பாரத ரத்னா சச்சின்
சச்சின் டெண்டுல்கர் கொண்டாட்டத்தின் நம் பங்காக ”சச்சினும் நானும்” என்று ஒரு பதிவு எழுத எண்ணினேன். சச்சினை எனக்குத் தெரியாதது மட்டுமல்ல, கிரிக்கெட்டைப் பொருத்தவரை நான் ஒரு பெர்னார்ட் ஷா. (எழுத்தைப் பொருத்தவரை அல்ல!) (கிரிக்கெட்டைப் பற்றி பெர்னார்ட் ஷா சொன்ன ஒரு பொன்மொழி கிரிக்கெட்டை விடப் பிரபலம்,)
ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.
’பூஸ்ட் ஈஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி” என்று கபில்தேவ் கூறும் விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். 90-களில் அது பிரபலமான விளம்பரம்.
உலக கோப்பையை வென்றதும் இந்திய டீமின் காப்டன் கபில் தேவ் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். நான் பணியாற்றிக் கொண்டிருந்த நிறுவனம்தான் பூஸ்ட் விளம்பரத்தை உருவாக்கியது.
சில வருஷங்களுக்குப் பிறகு,சிறுவர்களை வளைத்துப் போட புதிய பூஸ்ட் விளம்பரத்தைத் தயார் பண்ண முனைந்தோம்.
அதன்படி உருவாக்கப்பட்ட விளம்பரம் இது தான்” ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மைதானத்தில் கபில் தேவ் வெளுத்துக் கட்டுவதை, கூட்டத்தில் ஒரு பையன் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவன் உற்சாக மிகுதியால் எழுந்து நின்று கையை உயர்த்தி, உரத்தக் குரலில் ” ”நானும் பூஸ்ட் சாப்பிட்டுப் பெரியவனானதும் கபில்தேவ் மாதிரி பெரிய கிரிக்கெட் வீரனாவேன்” என்று சொல்கிறான்.
இந்த பூஸ்ட் விளம்பரமும் பிரபலமாயிற்று. இதைத் தமிழில் முதலில் தயாரித்த போது கபில்தேவ் குரலில் பேசக்கூடிய ஒரு தமிழரை பம்பாயில் தேடிப்பிடித்து ரிகார்ட் செய்தது தனிக் கதை.
இந்த கால கட்டத்தில் சச்சின் பிரபலமடைய ஆரம்பித்தார். எங்கள் கிரியேட்டிவ் டைரக்டருக்கு திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. ”நான் கபில்தேவ் மாதிரி பெரிய கிரிக்கெட்டராக ஆவேன்” என்று சூளுரைத்த அந்தப் பையன் வளர்ந்து பெரியவனானதும், சச்சின் டெண்டுல்கராக ஆவது போல் மார்ஃபிங் செய்து காட்டலாம், என்று ஐடியா கொடுத்தார். அப்படியே படம் எடுக்கப்பட்டது. அத்துடன் ’பூஸ்ட் ஈஸ் த ஸீக்ரெட் ஆஃப மை எனர்ஜி’ என்று கபில் தேவ் சொன்னதும் அந்த சிறுவன் (அதாவது, சச்சின்) அதை மாற்றி ’பூஸ்ட் ஈஸ் த ஸீக்ரெட் ஆஃப் அவர் எனர்ஜி’ என்று கூறுவார். பின்னால் மேலும் இருவரும் சேர்ந்து ஒரே குரலில் ’பூஸ்ட் ஈஸ் த ஸீக்ரெட் ஆஃப் அவர் எனர்ஜி’ என்று கூறுவதாக மாற்றப்பட்டது.
இந்த விளம்பரங்களும் பரபரப்பாகப் பிரபலமாகிவிட்டது. ஒரு தொடர்ச்சியாகச் செய்யப்பட்ட விளம்பரமாக இது பாராட்டும் பரிசும் பெற்றது.
இந்த விளம்பரப் படம் தயாரான சமயம் சச்சின் எங்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தாராம். (அந்த சமயத்தில் நான் சென்னை வந்திருந்தேன்.).
’நான் ஒரு இந்தியன்” என்று ஒரு சமயம் சச்சின் சொன்னது எல்லோருக்கும் நினைவிருக்கும். அவர் இந்தியன் மட்டுமல்ல, பாரத ரத்னாவும் ஆகிவிட்டார்.
சச்சினுக்கு வாழ்த்துகள்!
அமுல் விளம்பரம்
நான் ஒரு இங்கிலீஷ்காரன்.
இங்கிலாந்தின் பிரதமராக (1885) இருந்தவர் லார்ட் பாமர்ஸ்டன் ( LORD PALMERSTON)
பாமர்ஸ்டனிடம் ஒரு ஃப்ரெஞ்சு தொழிலதிபருக்கு ஒரு வேலை ஆகவேண்டியிருந்தது. பாமர்ஸ்டனுக்கு ஐஸ் வைக்கும் உள் நோக்கத்துடன் அந்த தொழிலதிபர் சொன்னார் **“நான் ஃப்ரெஞ்சுக்காரனாக பிறந்திருக்காவிட்டால், இங்கிலீஷ்காரனாக இருக்க விரும்புவேன்.”
