December 21, 2013

புத்தகங்களும் நானும்-1

புத்தகங்களும் நானும்
(பல பகுதிகளாக நிறைய எழுத உத்தேசம்.)

எனக்கு எப்போது புத்தகப் பைத்தியம் பிடித்தது என்பது தெரியாது. என் அப்பாவிற்குப் பலதரப்பட்ட புத்தகங்கள் மிது ஈடுபாடு உண்டு, இசை, மொழி, வான சாஸ்திரம்.  தெலுங்கு. சமஸ்கிருத புத்தகங்கள், நிகண்டு, நாலாயிரம் என்பவை மட்டுமல்ல, அந்த காலத்தில் TIMES OF INDIA-வின் ஹோம் லைப்ரரி கிளப்பில் சேர்ந்து  Worlds Best Short Stories  போன்ற பல தடிமனான புத்தகங்களையும், அமெரிக்காவிலிருந்து வெளியாகும்  POPULAR SCIENCE  போன்ற பத்திரிகைகளையும்  வரவழைத்தார்; இத்துடன் தியாகராஜர் கீர்த்தனைகள், திலகர் கீதை, அயினி அக்பரி என்று பலதரப்பட்ட புத்தகங்கள். அவற்றையெல்லாம் புரட்டிப் பார்ப்பேன். ‘
எதிர் வீட்டிலிருக்கும் என் நண்பன்  வெங்கடேசன் வீட்டில்.வடுவூர்  ‘திகம்பரசாமியார், ஜே. ஆர். ரங்கராஜு நாவல்கள் இருந்தன. அவைகளை கடன் வாங்கி விழுந்து விழுந்து படிப்பேன்.

விகடன், கல்கி வார இதழ்களைத் தேடித் தேடி படிப்பேன். தீபாவளியன்று விடிகாலையில் தீபாவளி மலர்களை படித்தால்தான் பண்டிகை முழுமையடையும்.
அதனால், பணத்தைச் சேர்த்து, செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்த சுதேசமித்திரன் புக் ஸ்டால்’  நாராயணனிடம் முன்பணம் கட்டி விடுவேன். பாவம், நாராயணன், அவசரம் அவசரமாகத் தன் வீட்டில் தீபாவளியை கொண்டாடிவிட்டு, தீபாவளி மலரை வீடு வீடாகப் போய்ப் போடுவார். விடிகாலை ஐந்தாவது மணிக்குள் மலரை என் வீட்டிற்குக் கொண்டு வந்து கொடுத்து விடுவார்.
எனக்கு நாராயணன் மீது கொஞ்சம் பொறாமையும் உண்டு. எத்தனைப் புத்தகங்களுக்கு மத்தியில் அவருடைய பொழுது கழிகிறது! காசு செலவில்லாமல் அவர்  எல்லா பத்திரிகைகளையும் படிக்கலாம்.

அட்வான்ஸ் கொடுக்கும் சாக்கில் அவருடைய ஸ்டாலில் உள்ள தமிழ்ப் புத்தகங்களை மேய்வேன். சில சமயம் மாலை வேளைகளில் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் அவருடைய ஸ்டாலில் புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பேன்.

என் பொறாமை வளையத்திற்குள் இருந்த மற்றொருவர் வாசு(?) என்பவர். வாசு எங்கள் ஊர்க்காரர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக ஸ்டாலை நிர்வகித்து வந்தார். அது சற்று பெரிய ஸ்டால். பல மொழிப் பத்திரிகைகளும், வீக்லி, பிளிட்ஸ், காரவன். போன்ற பத்திரிகைகளும் இருக்கும். எனக்கு சென்ட்ரல் ஸ்டேஷன் போக வேண்டிய வேலை வந்தால், சற்று முன்னதாகப் போய்,  பத்து பதினைந்து நிமிஷம் ஸ்டாலில்  இருப்பேன்.

