September 01, 2017

துணுக்கு மணிகள்

சமீபத்தில் LEO ROSTEN எழுதிய 400 பக்க புத்தகம் எனக்குக் கிடைத்தது. புத்தகத்தின் பெயர் People I have loved, known and admired. 37 அபாரமான கட்டுரைகள். அவற்றிலிருந்து ஒன்றிரண்டு கட்டுரைகளைத் தமிழ்ப்படுத்திப் போட வேண்டும் என்று என் மனது துடிக்கிறது. பின்னால் பார்க்கலாம்.
அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் சில குட்டித் தகவல்களைத் தந்திருக்கிறார். அவற்றை மட்டும் இங்கு தருகிறேன்.
RENOIR என்று ஒரு பிரபல ஓவியர் இருந்தார். அவர் தன் வீட்டுப் பணிப் பெண்ணாக GABRIEEL என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தார். அந்தப் பணிப்பெண் சற்று களையான முகம் கொண்டவராக இருந்ததினாலோ என்னவோ, அவளை மாடலாக இருக்கச் சொல்லி படம் வரைந்தார். படம் நன்றாக வந்தாலும் ஏதோ அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை

அந்தப் பெண்ணின் சருமத்தின் நிறத்தில் ஏதோ கவர்ச்சியை அவர் கண்டார். தான் வரைந்த ஓவியத்தில் அது வெளிப்படவில்லை. அதனால் அவளை மீண்டும் வரைந்தார். அதுவும் சரியாக வரவில்லை.  RENOIR-  ஏதோ ஒரு வெறி பிடித்துக் கொண்டது. மீண்டும் மீண்டும் அவளை வரைந்தார்; திருப்தி ஏற்படவில்லை. இப்படி அவர், அந்தப் பெண்ணை மட்டும் வரைந்த ஓவியங்களின் எண்ணிக்கை, நம்புங்கள், 300-க்கும் மேல்!
RENOIR-ஆவது பரவாயில்லை. அந்தப் பெண்ணின் முழுமையான அழகு தனது ஓவியத்தில் வராததாலோ என்னவோ மீண்டும் மீண்டும் வரைந்தார்.
HOKUSAI  என்ற ஓவியருக்குப் பிடித்த பித்தைப் பாருங்கள். அவர் Mount FUJI  என்ற மலையை ஓவியமாக வரைந்தார். அதன் முழு அழகையும் ஓவியத்தில் கொண்டு வர பல்வேறு பருவங்களில், பல்வேறு கோணங் களில் பல்வேறு நேரங்களில் நூற்றுக்கணக்கில் வரைந்தார்.


CLAUDE MONET என்ற ஓவியருக்கு ஒரு சர்ச்சின் கட்டடத்தின் மீது காதல் ஏற்பட்டது. சூரிய ஒளியில் வெவ்வேறுநேரத்தில் வெவ்வேறு அழகு அதன் கூரையிலும் கோபுரத்திலும் ஜன்னல்களிலும் மாயாஜாலம் புரிந்த தாக அவர் உணர்ந்தார். பல ஓவியங்களைத் தீட்டினார்.
அவருக்கு திடீரென்று அல்லி மலர்கள் மீது பிரியம் ஏற்பட்டது. தண்ணீரில் மிதக்கும் அல்லி மலர்கள் அவரை கிறுகிறுக்கச் செய்தன. கிட்டத்தட்ட 50 ஓவியங்கள் வரைந்தாராம். ஓவியங்களின் அளவு என்ன தெரியுமா? 7 அடி உயரம் 15 அடி நீளம்!

5 comments:

  1. இந்தத் தடவை ஓவியர்களைப் பற்றிய சில துணுக்குகள். டெம்ளட்டை மாற்றியதால் சட் என்று இடுகை முடிந்துவிட்டதுபோல் இருக்கு. இவரின் சில ஓவியங்களை லூவரில் பார்த்த ஞாபகம் இருக்கிறது.

    டாவின்சியைக்கூட அவரது மோனாலிசா ஓவியத்தை முடிக்க 20 வருடங்களுக்குமேல் எடுத்துக்கொண்டார் என்று படித்த ஞாபகம். அதாவது ஓவியத்தை எப்போதும் தன்னுடனேயே வைத்திருந்து தோன்றும்போதெல்லாம் இம்ப்ரொவைஸ் செய்துகொண்டே இருந்தார் என்று. சமயத்தில் சில ஓவியங்களுக்கு தேவைக்கு அதிகமான ஹைப் கிடைத்து தகுதிக்கு அதிகமான புகழ் பெற்றுவிடுவதுண்டு.

    படைப்பைப் படைக்கும்போது அவர்களுக்குத் தெரியுமா, இது காலத்தை வென்று நிற்கப்போகும் படைப்பு என்று?

    On a lighter note, காலத்தை வென்ற காட்சிப் பொருளாக இருப்பதற்கு, உலகம் நினைவில் வைத்துக்கொள்ள, ஓவியரின் மனைவிக்குக் கொடுத்துவைக்கவில்லை, அவர் வீட்டுப் பணிப்பெண்ணுக்குத்தான் கொடுத்துவைத்திருக்கிறது.

    ReplyDelete
  2. Etched Graphicsல ம.பொ.சி அவர்களோட படம் ரொம்ப நல்லா இருக்கு. அவர் கிட்ட இருந்து St. Xavier's Centenary celebrationsபோது ஓவியப் போட்டில ரெண்டாவது பரிசு 79ல் வாங்கியது நினைவு வந்துவிட்டது. நீங்கள் எந்த காரணத்துக்காக ம.பொ.சி அவர்களை Etch பண்ணினீங்க?

    ReplyDelete
  3. மிக்க சந்தோஷம்.
    நான் ஒரு Graphics Blog - தோரணமாயிரம் என்ற பெயரில். அது டிஜிட்டல் கலக்கலாக இருக்கும். அதற்காக MONEY STYLE படங்கள் தயார் பண்ணிலக் கொண்டு இருக்கிறேன். அதில் ஒன்றுதான் ம.பொ.சி படம். PHOTO GALLERY மாதிரி போட எண்ணம். சரியான டெம்பிள்டே கிடைக்கவில்லை.

    ReplyDelete
  4. இன்னொரு கேள்வி. கடுகு படத்தை (உங்கள் லோகோவக வரும் முகம்) யார் வரைந்தது? கோபுலு அவர்களா ஓவியர் நடனமா அல்லது வேறு யார்? என மனதில் எவ்வளவு யோசித்தும் எப்போது முதன்முதலில் பார்த்தோம் என்று நினைவு வரவில்லை. எப்போது எதற்கு அகஸ்தியன், கடுகு என்று இரண்டு பெயரை வைத்துக்கொண்டீர்கள்? பி.எஸ்.ரங்கனாதன் அல்லது பி.எஸ்.ஆர் என்ற பெயரிலும் பார்த்திருக்கிறேனே

    ReplyDelete
  5. டெம்ப்ளேட் மாத்திட்டீங்க போல! அதான் நெ.த. சொல்றாப்போல் பதிவு சின்னதா இருக்கோ? ஓவியர்கள் பற்றியும் ஓவியங்கள் குறித்தும் நீங்க கொடுத்திருக்கும் தகவல்கள் புதியது. மற்றபடி நீங்க படித்த புத்தகத்தின் கட்டுரைகள் பகிர்வை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!