June 22, 2018

ஒரு கல்லறை வாசகத்தின் கதை

ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இறந்து போனவரை நல்லடக்கம் செய்த இடத்தில் அழகாக வடிவமைக்கப்பட்ட கல்லை நிறுத்திவைத்து அதில் அடக்கம் செய்யப்பட்டவரைப் பற்றி ஒரு வாசகம் எழுதி வைத்திருப்பார்கள். (சமீப காலங்களில் இந்தப் பழக்கம் குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன்.)
இந்த வாசகங்களைத் தொகுத்துப் பல புத்தகங்கள் வந்துவிட்டன. அவற்றில் உள்ளவை எல்லாம் உண்மையா, கற்பனையா என்றெல்லாம் கூற முடியாது.
ஆனால் சில பிரபல அரசியல்வாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களின் கல்லறை வாசகங்கள் சிறப்பாக உருவாக்கப் பட்டிருக்கின்றன.

இப்படி சிறந்த கல்லறை வாசகங்களைப் பற்றியும் கல்லறையில் நீண்ட உறக்கத்தில் இருப்பவர்களைப் பற்றியும் எழுதலாம் என்றெண்ணி, பலரது வாழ்க்கை வரலாறுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். புவி ஈர்ப்புச் சக்தியை (அது மட்டுமல்ல இன்னும் பல நூறு விஷயங்களை) கண்டுபிடித்த) சர் ஐசக் நியூட்டனைப் பற்றிப் படித்தபோது ஐசக் நியூட்டன் தனது வழிகாட்டியாக சர் கிரிஸ்டபர் ரென் என்பவரைக் குறிப்பிட்டிருக்கிறார்.
ரென் புகழ்பெற்ற கட்டட நிபுணர். லண்டனில் உள்ள, அபாரமாக வடிவமைக்கப்பட்ட செயின்ட் பால்’ஸ் கதீட்ரலை உருவாக்கியவர்.

இவரைப் பற்றி எழுதப்பட்ட ‘CLERIHEW’ (குறும்புப்பா) ஒன்றை பல வருடங்களுக்கு முன்பு படித்தேன் அதை , எழுதி வைத்துக் கொண்டேன். ஆனால் அப்போது அவரைப் பற்றி அதிகம் தெரியாது.
அந்த கிளேரிஹ்யூவை முதலில் பார்க்கலாம்.
  Sir Christopher Wren said,
 ‘I am going to dine with some men.
 If anyone calls,
 Say I am designing St. Paul’s’.


இந்தக உலகப் புகழ் பெற்ற கதீட்ரலைக் கட்ட எத்தனை ஆண்டுகள் பிடித்தன என்று கூறினால் அசந்து போய்விடுவீர்கள். முப்பத்தைந்து வருடங்கள்! .


1666-ஆம் ஆண்டு லண்டனில் பிரம்மாண்டமான தீ விபத்து ஏற்பட்டு பல கட்டடங்கள் சாம்பலாகிவிட்டன. ரென் 51 புதிய சர்ச்சுகளையும் செயின்ட் பால்’ஸ் கதீட்ரலையும் கட்ட வரைபடங்களைத் தயாரித்து, மன்னர் இரண்டாம் சார்லஸிடம்  கொடுத்தார்.  பின்னால் கட்டியும் கொடுத்தார்.
இவை மட்டுமன்றி வேறு பல முக்கிய கட்டடங்களையும் நிர்மாணித்தவர். அவர்.
இவர் தனது 17-வது (கவனியுங்கள், 17-வது வயதில்) கண்டுபிடித்த சில பொருள்கள்: இருளில் எழுதக்கூடிய ஒரு கருவி, ஒரு  PNEUMATIC எஞ்சின், வானிலை கடிகாரம். இது தவிர  காது கேளாதவர், பேச இயலாதவர்களுக்கு என்று ஒரு புதிய ‘மொழி’யைக் கண்டுபிடித்தார்.  இருபத்து ஐந்தாவது வவயதில் வானசாஸ்திரப் பேராசிரியராகக் கல்லூரியில் பணியாற்றத் துவங்கினார்.
இது தாவிர், நியூட்டனின்ன் மூன்று விதிகளை LAWS OF MOTION தொடர்பாக பல ஆராய்ச்சிகள் செய்தார்,.
பின்னால் தன் ஆராய்ச்சிக்கு உதவியது WREN செய்த ஆராய்ச்சிகள்தான் என்று நியூட்டனே கூறியிருக்கிறார்.
WREN தனது 91-வது வயதில் காலமானார். அவரது உடல், அவர் வடிவமைத்துக் கட்டிய St. Paul’s Cathedral-ல் புதைக்கப்பட்டது. (இப்படிப்பட்ட பெரிய சிறப்பைப் பெற்ற முதல் விஞ்ஞானி இவர்தான்!)
      சரி, இவர் கல்லறையில் எழுதப்பட்டுள்ள வாசகம் என்ன? லத்தீன் மொழியில் எழுதப்பட்டுள்ள அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு:

Reader, if you seek his monument 

– look around you! 
(வாசகரே, இவருடைய நினைவுச் சின்னத்தைப் பார்க்க வேண்டுமானால், உங்களைச் சுற்றிப் பாருங்கள்.)

