July 15, 2017

குட்டித் துணுக்குகள்

என் பழைய நோட்டுப்புத்தகங்களில் கிடைத்த குட்டித் துணுக்குகள்.

உங்களுக்கு வெட்கமில்லை..?
அந்தக் காலத்தில்அதாவது எழுபதுகளில்அமெரிக்காவிலிருந்து ஒரு புத்தகம் வரவழைக்க வேண்டு மென்றால்பிரம்மபிரயத்தனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்நியச் செலாவணி சுலபமாகக் கிடைக்காது (டாலர் = ரூ.5 என்று   இருந்த காலம்).நான்பல அமெரிக்க எழுத்தாளர்களின்முக்கியமாக நகைச்சுவை எழுத்தாளர்களின்  விசிறி.
ஒரு சமயம் JACK PAAR என்ற காமெடியன் எழுதிய புத்தகம்,  தாரியா கஞ்ஜ் நடைபாதையில் கிடைத்தது. புத்தகம் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஜேக் பார் எழுதிய மற்ற புத்தகங்களையும் படிக்க விரும்பினேன். டில்லி  புத்தகக் கடைகள் எதிலும் கிடைக்கவில்லை.திடீரென்று ஒரு யோசனை வந்தது. அமெரிக்கன் லைப்ரரிக்குச் சென்றுஜேக் பாரின் வீட்டு முகவரியைத் தேடிக் கண்டு பிடித்தேன். அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். "நான் உங்களுடைய விசிறி. உங்கள் மற்ற புத்தகங்களைப் படிக்க விரும்புகிறேன். உங்கள் புத்தகத்தை எனக்கு அனுப்பினால் நன்றி உடையவனாக இருப்பேன். பழைய  புத்தகமாக  இருந்தாலும் சரி'' என்று எழுதினேன்
.

இரண்டுமூன்று வாரங்கள் கழித்துஅவரிடமிருந்து " My Saber is Bent' என்ற புத்தகம் வந்தது. எனக்கு ஒரே குஷி. (இந்த முறையைப் பின்பற்றி Joey Adams, Edmund Fuller, Jack Douglas ஆகியவர்களுக்குக் கடிதம் எழுதிபுத்தகங்களை வரவழைத்தது கிளைக்கதை!) ஜேக் பார் புத்தகத்தில் உள்ள  சுவையான துணுக்கை இங்கு தருகிறேன்."ஒருநாள் இரவு நானும்தயாரிப்பாளர் Paul Orr அவர்களும் பெர்லின் நகரில் உள்ள பெர்லின் ஹில்டன் என்ற ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண்மணி எங்களை நோக்கி வரு வதைப் பார்த்தேன்.எனது நீண்ட அனுபவம் எனக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தது. இப்படி வருபவர்கள்முக்கியமாக அமெரிக்க சுற்றுலாப் பயணிகள். என்னுடன் நீண்ட நேரம்என்  நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பார்கள்.அந்தப் பெண்மணி என்னிடம் வந்து, "ஹலோஜேக் பார்என்று சொன்னார்.டின்னருக்கு நடுவில் அவருடன் பேச விரும்பவில்லை. அதனால்ஜெர்மன் மொழியில் "இல்லை... இல்லை...என்றேன். (அதாவது } நான் ஜேக் பார் இல்லை என்று தெரிவித்தேன்).தவறாக யாரோ ஒருவரை ஜேக் பார் என்று  தான் நினைத்துவிட்டோம் என்று எண்ணி,  மன்னிப்பு கேட்டுவிட்டுஅருகில் காலியாக இருந்த மேஜைக்குச் சென்று உட்கார்ந்து கொண்டார்.அவரை நான் மறந்துவிட்டேன். என் நண்பருடன் நாங்கள் பேசிக் கொண்டிருந்த விஷயத்தைத் தொடர்ந்தேன். நாங்கள் ஆங்கிலத்தில்தான் பேசினோம்.  அந்தப்  பெண்மணிக்கு நாங்கள் பேசியது அரைகுறையாகக் காதில் விழுந்திருக்க வேண்டும். அவர் தன் மேஜையிலிருந்து எழுந்து என்னை நோக்கி வந்தார்.சற்று சிடுசிடுவான முகபாவத்துடன், "இது மகா வெட்கக்கேடான விஷயம் என்று நான் நினைக்கிறேன். உங்களை மாதிரி பிரபல நடிகர்கள் இங்கு வந்துதலைகால் தெரியாமல் குடிக்கிறீர்கள். நீங்கள் யார் என்பதுகூடத் தெரியாத அளவு குடிக்கிறீர்கள்...  ஹூம்..என்று கூறியபடியே  தன் மேஜைக்குப் போனார்.''
பாவம்மூக்கில் செமையாக யாரோ குத்து விட்டது போல உணர்ந்திருப்பார்!

