புதுத்தமிழ்
பத்திரிகைகள் பல புதுத் தமிழ் வார்த்தைகளை அறிமுகப்படுத்தி, அந்த வார்த்தைகளை தமி மொழியில் சேர்ந்துவிட்டன.
இதில் தினத்தந்திக்கு முதல் மார்க் கொடுக்கலாம் என்பேன். வெங்காய சருகு, சேலை என்ற வார்த்தை சட்டென்று நடிகையை அல்லது கிளு கிளு தோற்றத்தை வீடியோவாகக் கொண்டு வந்து விடுகின்றன. அதுபோல் ‘சதக்’ என்றதும் நம் மேலேயே ரத்தம் தெறிப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.
குமுதம் இதழின் கண்டுபிடிப்பு ‘கிசுகிசு’. (இன்னும் கொஞ்ச நாளில் ‘கிசுகிசு’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையே வரக்கூடும்.)
அமெரிக்காவில் நாடகம் மற்றும் சினிமா சம்பந்தமான செய்திளை வெளியிடும் இதழ் VARIETY. 1905-ல் துவக்கப்பட்டது.
நியுயார்க்கில் பிராட்வே என்ற வீதியில் நிறைய நாடக அரங்குகள் உள்ளன. ஒரு சில நாடகங்கள் பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெறுகின்றன. அந்த இதழில் நாடக விமர்சனங்களில் வார்த்தை விளை யாட்டுகள் அபாரமாக இருக்கும். சில சமயம் புரியாவிட்டாலும், நாளடைவில் புரியும்படி செய்துவிடுவார்களாம். சுமார் பத்து
வருஷங்களுக்குப் பிறகு வெரைட்டியை சினிமா பத்திரிகையாக மாற்றிவிட்டார்கள். விளம்பர வருவாய் அதிகரித்தது. 1933-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு கிளையைத் துவக்கியது.
வருஷங்களுக்குப் பிறகு வெரைட்டியை சினிமா பத்திரிகையாக மாற்றிவிட்டார்கள். விளம்பர வருவாய் அதிகரித்தது. 1933-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு கிளையைத் துவக்கியது.
இன்று நாம் உபயோகிக்கும் பல வார்த்தைகள் வெரைட்டி உருவாக்கியவை. அவைகளில் சில: ஃபளாப், Whodunit (மர்மப்படம்) Smash. ஏன்,மூவிஸ் என்பதும் SITCOM, DRAMEDY, (காமெடி டிராமா) பஞ்ச்லைன், ஸ்ட்ரிப்-டீஸ், ஜிங்கிள், வாய்ஸ்-ஓவர் முதலியன அவர்களுடைய கண்டு பிடிப்பு ஆகும்.
அதுமட்டுமல்ல, முதல் பக்கத் தலைப்புகள் சில சமயம் மண்டையைக் குழப்பும். சில சாம்பிள்கள்: WALL STREET
LAYS AN EGG .(1929-ல் அமெரிக்க பங்கு மார்க்கெட் மிகப் பெரிய அளவில் சரிவடைந்ததை இப்படி குறித்தது.)
“Greatest show off Earth” (சந்திரனில் 1969-ல் ஆம்ஸ்ட்ராங்க் கால் வைத்த செய்திக்க்கு வைத்த தலைப்பு.)
LIZARDS EAT ARNOLD’S LUNCH என்று ஒரு சமயம் போட்ட தலைப்பிற்கு விளக்கம்: 1993-ம் ஆண்டு ஜுராஸிக் பார்க் திரைப்படமும் ஆர்னால்ட் ஷவார்ஸ்னாக்கர் நடித்த LAST ACTION திரைப்படமும் ஒரே சமயம் ரிலீஸ் ஆயின. ஆர்னால்ட் படத்தை ‘ஜுராசிக் பார்க்’ ஓரம்கட்டி விட்டது. “டைனோசர்கள், ஆர்னால்டின் படத்தைச் ‘சாப்பிட்டு விட்டன ” என்று வெரைட்டி எழுதியது.
“Greatest show off Earth” (சந்திரனில் 1969-ல் ஆம்ஸ்ட்ராங்க் கால் வைத்த செய்திக்க்கு வைத்த தலைப்பு.)
LIZARDS EAT ARNOLD’S LUNCH என்று ஒரு சமயம் போட்ட தலைப்பிற்கு விளக்கம்: 1993-ம் ஆண்டு ஜுராஸிக் பார்க் திரைப்படமும் ஆர்னால்ட் ஷவார்ஸ்னாக்கர் நடித்த LAST ACTION திரைப்படமும் ஒரே சமயம் ரிலீஸ் ஆயின. ஆர்னால்ட் படத்தை ‘ஜுராசிக் பார்க்’ ஓரம்கட்டி விட்டது. “டைனோசர்கள், ஆர்னால்டின் படத்தைச் ‘சாப்பிட்டு விட்டன ” என்று வெரைட்டி எழுதியது.
