்தோம். அவரது  பி. ஏ .இருந்தார். அமைச்சரை பார்க்க வேண்டும். நாங்கள் இத்தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள் என்றோம். பி. ஏ உடனே அமைச்சரிடம் சொன்னார். ”அமைச்சர்  இன்னும் அரைமணி நேரம்  கழித்து உஙளை வரச் சொன்னார்” என்றார். அடித்து பிடித்துச் சென்றோம். இனிய முகத்துடன் அமைச்சர் பேசினார். ‘அப்புறம்’ ‘அப்படியா’ ’ஓ.கே' சரி  செய்கிறேன்  என்று சொல்லிக் கொண்டே வந்தார். பி. ஏ விடம், யாரோ ஒருவர் பெயரைச் சொல்லி அவரை டெலிபோனில் கூப்பிடச் சொன்னார். அதற்கு முன் எங்கள் டெலிபோன் நம்பரை அமைச்சர் வாங்கிக் கொண்டார்.  
 பி.ஏ,  அமைச்சர் சொன்ன நபருக்குப் போன்  செய்து அமைச்சரிடம் கொடுத்தார். அமைச்சர், அவரிடம் எங்கள்  நம்பரை கொடுத்துவிட்ட்ட “இது ஒரு தொண்டு நிறுவனம் Trade Fair-ல்  ஸ்டால் அமைத்து தர நான்  ஒப்புக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு என்னென்ன  தேவையோ அதை செய்து கொடுங்கள்” என்றார். அவர்  பேசியது   D.A..V.P  டைரக்டருடன்!.      
 மறுநாள் டைரக்டரே எங்களிடம் தொடர்பு கொண்டு, தேவையான
வைகளைப் பட்டியல் போட்டுத் தர சொன்னார். கொடு த்தோம். அதன்படி, எல்லாவற்றையும் பிரமாதமாக செய்து கொடுத்தார்கள். 
உபேந்திரா  போன்ற அமைச்சர்கள் இப்போது காணாமல் போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

 செலவில்லாமல் விளம்பரம்
   புற்று நோய் பற்றிய விழிப்புணர்ச்சி விளம்பரத்தை அவசரமாய் உருவாக்கித் தந்தது ஒரு விளம்பர நிறுவனம். INDIA TODAY பத்திரிகையில் போடலாம் என்று நினைத்து, அமைப்பாளர்கள் விசாரித்தார்கள். ஒரு பக்க விளம்பரத்துக்கு ரூ.50,000 கட்டணம் என்றார்கள் விளம்பரம் செய்யும் ஆசையை அப்போதே கைவிட்டு விட்டோம். இருந்தாலும்  ஏதாவது  பிரபல கம்பெனியிடம்,  ஸ்பான்சர்.  செய்யும்படி கேட்கலாம் என்று யோசனை தெரிவிக்கபட்டது. 25 வருஷத்திற்ககு முன்பு 50,000 ரூபாய் ரொம்ப்ப பெரிய தொகை. முன் பின்   தெரியாத ஒரு சின்ன தொண்டு நிறுவனத்தின் விளம்பரத்தை ஸ்பான்சர் செய்தால், தங்களுக்கு என்ன விளம்பரம் கிடைக்கும் என்று யோசிப்பார்கள். ஆகவே இந்த யோசனை வேலைக்கு ஆகாது என்று கிட்டதட்ட ஒதுக்கிவிட்டோம். ஆனால் அதற்குள் விளம்பர நிறுவனம் ஒரு பிரமாதமான விளம்பரத்தை   டிசைன் செய்து, தயார் பண்ணிவிட்டார்கள்/
அந்த சமயம் ஒரு கல்கத்தா நிறுவனம், ஆர்வமுள்ள சில முயற்சிகளுக்கு நன்கொடை கொடுத்தது பற்றி விவரங்கள்  ப்த்திரிகையில் வந்தன,  சும்மா கல்லால் அடித்துப் பார்க்கலாம் என்று எண்ணி, விளம்பர டிசைனை போட்டோகாப்பி எடுத்து, ஒரு வேண்டுசோள் லெட்டருடன் இணைத்து அனுப்பினோம். “இந்த விளம்பரத்தை ’இந்தியா டுடே’ இதழில் வெளியிட ,உதவ முடியுமா?’ என்று கடிதத்தில் கேட்டிருந்தோம்.
 நாலைந்து நாள் கழித்து அந்த நிறுவன சேர்மனின் செகரிட்டியிடமிருந்து கடிதம் வந்தது,  “விளம்பரத்தின் ’ஆர்ட் வொர்க்”கை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். எங்கள் விளம்பர நிறுவனம் மூலமாக ’இந்தியா டுடே’யில் வெளீயிடுகிறோம் என்று எழுதியிருந்தார். அதன்படி அனுப்பி வைக்கப்பட்டது.. விளம்பரம் ஜம்மென்று வந்தது. இதன் காரணமாக தொண்டு நிறுவனத்திற்ககு அந்தஸ்தும் கிடைத்தது.
ஒரு தபால் போட்டோம். அந்த சேர்மனின் ஈரமுள்ள நெஞ்சு, தொண்டு நிறுவனத்தைப் பற்றி எதையும் விசாரிக்காமல் உதவினார். விளம்பர வாசகத்தைப்  படித்தே நெகிழ்ந்து விட்டார்!    