போதும்போதும் நிறுத்து...
அமெரிக்காவில் 30-40 களில் ரேடியோவில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்த Walter Winchell மிகவும் புகழ்பெற்றவராக 

விளங்கினார். அவர் செய்தியாளர் தான். ஆனால் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் இருக்குமாம். அவர்அப்போது அதிபராக இருந்த ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் ஆதரவாளராக மட்டு மல்லநண்பராகவும் இருந்தார். அவரைரூஸ்வெல்ட்அமெரிக்க கடற்படையில் லெப்டினன்ட் கமாண்டர் என்ற பதவியில் (கெளரவ பதவிக்கு?)  அமர்த்தி விட்டார். அவருடைய வேலைகளில் ஒன்று அமெரிக்க கப்பற்படை ஊழியர்கள் நலனுக்காகப் பணி புரியும் அமைப்   பிற்கு நிதி திரட்டுவது. மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ஒரு (கலை?) நிகழ்ச்சியை நடத்தி இரண்டரை லட்சம் டாலர் திரட்டிக் கொடுத்தாராம்.கப்பற்படை அதிகாரிகள் அசந்து போய்விட்டார்கள். கடற்கரை காவல் படைக்கு நிறைய கண்காணிப்புப் படகுகள் தேவையாக இருந்தன- ஜெர்மன்  நாட்டு சப்மரீன்கள் வருவதைக் கண்காணிக்க. ஆகவேபடகுகளைச் சொந்தமாக வைத்திருப்போர்அவற்றைக் கப்பற்படைக்குக் கொடுத்து உதவும்படி வேண்டு கோள் விடுக்கச் சொன்னார்கள். ஒரு போட்டிற்கு ஒரு டாலர்ஒரு அடையாளத் தொகையாகத் தரப்படும் என்றும் தெரிவிக்கச் சொன்னார்கள்.வின்செல் தனது நிகழ்ச்சியில், Uncle Sam-க்கு உங்கள் படகுகளைக் கொடுங்கள் என்று தன் பாணியில் கூறினார்.சில நாட்கள் கழித்துகப்பற்படை அதிகாரிகள் அவரைத் தொடர்பு கொண்டார்கள்."உங்கள் ரேடியோ அறிவிப்புகளில் இந்த படகு பற்றிய வேண்டுகோள் விடுவதை நிறுத்தி விடுங்கள். இதுவரை இரண்டாயிரம் படகுகள் வந்து விட்டன. எங்கள் தேவையை விடப் பல மடங்கு அதிகம்'  என்றார்கள்.அதன்பிறகு வின்செல்தன் வழக்கமான நிதி திரட்டும் பணியில் இறங்கி னார்.அதிபர் ரூஸ்வெல்ட்சில நாட்கள் கழித்து ஒரு நிருபர் கூட்டத்தில் பேசியபோது, "வால்டர் வின்செல்... கப்பற்படை நலன் உதவிக்காக நீங்கள் வேண்டுகோள் விடுவதை உடனே நிறுத்தி விடுங்கள்''  என்றார். "மை காட்... மிஸ்டர் பிரசிடெண்ட்ஏன்... என்ன ஆச்சு?''  என்று வின்செல் அதிபரைக் கேட்டார்.அதற்கு அதிபர் தந்த பதில் : ஏகப்பட்ட புகார்கள் வந்து விட்டன. செஞ்சிலு வைச் சங்கம் போன்று பல சிறப்பான பணிகளைச் செய்யும் தொண்டு நிறு வனங்களிடமிருந்து வந்துள்ளன. கப்பற்படை நலனுக்கே அனைவரும் பணம் அனுப்புகிறார்கள். மற்ற நிறுவனங்களுக்கு நிதி  உதவி  எதுவும் வருவதில்லை.ஆதாரம் :  Canned Laughter - Peter Hay.