ஒரு சமயம் ஜார்ஜ் பெர்னாட்ஷா சொன்னது: “எனக்கு ஆங்கில மொழி நன்றாகத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் - ஒரு நாள் ‘ வெரைட்டி’ யைப் பார்க்கும் வரை!”
உடனே வெரைட்டிக்கு பெர்னார்ட்ஷா சந்தா அனுப்பி விட்டாராம்!
ஜேன் ஃபாண்டா, ஜென்னிஃபர் லோபஸ் இணைந்து நடிப்பதைப் பற்றிய கிசுகிசுவிற்கு வெரைட்டி போட்ட தலைப்பு: "J.FO வும் J.LO வும் சேர்ந்து நடிக்கிறார்கள்."
உடனே வெரைட்டிக்கு பெர்னார்ட்ஷா சந்தா அனுப்பி விட்டாராம்!
ஜேன் ஃபாண்டா, ஜென்னிஃபர் லோபஸ் இணைந்து நடிப்பதைப் பற்றிய கிசுகிசுவிற்கு வெரைட்டி போட்ட தலைப்பு: "J.FO வும் J.LO வும் சேர்ந்து நடிக்கிறார்கள்."
· வெரைட்டியின் புது ஆங்கிலச் சொற்கள் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டு விட்டன. எத்தனை சொற்கள்? இருபதுக்கு மேல்!
கல்லறை வாசகங்கள்
ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இறந்து
போனவரை நல்லடக்கம் செய்த இடத்தில் அழகாக வடிவமைக்கப்பட்ட கல்லை நிறுத்திவைத்து, அதில் அடக்கம் செய்யப்பட்டவரைப் பற்றி ஒரு வாசகம் எழுதி வைத்திருப்பார்கள். (சமீப
காலங்களில் இந்தப் பழக்கம் குறைந்து விட்டது என்று நினைக்கிறேன்.)
இந்த வாசகங்களைத் தொகுத்துப் பல புத்தகங்கள் வந்துவிட்டன.
அவற்றில் உள்ளவை எல்லாம் உண்மையா, கற்பனையா என்றெல்லாம் கூற முடியாது.
ஆனால் சில பிரபல அரசியல்வாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள்
போன்றவர்களின் கல்லறை வாசகங்கள் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இப்படி சிறந்த கல்லறை வாசகங்களைப் பற்றியும் கல்லறையில்
நீண்ட உறக்கத்தில் இருப்பவர்களைப் பற்றியும் எழுதலாம் என்றெண்ணி, பலரது வாழ்க்கை
வரலாறுகளைப் படித்துக் கொண்டி ருக்கிறேன். புவி ஈர்ப்புச் சக்தியை (அது மட்டுமல்ல
இன்னும் பல நூறு விஷயங்களைக் கண்டுபிடித்த) சர் ஐசக் நியூட்டனைப் பற்றிப் படித்தபோது, ஐசக் நியூட்டன் தனது வழிகாட்டியாக சர் கிரிஸ்டஃபர் ரென் (Sir Christopher Wren ) என்பவரைக்
குறிப்பிட்டிருக்கிறார்.
ரென் புகழ்பெற்ற கட்டட நிபுணர். லண்டனில் உள்ள, அபாரமாக
வடிவமைக்கப்பட்ட செயின்ட் பால்’ஸ் கதீட்ரலை உருவாக்கியவர்.
இவரைப் பற்றிய வேடிக்கையான ‘கிளேரிஹ்யூ’ (குறும்புப்பா)
ஒன்றைப் பல வருடங்களுக்கு முன்பு படித்து, எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அவரைப்பற்றி
அதிகம் தெரியாது.
அந்த கிளேரிஹ்யூவை முதலில் பார்க்கலாம்.
Sir Christopher Wren said,
‘I am going to dine with some men.
If anyone calls,
Say I am designing St. Paul’s’.
‘I am going to dine with some men.
If anyone calls,
Say I am designing St. Paul’s’.
இந்தக் கதீட்ரலைக் கட்ட எத்தனை ஆண்டுகள் பிடித்தன என்று
கூறினால் அசந்து போய்விடுவீர்கள். முப்பத்தைந்து வருடங்கள்! .
1666-ஆம் ஆண்டு லண்டனில் பிரம்மாண்டமான தீ விபத்து ஏற்பட்டு
பல கட்டடங்கள் சாம்பலாகிவிட்டன.
ரென் 51 புதிய சர்ச்சுகளையும் செயின்ட் பால்’ஸ் கதீட்ரலையும் கட்ட, வரைபடங்களைத் தயாரித்து இரண்டாம் சார்லஸ் மன்னரிடம் கொடுத்தார். பின்னால் கட்டியும் கொடுத்தார்.
