November 30, 2019

புள்ளிகள்:துணுக்குகள்!

30 செகண்ட் ட்யூன், சம்பாதித்தது....அம்மாடி!
JEOPARDY,அமெரிக்காவின் மிகப் பிரபலமான வினாடி வினா நிகழ்ச்சி . இதில் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பவர்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் டாலர்கள் என்று பரிசாக அளிக்கப்படுகிறது,  இந்த அரைமணி நேர நிகழ்ச்சியில் ஒரு லட்சம் டாலர்களை  வென்றவர்கள் பலர் உண்டு. 
    இந்த நிகழ்ச்சியின் கடைசி கேள்விக்கு விடை அளிப்பதற்கு முன்   30 வினாடி ட்யூன் ஒன்று போடப்படுகிறது .1964’ல்   இருந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அந்த டியூன் முக்கியமான அங்கமாக விளங்குகிறது. இந்த ட்யூனைப் போட்ட கிரிஃப்ஃபின் எனும் இசை அமைப்பாளருக்கு   ராயல்டியாக  70 லட்சம் டாலர் கிடைத்ததாக சில வருஷங்களுக்கு முன்பு அவரே சொல்லி இருக்கிறர். இன்றும் அந்த நிகழ்ச்சியில் இந்த  ட்யூனுக்கக  ராயல்டி தொகை அவருடைய பேரனுக்கு(?) போகக்கூடும்! 
ரூஸ்வெல்ட்டிற்கு ஓட்டு போடாததன் காரணம்!
அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் 'டெமாக்ரடிக்' கட்சியை சேர்ந்தவர் முதல் முதலாக   1933’ல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். அடுத்து 1937’ல் இரண்டாவது தடவையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1941’ம் வருஷம் மூன்றாவது முறை தேர்தலில் போட்டியிட்ட அவர், தனது நெருங்கிய நண்பரான தனது பேட்டைவாசி முதியவரைச் சந்தித்து, தனக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டார்.
அவரிடம்  “அதிபர் தேர்தல் வருகிறது. நீங்கள் யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள்” என்று கேட்டார் ரூஸ்வெல்ட். அந்த முதியவர்  “வழக்கம்போல் நான் ’ரிபப்ளிகன்’   கட்சிக்குத் தான் போட்டு போட போகிறேன்” என்றார். ரூஸ்வெல்ட்டிற்குக் கொஞ்சம் ஷாக். அவரிடம்  “சரி,  மூன்றாவது தடவை நான் நிற்பதால் நீங்கள் அப்படி தீர்மானித்து இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.