சிறு கொசுவும் நோபல் பரிசு பெற உதவும்!
நோபல் பரிசுகள் வழங்குவது 1900-இல் துவங்கியது.அதற்கு அடுத்த வருடம்,  சர்.ரொனால்ட் ராஸ்  (Ronald Ross) என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிக்கு அளிக்கப்பட்டது.
அதற்கு  ஐந்து வருடங்களுக்கு முன்புஇந்தியாவுக்கு வந்து ஏதோ ஆராய்ச்சிகள் செய்துகொண்டி ருந்தபோது, "அனாஃபிலஸ்கொசுதான் மலேரியா பரவச் செய்வதாகக் கண்டு பிடித்தார்*. இதன் பயனாகமலேரியாவைக் கட்டுப் படுத்தத் தகுந்த  நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது.ராஸ் ஒரு கவிஞரும்,  எழுத்தாளரும் கூட. கல்கத்தா பிரசிடென்சி மருத்துவ மனையில் ராஸ் அவர்களுக்கு வைக்கப்பட்டுள்ள நினைவுச்   சின்னத்தில் அவர் எழுதிய கவிதையைச் செதுக்கி வைத்துள்ளார்கள்.(* தேதி : 1897-ஆம் ஆண்டுஆகஸ்ட் 20)
கொசுவைப் பற்றி தான் கண்டுபிடித்த தேதியை அவர் "கொசு தினம்' (Mosquito Day) என்று அவர் பெயர் வைத்துவிட்டார். ஆண்டுதோறும் அந்த தேதியில் அதைக் கொண்டாடினாராம்!பின்குறிப்பு :  மருத்துவ லைசென்ஸ் பரீட்சையில் இவர் தோல்வி அடைந்தவராம். பின்னாளில் நோபல் பரிசு மட்டுமல்ல,  பிரிட்டிஷ் அரசின் KNIGHT  பட்ட மும் பெற்றார்! எல்லாம் கொசு கொடுத்த கொடை!

உங்களுக்கு  ஒரு  டாலர்!
எப்படி யஹுதி மெனுஹின் வயலின் மேதையோஅந்த அளவு பியா னோவில் மேதையாக விளங்கியவர்  PEDERWSKI  (போலந்து நாட்டவர்). பின்னால் போலந்தின் பிரதம மந்திரியாக ஆனவர்.
ஒருசமயம் அவர் அமெரிக்காவிற்கு வந்தபோது பாஸ்டன் நகருக்குச் சென்றார். அப்போது வீதி ஓரம் உட்கார்ந்திருந்த சிறுவன் "பூட் பாலிஷ்... பூட் பாலிஷ்...'  என்று கூப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவன் முகம் அழுக் குப் படிந்து (பாலிஷ்?) இருந்தது. அவன் மேல் இரக்கம் கொண்டு,  "தம்பிநீ உன் முகத்தை நன்றாக அலம்பிக்கொண்டு வந்தால் அரை டாலர் தருகிறேன்என்றார். (அரை டாலர்  என்பது  அந்த காலகட்டத்தில் பெரிய தொகை).பையன் உடனே ஓடிஅருகிலிருந்த நீரூற்றில் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தான். இவர் அவனிடம் அரை டாலரைக் கொடுத்து விட்டு,  மேலே நடந்து செல்ல முற்பட்டார். காசை வாங்கிக் கொண்ட பையன் தன் ஜேபி யிலிருந்து எதையோ எடுத்து,  "சார்.. . சார்... இந்தாங்க... ஒரு டாலர் வைச்சுக்குங்க... சலூனுக்குப் போய் நல்லா ஹேர் கட்டிங் செஞ்சுக்கோ ங்க...என்றான். (பார்க்க : பெடர்ஃப்ஸ்கியின் படம். பையன் காசு கொடுத்த காரணம் புரியும்!).