  சென்னை ஜி,பி. ஓ.வில் வேலைக்குச் சேர்ந்த பிறகு பீச் ஸ்டேஷனில் இருந்த சுதேசமித்திரன் புக் ஸ்டாலில் வாரம் ஒரு புத்தகமாவது வாங்கி விடுவேன். புலியூர் கேசிகனின் தமிழ் இலக்கிய புத்தகங்கள் (இரண்டு ரூபாய்தான்!), மர்ரே ராஜம் புத்தகங்கள் (ஒரு  ரூபாய்தான்!), சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணை, அரு. ராமநாதனின் வெளியீடுகள், அமுத நிலையம் வெளியீடுகள் என்று வாங்கி விடுவேன். ( ஒரு ரூபாய் என்பதே அதிக விலைதான். சென்னை-செங்கல்பட்டு பஸ் கட்டணம் 75 பைசா என்று இருந்த காலம்!)

டில்லி வந்த பிறகு என் அலுவலகத்திலிருந்து மூன்றாவது கட்டடத்தில் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் இருந்ததை பார்த்த எனக்கு லாட்டிரி பரிசு அடித்த மாதிரி மகிழ்ச்சி ஏற்பட்டது, சில வருஷங்கள் உறுப்பினர் சந்தா எதுவும் இல்லை. பிறகு 15 ரூபாய் என்று வைத்தார்கள்.
சுமார் பத்து நிமிஷ நடை தூரத்தில் சென்ட்ரல் செக்ரடேரியட் நூலகமும் இருந்தது. அது ஒரு சுரங்கம். . பல அரிய புத்தகங்கள், பழைய இதழ்கள் எல்லாம் மண்டிக் கிடந்தன. புத்தகங்கள் படிந்திருந்த தூசு. எல்லா புத்தகங்களையும் ‘கனமான’  புத்தகங்களாக ஆக்கி விட்டிருந்தன! அங்கிருந்து  ஒரு சமயம் இரண்டு புத்தகங்கள் தான் எடுத்து வரமுடியும்.

இந்த சமயத்தில் யாரோ ஒரு புண்ணியவான், “ ஞாயிற்றுக் கிழமைகளில் பழைய டில்லியில் இருக்கும் தாரியாகஞ்ச் தெருவிற்குப் போயிருக்கிறாயா? தெரு முழுதும் நடைபாதையில் பழைய புத்தகங்கள்தான்” என்றார். முதன் முதலில் போனபோது பிரமித்துப் போனேன்.  டில்லி கேட் எனப்படும் இடத்திலிருந்து துவங்கி ஜம்மா மசூதி வரை போகும்  வீதி. ஒரு பக்க நடைபாதையில் தான் கடைகள் இருக்கும். எதிர்ப்பக்கம் பரிதாபமாகக் காலியாக இருக்கும். 

December 06, 2013

மன்னிக்கவும்

என் கோடிக்கணக்கான வாசகர்களுக்கு ( ”என்னது, கோடியா?“ என்று கேட்பவர்கள், வேண்டுமானால் ஒன்று இரண்டு குறைத்துக் கொள்ளலாம்!).

தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த பதிவு மேலும் சில நாட்கள் தாமதமாகும். --கடுகு

November 17, 2013

புள்ளிகள்: சச்சின்........

பாரத ரத்னா சச்சின்
சச்சின் டெண்டுல்கர்  கொண்டாட்டத்தின் நம் பங்காக ”சச்சினும் நானும்” என்று ஒரு பதிவு எழுத எண்ணினேன்.  சச்சினை எனக்குத் தெரியாதது மட்டுமல்ல, கிரிக்கெட்டைப் பொருத்தவரை  நான் ஒரு பெர்னார்ட் ஷா. (எழுத்தைப் பொருத்தவரை அல்ல!) (கிரிக்கெட்டைப் பற்றி பெர்னார்ட் ஷா சொன்ன  ஒரு பொன்மொழி கிரிக்கெட்டை விடப் பிரபலம்,)
ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.
’பூஸ்ட் ஈஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி” என்று கபில்தேவ் கூறும் விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். 90-களில் அது பிரபலமான விளம்பரம்.
உலக கோப்பையை வென்றதும் இந்திய டீமின் காப்டன் கபில் தேவ் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். நான் பணியாற்றிக் கொண்டிருந்த நிறுவனம்தான் பூஸ்ட் விளம்பரத்தை  உருவாக்கியது.
சில வருஷங்களுக்குப் பிறகு,சிறுவர்களை வளைத்துப் போட புதிய பூஸ்ட் விளம்பரத்தைத் தயார் பண்ண முனைந்தோம்.
அதன்படி உருவாக்கப்பட்ட விளம்பரம் இது தான்” ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மைதானத்தில் கபில் தேவ் வெளுத்துக் கட்டுவதை,  கூட்டத்தில்  ஒரு பையன் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவன் உற்சாக மிகுதியால் எழுந்து நின்று கையை உயர்த்தி, உரத்தக் குரலில் ” ”நானும் பூஸ்ட் சாப்பிட்டுப் பெரியவனானதும் கபில்தேவ் மாதிரி பெரிய கிரிக்கெட் வீரனாவேன்” என்று சொல்கிறான்.