 அதற்கு அவர்  “அதெல்லாம் ஒன்றும் இல்லை. 1933’ல் நடந்த தேர்தலில்  ’ரிபப்ளிகன்’  கட்சிக்கு ஓட்டு போட்டேன்.   அப்புறம் 1937’ம் வருஷம் இரண்டாவது தடவை  நீங்கள் நின்றபோதும் நான்   ‘ரிபப்ளிகன்’  கட்சிக்கு ஓட்டு போட்டேன்.    இந்த எட்டு வருஷம் நாட்டில் எல்லாம் மிகவும் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது ஒரு பிரச்சினையும் இல்லை. அதனால் இந்த தடவையும்  ‘ரிபப்ளிகன்’ கட்சிக்குத்தான் போடப் போகிறேன்” என்றார்!
 அடினாரும் டாக்டரும்!
மேற்கு ஜெர்மனியின் அதிபராக இருந்தவர் கான்ராட் அடினார். ஒரு சமயம் அவர் நோயுற்று படுத்த படுக்கையாக இருந்தார்.
ஒரு நாள்  தன் டாக்டரிடம்  சற்று எரிச்சலுடன் சொன்னார்: “ டாக்டர்,  சீக்கிரம் என்னை சரிப்படுத்தி விடுங்கள். நான் வெளிநாடுகள் சிலவற்றுக்குச் சுற்றுப்பயணம் போக திட்டமிட்டு இருக்கிறேன்.”
 அதற்கு, டாக்டர் ”இதோ பாருங்கள்! நான் டாக்டர் தான்; மந்திரவாதி இல்லை. உங்களை மறுபடியும்  துள்ளித்திரியும் இளைஞனாக மாற்ற முடியாது” என்றார்
 அதற்கு அடினார் ”ஐயோ, டாக்டர்! நான் மறுபடியும் இளைஞனாக ஆகவேண்டும் என்று ஆசைப் படவில்லை. நான் ஆசைப்படுவது எல்லாம்  தொடர்ந்து வயது முதிர்ந்தவனாக ஆகிக் கொண்டே போகவேண்டும் என்பதுதான்!” என்று சொன்னார். 
நானும் பிரபலம்!
  ஒரு பிரபல கடை மேனேஜர், வேலைக்கு எடுத்துக்கொள்வதற்காக ஒரு சிறுவனைப் பேட்டி கண்டு கொண்டிருந்தார்.
தம்பி, உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவன்  “என் பெயர் ஃபோர்ட்” என்றான்
“ ஃபோர்ட்டா? சரி, உன்  முழுப்பெயர் என்ன?” என்று கேட்டார்’. அதற்கு  “என் பெயர் ஹென்றி ஃபோர்ட்” என்று அந்தப் பொடியன்சொன்னான்.   ”  “அப்படியா?..எல்லாருக்கும் தெரிந்த பேரு இது”  என்றார் கடை மேனேஜர்.  பையன் “ இருக்கும் சார். நான் ரெண்டு வருஷமா இந்த பேட்டையில் காய்கறி டெலிவரி நிறைய பண்ணிக்கொண்டு  இருக்கிறேன். அதனாலதான்....” என்றான் கம்பீரமாக!
திருடர்கள் அகப்பட்டார்கள்!
பிரபல ஓவியர் பிக்காஸோவின் ஓவியங்களைக் கேலி பண்ணி பல குறும்புக் கட்டுரைகள், துணுக்குகள் வெளிவந்துள்ளன. ஒரு குறும்புக்காரர் சொன்ன ஜோக்கைத் தருகிறேன். 
ஒரு சமயம் பிக்காஸோவின் வீட்டிற்கு ஒரு   திருடன் வந்துவிட்டான். இவர்  கண்விழித்து எழுந்து பார்த்ததும், அவன் சடாரென்று ஓடிவிட்டான். பிக்காஸோ போலீசுக்குத் தகவல் கொடுத்தார் 
பிக்காஸோவின் ஓவியம்