மூன்று நாளைக்கு முன்னதாக...
லூயிஸ் XI   மன்னருக்கு ஒரு பெண்ணின் மீது காதல் ஏற்பட்டது. தனது ஜோதிடரை அழைத்துகுறிப்பிட்ட பெண்ணின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்டார்.

ஜோதிடர், "மன்னரே... அந்தப் பெண்ணின் ஜாதகத்தை நான் பார்த்தேன். ஆயுள் ரேகை சரியாக இல்லை. அதிக நாட்கள் அவள் உயிருடன் இருக்க  மாட்டாள்'  என்று  சொன்னார்.  அவர் சொன்னபடியே,  ஒன்றிரண்டு வாரங்களுக்குப் பிறகு அந்தப் பெண் திடீரென்று  மரண மடைந்தார்.  மன்னருக்குப் பெரிய அதிர்ச்சி. ஜோதிடர் ஜோதிடத்தால்தான் அவள்  இறந்து விட்டாள் என்று முடிவுக்கு வந்தார்.ஜோதிடருக்கு ஆள் அனுப்பினார். ஜோதிடரை மாடியிலிருந்து தூக்கி வீசி எறிய வேண்டும். அதுதான் சரியான தண்டனை என்று எண்ணினார்.  ஜோதிடர்  வந்ததும், "நீங்கள் மகா கெட்டிக்காரர் என்று  சொல்லிக்   கொள்கிறீர்களே,  எல்லாம் தெரிந்தவராச்சே... உங்கள் ஆயுள் எவ்வளவு நாள் இருக்கிறதுஎன்று சொல்லுங்கள் பார்ப்போம்...என்றார்.மன்னரின் மனதில் ஏதோ வஞ்சகத் திட்டம் இருக்கிறது என்பதை ஊகித்துக் கொண்ட ஜோதிடர் சொன்னார் : "மன்னரே! உங்கள் ஆயுள் முடிவதற்கு மூன்று நாட்கள் முன்பு  நான் இறப்பேன்...என்றார்.

 மன்னர் அதை நம்பி (அதாவது பயந்து) ஜோதிடரை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டார்!
போகத் தேவையில்லை...
அமெரிக்காவில் நடந்த சம்பவம். இரண்டு செனட்டர்கள் (Senators) ஏதோ ஒரு விஷயமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்

அப்போது ஒருத்தர் மற்றவரைப் பார்த்து, "Go to Hell' என்று கத்திவிட்டுப் போய்விட் டார்.அந்த மாநில கவர்னர் Coolidge- சந்தித்தார் இரண்டாம் செனட்டர். நடந்தவற்றைக் கூறி, "கவர்னர்... இதற்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண் டும்என்றார்.Coolidge நிதானமாக அவரிடம், "ரொம்பப் பதட்டப்படாதீங்க. எனக்கு சட்டம் தெரியும். நம்ப மாநில சட்டத்தின்படி நீங்கள் அங்கு போக வேண்டிய கட்டாயம் இல்லை... கவலையை  விடுங்கள்...என்றார். 

7 comments:

 1. எல்லாம் ரசிக்க வைக்கும் துணுக்குகள்.

  எனக்கு இப்போ சந்தேகம். உங்க லைப்ரரில எத்தனை புத்தகங்கள் எழுத்தாளர்களே அனுப்பினது என்று. By the by, புத்தக வேண்டுகோள் அனுப்ப உங்கள் அட்ரஸ் கிடைக்குமா? :-). -- உடனே எழுத்தாளர் அட்ரஸை- நானே கண்டுபிடித்தேன், புத்தகம் கேட்டுத்தான் அவர்களுக்குக் கடிதம் போட்டேன், அவங்க அட்ரசைக் கேட்டு அல்ல-னு சொல்லிடாதீங்க.