இந்த பூஸ்ட் விளம்பரமும் பிரபலமாயிற்று. இதைத் தமிழில் முதலில் தயாரித்த போது கபில்தேவ் குரலில் பேசக்கூடிய ஒரு தமிழரை பம்பாயில் தேடிப்பிடித்து ரிகார்ட் செய்தது தனிக் கதை.
 இந்த கால கட்டத்தில் சச்சின் பிரபலமடைய ஆரம்பித்தார். எங்கள் கிரியேட்டிவ் டைரக்டருக்கு திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. ”நான் கபில்தேவ் மாதிரி பெரிய கிரிக்கெட்டராக ஆவேன்” என்று சூளுரைத்த அந்தப் பையன் வளர்ந்து பெரியவனானதும், சச்சின் டெண்டுல்கராக ஆவது போல் மார்ஃபிங் செய்து  காட்டலாம், என்று ஐடியா கொடுத்தார். அப்படியே படம் எடுக்கப்பட்டது. அத்துடன்  ’பூஸ்ட் ஈஸ் த ஸீக்ரெட் ஆஃப மை எனர்ஜி’ என்று கபில் தேவ் சொன்னதும்  அந்த சிறுவன் (அதாவது, சச்சின்) அதை மாற்றி  ’பூஸ்ட் ஈஸ் த ஸீக்ரெட் ஆஃப் அவர்  எனர்ஜி’ என்று   கூறுவார். பின்னால் மேலும்  இருவரும் சேர்ந்து ஒரே குரலில் ’பூஸ்ட் ஈஸ் த ஸீக்ரெட் ஆஃப் அவர் எனர்ஜி’ என்று கூறுவதாக மாற்றப்பட்டது.

இந்த விளம்பரங்களும் பரபரப்பாகப் பிரபலமாகிவிட்டது.  ஒரு தொடர்ச்சியாகச் செய்யப்பட்ட  விளம்பரமாக இது பாராட்டும் பரிசும் பெற்றது.
இந்த விளம்பரப் படம் தயாரான சமயம் சச்சின் எங்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தாராம். (அந்த சமயத்தில் நான் சென்னை  வந்திருந்தேன்.).

 ’நான் ஒரு இந்தியன்” என்று ஒரு சமயம் சச்சின் சொன்னது எல்லோருக்கும் நினைவிருக்கும். அவர் இந்தியன் மட்டுமல்ல, பாரத ரத்னாவும் ஆகிவிட்டார்.
 சச்சினுக்கு வாழ்த்துகள்!
அமுல் விளம்பரம்


நான் ஒரு இங்கிலீஷ்காரன். 
  இங்கிலாந்தின் பிரதமராக (1885) இருந்தவர் லார்ட் பாமர்ஸ்டன் (  LORD PALMERSTON)
பாமர்ஸ்டனிடம் ஒரு ஃப்ரெஞ்சு தொழிலதிபருக்கு ஒரு வேலை ஆகவேண்டியிருந்தது. பாமர்ஸ்டனுக்கு ஐஸ் வைக்கும் உள் நோக்கத்துடன் அந்த தொழிலதிபர் சொன்னார்  **“நான்  ஃப்ரெஞ்சுக்காரனாக பிறந்திருக்காவிட்டால், இங்கிலீஷ்காரனாக இருக்க விரும்புவேன்.”