 திருடனை அவர்கள் கண்டுபிடிக்க உதவும்  என்று சொல்லி, திருடனின் படத்தை வரைந்து கொடுத்தார். சில நாட்கள் கழித்துப் போலீசில் இருந்து தகவல் வந்தது: போலீஸ் நிலையத்திற்கு வரும்படி சொன்னார்கள். “திருடர்களைப் பிடித்து விட்டோம். அடையாளம் தெரிகிறதா என்று வந்து பாருங்கள்” என்று அழைத்திருந்தார்கள்.
பிக்காஸோ போனார். அவரை ஒரு அறைக்கு அழைத்துக் கொண்டு  போனார்கள்  
அங்கு ஒரு வாஷிங் மெஷின்ஒரு கரடி பொம்மை,  உட்பட   ஒரு  பெண் துறவி, பேட்டை கவுன்சிலர்  என்று இரண்டு பேரை பிடித்து வைத்திருந்தார்கள் !!!
இது எப்படி இருக்கு!
சமாளி, ராஜா!
ஒரு ராணுவ கப்பலை வெள்ளோட்டம் விட ஒரு கப்பல் கேப்டன் பணிக்கப்பட்டார்.  அந்த கப்பலை ஓட்டுவதற்கு ஆவர்மிகவும் திணறினார்.  கப்பlஐ இங்குமங்கும் அலைக்கழித்ததுடன், அருகில் இருந்த கப்பல் மீதும்,   மேடைமீதும்   லேசாக மோதியது. தூரத்தில் ராணுவ அமைச்சகத்திலிருந்து அதிகாரி ஒருவர் இதைப் பார்த்துக் கொண்டி ருந்தார். அதிகாரி  ஒரு குறுந்தகவலை கேப்டனுக்குக் அனுப்பினார் .அதை கப்பலின் கம்ப்யூட்டர் பிரிவு பணியாளர் கொண்டு வந்து கொடுத்தார்.  கப்பலைச் சரியாக இயக்கும் முயற்சியில் இருந்த கேப்டன்  “சரி, அதை உரக்கப்படி” என்று உத்தரவிட்டார்.  சற்று தயங்கியபடியே, அந்த ஊழியர் படித்தார்: “ நீ சரியான வடிகட்டின முட்டாள். கப்பலை நாசம் பண்ணிக்கொண்டு இருக்கிறாய்” என்ற படித்தார். கப்பல் கேப்டன்   சாமர்த்தியமாக  “வெரி  குட். கீழே போய் இந்த ரகசிய சங்கேதக் குறிப்பை விளக்கி எழுதச்  சொல். நான் இதோ வருகிறேன்” என்றார். நிலமையை அட்டகாசமாக சமாளித்த  கில்லாடி! 
 வளைந்து கொடுக்காதே 
ஜான் ஆலன் என்ற பெயரில் ஒரு அமெரிக்க அரசியல்வாதி இருந்தார். அவர் யரிடமும் நிறுக்காக இருக்க மாட்டார் யார் எது சொன்னா  லும் அதன்படி நடப்பார். அவருடைய நண்பர்கள் பல தடவை அவரிடம் “ இதோ, பாருங்கள். நீங்கள்   வளைந்து கொடுக்கும் பழக்கத்தை நிறுத்தி விடுங்கள். எல்லாரும் உங்கள் தலையில் மிள்காய் அறைக்கிறார்கள. நீங்கள் முக்கியமான அரசியல்வாதி.  எப்போதும்  நிமிர்ந்து நில்லுங்கள்” என்பார்கள்.
“ உம், பார்க்கலாம்” என்பார். ஆனால் தன்  குணத்தை அவர் மாற்றிக் கொள்ள மாட்டார்..
 ஒரு சமயம் ஒரு அரசியல் பொதுக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தார் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர்  எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருத்தர் அவர் மீது கல்லை வீசினார். கல் வருவதை பார்த்த  அவர், கண்ணிமைக்கும் நேரத்தில் உடலை வளைத்து குனிந்து கொண்டார்; கல் அவர் தலையைத் தாண்டிப் போய்விட்டது.  
பின்னால் அவர் தன் நண்பர்களுடன் இது பற்றி சொன்னார்: “ பார்த்தீர்களா. நீங்கள் சொன்னபடி கேட்டு நான் வளைந்து கொடுக்காமல் இருந்தால், நிமிர்ந்த அரசியல்வாதியாகவே இருந்திருந்தால் என் தலை என்ன ஆகியிருக்கும்” 
யூதர்களின் விடுமுறை தினத்தில் தான்! 
 ஹிட்லரைபற்றிய ஒரு ரீல் துணுக்கு. 