ரென் 51 புதிய சர்ச்சுகளையும் செயின்ட் பால்’ஸ் கதீட்ரலையும் கட்ட, வரைபடங்களைத் தயாரித்து இரண்டாம் சார்லஸ் மன்னரிடம் கொடுத்தார். பின்னால் கட்டியும் கொடுத்தார்.
இவை மட்டுமன்றி வேறு பல முக்கிய கட்டடங்களையும்
நிர்மாணித்தவர். இவர் தனது 17-வது (கவனியுங்கள், 17-வது வயதில்!)
கண்டுபிடித்த சில பொருள்கள்: இருளில் எழுதக்கூடிய ஒரு கருவி, ஒரு (PNEUMATIC)
எஞ்சின், வானிலை கடிகாரம். இது தவிர காது
கேளாதவர், பேச இயலாதவர்களுக்கு என்று ஒரு புதிய ‘மொழி’யைக் கண்டுபிடித்தார். இருபத்து ஐந்தாவது வயதில் வானசாஸ்திரப்
பேராசிரியராகக் கல்லூரியில் பணியாற்றத் துவங்கினார்.
தன் ஆராய்ச்சிக்கு உதவியது WREN செய்த
ஆராய்ச்சி கள்தான் என்று பின்னால் நியூட்டனே, கூறியிருக்கிறார்.
WREN தனது 91-வது வயதில் காலமானார். அவர் உடல், அவர்
வடிவமைத்துக் கட்டிய St. Paul’s Cathedral-ல் புதைக்கப்பட்டது. (இப்படிப்பட்ட
பெரிய சிறப்பைப் பெற்ற முதல் விஞ்ஞானி இவர்தான்!)
சரி, இவர் கல்லறையில் எழுதப்பட்டுள்ள வாசகம் என்ன? லத்தீன்
மொழியில் எழுதப்பட்டுள்ள அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு:
Reader, if you seek his monument –
look around you!
(வாசகரே, இவருடைய நினைவுச் சின்ன த்தைப் பார்க்க வேண்டுமானால்,உங்களைச் சுற்றிப் பாருங்கள்.)
ஆம், St. Paul’s Cathedral கட்டடமே அவருடைய நினைவுச்சின்னமாக எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் இருக்கும்!
இதுவரை அறியாத பல தகவல்கள். லண்டன் போய் செயின்ட் பால் சர்ச்சைப் பார்க்கிறேனோ இல்லையோ அதைக் கட்டினது யார் என்பது குறித்தும் அவர் குறித்தும் பல தகவல்கள்! மிக்க நன்றி. பல புதிய வார்த்தைகளையும் உங்கள் மூலம் அறிய நேர்ந்தது. உங்கள் அபாரத் திறமையிலும் சுறுசுறுப்பிலும் எனக்குக் கால்வாசியாவது வரணும்னு பிரார்த்தித்துக் கொண்டு உங்கள் இந்தத் திறமை இன்னும் மேன்மேலும் பிரகாசிக்கவேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஅன்புடையீர், ஏதோ எழுதுகிறேன். அதை இப்படிக் கொண்டாட வேண்டாம். உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.- கடுகு
ReplyDeleteசெயின்ட். பால் கதீட்ரலைப் பார்த்திருக்கிறேன் (அதன் அருகில் தங்கியிருந்தேன்). ஆனால் அதன் வடிவமைப்பாளரைப் பற்றி இதுவரை அறிந்ததில்லை. அவர் நியூட்டனின் ஆசானா? ஆச்சர்யம். அறிந்திராத தகவல்களைப் பகிரந்திகொள்வதற்கு நன்றி, பாராட்டுகள்.
ReplyDeleteஇன்னும் பல "கல்லறை வாசகங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கலாமே.
பத்திரிகையுலகில் தினத்தந்தியின் catching வார்த்தைகளே பிரசித்தமானதுதான். "பயங்கரம், சதக் சதக், வலை வீசித் தேடுகிறார்கள்" போன்று பலவற்றைச் சொல்லலாம்.
மேலே போட்டிருக்கும் வளைந்து நெளிந்த வண்ணப் படத்தைப் பார்த்தவுடன், நேபாளில் புத்னீல்கண்டா என்று விஷ்ணு பாம்புப் படுக்கையில் நீர் நிலையின் நடுவில் இருக்கும் சிலைதான் ஞாபகம் வந்தது. அதில்தான் பாம்பு இந்தமாதிரி வளைந்து நெளிந்து இருக்கும். நன்றாக இருக்கிறது.