இதைக்கேட்ட லார்ட் பாமர்ஸ்டன், “ஓ அப்படியா! நான் இங்கிலீஷ்காரனாக பிறந்திருக்காவிட்டால்,  இங்கிலீஷ்காரனாக இருக்க விரும்புவேன்!”
நான் ஒரு இந்தியன் என்று ஒரு சமயம் சச்சின் சொன்னது  மாதிரி இவர் சொல்லவில்லையே தவிர ’நான் ஒரு  இங்கிலீஷ் காரன்’ என்று கூறாமல் கூறியிருக்கிறார்.

** If I was not born a Frenchman, I would wish to be an Englishman!"
 ** If I was not born  an  Englishman, I would wish to be an Englishman!"

November 11, 2013

ஸ்ரீவேணுகோபாலன் மறைந்தார்

±ý «Õ¨Á ¿ñÀ÷ ‚ §Åϧ¸¡À¡Äý (Ò‰À¡  ¾í¸Ð¨Ã) »¡Â¢Ú Á¡¨Ä ¦ºý¨É¢ø ¸¡ÄÁ¡É¡÷.
«ÚÀÐ ÅÕ¼ ¿ñÀ÷.«Å÷ Á¨È× ±ÉìÌ Á¡¦ÀÕõ þÆôÒ.
þô§À¡Ð «¦Á¡¢ì¸¡Å¢ø þÕ츢§Èý.
§¿¡¢ø «ïºÄ¢ ¦ºÖò¾ÓÊ¡¾Ð ±ý §º¡¸ò¨¾ §ÁÖõ «¾¢¸¡¢ì¸î¦ºö¸¢ÈÐ.
«Å÷ ¬ýÁ¡ º¡ó¾¢Â¨¼Âô À¢Ã¡÷ò¾¢ì¸¢§Èý 
- À¢ ±Š Ãí¸¿¡¾ý,
¸ÎÌ
¾¡Ç¢ôÒ
அவரைப் பற்றி நான் எழுதிய பதிவுக்குச் செல்ல
இங்கே சொடுக்கவும்:  ஸ்ரீவே


November 02, 2013

கதம்பம்

 கலியாணங்கள்
கலியாணங்கள் பல விதத்தில் மாறிப் போய் விட்டன. திருமணத்திற்கு முதல் தினமே ரிசப்ஷன் என்று வந்து விட்டது.  முதல் தினம் அரை நாள், முகூர்த்தம் அரை நாள் என்று கல்யாணங்களைச் சுருக்கி விட்டார்கள். .(பழைய காலத்தில்  5 நாள் கலியாணம்  நடந்தது என்று சிலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.) ஒர் விதத்தில் இப்படி ஒரே நாளில் நடத்துவது   நல்லது தான், பெண் வீட்டாருக்குச் செலவு குறைகிறது.
ஆனால் சில புது வழக்கங்கள் வந்து  விட்டன. தரையில் அமர்வது போயே போய்விட்டது. எல்லாருக்கும் நாற்காலிதான்.  பொதுக் கூட்டங்களுக்கே நாற்காலி என்று ஆகி விட்டது என்னும்போது கலியாணங்களில் வராமல் இருக்குமா?
வரவேற்பு மேஜையில் பூ, பன்னீர், சர்க்கரை அல்லது கற்கண்டு இருக்கும். சமீப காலங்களில் அவற்றுடன்  வேறொன்றும் சேர்ந்துவிட்டது, அது ஒரு ’கவர்கள் பண்டில்’. அதில் டிசைன்களுடன், “வாழ்த்துகளுடன்” என்றும் அச்சடிக்கப்பட்டு இருக்கும்.  தவறாமல் மொய் எழுதுவதற்கு மறைமுக நினைவூட்டல்!