தனக்கு  மிகுந்த  மனோசக்தி  உள்ளது என்றும், அத்துடன்  ஜோதிடத் திறமையும் உள்ளது என்றும், அதனால் எந்த ஒருவருடைய மரண தினத்தையும் தன்னால் முன்கூட்டியே சொல்ல முடியும் என்று ஒரு பெண்மணி கூறி வந்தார்.
 அவரைப் பற்றி கேள்விப்பட்ட ஹிட்லர் அவரை அழைத்து, தன் மரணம் எப்போது ஏற்படும் என்று சொல்லும்படி  கேட்டார். 
அந்தப் பெண்மணி பல நிமிடங்கள் ஏதேதோ கணக்குப் போட்டு, ஜாதகத்தை பரிசீலித்து விட்டு  “என்னால் குறிப்பிட்ட தேதியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது: அது யூதர்களின் விடுமுறை தினமாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது” என்றார்
”அது  எந்த விடுமுறை தினம் என்று சொல்?” என்று கத்தினார்.
“ அது தெரிந்து என்ன ஆகப்போகிறது? நீங்கள் என்றைய தினம் மரணம் அடைகிறீர்களோ அன்றைய தினம் யூதர்கள் விடுமுறை தினமாக அறிவிப்பார்கள்!” என்றார்!
 நம்ப முடியாத சாதனை 
ஜான பன்யன்  JOHN BUNYAN (1628-1688) ஒரு ஆங்கில எழுத்தாளர் மற்றும் கிறிஸ்துவ பாதிரியார் .
 அவர் பல புத்தகங்கள் எழுதி இருக்கிறார் அதில் மிகவும் பெயர் பெற்றது: பில்கிரிம்ஸ் புரோகிரஸ்  (PILGRIMS PROGRESS)
அவர் சுமார் 60 புத்தகங்களை எழுதியுள்ளார்.  இருந்தாலும் இந்த ஒரு  புத்தகத்தால் இன்றும் மறக்கப்படாமல் இருக்கிறார். 
இந்தப் புத்தகத்தை அவர் எழுதிய விவரங்களும், அவரது வரலாறும் வியப்பை ஊட்டுபவை.
  அவரது மதப் பிராசரங்களில்  கூறும் சில கருத்துகளுக்கு அன்றைய ஆட்சியர் தடை விதித்தனர்.  இருந்தாலும் அவர் தனது போதனைகளயும் சொற்பொழிவு களையும் நிறுத்த வில்லை. அதனால் அவருக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட பன்னிரண்டு  வருடங்கள் சிறையில் இருந்தார். அப்போது அவர் எழுதிய புத்தகம் தான் PILGRIMS PROGRESS
சிறையை விட்டு வெளியே வந்து ஆறு வருடங்கள் கடந்த பிறகுதான் புத்தகம் வெளியாயிற்று. அது மிகவும் ஜனரஞ்சகமாக அமைந்துவிட்டதாலோ  என்னவோ பதிப்புகள் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்துவிட்டன. 1938 வருஷ புள்ளி விவரப்படி, (அதாவது அவர் காலமாகி 250 வருடங்கள் கழிந்த பிறகு) இந்தப் புத்தகம் எத்தனை பதிப்புகள் வெளியாகி உள்ளன என்ற தகவல் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடும். நம்பமாட்டீர்கள்,  அந்தப் புத்தகம் 1300 பதிப்புகள் வெளிவந்து விட்டது.   கிட்டத்தட்ட இருநூறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
அவர் காலமான ஆகஸ்ட் முப்பதாம் தேதியை அவருடைய நினைவு தினமாக  வைத்து, உலகெங்கும் பல தேவாலயங்களில் அஞ்சலி செலுத்துகிறார்களாம்.

3 comments:

  1. மிகவும் சுவாரஸ்யமான டிட்பிட்ஸ்...!

    ReplyDelete
  2. Very interesting. தமிழ்ப்படுத்திய விதம் சுவாரசியமாக படிக்கத் தூண்டியது. இன்னும் பத்து சேர்த்துக்கொடுத்திருந்தாலும் அயர்வாக இருந்திருக்காது.

    ReplyDelete
  3. அருமையான தகவல்கள். எல்லாமே நன்றாக இருந்தாலும் தன் மேலதிகாரியைச் சமாளித்த கப்பல் காப்டன் மனதைக் கவர்ந்தார்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!