ReplyDelete//நேபாளில் புத்னீல்கண்டா என்று விஷ்ணு// நாங்க போயிருந்தப்போ எங்களிடம் பரமசிவன் விஷத்தை உண்ட மயக்கத்தில் வந்து படுத்திருப்பதாகவும் (வயதான என்ற பொருளில் வரும்) பூடா நீல்கண்ட் என்று பெயர் எனவும் சொன்னார்கள். சிலர் மஹாவிஷ்ணும், சிவனும் கலந்திருக்கும் கோலம் என்றும் சொன்னார்கள்.
Deleteநன்றி. பாம்பு சிவனுக்கும் உகந்தது: விஷ்ணுவுக்கும் உகந்தது, மயில்வாகனனுக்கும் உகந்தது,.. அதிருக்கட்டும்.. நீங்கள் உலகம் சுற்றிய வாலிபனா?-- கடுகு
ReplyDeleteகடுகு சார்... - ஐந்து வெளி'நாட்டுக்குப் போயிருக்கிறேன் என்று யார் சொன்னாலும் அதில் ஒன்றாக இருக்கும் அமெரிக்காவுக்கு வந்ததில்லை. நீங்கள் எழுதிய வார்த்தை எனக்குப் படித்த ஒன்றை ஞாபகப்படுத்தியது.
ReplyDeleteஎம்ஜியார் உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுக்கும்போது, ஒரு நாள் வாலியுடன் அவருக்குக் கோபம் வந்துவிட்டது. இந்தப் படத்தில் உங்கள் பெயரைப் போடமாட்டேன் என்று சொன்னாராம். அதற்கு உடனே வாலி, என் பெயரைப் போடவில்லையானால் படத்தையே நீங்கள் வெளியிடமுடியாது என்றாராம். அதற்கு எம்ஜியார், அது எப்படி என்று கோபத்தோடும் ஆச்சர்யத்தோடும் கேட்டாராம். அதற்கு, படப் பெயரைப் பாருங்கள், 'வாலி' என்ற பெயரை எடுத்துவிட்டு, 'உலகம் சுற்றும் பன்' என்றா படத்தை வெளியிடுவீர்கள் என்று சொல்லி எம்ஜியாரைச் சிரிக்க வைத்து சூழ்'நிலையைக் கலகலப்பாக ஆக்கினாராம் வாலி. அவர் சொல்லியிருக்கிறார், இப்படி சூழ்நிலைக்கேற்றவாறு சமத்காரமாகப் பேசி, அவருடன் நல்ல நட்பில் இருந்தேன் என்று எழுதியிருக்கிறார்.
பாம்பு, சிவனின் கழுத்தைச் சுற்றியிருக்கிறது, பக்தர்களைப் பதை பதைக்கும் மன நிலையில் வைத்திருக்கிறது. அறுமுகனிடம், தன் எதிரியை அவன் எப்போதும் அருகில் வைத்திருப்பதால், அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறது. மாலனிடம் அது அன்போடு, என்மீது படுத்து இளைப்பாறு, உனக்கு மழையோ வெயிலோ தாக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அன்போடு இயைந்து இருக்கிறது. மாலனின் நெருங்கிய நண்பன், அடிப்பொடி என்று நாகனைச் சொல்வது சரிதானே.
//பாம்பு, சிவனின் கழுத்தைச் சுற்றியிருக்கிறது, பக்தர்களைப் பதை பதைக்கும் மன நிலையில் வைத்திருக்கிறது.//
Deleteபரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு கேட்டது, "கருடா சௌக்கியமா?" யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே! பாம்பு சொன்னது! :) உண்மையில் பாம்பு தானே பதைபதைப்புடன் இருந்ததைப் பரமசிவன் கழுத்தில் எடுத்து அணிந்து கொண்டு காப்பாற்றுகிறார்! :))))))) பிள்ளையார் கூட இடுப்பைச் சுற்றிப் பாம்பை ஒட்டியாணம் போல் அணிந்திருப்பாரே!
கீதா சாம்பசிவம் மேடம்... இது கண்ணதாசன் கேட்டதில்லையோ? 'பாம்பா கேட்டது'?
Deleteதிரு'நாகேஸ்வரத்துல ஒரு குறிப்பிட்ட நாளில் சன்னதிக்குள்ள ராஜ நாகம் வருமாம். அதற்கு (ஒருவர் அந்த நாகத்தைத் தூக்கிக்கொள்ள) பூஜை செய்யும் காணொளி இரண்டு நாட்கள் முன்பு வந்தது. எனக்கு பதை பதைப்பாக இருந்தது. அர்ச்சகர் என்னவோ, அதற்கு தூப தீபாராதனைகள் காட்டிக்கொண்டிருந்தார்.
ஆமாம்.. என் பிளளாக் எழுதக்கூடாது? அனுபவங்கள் எப்போதும் சுவையானவை.
ReplyDelete