போஸ்டர் எங்கள் பொறுப்பு  
 மருத்துவமனைகளிலும், புற்றுநோய் மருத்துவர்களுக்கும் புற்றுநோய் விழிப்புணர்ச்சி போஸ்டர்கள், இலவசமாக வினியோகிக்கலாம் என்று தீர்மானித்தோம்.  பெரிய சைசில் ஐந்து போஸ்டர்கள் தயார் பண்னி அச்சடிக்க திட்டம். அந்த வேலையில் இறங்கினோம்..  
எஙகளுக்கு உதவிய அந்த விளம்பர பிறுவனம், அபாரமாகத் தயார் பண்ணித் தந்தது.
அந்த போஸ்டர்களை சிறிய அளவில் போட்டோ காப்பி எடுத்தோம். து, பல நிறுவனங்களுக்கு அனுப்பி, அவற்றை பல பெரிய  நிறுவனங்களுக்கு அனுப்பினோம்...’இந்தியா டுடே’  வில் வந்த விளம்பரத்தின் போட்டோகாபபியையும் இணைத்து அனுப்பினோம். aவற்றை அச்சடிக்க நிதி உதவி கேட்டோம்
லிம்கா நிறுவனம் பதில் போட்டது.” நாங்கள் அச்சடித்துத் தருகிறோம். எங்கள் பிரதிநிதி  உங்களை வந்து சந்திப்பார். அவரிடம் டிசைனை கொடுத்துவிடுங்கள்” என்று எழுதி இருந்தார்கள்..

அச்சாகுமா தகவல் பிரசுரங்கள்? 
 ஆறு விதமான புற்று நோய்களைப் பற்றிய  தகவல்களை  எளிமையாக விளக்கித்  தனித்தனியாக Folder-கள் தயார் பண்ணி, TRADE FAIR-இல் நமது ஸ்டாலில் வருபவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கலாம் என்று தீர்மானித்துத் தயார் பண்ணினோம். அதிக செலவாகாது நம் செலவிலே அச்சடிக்கலாம் என்று  எண்ணினோம். ஒவ்வொரு போஸ்டருடன் குறைந்தபட்சம்  20,000  காப்பியாவது ஃபோல்டர்கள் அச்சடிக்க வேண்டும். “என்ன செலவாகும்” என்று ஒரு அச்சகத்தில் விசாரித்தோம். நாற்பது நாற்பத்தைந்தாயிரம் ஆகும் என்றார்கள். இது நம் சக்திக்கு அப்பாற்பட்டது ஆயிற்றே, இதற்கு யாரைப் பிடிப்பது என்று தெரியாமல் திகைத்தோம்..
:”ஒரு நாள் டைம் கொடுங்கள்.  ஜண்டேவாலான் பகுதியில் ஒரு பெரிய அச்சகம் இருக்கிறது. எனக்குச் சிறிது பரிச்சியமானவர்கள். அவர்களைக் கேட்டுச் சொல்கிறேன்” என்று ஒரு தொண்டர் சொன்னார்.
மறு நாள் அந்த தொண்டர் விசாரித்துக் கொண்டு வந்தார். “அவர்கள் இருபத்தைந்தாயிரத்துக்கு அச்சடித்துத் தர ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். அந்த அச்சகத்தில் ஃபோல்டர்களை அச்சடிக்கக் கொடுத்தோம். (அது மகா பிரம்மாண்டமான அச்சகம். லட்சக்கணக்கில் கல்லூரி, பள்ளிக்கூட பாட புத்தகங்களை அச்சடிப்பவர்கள் என்று  தெரிந்தது.)
  மூன்று நாளில் அச்சடித்து  தருவதாகச் சொன்னார் அச்சக உரிமையாளர்.  அந்த அச்சகம், என் அலுவலகத்தின் அருகில் இருந்ததால்   அச்சடித்து வாங்கி வரும் வேலை எனக்குத் தரப்பட்டது
மூன்று நாள் கழித்து, அச்சகத்திற்குப் போன் செய்து ”என்ன சார், ஃபோல்டர் ரெடியா?” என்று கேட்டேன். 
      ”ஆறு ஃபோல்டர்களைத் தர இன்னும் 2,3 நாளாகும்.  அர்ஜன்டாகக் 
கேக்காதீங்க..  பாதி சார்ஜ் கூட இல்லாத வேலை.  பெரிய தொண்டு
 நிறுவனம் என்பதால் அச்சடிச்சுத் தருவதாக ஒப்புக்கொண்டேன்.” அவர் 
  சொன்ன வார்த்தைகளைவிட அதிக எரிச்சல் அவர் குரலில் இருந்தது. ”சரி சார்”  என்று சொல்லிவிட்டேன்.
       புற்று நோய் விளக்கப் பிரசுரங்கள், பொருட்காட்சியில் விநியோகிக்க முடியும் என்று தோன்றவில்லை. பெரும் அதிர்ச்சி அடைந்தோம்
( மீதி இரண்டாம் பாகத்தில்!)

   

3 comments:

  1. அடுத்ததும் படித்துவிட்டு எழுதுகிறேன். நல்லது செய்யணும்னு எண்ணம் இருந்தா மட்டும் போறாது, எப்படி யாரை லிங்க் பண்ணி உதவி கேட்கணும், நடையா நடப்பதற்கு அஞ்சக்கூடாது, மற்றவர்கள் எரிச்சலாகவோ, காயம் ஏற்படுத்தும்படி பேசுவதைக் கேட்டு சலிப்படையக்கூடாது என்பதெல்லாம் தெரிகிறது. தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. அயராத உழைப்பு. உங்கள் அனுபவங்கள் மெய் சிலிரிக்க வைக்கிறது! அற்புதங்கள் இப்படித் தான் நிகழும்.

    ReplyDelete
  3. என் பணி: அணில் பணி. அவ்வளவுதான்.
    இரண்டாம் பாகத்தை 5,6 நாளில் போடுகிறேன். பாருங்கள்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!