இதைக்கேட்ட லார்ட் பாமர்ஸ்டன், “ஓ அப்படியா! நான் இங்கிலீஷ்காரனாக பிறந்திருக்காவிட்டால், இங்கிலீஷ்காரனாக இருக்க விரும்புவேன்!”
நான் ஒரு இந்தியன் என்று ஒரு சமயம் சச்சின் சொன்னது மாதிரி இவர் சொல்லவில்லையே தவிர ’நான் ஒரு இங்கிலீஷ் காரன்’ என்று கூறாமல் கூறியிருக்கிறார்.
** If I was not born a Frenchman, I would wish to be an Englishman!"
** If I was not born an Englishman, I would wish to be an Englishman!"
லிரில் சோப் மாடல்
ஒரே ஒரு விளம்பரத்தில் நடித்து விளம்பரத்தையும் தன்னையும் மிக உயரத்தில் தூக்கியவர்கள் உலகில் பலர் இருக்கிறார்கள்.
பல வருஷங்களுக்கு முன்பு வந்த லிரில் சோப் விளம்பரத்தில், ஒரு பெண் பிகினி உடையில் நீர்வீழ்ச்சியில் துள்ளலுடனும் சிலிர்ப்புடனும் குளிப்பதை அட்டகாசமான மியூசிக்குடன் படமாக்கி இருந்தார்கள். இந்த விளம்பரத்தை யாரால் மறக்க முடியும். KAREN LUNEL என்னும் அந்த மாடல் அழகியைப் பற்றி பல பத்திரிகைகள் உண்மையையும் கற்பனையையும் கலந்து கட்டி எழுதின . சிறிது காலத்திற்குப் பிறகு அதே விளம்பரத்தில் வேறு ஒரு பெண் இடம் பெற்றிருந்தார். அச்சு அசலாக எடுக்கப்பட்டிருந்தாலும் புதிய விளம்பரம் எடுபடவில்லை.
சரி. KAREN LUNEL என்ன ஆனார்? மூன்று, நான்கு வருஷத்திற்கு முன்பு ஒரு பத்திரிகையில் அவருடைய பேட்டி வந்தது . திருமணம் ஆகி நியூஸிலாந்தில் குடும்பப் பெண்மணியாக KAREN LUNEL செட்டில் ஆகிவிட்டாராம். லிரில் விளம்பரம் பார்க்க இங்கே சொடுக்கவும்: லிரில் விளம்பரம்
மிஸ்டர் விப்பிள் -சாதனை விளம்பரம்
விளையாட்டுத்துறையில் சச்சின் சாதனைப் படைத்த மாதிரி விளம்பரத்துறையில் சாதனைப் படைத்தவர் பலர் உண்டு ஆனால் டிக் வில்சன் (DICK WILSON) என்ற காமெடியன் படைத்த சாதனைக்கு ஈடாகாது.
1964-ல் துவங்கி அடுத்த 35 வருடங்கள் அவர் ஒரே கம்பெனி விளம்பரத்தில் நடித்து பெயர் பெற்றுள்ளார். மிஸ்டர் விப்பிள் என்ற ஷாப்கீப்பர் கேரக்டராக டி.வி. விளம்பரங்களில் நடித்துள்ளார். எத்தனை விளம்பரங்கள்? நம்பமாட்டீர்கள், 500! இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த விளம்பரங்கள், சார்மின் என்ற டாய்லெட் ரோல் விளம்பரங்கள்தான். ஒரே பொருள், ஒரே நடிகர், எல்லாம் காமெடி! ஒரு டாய்லெட் ரோலை வைத்துக்கொண்டு இத்தனை விளம்பரங்களைத் தயாரித்தது சாதனை தான்.
1978-ல் ஒரு அமெரிக்கப் பத்திரிகை ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அமெரிக்காவில் மிக அதிகம் பேருக்கு பரிச்சயமான முகம் எது என்று கேட்டிருந்தது.. முதலிடம் பிடித்தவர்: ரிச்சர்ட் நிக்ஸன். இரண்டாவது:பில்லி கிரஹாம், மூன்றாவது; டிக் வில்ஸன்.
குட்டித்தகவல்: இந்த டாய்லெட் பேப்பர் விளம்பரம் முதன் முதலில் படமாக்கப்பட்டது நியூயார்க்கில் உள்ள FLUSHING என்ற ஊரில்! (”எத்தனை பொருத்தமான இடம், பார்த்தீர்களா?” என்று டிக் வில்ஸன் பேட்டிகளில் ஜோக்கடிப்பாராம்!)
சார்மின் விளம்பரத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும்: சார்மின் விளம்பரம்

சச்சின் டெண்டுல்கரில் துவங்கி விளம்பர உலகின் சுவாரஸ்யங்களைச் சொன்னது அசத்தல்! உங்களின் விளம்பரத் தயாரிப்பு நிறுவன அனுபவங்களை மட்டும் நிச்சயமாக தனிப் புத்தகமாக வெளிக் கொணரத்தான் வேண்டும் ஸார்! ஒவ்வொன்றும் முத்து!
ReplyDeleteவிளம்பர உலகில் தான் எத்தனை ஸ்வாரஸ்யம்..... ஒரு சில நொடிகள் வரும் விளம்பரத்திற்கு எத்தனை யோசனைகள், வேலைகள் என நினைக்கும் போது பிரமிக்க வைக்கும்......
ReplyDeleteSuper sir
ReplyDelete