ஆம், St. Paul’s Cathedral கட்டடமே அவருடைய நினைவுச் சின்னமாக எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் இருக்கும்.

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!

   குறிப்பு: சற்று இடைவெளிவிட்டு அடுத்த பதிவு வரும்

10 comments:

 1. வருக... வருக... ரொம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கீங்க.... வரவேற்கிறேன்.

  கல்லறை வாசகங்கள் ரசித்தேன். இது அவர்களே தேர்ந்தெடுப்பதா அல்லது கல்லறை கட்டும்போது அவர்களது சுற்றம் தேர்ந்தெடுப்பதா என்றுதான் தெரியலை. மற்றபடி சுவாரசியமே.

  ஆமாம்.... நகைச்சுவையான பதிவோடு ஆரம்பித்திருக்கலாமே.

  ReplyDelete
 2. ராமகிருஷ்ண பரமஹம்சர் படம் சிறப்பாக வந்திருக்கிறது. பாராட்டுகள்.

  ReplyDelete
 3. கண் இப்போது பரவாயில்லையா? இந்தியாவில் இருக்கீங்களா? யு.எஸ். திரும்பியாச்சா? நீங்கள் எழுதி இருக்கும் இந்தச் செய்தி புதிது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  நீண்ட நாட்களுக்குப் பின் தங்கள் பதிவு. நல்வரவு.

  எப்போதும் போலவே சுவாரசியம்.

  நன்றி.

  அன்புடன்

  சீதாலஷ்மி சுப்ரமணியம்

  ReplyDelete
 5. என்னாச்சு..... போட்ட பின்னூட்டத்தைக் காணோம்....

  ReplyDelete
 6. சுவையான தகவல். நன்றி.

  ReplyDelete
 7. //சிறந்த கல்லறை வாசகங்களைப் பற்றியும் கல்லறையில் நீண்ட உறக்கத்தில் இருப்பவர்களைப் பற்றியும் எழுதலாம் என்றெண்ணி, பலரது வாழ்க்கை வரலாறுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்//

  வித்தியாசமான ஆசை. ஆனால் உலகில் எந்த சப்ஜெக்டிலும் இண்டெரெஸ்டிங் விஷயம் நிச்சயம் கிடைக்கும். உங்கள் ஆர்வத்தைப் பாராட்டறேன்.

  ரொம்ப நாள் கழித்து எழுதறீங்க. இந்த சப்ஜெக்டை எடுத்துக்கிட்டிருக்கிறீர்களே... எப்போ அடுத்த இடுகை வரும்னு காத்திருக்கறேன்.

  புதிய பால் கதீட்ரல் வாசல் வரை சென்றிருக்கிறேன். உள்ளே சென்றதில்லை (அதற்கு மிக அருகில்தான் தங்கியிருந்தேன் ஓரிரவு).

  ReplyDelete
 8. 'உங்களைச் சுற்றிப் பாருங்கள்' - என்ன அருமையான வாக்கியம். கலைகளில் சிறந்தவர்கள், சிற்பிகள், கட்டிட வல்லுனர்கள் மறைந்துவிடலாம். ஆனால் அவர்கள் உருவாக்கியவை காலம் பூராவும் அவருடைய பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும்.

  கன்யாகுமரியில் திருவள்ளுவர் சிலையை உருவாக்கியவர் மறைந்திருப்பார். ஆனால் அவர் உருவாக்கியது காலங்களைக் கடந்து அங்கு நின்றுகொண்டிருக்கும். புத்தகங்களுக்கு ஆயுள் அதிகமில்லை. ஆனால் சிற்பங்களுக்கு ஆயுள் மிக அதிகம்.

  டா வின்சி, மைக்கேல் ஆஞ்சலோ போன்ற பலர் இன்னும் நம் நினைவுகளில் வாழ்வதற்கு இதுதான் காரணம்.

  ReplyDelete
 9. Thank God. You started writing again.

  ReplyDelete
 10. உங்களுடைய நூல், 'கேரக்டரோ, கேரக்டர்' ஐ புஸ்தகாவில் படித்தேன். அதற்கு நான் எழுதிய விமர்சனத்தை உங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.
  http://thambattam.blogspot.com/2018/06/blog-post_30.html

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!