September 29, 2017

வாழ்க நீ எம்மான்!

காந்தி ஜயந்தியை முன்னிட்டு, காந்திஜி சம்பந்தமான   ஒரு பதிவைப் போடுகிறேன்.
                                                                           டியர் ஃப்ரண்ட்!
1939-ம் ஆண்டு. சொக்கோஸ்லாவியா நாட்டை ஜெர்மனிவளைத்து விட்டது.  அது உலகப்  போருக்கு  பிள்ளையார் சுழி போட்டது. எல்லா ஹிட்லரின் கைங்கரியம்.
போர் மூளாதிருக்க ஒரே வழி ஹிட்லரின் கையில் தான் இருக்கிறது என்று மகாத்மா காந்தி  கருதினார். ஹிட்லருக்குக் காந்தி ஒரு கடிதம் எழுதினார்.

மனித சமுதாயத்தின்  நலனுக்காகப்   போரைத் தவிர்க்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர் எழுதிய கடிதம் ஹிட்லருக்குப் போகவில்லைஅதைப் போகவிடாமல் பிரிட்டிஷ் அரசு தடுத்து விட்டது.
 அடுத்த  ஒரு மாதத்தில் போலந்தின் மீது ஜெர்மனி படை  எடுத்தது. அது இரண்டாம் உலகப் போருக்கு வழி வகுத்தது.
காந்திஜி எழுதிய கடிதத்தின்போட்டோகா பியைப் பாருங்கள்!
       (என்னால் முடிந்த அளவுக்கு கடிதத்தைத் தமிழ்ப்படுத்தித் தருகிறேன்!)
---------------வார்தா ( C.P.)
இந்தியா
23.7.’39

அன்புள்ள நண்பருக்கு,

மனித சமுதாயத்தின்  நலனுக்காக  உங்களுக்கு நான் கடிதம் எழுத வேண்டும்  என்று நண்பர்கள் என்னைவலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வேண்டு கோளை எதிர்த்து வந்தேன், என்னிடமிருந்து வரும்  கடிதம் அதிக ப்பிரசங்கித்தனமாக இருக்கும் என்ற என் எண்ணமே காரணம். நான் இம்மாதிரி சிந்திதுத்துப்  பார்க்க  வேண்டியதில்லை என்றும்,  என் கடிதம் எந்த அளவு மதிப்பு  பெற்றாலும் சரி என்று  கருதி என் வேண்டுகோளை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும்  ஏதோ ஒன்று எனக்குச் சொல்கிறது,     
இன்றை தினம் மனித சமுதாயத்தையே காட்டுமிராண்டி        சமூக மாக மாற்றுகூடிய   போர் மூள்வதைத்  தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே நபர்  நீங்கள் தான்        உங்கள் நோக்கம்  எவ்வளவு மதிப்பு மிக்கதாக இருந்தாலும். அதற்காக இந்த விலையை  நீங்கள்  கொடுக்க வேண்டுமா?        போர் வழி முறையைத வேண்டுமென்றெ விலக்கி வைத்து அதில் ஓரளவு வெற்றி பெற்ற ஒருவனுடைய வேண்டுகோளுக்கு, நீங்கள் செவி  சாய்ப்பீர்களா? எது எப்ப்டி இருப்பினும், இப்படி உங்களுக்குக்   கடிதம் எழுதி தவறு இழைத்திருந்தால் அதற்காக உங்கள் மன்னிப்பை  நான் எதிர்பார்க்கிறேன்.. 
தங்கள் உண்மையுள்ள நண்பன்,
மோ.க.காந்தி
 பெறுநர்:
திரு.ஹிட்லர் 
பெர்லின் 
ஜெர்மனி

---
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி . சுமதி  ராஜா.  அவருக்கு என் நன்றி  

6 comments:

 1. இந்தவாரத் தாளிப்பு தல்லா இருந்தது. எங்கு தார்மீக நெறி மண்டிக்கிடக்கிறதோ, அங்கு தைரியமும் அதிகம். அப்படிப்பட்டவர்கள் சாதாரணராக இருந்தாலும், அவர்களின் உள்ளத்திலிருந்து வரும் குரலை எளிதாக அலட்சியப்படுத்தமுடியாது. இந்த நூற்றாண்டின் மனசாட்சி காந்தி என்றால் மிகையல்ல.

  ReplyDelete
 2. வாரியார் சுவாமி படமும் பாப்கார்ன் செய்திகளும் (வலதுபக்க மேல் பகுதி) நல்லா இருக்கு. காந்தியின் பொன்மொழி font படிக்க கொஞ்சம் கஷ்டமா blurredஆ இருக்கு.

  ReplyDelete
 3. அருமையான அஞ்சலி. இந்த விபரம் நான் அறியாத ஒன்று. வாரியார் சுவாமிகளின் ஓவியம் அருமை! நல்ல முயற்சி! விடா முயற்சி.

  ReplyDelete
 4. மூன்று லிங்க் கொடுத்டுள்ளேன். ப்ராங்கள்
  1.சோ அப்பா” Link: https://kadugu-agasthian.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%8B
  சோவுடன் ஒரு மோதல்:
  2.https://kadugu-agasthian.blogspot.com/search?q=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+
  3. kadugu-agasthian.blogspot.com/2012/07/blog-post.html
  3.

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!