இன்னொரு புது வழக்கம்  வந்துவிட்டது. தாலி கட்டப்பட்டதும் எல்லாரும் அரக்கப் பரக்க,மேடைஏறி, மணமகன், மணமகள். அவர்களது பெற்றோர்கள் ஆகியவர்களுக்குக் கை கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஒரே களேபரம்.  புரோகிதரோ,  “இன்னும் சப்தபதி எல்லாம் இருக்கு.. அதுவரைக்கும்  பொண்ணு  கையை மாப்பிள்ளை  பிடிச்சுண்டே இருக்கணும். அதுதான் சாஸ்திரம்” என்று சொன்னாலும் யாரும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. மேடையில் இருக்கும் பூ, பழங்களை  மிதித்துகொண்டே போய், கைகுலுக்குவதோடு, கவரையும் திணித்துவிட்டு ”ஆபீஸில் மீட்டிங்”, “இன்ஸ் பெக் ஷன்” என்று (பொய்) சொல்லிவிட்டு, நேரே டைனிங் ஹாலுக்குப் போகிறார்கள்! இந்த சமயத்தை நழுவவிட்டால், அன்பளிப்பு கொடுக்க பின்னால் அரை மணி அல்லது ஒரு மணி நேரம்  கியூவில் நிற்க வேண்டி இருக்கும் என்பது ஒரு ரகசிய காரணம்!!
ஒன்றிரண்டு திருமணங்களில் புரோகிதர்,  சப்தபதியின் முக்கியத்துவம் என்ன, எப்போது கை கொடுக்கலாம் என்று ஒரு சின்ன உபன்யாசமே செய்கிறார். ஆனால் யார் கேட்கிறார்கள்? இனிமேல் அழைப்பிதழ்களில் ”சப்தபதி முடியும்வரைக் கைகுலுக்குவதைத்  தவிர்க்கவும்” என்று  அச்சடிப்பார்கள் என்று நினக்கிறேன்!
(கலியாணங்களில் செருப்பு திருடு போகும் ( அறுவை) ஜோக்குக்கள்  இப்போது பத்திரிகைகளில் வருவது இல்லை. காரணம் யாரும் செருப்பைக் கழட்டுவதில்லை -டைனிங் ஹாலில் கூட!)

 மாறிப் போன டயலாக்குகள்.
  OVER THE YEARS சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேட்டவை.
1960  களில்
“ குழந்தை.. டில்லி போனதும் ‘பத்திரமாய்ப் போய் சேர்ந்தேன்னு ஒரு கார்டு போட்டுடு.”
“ சரிப்பா. அப்படியே செய்றேன்.”
*          *            *
1970  களில்:
”குப்பு.. டில்லி போனதும் தந்தி கொடுத்துடு.”
“ஓ,கே, அப்பா.”
1980 களில்
”சுரேஷ்.. டில்லி போனதும் எகஸ்பிரஸ் தந்தி கொடுத்துடு”
“ஓ,கே, டாடி.”
1990 களில்
“நீல்.. டில்லி  போனதும் ஒரு டிரங்கால் பண்ணி சொல்லிடு.”
“ யா.. டாட், ஐ வில்!”
2000 களில் .
“அக்‌ஷய்..டில்லி  போனதும் ஒரு எஸ்.எம்.எஸ் கொடுத்துடு.”
 ”DONE....Bye.."
2010 களில்
” ஷிவ்..டில்லி  போனதும்  எனக்கு மிஸ்டு கால் கொடு. நான் கூப்பிடறேன்!:”
“எந்த போனுக்கு? லேண்ட் லைனுக்கா? ஐஃபோனுக்கா?  பிளாக் பெர்ரிக்கா?
ஐ-பேடுக்கா?
2020 களில்
“இத பாரு.. பேஸின் ப்ரிட்ஜ் போனதும் போன் பண்ணு. அப்புறம் விஜயவாடா, நாக்பூர், இடார்ஸி, ஆக்ராவில் பண்ணு. டில்லியிலே ரயிலை விட்டு இறங்கறதுக்கு முன்னே பண்ணு.,  மொத்தம் ஆறு பையையும்  எடுத்துண்டுட்டியான்னு சொல்லு.”
“சரி..சரி..ச்ர்ர்ர்ர்ர்ரி... அடுத்த தடவையிலிருந்து ஏர்ல தான்.”