  ReplyDelete
 2. என் அட்ரஸ் கிடைக்கும் புத்தகம் கேட்டு எழுதினால் “ அடடா, நேற்று கேட்டிருக்கக் கூடாதா? ஒரு நேயர் கேட்டார் என்று அவருக்கு அனுப்பிவிட்டேனே!” என்று எழுதி விடுவேன்!

  ReplyDelete
 3. லூயிஸ் 11- ஒரு ஜோதிடரிடம், அடுத்த 6 மாசம் எப்படி இருக்கும், என்னவெல்லாம் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று கேட்டால் ஜோதிடம் சொல்லமுடியும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விஷயம் செய்யும் முன்பு, அவர்கிட்ட ஆலோசனை கேட்டால் அவருக்கு எப்படிச் சொல்லமுடியும்? அவர் சொல்லுவதில் 50% நடக்க வாய்ப்பு இருக்கும் (ப்ராபப்லிடி மூலம்)

  எடவ்ர்ஸ்கிக்கு நடந்தது உண்மையா? 1/2 டாலரே பெரிய பணமாக இருந்த காலத்தில் ஏழைப் பையன் 1 டாலர் கொடுத்திருக்கக்கூடுமா?

  'கொசு' நிகழ்ச்சியைப் படித்தபோது, என் கல்லூரி நாட்களில் எங்கள் ப்ரொஃபசரின் மனைவி, பி.ஹெச்.டிக்காக, வீட்டில் தன்னுடைய அறையில் பல்வேறுவகையான கொசுக்களை வளர்த்து ஆராய்ச்சி செய்துவந்தார். அதனால் வீட்டில் உள்ளவர்கள் படும் கஷ்டங்கள் அவ்வப்போது வெளியில் வரும். (அவங்க வீட்டில் அன்யூஷுவலாக கொசுக்கள் தொல்லை இதனால் அதிகமாம்)

  'ரேடியோ நிகழ்ச்சி'-நம்ம ஊரில் 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி நடத்தியவரை நினைவுகூற வைத்துவிட்டது. ரேடியோ அறிவிப்பாளர்களுக்கு நேயர்களின் ஆதரவு அதிகம்தான். சிவாஜிகணேசன் அவர்கள் தினமும் 'இன்று ஒரு தகவல்' கேட்காமல் இருக்கமாட்டாராம் (எத்தனை வேலைகள் இருந்தபோதும்)

  பிரபலமாக இருந்தாலே அவர்களுக்குத் தனிமை என்பது போய்விடும். ஒரு சமயத்தில் அவர்களுக்கு இயல்புவாழ்க்கை என்பதும் கஷ்டம்தான்.

  வித்தியாசமான துணுக்குகள். ரசித்தேன்.

  ReplyDelete
 4. சில துணுக்குகள் அடிப்படையில் உண்மையானவை. காலப்போக்கில் அவரவர் மசாலா சேர்த்து விடுகிறார்கள்.10 சென்டாக இருப்பதைப் பத்து டாலர் என்று மெள்ள மெள்ள ஏற்றி விடுவார்கள்.

  ReplyDelete
 5. அருமையான துணுக்குகள். கடைசித் துணுக்கு ஹைலைட்! கவர்னருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு.

  ReplyDelete
 6. ஸ்வாரஸ்யமான துணுக்குகள்....

  ReplyDelete
 7. ஜேக் பார் !! அஹஹஹஹ் செம!!! அதற்கு அவர் பேசியே இருக்கலாமோ??!!

  ஜோசியருக்கு நல்ல காமன் சென்ஸ்

  செனட்டர் ஹஹஹ்!!
  அனைத்தும் சுவாரஸ்யமானவை! ரசித்தோம்..

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!