தனியாளாக நம்மால் எத்தனை பதிவுகள் எழுதி, தட்டச்சு செய்து,
பதிவாகப் போட முடியும் என்று ஒரு கணம்கூட யோசிக்கவில்லை; தயங்கவும் இல்லை. காரணம், “தம்பி, நீ எழுது” என்று, கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன்பு சொன்ன (அல்லது ஆசீர்வதித்த) கல்கி அவர்கள் என்னை வழிநடத்திச் செல்வார் என்ற நம்பிக்கை என்னிடமிருந்து தான்! ஏன், இன்றும், பத்து ஆண்டுகள் பதிவுகள் எழுதிய பிறகும், அவர் மீது உள்ள நம்பிக்கை ஒரு சத விகிதம் கூட குறையவில்லை. அவர் என் குருநாதர் என்று நான் கூறிக் கொண்டால் எனக்குப் பெருமை ஏற்படலாம். ஆனால், அவருடைய சீடன் நான் என்பதால் அவருடைய திறமைக்கும், புகழுக்கும் எவ்வித ஏற்றமும் இல்லை.
கிட்டத்தட்ட 630 பதிவுகள் போட்டுள்ளேன். இது பெரிது அல்ல. இந்த சமயத்தில் ஒரு தகவலைச் சொல்ல மனம் விழைகிறது. என் வலைப்பூவின் தலைப்பு ஓவியங்கள் (Masthead) எல்லாவற்றையும் நானே வடிவமைத்துள்ளேன். வலைப்பூ இல்லாவிட்டால் இவ்வளவு படங்களை (சுமாராக) உருவாக்கவும், பதிவு எழுதுவதற்காகப் பல புத்தகங்களைப் படித்திருக்கவும் மாட்டேன். வலைப்பூ என்னுடைய உந்து சக்தியாக விளங்கி வருகிறது.
இவை எல்லாவற்றையும் விட என் வலைப்பூவைப் படிக்கும் உங்களில் பலர் எழுதிய பாராட்டுகளும் ‘சபாஷ்’களும்
வைட்டமின் மாத்திரைகளாகச் செயல் பட்டுள்ளன. இதை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போது என் மனதில் மகிழ்ச்சியை விட அதிகமாக நெகிழ்ச்சிதான் ஏற்படுகிறது. வார்த்தை ஜாலத்திற்காக இப்படி எழுதவில்லை. அப்படி எழுதினால் அது என்னை நானே ஏமாற்றிக் கொள்வதாகும்.
அனைவருக்கும் நன்றி. முக்கியமாய் எழுத்தாளர் சுஜாதா தேசிகன் அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. அவர் தான் பதிவுகள் எழுதும்படி முதன் முதலில் (அன்புக்) கட்டளை இட்டார்.
அனைவருக்கும் வணக்கம்.
-- கடுகு
Congratulations Sir! Words cannot describe how grateful I am to you. You cheer me up everyday. Thank you Sir.
ReplyDeleteThank you very much. I am blessed because I have found my work!- Kadugu
ReplyDeleteஇந்திய நேரம் காட்டுகிறதே! இந்தியாவில் இருக்கீங்களோ? 630 அர்த்தமுள்ள பதிவுகள் என்பது சாதாரணமானதல்ல. எல்லாமே பயன்படும் தகவல்களைக் கொண்டவை! இந்த வலைப்பதிவின் மூலம் உங்கள் நட்புக் கிடைத்ததில் பெருமையாகவும் உணர்கிறேன். வாழ்த்துகள்/பாராட்டுகள். தொடர்ந்து எழுதி வரவும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துகள் ஸார். உங்களை பார்த்து நாங்களும் ஊக்கம் அடைகிறோம். தலைப்பு மற்றும் ஓவியங்களை நீங்களே வடிவமைத்திருப்பது சிறப்பு.
ReplyDeleteGeetha Sambasivam அவர்களுக்கு, மிக்க நன்றி. இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன்: மனம் இந்தியாவில் இருக்கிறது!- கடுகு
ReplyDeleteஸ்ரீராம்.மிக்க நன்றி. -கடுகு
ReplyDeleteஉங்கள் இடுகைகள் எப்போதும் ரசனைக்குரியதாக இருக்கின்றன. திரும்பவும் படிக்கத் தூண்டுகின்றன.
ReplyDeleteஉங்களின் ஊக்கம், ஆர்வம் (புதிய படங்களை கணிணியில் வரைய முயற்சிப்பது, புதிய புதிய புத்தகங்களிலிருந்து செய்தியைப் பகிர்ந்துகொள்வது என்பது போல) எங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது.
தொடர்ந்து நீங்கள் எழுதணும் என்று கேட்டுக்கறேன்.
வாரத்திற்கு ஒரு பதிவுதான் போடறீங்க. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகள் போட்டிருந்தீங்கன்னா, இரண்டாயிரத்தை எட்டியிருக்கலாம்.
ReplyDeleteநம்பரை விட, கண்டெண்ட் ரொம்ப நல்லா இருக்கு. அதனால் பாதகமில்லை
மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
பத்து ஆண்டுகள் நிறைவுக்கு எங்களது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!
உங்களுடைய வாசகி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.
தினமும் உங்கள் வலைப்பதிவுக்கு வந்து பார்ப்பேன், புதிய பதிவு இல்லையென்றாலும் கூட, ஏற்கனவே உள்ள பதிவுகளைப் படிப்பேன்.
உங்களது எழுத்துக்களோடு, நீங்கள் படித்து ரசித்த விஷயங்களையும் எங்களோடு பகிர்ந்து கொண்டு, எங்களது ரசனையையும் மேம்படுத்துகிறீர்கள்.
நன்றி, நன்றி, நன்றி! இன்னும் பல முறை வாழ்த்துக்களுடனும், நன்றியுடனும்,
அன்புடன்
சீதாலஷ்மி சுப்ரமணியம்
Congratulations Sir ! Best wishes. It is "Tin" now and I pray for Silver to Gold to Platinum. Thanks for spreading happiness and positivity through your writings. Personally I can read SVV, Devan, Kalki, yourself and PGW ever and ever. Thanks again - Rajmohan, Hyderabad
ReplyDeleteஇந்த பத்து ஆண்டுகளில் உருப்படியாக ஏதாவது செய்திருக்கிறோம் என்ற நிறைவு உங்களுக்கு இருந்தால் சரி;. அதான் முக்கியம்.
ReplyDeleteஜீவி அவர்களுக்கு: நன்றி...என் மன நிறைவு முக்கியமில்லை. படித்தவர்களின் அபிப்பிராயங்களும் மதிப்பீடுகளும்தான் முக்கியமானவை: அங்கீகாரம் அளிப்பவை. -கடுகு
ReplyDeleteஎனக்கு இந்த பாராட்டு மிக அதிகம் மிக்க நன்றி
ReplyDeleteஐயா உங்களை போன்ற பெரிய எழுத்தாளர் வலைப்பூவில் எழுதுவது எங்களுக்கு எல்லாம் வரப்பிரசாதம். தங்களது சேவைக்கு நன்றி
ReplyDeleteஐயா உங்கள் இடுகைகள் ரசனைக்குரியவை.திரும்பவும் படிக்கத் தூண்டுகின்றன.உங்களுக்கு நன்றி...நன்றி.
ReplyDelete