July 26, 2017

ஓ, மை GOD!

TIME பத்திரிகையின் இதழ்களில் வந்தவை)

காஸ்ட்ரோவின் சாதனை!
நீண்ட பேச்சுத் திறத்திற்கு  ஃபிடல் காஸ்ட்ரோவை யாரும் மிஞ்சவில்லைகின்னஸ் புத்தகத்தில் மிக நீண்ட உரை நிகழ்த்தியவர் என்று காஸ்ட்ரோவின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. 1986-இல் ஹவானாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மகாநாட்டில் 7 மணி 10 நிமிஷம் நேரம் பேசினாராம்!
காஸ்ட்ரோவின் மினி சாதனை!
பல வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். புது டில்லி விக்யான் பவனில் ஏதோ ஒரு உலக மகாநாடு. பல நாடுகளி-ருந்து பிரதமர்கள் வந்திருந்தனர். கியூபாவிலிருந்து காஸ்ட்ரோ வந்திருந்தார். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவரை கைகுலுக்கி வரவேற்றார். காஸ்ட்ரோ என்ன செய்தார் தெரியுமா? இந்திரா காந்தியைக் கரடிப்பிடியாகப் பிடித்து கட்டிக் கொண்டார். இந்திரா காந்தியினால் கழண்டு வர முடியவில்லை. நெளிந்து  பார்த்தார். முடியவில்லை.
நாற்காலியா, சிம்மாசனமா?
ஹாரி பாட்டர் கதைகள் எழுதி, இங்கிலாந்து ராணியை விட பணக்காரியாக ஆகிவிட்ட J.K.Rowling உபயோகித்த நாற்காலியை ஏலம் விட்டார்களாம். என்ன விலைக்குப் போயிற்று தெரியுமா? மூன்று லட்சத்து தொண்ணூற்று நாலு ஆயிரம் டாலர்களுக்கு! அது என்ன மந்திரசக்தி வாய்ந்த நாற்காலியா?
கால் காசு
1970-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கால்
டாலர் நாணயம் e-bay-இல் விலைக்கு வந்தது. அதை முப்பத்து ஐந்தாயிரம் டாலரைக் கொடுத்து ஒருத்தர் வாங்கி இருக்கிறார்!  (ஒரு காசு பெறாத கால் காசுக்கு  இவ்வளவு விலையா?).
மூடிகள், கோடிக்கணக்கில்...
ஆஸ்திரியா நாட்டில் ஒருவர் "பியர்' பிரியர்... இல்லை... இல்லை... "பியர்' மூடிகள் பிரியராம். அவர் புட்டி மூடிகளைச் சேர்க்க முனைந்து இதுவரை சேர்த்துள்ள  மூடிகளின் எண்ணிக்கை நூறு கோடியாம்.
ஹிட்லரின் புத்தகம்...
ஹிட்லரின் சுயசரிதை MEIN KAMF. அவர் தான் எழுதிய புத்தகத்தின் ஒரு பிரதியைத் தன்னிடம் வைத்திருந்தார். சமீபத்தில் அந்தப் புத்தகம் ஏலம் விடப்பட்டது. இருபதாயிரத்து அறுநூற்று ஐம்பத்து ஐந்து டாலருக்கு ($20,655) ஏலம் போயிற்றாம்!
சுட்டெரித்தது...
கடந்த  ஜூலை மாதம் 21-ஆம் தேதி குவைத் நாடு ஒரு உலக ரிகார்டைத் தொட்டது. அந்த  நாட்டில் வெய்யில் உலைக்களமாக அனல் கக்கியது
  எத்தனை டிகிரி தெரியுமா129.2  டிகிரி பாரன்ஹீட்!
உயரப்  பறந்து  உயர்ந்தவர்
அமெரிக்க இரட்டை சகோதரர்கள் ஸ்காட் கெல்லியும் மார்க் கெல்லியும்  NASA-வின் விண்வெளி வீரர்கள். ஸ்காட் கெல்லி கிட்டத்தட்ட ஒரு வருடம் விண்வெளியில் பறந்துவிட்டுத் திரும்பினார். அவர் விண்வெளியில் இருந்த சமயத்தில் அவருடைய சகோதரர் மார்க் கெல்லியை, விண்வெளியிலிருக்கும் ஸ்காட் உண்பது, உறங்குவது போன்றே  இருக்கு மாறு செய்தார்கள்.
ஸ்காட் கெல்லி விண்ணிலிருந்து திரும்பிய பிறகு - அதாவது 5440 தடவை உலகைச் சுற்றி வந்துவிட்ட பிறகு, அவரது உயரத்தையும் மார்க் கெல்லியின் உயரத்தையும் அளந்தார்கள். ஒரு வருட காலத்தில் பூமியின் ஈர்ப்பு சக்தி இல்லாத இடத்தில் இருந்ததாலோ என்னவோ, மார்க் கெல்லியை விட இரண்டு அங்குலம்  அதிகமாக  ஸ்காட் கெல்லி வளர்ந்திருந்தார்.
விண்வெளியில் ஒரு வருஷம் பயணம் செய்த ஸ்காட் கெல்லி எத்தனை சூரிய உதயங்களைப் பார்த்தார் தெரியுமா? பத்தாயிரத்து எண்ணூற்று எண்பது (10,800)!
தள்ளுமுள்ளுதான்....
ஒரே தள்ளுமுள்ளு! எதற்கு? "விண்வெளி வீரர்கள் தேவை' என்று NASA  செய்த விளம்பரத்திற்கு எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள் தெரியுமா? பதினெட்டாயிரத்து  முன்னூறு பேர்.
நீண்ட சுருட்டு!
கியூபா அதிபராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு2016 ஆகஸ்ட் 13-ஆம் தேதி 90வது வயது பிறந்த நாளை ஒரு சுருட்டுக் கம்பெனி             வித்தியாசமாகக் கொண்டாடி யது.
 அவருக்காக ஒரு சிறப்பு சுருட்டைத் தயார் செய்தார்களாம். உலகிலேயே நீளமான சுருட்டு அதுநீளம் : 295 அடி.
(குறிப்பு: காஸ்ட்ரோ சுருட்டு பிடிப்பதை எப்போதோ நிறுத்தி விட்டார்).
நீண்ட ஆயுள்...
கிரீன்லாண்டில், வடக்கு அட்லாண்டிக்கில் உள்ள ஷார்க் மீன்கள் கிட்டத்தட்ட 400 வருடங்கள் வாழ்கின்றனவாம். உலகிலேயே நீண்ட ஆயுளைக் கொண்ட உயிரினங்களாம்!


6 comments:

 1. எல்லாமே அருமையான துணுக்குகள். இந்த கால் சென்ட் டாலர் நாணயங்களை எங்க பெண் வீட்டில் கூட சேகரிக்கிறார்கள். அவங்களிடம் 1940 அதற்கு முந்தைய ஆண்டு நாணயங்கள் சேகரிப்பில் உள்ளன. இதுவும் ஒரு பொழுதுபோக்குனு நினைக்கிறேன்.

  ReplyDelete
 2. ஜே.கே.ரவ்லிங் செய்தியை ஏற்கெனவே எங்கேயோ படிச்சிருக்கேன்.

  ReplyDelete
 3. காஸ்ட்ரோ அவ்வளவு நேரம் பேசியிருப்பாரா? (இது என்ன பெரிய சாதனை.. "என் மனைவி கல்யாணம் ஆன அன்னைக்குப் பேச ஆரம்பிச்சா. இன்னும் ஓயலை" என்று மனசுக்குள்ளாவாவது எண்ணாத ஆண்கள் உண்டா?). காஸ்ட்ரோவைவிட, 7 மணி நேரம் வேறு வழியில்லாமல் உட்கார்ந்துகொண்டு கேட்டுக்கொண்டு (அல்லது பாவனை பண்ணிக்கொண்டு) இருந்த பார்வையாளர்கள்தான் பாவம்.

  பிரபலங்கள் உபயோகித்ததை வாங்கி எதுக்கு வச்சுப்பாங்க? இன்னொரு ஏமாளி பிற்காலத்தில் கிடைக்கலாம், நல்ல லாபத்துக்கு வித்துடலாம் என்பதைத் தவிர? (எனக்கு, சிலுக்கு கடித்த ஆப்பிள் 500 ரூபாய்க்கு ஏலம் போனது நினைவுக்கு வந்தது)

  'கால் டாலர்'-என்ன இருந்தாலும் பழைய காசு அல்லவா? மதிப்பு இருக்கத்தானே செய்யும். சௌதியில் ஒரு பெரிய Mall திறப்புவிழா. இதன் Owner one of the prince. அப்போ கதவை அடைக்கச் சொல்லி, 1 ரியால் காயின் யாரிடமாவது இருக்கிறதா என்று கேட்க, ஒரு பிலிப்பினோ தன் பர்சில் வைத்திருந்தார். அவருக்கு 50,000மோ அல்லது லட்சம் ரியாலோ பரிசாகக் கொடுத்ததாகச் சொல்வார்கள்.

  குவைத்ல 54 டிகிரி ஓகேதான். ஜூலை/ஆகஸ்டுல 50 டிகிரிக்கு மேல் சர்வ சாதாரணம் நிறைய அரபு தேசங்களில். இதுல HUMIDITY வேறு. ஏதோ சட்டம் இருக்காமே.. 50 டிகிரிக்கு மேல் போனால் விடுமுறை விடணும்னு (அதாவது மனிதர்கள் வேலை பார்க்கக்கூடாது என்று). அதனால் அனௌன்ஸ் செய்வதில்லை என்று சொல்வார்கள்.

  அந்த ஸ்காட் கெல்லி, திரும்ப உலகில் 1 வருஷம் இருந்தபிறகு உயரத்தை அளந்தார்களா (குறைஞ்சுடுத்தா இல்லை அதே உயரத்தில் இருக்கிறாரா என்று). என்ன என்ன வகையான ஆராய்ச்சி.

  அனைத்தையும் ரசித்தேன். வார மலரை, வாரமிருமுறை மலராக மாற்றுங்கள்.

  ReplyDelete
 4. வணக்கம் ஐயா சகோ திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களின் தளம் வழி வருகிறேன்.

  அனைத்து தகவல்களும் ஆச்சர்யமானவை இதில் கால் காசை 35000 டோலர் கொடுத்து வாங்கியவரை அறிவாளியாக ஏற்பது கடினமே...

  ஒருவேளை உணவுடன் இவ்வுலகில் எவ்வளவோ மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்பதை அறியாத மடந்தைகள்.

  இது உலகில் பல இடங்களிலும் நடந்து கொண்டே இருக்கிறது சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிளை ஒரு லட்சத்துக்கு ஏலம் எடுத்த முட்டாளும் நம் நாட்டில் உண்டு.

  செல்வத்தை கொடுத்த இறைவன் நல்ல இதயத்தை கொடுக்க மறந்து விடுகிறான்.

  அன்புடன்
  கிலலர்ஜி

  ReplyDelete
 5. நம்மைப் போல் இன்னொரு முட்டாள் வருவான், அதிக விலைக்கு அவன் தலயில் கட்டிவிடலாம் என்று தான் இப்படி வாங்குகிறார்கள். Wஎ manஉfacture high quality authentic Antiques என்று போர்டு
  போடாமல். பலர் ‘தயாரித்து’ வருகிறார்கள்!

  ReplyDelete
 6. துணுக்குகள் அனைத்தும் அருமை! முதல் துணுக்கு ஃபிடல் காஸ்ட்ரோ ஆம் வாசித்திருக்கிறோம்...

  எங்களுக்குத் தெரிந்த ஒருவர் தூங்கும் நேரம் தவிர பேசிக் கொண்டே இருப்பார். சில சமயம் தூக்கத்திலும் பேசிக் கொண்டே இருப்பார்...பாவம் அவருக்கு என்ன பிரச்சனையோ! ஆனால் அவர் பேசுவதைக் கேட்கத்தான் யாரும் இருக்க மாட்டார்கள்..

  பிரபலங்களின் ஆடைகள் பயன்படுத்திய பொருட்கள் என்று ஏலம் விடுவது அவ்வப்போது நடக்குமே...மறைந்த மைக்கேல் ஜாக்ஸனின் பொருட்கள் உடைகள் கூட ஏலம் விடப்பட்டு போட்டி போட்டு வாங்கினார்களாம்...வாங்கியவர்களில் ஒரு சிலர் மட்டுமே அதைப் பத்திரமாக பெருமைக்காக வைத்திருப்பார்கள் ஸ்டேட்டஸ் சிம்பலாகக் கூட....சிலர் அதனை விற்கவும் செய்வார்கள் லாபம் பார்த்திட. வாங்கும் பொருளின் விலையைப் பொருத்து இருக்கிறது...

  ஸ்காட் தகவல் வியப்பு!

  அனைத்தையும் ரசித்தோம்...

  துளசிதரன், கீதா (நாங்கள் இருவரும் நண்பர்கள். )

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!